அகமதாபாத், இந்தியா மற்றும் எடிசன், நியூ ஜெர்சீ, January 9, 2017 /PRNewswire/ --
Glorious India, மகத்தான வர்த்தக கண்காட்சியானது, நியூ ஜெர்சீ, யூஎஸ்ஏ-வில் மே 27-28, 2017 தேதிகளில் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்நிகழ்வு உலகின் வலிமையான பொருளாதாரங்களில் ஒன்றான யூஎஸ்ஏ-வில் இந்திய வர்த்தகங்களை விளம்பரப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதை ஒருங்கிணைப்பது Praveg Communications Limited, 16 ஆண்டுகளாக சுமார் 600 தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளை ஒருங்கிணைத்த அனுபவம் உடைய, நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனங்களின் மத்தியில் ஒரு புகழ்பெற்ற பெயர் ஆகும். Praveg வெற்றிகரமாக கடந்த ஆண்டு Glorious Gujarat USA நிகழ்வை நியூ ஜெர்சி, யூஎஸ்ஏ-வில் ஒருங்கிணைத்தது, இதில் 15,000 பேருக்கு மேல் வருகைதந்தனர் மற்றும் 100க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்றனர்.
(Photo: http://mma.prnewswire.com/media/454588/PRNE___Glorious_India_Expo.jpg )
Glorious India Expo நிகழ்வு இந்தியாவை உருவாக்குவோம் (தொழிற்துறை கொள்கை மற்றும் விளம்பரம், இந்திய அரசாங்கம்), இண்கிரீடபுள் இந்தியா (சுற்றுழாத்துறை அமச்சு, இந்திய அரசாங்கம்) மற்றும் யூஎஸ்-ந்தியா வர்த்தக செயற்குழு ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகின்றது. தேசிய விமான நிறுவனமான Air India, இந்நிகழ்வுக்கான விமான பங்காளராக இருக்கிறது.
Glorious India பல்வேறு யூஎஸ் சார்ந்த இந்திய அரசாங்க சமூக அமைப்புகளிடம் இருந்து ஆதரவைப் பெற்றுள்ளது. அவற்றில் NATA (North American Telugu Association), RANA (Rajasthan Association of North America), CAB (Cultural Association of Bengal, North America), Maharashtra Mandal, New York, Gujarati Samaj of New York, Kannada Cultural Organization மற்றும் Orissa Society of Americas உள்ளடங்கும். யூஎஸ் சந்தைக்கு இந்திய ஏற்றுமதியாளர்களின் தொழில்களை விளம்பரப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் இந்த இரண்டு நாள் நிகழ்விலே 25,000க்கும் மேற்பட்ட வெளிநாடு வாழ் இந்திய பார்வையாளர்கள் கலந்துகொள்வார்கள். இந்தியாவில் இருக்கும் பல்வேறு வணிகர் கழகங்களும் தங்கள் ஆதரவை Glorious Indiaவுக்கு அளித்துள்ளனர்.
ஆடைகள், கைவினைப்பொருட்கள், ரத்தினக்கற்கள் மற்றும் நகைகள், இந்திய ரியல் எஸ்டேட் சொத்துக்கள் மற்றும் இந்திய சுற்றுலா தயாரிப்புகள் ஆகியவை இந்த தயாரிப்பு பிரிவுகளில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் அமெரிக்க வர்த்தகத்திற்கு சேவை செய்வதற்காக இக்கண்காட்சி ஐந்து துறை சார்ந்த காட்சி மாடங்கள் அமைக்க திட்டமிட்டது.உணவுப்பொருட்கள், பொறியியல் தயாரிப்புகள் உள்ளிட்டவை இந்திய வணிக கண்காட்சியில் கணிசமான பங்கேற்பை பெறும் பிற துறைகள் ஆகும். இந்நிகழ்வு இந்திய அரசாங்கம் மற்றும் மாநில நிறுவனங்கள் தன் பிரத்தியேக அரசாங்க காட்சிமாடங்களில் தனது தரிசனம், வளர்ச்சி கொள்கைகள் மற்றும் சாதனைகளை காட்சிப்படுத்தும் - இந்தியாவின் பெருமை. Glorious India Expo-யுடைய முக்கிய சிறப்பம்சம் Superwomen Pavilion , இதில் இந்தியாவில் இருந்து வரும் பெண் தொழிலதிபர்களின் பங்கேற்பு இடம்பெறும்.
இந்திய கண்காட்சிபடுத்தும் நிறுவனங்கள் யூஎஸ் சார்ந்த வணிகத்தில் நீண்ட கால வியூக தொழில் கூட்டணியை ஏற்படுத்துவதற்காக கட்டமைக்கப்பட்ட B2B அமர்வுகள் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டுள்ளன. சுமார் 500 யூஎஸ் சார்ந்த வாங்குநர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று இந்திய ஆடைகள், கைவினைப்பொருட்கள், நகைகள், ரியல் எஸ்டேட் மற்றும் சுற்றுலா நிறுவனங்களில் இந்தியா உடனான தொழில் வாய்ப்புகளை ஆராய்வார்கள். 25,000க்கும் மேற்பட்டோரின் வருகை மற்றும் 500+ வாங்குநர்களுடன், தங்கள் பிராண்ட் பிம்பத்தை மேம்படுத்தவும், தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை விளம்பரபப்டுத்தவும் யூஎஸ்ஏ-வில் தங்கள் சந்தையை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ள, இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் இந்திய நிறுவனங்களுக்கான முழுமையான வர்த்தக விளம்பர தொகுப்பாக Glorious India இருக்கிறது.
இந்தியாவில் உள்ள தேசிய அலைவரிசைகளிலும் யூஎஸ்-யில் இருக்கும் இந்திய அலைவரிசைகளிலும் உயர் சத்தமுடைய விளம்பரப்படுத்துதல், சாலை கண்காட்சிகள், ஊடக விளம்பரங்கள் மற்றும் தீவிர சமூக ஊடக பிரச்சாரங்கள் ஆகியவை இந்தியாவில் Glorious India Expo மற்றும் யூஎஸ் வர்த்தக சகோதரத்துவத்தை குறித்த அதிக விழிப்புணர்வு மற்றும் விளம்பரத்தை உறுதிசெய்தது. இது தவிர, இந்திய நிறுவனங்களின் அதிகப்படியான பங்கேற்புக்கு வசதிப்படுத்துவதற்காக, Glorious India Expo பல்வேறு ஊக்கமளிக்கும் அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் பங்கேற்புக்கான கவர்ச்சிகரமான கட்டணம், யூஎஸ் சார்ந்த வாங்குநர்களுக்கு கண்காட்சியாளர்கள் சார்பாக 'Host Your Buyer' நிகழ்ச்சியின் கீழ் அன்பளிப்பாக விருந்தோம்பல் அளித்தல் மற்றும் கருத்தூன்றிய விரிவுரை அமர்வுகள் ஆகியவை உள்ளடங்கும்.
Glorious India Expo-ல் ஒரு சிறப்பான கலாச்சார நிகழ்விலே இந்தியா மற்றும் யூஎஸ்-இல் இருந்து வரும் திறமையான இந்தியர்கள் இடம்பெறுவார்கள், மற்றும் சில அற்புதமான கலைநிகழ்ச்சிகளை NRI, யூஎஸ் சகோதரர்கள், இந்தியா மற்றும் யூஎஸ்-யில் இருந்து அரசியல் பிரபல்யங்கள், மற்றும் இரு நாடுகளில் இருந்து வரும் கலைஞர்களுக்கு முன்பாக செய்து காட்டுவார்கள்.
இந்நிகழ்வு குறித்த விரிவான தகவல்கள் இந்த இணையதளத்திற்கு வருகைதருவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் http://www.gloriousindiaexpo.com .
Praveg Communications Limited குறித்து
Praveg Communications Limited இந்தியாவிலும் வெளிநாட்டிலும் 600க்கும் மேற்பட்ட நிகழ்வுகளை நடத்திய சாதனையை உடைய முன்னணி நிகழ்வு மேலாண்மை நிறுவனம். 15 ஆண்டுகளுக்கு மேலாக, நிகழ்வு வடிவமைப்பு, செயல்படுத்துதல் மற்றும் மேலாண்மையிலே தனது தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் உயர்ந்த தரநிலையான தரம் மற்றும் செயலிலே திறனோடு இருத்தல் ஆகியவற்றுக்கான அர்ப்பணிப்புடன் Praveg புதிய தரநிலைகளை உருவாக்கி இருக்கிறது. மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து வருகைதாருங்கள் http://www.praveg.com.
ஊடக தொடர்பு:
Abhilash Udayarajan
[email protected]
+91-9712922124
Praveg Communications Limited
Share this article