மும்பை, November 22, 2016 /PRNewswire/ --
CPhI & P-MEC 2016 ஒரு பார்வை:
-1300 கண்காட்சியாளர்கள், 100-க்கும் அதிகமான நாடுகளின் பங்கேற்பு மேலும் 40,000 பங்கேற்பாளர்கள்- ஒரு வாரம் நடைபெறும் இந்த நகர்தொடர் கண்காட்சியில்
-ஒரே சமயத்தில் இரண்டு இடங்களில் நடத்தப்படுகிறது -பிஈசி மற்றும் பிகேசி
-முக்கிய சிறப்பம்சங்களில், சப்ளையர் தேடல் மேஜை, புதுப்புனைவு புகைபடங்கள் மற்றும் கண்காட்சியாளர்களின் காட்சிப்பொருட்கள் ஆகியவை அடங்கும்
UBM India-வின் தனித்துவமான நிகழ்வாகிய, உலகின் முன்னணி ஃபார்மா தொடர்பு கண்காட்சியான CPhI & P-MEC India 2016-இன் பிரமாண்டமான 10-ஆவது ஆண்டு வெளியீட்டை இந்திய பார்மசியூடிகல் துறை பார்த்தது. இந்த தனிச்சிறப்பு வாய்ந்த மைல்கல்லை கொண்டாட, இந்த ஆண்டின் CPhI & P-MEC கண்காட்சி, நவம்பர் 21க்கும் 23க்கும் இடையே - முதல் முறையாக, ஒரே சமயத்தில் இரண்டு இடங்களில் - த பாம்பே எக்ஸிபிஷன் சென்டர் (பிஈசி)-யிலும், அதன் முதல் முறை தொடக்கம் எம்எம்ஆர்டிஏ கிரவுண்ட்ஸ், பாந்த்ரா குர்லா காம்ப்லெக்ஸிலும்(பிகேசி) நடக்கிறது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20161121/441502 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20161114/438670LOGO )
இந்த ஆண்டின் நகர்தொடர் நிகழ்வில், 1300க்கும் அதிகமான கண்காட்சியாளர்கள், 100-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் 40,000 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். பிஈசி யில் CPhI & P-MEC -யின் பாரம்பரிய பங்கேற்பாளர்கள் பங்குபெற்றபோது, அதையொட்டிய இன்னொரு அரங்கமாகிய எம்எம்ஆர்டீஏ கிரவுண்ட்ஸ், பிகேசி-யில் ICSE மற்றும் BioPh -இன் பங்கேற்பாளர்களும் இடம் பெற்றனர்.
CPhI-P-MEC 2016-இன் தொடக்கவிழா இரண்டு இடங்களிலும் ஒரே சமயத்தில், Dr. Appaji - நிர்வாக மேலாளர் Pharmexcil; Mr. Ravi Uday Bhaskar -கூடுதல் நிர்வாக இயக்குனர் Pharmexcil மற்றும்
Mr. Satish Wagh - துணை மேலாளர் Chemexcil மற்றும் சிஎம்டீ Supriya Lifesciences மற்றும் பலரின் பெருமைக்குரிய தலைமையில் நடைபெற்றது.
தனது முதன்மையான பார்மா நிகழ்வின் பத்தாம் வருட நிகழ்வைக் குறிக்கும் வகையில், UBM India CPhI & P-MEC கண்காட்சிக்கு முன்னரே India Pharma Week (IPW), அறிவித்திருந்த, பத்து வழிக்கோலும் நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய ஒரு கண்கவர் நிகழ்ச்சி, நவம்பர் 17 அன்று ஒரு வெற்றிகரமான துவக்கத்தைக் கண்டது. பார்மா துறையின் தூண்களாகிய வணிகம், அறிவுத்திறன், தலைமை, புதுப்புனைவு, அங்கீகாரம் மற்றும் தொடர்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு, IPW -வில், முன்-இணைப்பு காங்கிரஸ்; பார்மாவில் பெண்கள் - பவர் (Women in Pharma - Power Breakfast); பிரேக்ஃபாஸ்ட் இந்தியா பார்மா விருதுகள், (India Pharma Awards); தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கான மாலை, (Networking Evening); பார்மா தலைவர்களின் கோல்ஃப்; (Pharma Leaders' Golf); ஒரு ரகசிய சிஇஓக்கள் மாநாடு (CEO Roundtable) மற்றும் இன்னும் பல நிகழ்ச்சிகளை உள்ளடக்கியிருந்தது. IPW CPhI & P-MEC கண்காட்சியை ஒரு சுவர் காட்சியிலிருந்து ஒரு குறிப்பிடத்தக்க அறிவுசார் பெருமதிப்புக் கண்காட்சியாக மாற்றியமைத்தது.
CPhI Worldwide தோற்றுவிக்கப்பட்ட CPhI & P-MEC இந்தியா முதலில் 2006-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று, மருந்துகளைக் கண்டுபிடிப்பதிலிருந்து எப்படி உட்கொள்ளவேண்டும் என்று நிர்ணயிப்பது வரையிலான விநியோகச் சங்கிலியின் ஒவ்வொரு படியையும் உள்ளடக்கிய, தெற்காசியாவின் முன்னணி பார்மா சந்திக்குமிடமாக அது உருவாகியுள்ளது. CPhI India, CROs -க்கள், CMOs -க்கள், API, மரபுவழி மருந்துகள், கலப்பான்கள் ஆகியவற்றின் உற்பத்தியாளர்கள், மேலும் மருந்து உருவாக்கம், நுண்ணிய இரசாயனங்கள், பயோசிமிலர்ஸ், முடிக்கப்பட்ட உருவாக்கங்கள், லேபுக்கான இரசாயனங்கள் மற்றும் இயல்தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தொழில் தளமாகும். அதே சமயம், P-MEC, பார்மா இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், பகுப்பாய்வு உபகரணங்கள், இயந்திரமயமாக்கல் மற்றும் ரோபோடிக்ஸ், பேக்கேஜிங் உபகரணங்கள் மற்றும் அவற்றின் விற்பனை, தொழிற்சாலை / வசதி உபகரணங்கள், ஆட்டோமேஷன் மற்றும் கட்டுப்பாடுகள், பதப்படுத்தும் கருவி, ஆர்எஃப்ஐடி, மாத்திரைகள் / கேப்ஸ்யூல் நிரப்பிகள், சுத்தமான அறை உபகரணங்கள், நிரப்பும் உபகரணங்கள், மற்றும் ஆய்வக பொருட்கள் ஆகியவற்றின் வணிகத்தை உள்ளடிக்கியது.
இந்த நிகழ்ச்சி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காட்சியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் குறிப்பிடத்தக்க வகையில் வணிகச் செயல்பாடுகளில் ஈடுபடும் விதத்தில் கடந்த சில ஆண்டுகளில் அதிவேக வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்த ஆண்டு, சப்ளையர் தேடல் மேஜை (சேவைகள் மற்றும் நிறுவனத்தின் பெயர் அடிப்படையிலான பார்வையாளர்களின் தேடலுக்கு உதவி புரியும் ஒரு டிஜிட்டல் வரைபடம்), புதுப்புனைவு புகைப்படக் கண்காட்சி (பங்குபெறும் பர்மா நிறுவனங்கள், தங்களுடைய புதுப்புனைவுகளை உலகளாவிய மேடையில் காட்சிக்கு வைக்க ஊக்குவிக்கப்பட்டனர்) மற்றும் கண்காட்சியாளரின் காட்சிப்பொருட்கள் (கண்காட்சியாளர்கள், தங்களுடைய புதிய தயாரிப்புகளின் அறிணுகங்கள் எப்படி பயனளிக்கக் கூடியதாக இருக்கும் என்பதை காட்டும் ஒரு களம்).
Hetero Limited; Nectar Lifesciences Limited; Alembic Pharmaceuticals Limited; Glenmark Pharmaceuticals Ltd மற்றும் Aurobindo Pharma Ltd.,இன்னும் பல நிறுவனங்கள், ஆகியவை CPhI 2016-இல் பங்குபெறும் முக்கிய நிறுவனங்களாகும். இன்னொரு புறம், முன்னணி நிறுவனங்களாகிய ACG Worldwide; Shimadzu Analytical; Gansons Ltd; Fette GmbH மற்றும் Accupack Engineering Pvt Ltd ஆகியவை
P-MEC-யில் இடம்பெறும்.
நடைபெற்றுவரும் ஆராய்ச்சிகளின்படி, இந்தியா வேகமாக வளர்ந்துவரும் உலக பார்மசியூடிக்கல் சந்தையில் ஒன்றாகும், மேலும் உலகளவில் தன்னை உற்பத்தி மற்றும் ஆராய்ச்சியின் மையாமாக நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. பரந்த அளவில் மூலப்பொருள் கிடைப்பதும், திறமையான தொழிலாளர்கள் கிடைப்பதும் இந்த தொழில்துறைக்கு ஒரு நிச்சியமான போட்டித்திரலான அனுகூலத்தை அளிக்கிறது. மதிப்பளவில், உலக பார்மசியூடிக்கல் துறையில் 2.4 சதவிகிதமும், தொழில் அளவில் 10 சதவிகிதமும் கொண்டு, 2020க்குள் $55 பில்லியன் அளவிற்கு வளரும் என்னும் எதிர்பார்ப்புடன், இந்திய பார்மசியூடிக்கல் தொழில்துறை உலக அளவில் வலுவாகக் காலூன்றியுள்ளது. மேலும், மரபுசார் மருந்துகள், தொகுப்பளவில், உலக ஏற்றுமதியி அளவில் 20 சதவிகிதமாக, மரபுசார் மருந்துகளை பெரிய அளவில் உலகம் முழுவதும் விநியோகிக்கும் நாடாக உள்ளது. இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் மேலும் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Mr. Yogesh Mudras, நிர்வாக இயக்குனர், UBM India, கூறியதாவது, CPhI & P-MEC 2016, இந்தியாவில் பார்மசியூடிக்கல்ஸ் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு மிகப்பரந்த தொழில் தளத்தை அளிக்கும் வகையில் கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளது. இத்துறையில் 10 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், இந்த கண்காட்சி, நமக்கு, திரும்பிப் பார்த்து, மறு மதிப்பீடு செய்து, முன்னோக்கி நகரும் நேரத்தை அளிக்கிறது." அவர் மேலும் கூறியதாவது, "எதிர்காலத்திற்காக, ஒரு பயோஃபார்மசியூடிக்கல் மையமாக மாறும் அளவிற்கு இந்தியாவிடம் திறமையும் ஆற்றலும் உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். இந்தத்துறையில் இது ஒரு புதுப்புனைவு நாடாக வெளிப்பட்டு, பயோஃபார்மசியூடிக்கல்ஸில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சியில் ஒரு தலைமைப் பொறுப்பை வகிக்கும் நேரம் வந்துவிட்டது,"
UBM India பற்றி
UBM India, கண்காட்சிகளின் தொகுப்பின் மூலமும், உள்ளுறைவான மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் மூலமும், தொழில் துறைகளின் வாங்குபவரையும் விற்பவரையும் இணைக்கும் ஒரு முன்னணி கண்காட்சி அமைப்பாளர். UBM India, நாடு முழுவதும், ஒவ்வொரு ஆண்டும் 25க்கும் மேலான பெரிய அளவிலான கண்காட்சிகளையும், 40 மாநாடுகளையும் நடத்தி பல்வேறு தொழில்துறைகளின் மத்தியில் வணிகம் வளர உதவி செய்து வருகிறது. ஒரு UBM Asia நிறுவனம், UBM India-விற்கு, மும்பை, புதுடெல்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் உள்ளன. UBM Asia, லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் இடம்பெற்றுள்ள UBM plc -க்கு சொந்தமான நிறுவனமாகும். UBM Asia-வின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டு நிறுவனமும் சைனா, இந்தியா மற்றும் மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தக ஒருங்கிணைப்பாளரும் ஆகும். மேலும் விவரங்களுக்கு ubmindia.in. தளத்தை பார்க்கவும்.
ஊடகத் தொடர்பு:
Mili Lalwani
UBM India
[email protected]
+91-9833279461
Share this article