புது தில்லி, January 3, 2017 /PRNewswire/ --
- கடந்த ஆண்டைக் காட்டிலும் தனித்துவமான பார்வையாளர்களின் எண்ணிக்கையில் 12% அதிகரிப்பை காண்கிறது
- தென்னிந்தியாவின் மிகப்பெரிய பாதுகாவல் மற்றும் கண்காணிப்பு சபை தலைநகரிலே சந்தையின் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது
IFSEC India 2016 ஒரு பார்வையில்:
· பணமதிப்புநீக்கல் திட்டத்தின் கீழ் ரொக்க புழக்க பற்றாக்குறையை கருத்தில்கொள்ளும்போது, ஒரு முற்றிலும் நன்கு திட்டமிடப்பட்ட கண்காட்சி. டிஜிட்டல் கட்டணங்களின் மீது ஒரு அதிகரிக்கப்பட்ட கவனம் செலுத்தப்பட்டதால் இது ஒரு தோல்வியற்ற சைபர் பாதுகாவல் அமைப்பாக மாறி தேவையோடு இசைந்திருக்கும்படி செய்துள்ளது
· 20 பங்கேற்கும் நாடுகள் மற்றும் 300 பிராண்டுகள் வளரும் இந்தியாவுக்கான தங்கள் ஸ்மார்ட் செக்யூரிட்டியை காட்சிப்படுத்தின
· தனித்துவமான பார்வையாளர்களின் எண்ணிக்கை 12% அதிகரித்தது அதே நேரம் மொத்தமாக வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கை 7% அதிகரித்தது
· கண்காட்சியின் நாள் 2 மற்றும் 3இல் ஒரு நாளைக்கு 6000 பேருக்கு மேல் வருகைபுரிந்தனர், இதுவே IFSEC India உடைய 10ஆம் ஆண்டின் சாதனை ஆகும்.
· முதன் முதலாக IFSEC India விருதுகள் தொடங்கிவைக்கப்பட்டன
· இரண்டு நாள் அதிக தாக்கமுள்ள மாநாடானது உயர்நில பாதுகாவல் மீது கவனம் செலுத்தியது, இதில் துறையை சார்ந்த பெரிய நபர்கள் பங்கேற்றனர்
UBM India வெற்றிகரமாக International Fire மற்றும் Security Exhibition and Conference (IFSEC) India கண்காட்சியின் 10ஆம் நிகழ்வை வெற்றிகரமாக நிறைவுசெய்தது, இது ஒரு புது தில்லியில் நடைபெற்ற மூன்று நாள் பாதுகாவல் மற்றும் தீ பாதுகாப்பு கண்காட்சி (8 -10 டிசம்பர்). இக்கண்காட்சியானது சர்வதேச அளவில் புகழ்பெற்ற கண்காட்சியாளர்கள், ஆலோசகர்கள், தொழில்துறை நிபுணர்கள் ஆகியோரை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வந்து, ஸ்மார்ட் சிட்டிக்கள் போன்ற உலகளாவிய சிறந்த நடைமுறைகள் மற்றும் கருத்துக்களை விவாதிக்கச் செய்து, பாதுகாவல் மற்றும் தீயணைப்புத் துறயில் இருக்கும் சவால்களுக்கான தீர்வுகளை நாடியது. பார்வையாளர்கள் பிணைப்பை ஏற்படுத்தவும் அதிநவீன தொழில்நுட்பங்களையும், துறை போக்குகளையும், சந்தை கருத்துக்களையும் குறித்து கற்றுக்கொள்ள தகவலளிக்கும் செய்முறைவிளக்கங்களையும் வளமான வாய்ப்புகளையும் அளிப்பதோடு தங்கள் தொழிலையும் வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள சிறந்த தீர்வுகளை கண்டறிய உதவியுள்ளது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20141104/10110098 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
IFSEC India 2016 உடைய தொடக்க விழாவானது திரளான கூட்டத்தின் மத்தியில், Shri Hansraj Gangaram Ahir, மாண்புமிகு மாநில உள்துறை அமைச்சர், இந்திய அரசாங்கம்; Shri Ramsewak Paikra, மாண்புமிகு உள்துறை அமைச்சர், சட்டீஸ்கர் அரசாங்கம்; Shri D. R. Kaarthikeyan, ஐபிஎஸ் (ஓய்வுபெற்றவர்.), தலைவர், ASSOCHAM National Council of Homeland Security; Mr. Maninderjeet Singh Bitta, தலைவர், All-India Anti-Terrorist Front; Mr. Shiv Charan Yadav, தலைவர், APSA; Dr. Arvind Gupta, தேசிய துணை பாதுகாவல் ஆலோசகர், இந்திய அரசாங்கம்; Shri Anil Dhawan, துண தலைவர், ASSOCHAM National Council of Homeland Security; Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India மற்றும் Mr. Pankaj Jain, குழு இயக்குநர், UBM India உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
IFSEC India தனது 10ஆம் ஆண்டுவிழாவில் ஆஸ்திரேலியா, சீனா, ஹங்கேரி, இந்தியா, கொரியா, மலேசியா, ரஷ்யா, சிங்கப்பூர், ஸ்வீடன், தாய்வான், யுஏஈ, யுகே மற்றும் யுஎஸ்ஏ உள்ளிட்ட நாடுகளில் இருந்து பங்கேற்பை பெற்றது. இது APSA, ESAI மற்றும் ESSCI போன்ற கழகங்களினால் நன்கு ஆதரிக்கப்பட்டது.
கண்காட்சியின் வெற்றிகரமான நிகழ்வை குறித்து பேசிய, Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India இவ்வாறு கூறினார், "இன்றைய இந்தியாவின் நிலப்பரப்பிலே, பாதுகாவல் மற்றும் கண்காணிப்பின் மீது கவனம் செலுத்துதல் ஒரு முக்கியமான தேவை. அது தவிற, இந்த துறைக்கு கல்வி மற்றும் தொழில்நுட்ப புதுப்பித்தலில் அது துறைசார்ந்ததாக இருந்தாலும், வர்த்தகரீதியாக அல்லது குடியிருப்பு கட்டிடங்களாக இருந்தாலும், அதில் துரிதமான வளர்ச்சி தேவைப்படுகிறது. மத்திய அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் பொருளாதார மாற்றங்கள் இருந்தபோதிலும் IFSEC India உடைய 10ஆம் நிகழ்வு எங்களுக்கு முற்றிலும் சிறப்பானது. வெளிப்படையாக தெரியும் சிக்கல்களின் மத்தியிலும், நாங்கள் IFSEC India 2016 உடன் ஒரு ஊக்கமளிக்கும் வெற்றி சரித்திரத்தை படைத்து இருக்கிறோம், இதை புள்ளிவிவரங்கள் காட்டும். எங்கள் தீவிரமான கள ஈடுபாடும் அப்பழுக்கற்ற திட்டமிடுதலும் வெற்றிக்கு முக்கிய பங்கு ஆற்றின, நாங்கள் சிறிய மற்றும் பெரிய அளவிலான தொழிற்துறை கேந்திரங்கள், உற்பத்தி அலகுகள் மற்றும் தொழிற்சாலைகள், தனியார் அமைப்புகள், வன்பொருள் மற்றும் பாதுகாவலான சந்தைகள், பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் கார்பரேட் வீடுகள் ஆகியவற்றை அடைந்து அவ்ர்களுக்கு இந்த துறையின் விளைவு குறித்த முக்கியத்துவத்தை கல்வி புகட்டினோம்."
அவர் மேலும் கூறியதாவது, "IFSEC India 2016 தனது வளமான சரித்திரத்தை 40 ஆண்டு பழமை வாய்ந்த 40 IFSEC Globalக்கு செலுத்த கடமைப்பட்டுள்ளது. தனது முந்தைய நிகழ்வுகளின் வெற்றியின் அரணைப் பெற்றும், உலகளாவிய பாதுகாவல் மற்றும் தீயணைப்புத் துறையின் தலைசிறந்த ஆணையமாக துறை நிபுணர்களின் பரிந்துரையையும் பெற்று, IFSEC India உடைய 10ஆம் நிகழ்வு ஒரு வியக்கவைக்கும் சரித்திரமாக துறையின் எதிர்பார்ப்புகளை மிஞ்சி ஒரு முழு பாதுகாவல் நிறைந்த, விவேகமான மற்றும் டிஜிட்டல் ரீதியாக மேம்பட்ட உலகிற்கு நேராக நம்மை நகர்த்தியுள்ளது."
இந்தியாவின் உள்ளே தாயக பாதுகாவல் மீது அதிகரித்த கவனம் இருக்கும்போது, IFSEC India இவ்வாண்டு தானாகவே முன்வந்து உலக பாதுகாவல் சந்தையில் பெற்ற பொருத்தமான கருத்துக்களை 'வெளிப்புற மற்றும் உட்புற அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான பாதுகாவல் உக்திகள்' மற்றும் 'அதிநவீன பாதுகாவல் தொழில்நுட்பத்தின் மூலமாக விவேகமான மற்றும் பாதுகாப்பான உலகை உருவாக்குதல்' ஆகிய கருத்துக்களில் இரண்டு நாள் கருத்தரங்குகளை கண்காட்சியுடன் நடத்தியது. நாள் 1இல் பாதுகாவல் கருவிகளை கொள்முதல் செய்வதற்கான தொழில்நுட்ப அமர்வுகள் இடம்பெற்றன; மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு சாதனங்கள், IEDகள்; தடயவியல் அறிவியல் பயிற்சி மற்றும் மேம்பாடு; விமானநிலைய பாதுகாவல் மற்றும் UAV/குட்டிவிமான கொள்கை ஆகியவை உள்ளடங்கின. நாள் 2இல் எல்லை நிர்வாக உக்திகள் மீதான அமர்வுகள் இடம் பெற்றன; இடதுசாரி தீவிரவாதம் மற்றும் தேசிய பாதுகாவல் மீதான அதன் தாக்கம் குறித்த சவால்கள்' பொது போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் நெட்வொர்க்கை டிஜிட்டல் மயமாக்குதல். இக்கண்காட்சியானது Assocham மற்றும் PWC ஆகியவற்றால் 'மாநாடு' மற்றும் 'கல்வி பங்காளர்கள்', என்று முறையே ஆதரிக்கப்பட்டது. துறையின் மேல்மட்ட பேச்சாளர்களில் பலர் தங்கள் கருத்துக்களை இந்த மாநாடுகளிலே பகிர்ந்துகொண்டனர், அதில் Mr. P Ghosh, இயக்குநர் CFS, Directorate of Forensic Science Services; Mr. Puneet Garkhel, பங்காளர், PWC; Mr. Sujoy Ghosh, முதல்வர் - திட்டமிடுதல் மற்றும் தொழில் வளர்ச்சி, Tata Power SED; Mr. Gautam K. Thawani, இயக்குநர், Forensic Bureau of Investigation மற்றும் Studies; Mr. John Livingstone, நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, Johnnette Technologies Pvt. Ltd.; Mr. Ankit Mehta, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் துணை-நிறுவனர், Ideaforge Technology Pvt. Ltd.; Mr. Vijay Kumar, மூத்த பாதுகாவல் ஆலோசகர்; உள்நாட்டு விவகார அமைச்சு, இந்திய அரசாங்கம்; Dr. Satyapal Singh, மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் காவல்துறை ஆண்டையர், மும்பை மற்றும் Cdr. Deepak Uppal, இயக்குநர், PWC- G&PS உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
IFSEC India 2016 முதல் முறையாக பல்வேறு துறைகளில் எலக்ட்ரானிக் பாதுகாவலுக்கு பின்னால் இருக்கும் மூளைகள் சிறப்பான வெளிச்சத்தில் காட்டுவதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட IFSEC India Awards இந்தியாவில் நடைபெறுவதைக் காணும். இந்த விருதுகள் திரைக்கு பின்னால் வலிமையான பாதுகாவலை உறுதி செய்வதற்காக அயராது உழைக்கும் தலைமை பாதுகாவல் அதிகாரிகள் மற்றும் பாதுகாவல் அதிகாரிகளின் சிறப்புத்தன்மையையும் புதுமைகளையும் அங்கீகரிக்கின்றன. இதை வழங்கியவர்கள் Dahua Technology மற்றும் HIK Vision, விருதுகளின் இரவு என்பது துறையின் மேதைகள் மற்றும் முன்னோடிகள் ஒன்றிணைந்து வருவதன் கொண்டாட்டமாகவும், ஈர்ப்பு மற்றும் கேளிக்கையின் இரவாக அடையாளப்படுத்துவதாகவும் இருந்தது. IFSEC India விருதுகளின் செயல்முறை ஆலோசகராக Ernst & Young இருந்தது.
IFSEC India 2016வில் தொழிற்துறை பேச்சு மற்றும் தொடக்கவிழாக்கள்:
Mr. D. R. Kaarthikeyan, ஐபிஎஸ் (ஓய்வுபெற்றவர்) தலைவர், ASSOCHAM National Council of Homeland Security: "உகந்த தாயக பாதுகாவலும் சமாதானமும் அடையவேண்டுமானால் விவேகமும் நிலையான கொள்கையும் கைகோர்த்து சென்றால் மட்டுமே சாத்தியப்படும். தாயக பாதுகாவல் என்பது ஒரு பரந்துவிரிந்த அமைப்பு, அது சைபர் பாதுகாவல் முதல் தீவிரவாத எதிர்ப்பு வரை ஸ்மார்ட் சிட்டிக்களின் அனைத்து அம்சங்களையும் அதற்கு அப்பாலும் எடுத்துக்கொள்ளும் ஒரு கண்காட்சியாக, IFSEC தனது 10ஆம் நிகழ்விலே அதிவேகமாக வளர்ந்துள்ளது, கண்காட்சியாளர்கள் மற்றும் காட்சிப்படுத்தும் நாடுகளிலே ஒரு பெரிய அதிகரிப்பு இருக்கிறது. இந்த தலைப்பு ஈர்த்துள்ள விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் இதுவே காட்டுகிறது மற்றும் இதன் வெற்றிகரமான நிறைவுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்."
Colonel Harendra Bana, தலைமை பாதுகாவலர் - இந்திய பிராந்தியம் - PepsiCo India: " IFSEC India Expo 2016 மிகவும் ருசிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டு அற்புதமாக செயல்படுத்தப்பட்டது, மற்றும் இந்த கண்காட்சியை உருவாக்குவதற்காக செய்யப்பட்ட தீவிரமான ஆழ்ந்த சிந்தனைகளையும் உழைப்பையும் நம்மால் காண முடிகிறது. இந்த சமுதாயத்திற்காக நீங்கள் அனைவரும் அளித்துள்ள இக்கண்காட்சிக்கான எனது உண்மையான பாராட்டுதலையும் நான் நீட்டிக்கிறேன்.."
Mr. Pema Lin, தொழில் வளர்ச்சி மேலாளர், Lilin Impex India Pvt. Ltd: "நாங்கள் சில புதிய IVS அமைப்புகளை IFSEC 2016இல் வெளியிட்டு இருக்கிறோம். நாங்கள் தானியக்க குவியமும் பல புதிய அம்சங்களும் உடைய ஒரு 4K கேமராவையும் வெளியிட்டு இருக்கிறோம். எங்கள் தயாரிப்புகள் பெரும்பாலும் சந்தையில் நடுத்தரமாகவும், உயர்ந்த நிலையிலும் இருக்கின்றன. எங்கள் பிரதான கவனம் அரசாங்கம் மற்றும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள் தான். பல ஆண்டுகளாக நாங்கள் UBM உடன் பணியாற்றி வருகிறோம், மற்றும் IFSEC என்பது மிகவும் புகழ்பெற்ற மிகப்பெரிய கண்காட்சி , நாங்கள் அடுத்த ஆண்டு நிச்சயமாக பங்கேற்போம்."
Mr. Sandeep Kumar Arora, துணை தலைவர், ERD Group: "IFSEC 2016 ஒரு நல்ல நன்கு திட்டமிடப்பட்ட கண்காட்சி மற்றும் UBM India என்பதே ஒரு நல்ல தொழில்முறையான நிறுவனம். நாங்கள் மூன்றாவது முறையாக IFSEC 2016இல் பங்கேற்கிறோம் மற்றும் ஒரு நல்ல வரவேற்பை இங்கே பெற்றுள்ளோம்."
Mr. Akhilesh Gupta, இயக்குநர், Secure-Eye, Fortune Marketing, "கடந்த 6 ஆண்டுகளாக நாங்கள் IFSEC இல் பங்கேற்று வருகிறோம். IOT இப்போது பீதியை கிழப்பி வருவதால், நாங்கள் விவேகமான தீர்வுகள், விவேகமான பள்ளிகள், விவேகமான மருத்துவமனைகள் மற்றும் விவேகமான வங்கிகள் மீது கவனம் செலுத்துகிறோம், ஆகவே நாங்கள் அவர்களுக்கு வன்பொருள் மற்றும் மென்பொருள் தீர்வுகளை அளித்து வருகிறோம்., தொழில் விசாரனைகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் உருவாக்குதல் ஆகியவற்றில் IFSEC உடனான எங்களுடைய அனுபவம் எப்போதுமே நன்றாக இருந்து வருகிறது."
Mr. Sharad Yadav, பொது மேலாளர், Honeywell Security and Fire India: "IFSEC Indiaவில் அற்புதமான விளைவுகளுடன் நாங்கள் காட்சிப்படுத்திக்கொண்டு இருக்கிறோம். இவ்வாண்டு மற்ற புதிய தயாரிப்புகளுடன் , eVance™ Facility Manager, என்னும் ஒரு கிளவுட் சார்ந்த தொழில்நுட்பம், இது தீயணைப்பு அமைப்புகள் மீதான மேம்பட்ட கருத்தை அளித்து சிறப்பான தீர்மானம் எடுத்தலுக்கு உதவுகிறது, MaxPro™ Cloud Alarm Monitor, ஒரு கிளவுட் சார்ந்த தளம் பல தளங்களில் ரிமோட் கண்காணிப்பையும் நிகழ்நேர பதிலளிப்பையும் செய்வதற்கு உதவுகின்றது, eQUIP™ Camera Series, உயர் பட தர கேமராக்கள் பல்வேறு அளவிலான ஒளியமைப்பு மற்றும் வானிலை நிலைமைகளை தாக்குப்பிடித்து பல்வேறு வகையான பயன்பாடுகளுக்கு பொருத்தமானதாக இருக்கிறது, மற்றும் Xtralis தீர்வுகளின் ரகமானது தீ மற்றும் ஊடுருவல்இடர்கள், மேம்பட்ட வளாக பாதுகாவல் தொழில்நுட்பங்கள் மற்றும் வீடியோ மதிப்பாய்வு மென்பொருளுக்கு ஆகியவற்றை Honeywell காட்சிப்படுத்தியது."
Mr. Jiten Mahapatra, விற்பனை மேலாளர் (PAN India), ZK Teco: "IFSEC 2016 என்பது மற்ற பாதுகாவல் கண்காட்சிகளோடு ஒப்பிடும்போது நன்றாக இருந்தது. பல்வேறு தயாரிப்புகளை ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும் ஒரே நிறுவனம் ZK Teco மட்டுமே. பயோமெட்ரிக் இயந்திரங்கள் முதல் கைரேகை இயந்திரங்கள் வரை அனைத்து தீர்வுகளையும் நீங்கள் பெறலாம். நாங்கள் கண்காட்சியிலே அலாரம் அமைப்புகளையும் உலகளாவிய அமைப்புகளையும் வெளியிட்டோம் மற்றும் 1.2 மீட்டர் கண்விழி ஸ்கேனரையும் அறிமுகப்படுத்தியுள்ளோம்."
Mr. Prasanjeet Bhattarcharya, தொழில் தலைவர் - கண்காணிப்பு தயாரிப்புகள், Panasonic India Pvt Ltd.: "தொடக்கத்தில் இருந்தே நாங்கள் IFSEC உடன் இணைந்து இருக்கிறோம், இந்தியாவில் மட்டுமல்ல IFSEC UKவிலும் நாங்கள் பங்களிப்பு செய்து இருக்கிறோம். எங்கள் பூத்திலே கிடைத்த வரவேற்பினால் நாங்கள் திருப்தி அடைந்து இருக்கிறோம்."
Mr. V Bhaskar Babu, துணை தலைவர் விற்பனை இந்தியா, தொழில் அளர்ச்சி உலகளாவிய கணக்குகள், Acsys Control Systems: "நாங்கள் மூன்றாவது முறையாக IFSEC Indiaவில் பங்கேற்கிறோம். Acsys Control Systems உட்புற மற்றும் வெளி இடங்களுக்கு ரிமோட் அமைப்புகளை வழங்குகிறது மற்றும் இது ஒரு உயரிய பாதுகாவல் மிக்க ஒருங்கிணைந்த அமைப்பு ஆகும். எங்கள் ஸ்டாலிற்கு வருபவர்களின் எண்ணிக்கையினால் திருப்தி அடைந்து இருக்கிறோம் மற்றும் நிச்சயமாக அடுத்த ஆண்டும் பங்கேற்போம்."
UBM India பற்றி:
UBM India என்பது இந்திய அளவில் கண்காட்சிகளை ஏற்பாடு செய்யும் முன்னணி நிறுவனமாகும். இது இத்துறையில் வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் உலகம் முழுவதிலுமிருந்து கண்காட்சிகள், உள்ளடக்கமிக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குள் வழியாக ஒரே தளத்தில் சேர்க்கிறது. UBM India 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறது. UBM Asia நிறுவனமான, UBM India மும்பை, புது டில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM plc-யினால் UBM Asia நடத்தப்படுகிறது. இது லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் பட்டியலில் உள்ளது. UBM Asia என்பது ஆசியாவில் கண்காட்சியை நடத்தும் முன்னணி நிறுவனமாகும். சைனாவின் முக்கியப் பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய கண்காட்சி நடத்து பவராகும்.
கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து ubmindia.in என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
ஊடகத் தொடர்பு:
Roshni Mitra / Mili Lalwani
UBM India
+91-22-61727000
[email protected] / [email protected]
Share this article