புது தில்லி, January 23, 2017 /PRNewswire/ --
UBM India நடத்தும் இந்தியாவின் பிரயாண மற்றும் சுற்றுலாத்துறையின் முன்னோடி கண்காட்சி
SATTE உடைய 24ஆம் நிகழ்வை UBM India நடத்தும், இந்த தென்னிந்தியாவின் முன்னணி பிரயாண வர்த்தக கண்காட்சி 15-17 பிப்ரவரி 2017இல் பிரகதி மைதான், புது தில்லியில் நடைபெறும். இந்த கண்காட்சியில் 870 கண்காட்சியாளர்களும் பங்கேற்பாளர்களும் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்தும் 28 இந்திய மாநிலங்களில் இருந்தும் கலந்துகொள்வார்கள், இதில் சில முக்கிய கண்காட்சியாளர்கள் SATTE 2017இல் முதல் முறையாக வருகைபுரிவார்கள். உள்நாட்டு மற்றும் சர்வதேச வாங்குநர்களுக்கும் தொழில்முறையாளர்களுக்கும் பிரயாணம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை முழுவதிலும் தேசிய மற்றும் மாநில சுற்றுலா மன்றங்களுடன் (NTOகள் மற்றும் STOகள்) சபைகூடவும் தொழில்நடத்தவும், தீர்வுகளினால் உந்தப்பட்ட புதுமைகளை அடைந்து பொருளாதார எதிர்பாராததன்மைகளை எதிர்கொள்ளவும், இந்தியாவில் உள்ளார்ந்த, வெளியார்ந்த மற்றும் உள்நாட்டு சுற்றுலாவை விளம்பரப்படுத்தவும் ஒரு விரிவான தளத்தை SATTE அளிக்கும். இந்த மிகவும் அபிமானமான தொழிற்துறை தளமானது சுற்றுலா அமைச்சகம், இந்திய அரசாங்கத்தினால் நன்கு ஆதரிக்கப்படுகின்றது.
(Logo: http://mma.prnewswire.com/media/459540/PRNE_UBM_SATTE_Logo.jpg )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
SATTE தொடர்ந்து சர்வதேச அமைப்புகள் மற்றும் இந்திய பிரயாண வர்த்தக கழகங்களின் ஆதரவைப் பெற்றுவருகின்றது அவற்றில் உலக சுற்றுலா அமைப்பு (UNWTO), இந்திய மாநாடு விளம்பர செயலகம் (ICPB), பசிபிக் ஆசியா பிரயாண கழகம் (PATA), ஊக்கத்தொகை பிரயாண சிறப்புத்தன்மையின் சமூகம் (SITE), SKAL International, பிரயாண முகமையர்கள் கழங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு (UFTAA), சுற்றுலா ஆப்பரேட்டர்களின் இந்திய கழகம் (IATO), இந்திய பிரயாண முகமையர்கள் கழகம் (TAAI), இந்திய ஹோட்டல் மற்றும் ஓய்வுவிடுதி கழகங்களின் கூட்டமைப்பு (FHRAI), இந்திய பிரயாண முகமையர்கள் கூட்டமைப்பு (TAFI), இந்திய உள்நாட்டு சுற்றுலா ஆப்பரேட்டர்கள் கழகம் (ADTOI), இந்தியாவின் வெளியார்ந்த சுற்றுலா ஆப்பரேட்டர் (OTOAI) மற்றும் IATA இந்திய முகமையர்கள் கழகம் (IAAI), உள்ளிட்ட பலர். 3 நாட்களாக நடக்கும், SATTE 2017 நிகழ்வில் பல்வேறு உற்சாகமூட்டும் கூட்டணிகள் மற்றும் துறையில் புதிய போக்குகளை முன்பே அறிவிக்கக்கூடிய வாக்குறுதிகள் நிகழும். இந்த கையொப்ப கண்காட்சியின் வருகையினர் 12 தொடக்க நிறுவனங்கள் மற்றும் துணிகர முதலீட்டு நிறுவனங்கள் கவர்ந்திழுக்கும் கருத்துக்களுக்காக விதை முதலீடுகளை செய்வதற்கான சிறப்பான முகாம் உள்ளிட்ட எண்ணற்ற அம்சங்களை காண எதிர்பார்க்கலாம் .
ஏறத்தாழ அனைத்து மாநில சுற்றுலா மன்றங்களில் இருந்தும் இந்த கண்காட்சியில் பங்கேற்பு இருக்கும். NTOகளை பொருத்தவரை, யுஎஸ்ஏ, மெக்சிகோ, பெரூ, செக் குடியரசு, ஸ்பெயின், ரஷ்யா, சிங்கப்பூர், மலேசியா, சீனா, ஹாங் காங், ஜப்பான், கொரியா, இஸ்ரேல், தாய்லாந்து, இந்தோனேசியா, மகாவ், ஃபிஜி, பூட்டான், நேப்பால், இலங்கை, அபுதாபி, நியூசீலாந்து, ரீயூனியன் தீவு மற்றும் எகிப்து உள்ளிட்ட பலர் பெரூ, வியட்நாம் மற்றும் சார்ஜாவுடன் இணைந்து முதல் முறையாக தங்கள் பங்கேற்பை உறுதிசெய்தனர். துருக்கி மற்றும் மாலத்தீவுகள் ஆகியோர் விரைவில் தங்கள் பங்கேற்பை உறுதிசெய்ய உள்ளனர். துபாய், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகியவை SATTE 2017 உடைய கூட்டணி நாடுகள்.
SATTE 2017 விருந்தோம்பல் நிறுவனங்களில் இருந்தும் ஈடுபாடுள்ள பங்கேற்பைக் காண இருக்கிறது அவர்களில் சிலர், Carlson Rezidor Hotel Group, ITDC, Sterling Resorts, Dubai Parks & Resorts, Movenpick Hotel & Resorts, Minor Hotels, Melia Hotels International, ONYX Hospitality Group, Ramee Group of Hotels, Shangri-La Hotels மற்றும் Resorts, Venetian Cotai. NTOகள் மற்றும் மாநில சுற்றுலா மன்றங்கள் தவிர பிரயாணம் மற்றும் விருந்தோம்பல் நிறுவனங்கள், விமான நிறுவனங்கள், க்ரூஸ் லைனர்கள், DMCகள், OTAகள் மற்றும் சுற்றுலா தயாரிப்புகளும் இந்நிகழ்வில் இணையும். SATTE மிகவும் நெருக்கமாக புகழ்பெற்ற பிரயாண கழகங்கள், அமைப்புகள் மற்றும் ஊடகங்களுடன் பணிசெய்து, வருகையாளர்களையும் வாங்குநர்களையும் கண்காட்சியிலே துறையின் போக்குகள் மற்றும் புதுப்பித்தல்கள் குறித்து நன்கு அறியச்செய்து இருக்கும்.
Pronab Sarkar, தலைவர், Indian Association of Tour Operators (IATO) இவ்வாறு கூறினார், "SATTE இந்நாட்டின் ஒரு ப்ரீமியம் தளமாக எழுந்துள்ளது, இதில் ஒருவர் பிரயாண துறையை உருவாக்கும் அனைத்து பிரிவுகளையும் கண்டறிய முடியும். இந்த இடத்தில் தான் ஒட்டுமொத்த சுற்றுலா சகோதரத்துவவும் ஒரே கூடைக்குள் வந்து ஏராளமான உண்மையான தொழில் நடக்கிறது. மேலும் SATTE மூலமாக, புதிய மற்றும் இதுவரை அறியப்படாத இடங்கள் அதிக கவனத்தைப் பெறுகின்றன, மற்றும் சுற்றுலாத்துறை வளர்வதற்கு இது மிகவும் முக்கியம்.."
"SATTE தான் தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய பிரயாண வர்த்தக கண்காட்சி. இது சர்வதேச கண்காட்சியாளர்களையும் இந்தியாவில் பிரயாண தொழில் உடைய வாங்குநர்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வருகின்றது. இது பிரபலமான நிறுவனங்களுக்கு வெளிப்பாட்டை கொடுப்பது மட்டும் இல்லாமல், பிரயாணம் மற்றும் சுற்றுலாத்துறையில் புதிதாக வருகிறவர்களுக்கு அதிகமான வாய்ப்புகளையும் அளிக்கிறது. அதிகமான தொழில் தடங்களை உருவாக்கி தொழிலை பரிவர்த்தனை செய்வதற்கு பங்கேற்பாளர்களுக்கான மகத்தான நெட்வொர்க்கிங் தளம் இது." - PP Khanna, தலைவர், Association of Domestic Tour Operators of India (ADTOI).
"SATTE 2016, SATTE உடைய 23ஆம் நிகழ்வு, 'எதிர்பாராதது மற்றும் தைரியமானது' என்று பெயரிடப்பட்டது, மற்றும் இது சுமார் 860 கண்காட்சியாளர்கள் 35 நாடுகள், 30 சர்வதேச மற்றும் 28 உள்நாட்டு சுற்றுலா மன்றங்கள் மற்றும் 21000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் ஒரு கண்கவரும் நிகழ்வாக நிரூபிக்கப்பட்டது. முக்கிய அமர்வுகள் மற்றும் பேனல் விவாதங்கள் பரவலான வகையிலான தலைப்புகள் மற்றும் பொருத்தமான தலைப்புகளை கொண்டதாக இருந்து தொழிற்துறை பங்குதாரர்களை ஒரே தளத்தில் கொண்டுவந்து மதிப்புமிக்க கருத்துக்களை பரிமாறிக்கொள்ள அனுமதித்தது. SATTE 2017, நிச்சயம் SATTE உடைய பாரம்பரியத்தைப் பின் தொடரும் என்று நாங்கள் உறுதியாக இருக்கிறோம் மற்றும் புதிய அம்சங்கள் இந்திய பிரயாணம் மற்றும் சுற்றுலா துறைக்கு புதிய வளர்ச்சிப்பாதைகளை ஏற்படுத்த SATTEவுக்கு உதவும்." - Biji Eapen, தலைவர், IATA Agents Association of India
SATTE உடைய வரவிருக்கும் 24ஆம் நிகழ்வு குறித்தும் அதன் வளர்ச்சிகள் குறித்தும் பேசிய, Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India இவ்வாறு கூறினார், "SATTE ஒரு நிறுவனமாக மாறியுள்ளது மற்றும் உலகின் இந்த பகுதியில் உண்மையான உலகளாவிய கண்காட்சியாக பரினமித்துள்ளது. இவ்வாண்டு உலகம் முழுவதும் நிச்சயமற்ற சூழ்நிலை இருந்தபோதிலும், இது முன்பு எப்போதையும் விட உயர்ந்து நிற்கிறது. SATTE இடம் எதிர்பார்க்கப்பட்ட வருகை 21,000 தகுதிபெற்ற தொழில்முறையாளர்கள் இருக்கிறார்கள் - கண்காட்சிக்கு வரும் ஒவ்வொருவருக்கும் அதன் நிகழ்வு மற்றும் அதன் புதுமை, தீர்வால் உந்தப்பட்ட அம்சங்களான கல்வி விரிவுரைகள், தயாரிப்பு வெளியீடுகள் மற்றும் துறையில் உள்ள சிறப்புத்தன்மை மற்றும் புதுமையை கொண்டாடுவதற்காக அமைக்கப்பட்ட மகத்தான விருது இரவு ஆகியவற்றில் இருந்து மகத்தான எதிர்பார்ப்புகளுடன் இருக்கிறார்கள். "
SATTE 2017 உடைய முக்கிய அம்ங்களில் பிப்ரவரி 15 மற்றும் 16 தேதிகளில் நடக்க இருக்கும் மாநாட்டு நிகழ்ச்சியும் ஒன்று, இதில் துறைசார்ந்த விவாதங்களும், துறைசார்ந்த புதிய கருத்துக்களையும் துறையின் சிறந்த நடைமுறைகளையும் பகிர்தலும் வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது. SATTE நிகழ்விலே ஆறு பேனல் விவாதங்கள் நடைபெறும், இவை துறையின் பங்குதாரர்களை ஒரே தளத்தில் கொண்டு வந்து, இந்திய சுற்றுலாவிற்கு பெரிய அளவில் மதிப்பை சேர்க்கும் கருத்துக்களை பரிமாற அனுமதிக்கும்.
கண்காட்சிக்கு முன்னோடியாக, UBM India முதல் முறையாக SATTE Awards 2017ஐ நடத்தும். பிப்ரவரி 14 மாலையில் நடப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ள இந்நிகழ்வில், விருதுகள் பிரயாணம் மற்றும் சுற்றுலா துறையின் முக்கிய பங்குதாரர்களின் சிறப்புத்தன்மை, சாதனைகள் மற்றும் புதுமைகளை அங்கீகரிப்பதற்காகவும் கொண்டாடுவதற்காகவுமான ஒரு முயற்சியாக இருக்கும் மற்றும் இது வெளிப்படையான, அதிகாரபூர்வமான மற்றும் உண்மையாண அளவுகோல்களின் அடிப்படையில் இருக்கும், இது SATTE உடைய மதிப்பீடுகளோடு கலந்துவிட்ட ஒரு தத்துவம். நெட்வொர்க்கிங் வாய்ப்புகள், முன்வழங்கல் மற்றும் பிற அம்சங்கள் மாலைநேரத்துற்க்கான கருத்தையும் தோரணையையும் சேர்க்கும். 19 விருது பிரிவுகள் பிரயாணம் மற்றும் சுற்றுலாத்துறையின் பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கும், அதில் விமான நிறுவனங்கள், கப்பல், சுற்றுலா ஆப்பரேட்டர்கள், ஹோட்டல்கள், செல்லுமிடங்கள், இணைய பிரயாண போர்டல்கள், உள்ளிட்டவை இருக்கும்.
UBM India பற்றி:
UBM India என்பது இந்திய அளவில் கண்காட்சிகளை ஏற்பாடு செய்யும் முன்னணி நிறுவனமாகும். இது இத்துறையில் வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் உலகம் முழுவதிலுமிருந்து கண்காட்சிகள், உள்ளடக்கமிக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குள் வழியாக ஒரே தளத்தில் சேர்க்கிறது. UBM India 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறது. UBM Asia நிறுவனமான, UBM India மும்பை, புது டில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM plc-யினால் UBM Asia நடத்தப்படுகிறது. இது லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் பட்டியலில் உள்ளது. UBM Asia என்பது ஆசியாவில் கண்காட்சியை நடத்தும் முன்னணி நிறுவனமாகும். சைனாவின் முக்கியப் பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய கண்காட்சி நடத்துபவராகும்.
கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து ubmindia.in என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
ஊடக தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-022-61727000
UBM India
Share this article