மும்பை, January 13, 2017 /PRNewswire/ --
இந்திய அரசாங்கத்தில் டிஜிடைஸ் மணிக்கு ஆதரவளிக்கும் பொருட்டு MoneyOnMobile, MOM ATM களை இந்தியாவெங்கிலும் உள்ள சில்லறை வணிகக் கடைகளில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. MOM ATM, சில்லறை வர்த்தக அமைப்புகள் ஒரு சிறிய ஏடிஎம் போல செயல்பட அனுமதிக்கும். வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அவர்களுடைய வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க இது அனுமதிக்கும். இந்தியாவெங்கிலும் உள்ள மக்கள் வங்கிக் கணக்குகளில் பணம் வைத்திருப்பதைக் கவரும் வகையில் இது அமையும் ஏனென்றால் அவர்கள் அவர்களுடைய பணத்தை அவர்கள் செளகரியத்துக்கு ஏற்றாற் போல எப்போதும், எங்கேயும் எடுத்துக் கொள்ளமுடியும்.
(Photo: http://mma.prnewswire.com/media/457249/PRNE_MposwithBluetooth_Infographic.jpg )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20161026/432722LOGO )
இன்றைக்கு இந்தியாவில் சுமாராக 200,000 ஏடிஎம்- கள் இருக்கின்றது. 325,000 MoneyOnMobile - களை சில்லறை வணிக அமைப்புகளில் முழுவதும் நிறுவி முடித்தவுடன், இந்தியாவின் மிகப் பெரிய ஏடிஎம் நெட்வொர்க்காக MoneyOnMobile இருக்கும்.
"இந்தியாவில் தற்சமயமிருக்கும் நிதி கட்டமைப்பு ஆதரவுக்கு அப்பால் வாடிக்கையளர்களிடமிருந்து பணமில்லா சேவைகளுக்கான தேவையை பணமதிப்பு நீக்கம் அதிகரித்திருக்கிறது. இது விரக்தியடைந்த வாடிக்கையாளர்கள் கொண்ட நீண்ட வரிசையை ஏற்படுத்துகிறது. வீட்டுக்கும், வேலை செய்யும் இடத்திற்கும் அருகில் உள்ள இடங்களில் MOM ATM அமைந்திருப்பதால் பணத்தை செளகரியமாக எடுக்கமுடியும். குடிமக்களுக்கும் ஏடிஎம் களுக்குமான எண்ணிக்கை விகிதம் குறைவாக இருக்கும் இந்தியாவின் கிராமப்புறங்களுக்கும் கூட இது பயனுள்ளதாக இருக்கும்' என்று MoneyOnMobile - ன் தலைவரும், தலைமை செய்ற்பாட்டு அதிகாரியுமான " Ranjeet Oak, தெரிவித்தார்.
"இறுதிகட்ட பரிவர்த்தனை சேவையை வழங்குவதன் மூலம் MoneyOnMobile எப்போதும் வங்கிகளுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் அவர்களுடைய வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எளிதாக அணுகுவதற்கு MOM ATM தொடர்ந்து ஆதரவளிக்கும்" என்று MoneyOnMobile - ன் தலைமை நிர்வாக அதிகாரியும், சேர்மனும் ஆன Harold Montgomery தெரிவித்தார்.
MoneyOnMobile பற்றி:
MoneyOnMobile இந்தியாவின் முன்னணி மொபைல் பேமண்ட் சிஸ்டம் ஆகும். அது நாட்டின் இரண்டாவது மொபைல் புரட்சியை உங்களின் கைகளுக்குக் கொண்டுவருகிறது. லட்சக்கணக்கான இந்தியர்கள் நிதிப் பரிவர்த்தனையை எளிதாகவும், பாதுகாப்பாகவும் செய்வதற்கு வழிவகுக்கும் MoneyOnMobile ஒரு தனித்துவமான, புரட்சிகரமான கோட்பாடாகும். இந்தியாவின் தொலைதூரப் பகுதியை நாங்கள் அடைந்திருப்பதால் இன்றைக்கு ப்ரீபெய்ட் கருவியைப் பொருத்தவரையில் சந்தையில் தனியொரு நிறுவனமாக உருவாகியிருக்கிறோம். வங்கியில் கணக்கில்லாத நுகர்வோர்களுக்கு நிதி உள்ளடக்கம், சுயசார்பு போன்றவற்றின் மூலம் சேவை வழங்குவது, ரிசர்வ் பாங்க் ஆஃப் இண்டியாவின் (RBI) அங்கீகாரத்துடன் `செமி க்ளோஸ்ட்' பேமண்ட் சிஸ்டத்தை இந்தியாவில் ஆரம்பிப்பதன் மூலம் பதிவு செய்யப்பட்ட உபயோகப்பாளர்கள் பதிவு செய்யப்பட்ட வர்த்தகர்களிடமிருந்து பொருட்கள், சேவைகளை வாங்குவதை செயல்படுத்துவது போன்றவை எங்களது அடிப்படை நம்பிக்கையாகும். வங்கியில் கணக்கில்லாத மக்கள் உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு சக்தி கொடுப்பதன் மூலம் MoneyOnMobile அவர்களை அதிகாரமுள்ளவர்களாக்கும்.
பலவகையான தனித்துவமான தீர்வுகளை வழங்குவதற்கு MoneyOnMobile எளிமையான குறுஞ்செய்தி, செயலி, வலைத் தளம் வாயிலாக ஒப்பற்ற, அதற்கு இணையெதுவுமில்லாத 24x7 பரிவத்தனை செளகரியம் மூலம் தொடர்ந்து புதுமையை செய்து வருகிறது. சில்லறை வணிக அமைப்பின் உதவியுடன் கூடிய டச்பாயிண்ட் நாடு முழுவதும் 325,000 இடங்களில் வழங்கப்பட்டுவருகிறது.
அதோடு மதிப்புமிக்க RED Herring Global Top 100 Award பெற்ற பெருமை மிக்க நிறுவனம் ஆகும்.
மேலதிகத் தகவலுக்கு http://www.moneyonmobile.in செல்லவும்.
கார்ப்பொரேட் கம்யூனிகேஷன்ஸ் தொடர்புக்கு:
Navaz Damania
Vice-President, Corporate Communications
61, MoneyOnMobile House
Ramchandra Lane, Malad West
Mumbai - 400064
Tel: +91-22-45021541
[email protected]
http://www.moneyonmobile.in
Share this article