மும்பை, November 18, 2016 /PRNewswire/ --
உலக அரங்கில் இந்திய மருந்துப் பிரிவின் வரவை குறிப்பிடுகின்றது
UBM India, இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர், India Pharma Week, என்னும் ஒரு 10 போக்கு உருவாக்கும் செயல்பாடுகளை உடைய ஒரு மலர்கொத்தை மும்பை நகரம் முழுவதிலும் தொடங்கி வைத்தது இது CPhI & P-MEC India 2016 என்னும் இதன் முன்னோடு நிகழ்வு மற்றும் உலகின் முன்னணி மருந்து நெட்வொர்க்கிங் நிகழ்வின் 10ஆம் ஆண்டுவிழாவை அடையாளப்படுத்துவதற்காக செய்யப்படுகின்றது. India Pharma Week உடைய அறிமுகத்துடன், இந்தக் கண்காட்சி தன்னை ஒரு மூன்று நாள் கண்காட்சியில் இருந்து ஒரு வாரம் நடைபெறும் நிகழ்வாக உருமாற்றி உள்ளது (IPW, 17-23 நவம்பர் 2016).
(Photo: http://photos.prnewswire.com/prnh/20161117/440653 )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20161117/440654 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20161114/438670LOGO )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
2006இல் அறிமுகப்படுத்தப்பட்ட, CPhI & P-MEC India, CPhI Worldwideஇல் இருந்து தொடங்கப்பட்டது, அது தெற்கு ஆசியாவின் முன்னணி மருந்தக சந்திப்பு இடமாக மாறி விநியோக சங்கிலியின் ஒவ்வொரு படியையும் பூர்த்திசெய்கிறது, இதில் மருந்து கண்டுபிடிப்பு முதல் நிறைவுசெய்யப்பட்ட மருந்தளவு வரை, இயந்திரம் முதல் பேக்கேஜிங் வரை உள்ளடங்கும். இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காட்சியாளர்கள் மற்றும் கணிசமான அளவுகளுக்கு மேல் தொழிலில் ஈடுபடும் பார்வையாளர்களுடன், இந்த கண்காட்சியானது பல ஆண்டுகளாக பெருவாரியாக வளர்ந்து வந்துள்ளது.
India Pharma Week தொடக்க விழாவை தொடர்ந்து வாரம் முழுவதிலுமான செயல்பாடுகளை அமைக்கின்ற Pre-Connect Congress நடைபெற்றது. இந்த தொடக்கவிழா நிகழ்வு உலகளாவிய நிறுவனங்கள் இந்திய மருந்து ஒழுங்குமுறை தேவைகள், வளர்ச்சி மற்றும் எதிர்கால வியாபாரத்திற்கான வளரும் பிரிவுகளை அறிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பாக செயல்பட்டன. 'மருந்து ஏற்றுமதி ஆற்றலுக்கான வழக்கமான மற்றும் வழக்கம் அல்லாத தளங்களை ஆராய்தல்'(Exploring Conventional and Unconventional Avenues to Enhance Pharmaceutical Export Potential'); 'இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல் - இந்திய மருந்துப் பிரிவுக்கான உந்து சக்தி'('Mergers and Acquisition - Driving force for Indian Pharma Sector'); உயிரி ஒத்ததன்மையுடையவை - அடுத்த பெரிய காரியம் ('Biosimilars - The next Big Thing); தர இணக்கம் - ஒரு கலாச்சார முன் தேவையா அல்லது வெளிப்புறமான கடமையா? (Quality Compliance - A Cultural Pre-Requisite Or External Obligation?') மற்றும் மேக் இன் இந்தியா - ஒரு மருந்தியல் நோக்கம் ('Make in India- A Pharma Perspective.') போன்ற போக்குள்ள தலைப்புகள் உள்ளடங்கிய வரிசையான பேனல் விவாதங்கள் நடைபெற்றன.
Pre-Congress இல் D G Shah, பொது செயலாளர், IPA; Sharad Tyagi, மேலாண்மை இயக்குநர், Boehringer Ingelheim; Srini Srinivasan, மேலாண்மை இயக்குநர் , Hospira Healthcare Pvt Ltd - A Pfizer Company; Sanjit Singh Lamba, மேலாண்மை இயக்குநர், Eisai Pharmaceuticals; CT. Renganathan, மேலாண்மை இயக்குநர், RPG Lifesciences; Krishna Prasad Chigurupati, நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குநர், Granules India; Vivek Sharma, தலைமை நிர்வாக அதிகாரி, Piramal Pharma Solutions & Critical Care; Ashok Bhattacharya, மேலாண்மை இயக்குநர், Takeda Pharmaceuticals; G. Munjal, மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, Ind-swift laboratories; and Satya Karm Punia, மேலாண்மை இயக்குநர், Camus Pharma போன்ற முதன்மையான மருந்து தலைவர்கள் பங்கேற்று விவாதங்களில் தங்கள் தனித்துவமான கருத்துக்களை முன்வைத்தனர்.
India Pharma Weekஐ சுற்றி நடைபெறும் மற்ற முக்கிய நிகழ்வுகளில் உள்ளடங்குவது நவம்பர் 18 அன்று நடைபெறும் The Women in Pharma-Power Breakfast அமர்வில் இந்திய மருந்துத் தயாரிப்புத் தொழிலில் உள்ள மொத்தப் பணியாளர்களில் 15 சதவீதம் மட்டுமே பெண்கள் இருக்கின்றனர் என்ற உண்மை பற்றி விவாதிக்கப்படும். இந்த பேச்சுவார்த்தைகளில் மருந்துத் துறையில் இந்த நிலையைத் தகர்த்தெறிந்த Samina Vaziralli, நிர்வாக துணை நாற்காலிநபர், Cipla; Dr Anurita Majumdar, மூத்த மருத்துவ இயக்குநர் மற்றும் உலகளாவிய நிறுவப்பட்ட மருந்து மருத்துவ லீட், Pfizer; மற்றும் Dr Rashmi Hegde, இயக்குநர் - மருத்துவம், Abbott போன்றோர் உள்ளிட்ட பெண்களின் தலைமையில் நடைபெறும்.
நவம்பர் 18 மாலையில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்படுள்ள, மருந்துத் தயாரிப்புத் துறையின் சிறப்பு, சாதனைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை அங்கீகரித்துக் கொண்டாடக்கூடிய ஒரு முயற்சியாகிய India Pharma Awards, வலையமைப்பு வாய்ப்புகள், விளக்கக் காட்சிகள் மற்றும் கவர்ச்சியான பொழுதுபோக்குச் செயல்கள் ஆகியவற்றின் மூலம் வலுவூட்டுவதாக உள்ளது. மறுபுறம், நவம்பர் 20 அன்று நடைபெறும் Pharma Leaders' Golf , ஃபார்மா தலைவர்கள் குளிர்கால சூரிய வெளிச்சத்தின் கீழ் பந்தினை பந்தடி மேடை மீது வைத்து அடித்தல், வலையமைப்பு மற்றும் வணிகத் தொடர்புகளால் நிரம்பியிருக்கச் செய்யும்.
தொழில்துறைச் சிந்தனை கொண்ட தலைவர்களின் பிரத்தியேக கூட்டமாகிய நவம்பர் 22 அன்று நடைபெறும் உள்ளரங்கு CEO Round Table முன்னணி மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் CEO-க்களை தொழில்துறையில் நிலவுகின்ற முக்கியச் சவால்கள் குறித்து சிந்தனையைத் தூண்டுகின்ற, தீர்வு-சார்ந்த விவாதங்களில் ஆழ்ந்து ஈடுபடுவதற்காக ஒன்று திரட்டும், அதன் விளைவாக கொள்கை உருவாக்குபவர்களுக்கு வெள்ளை அறிக்கை வழங்க ஏற்பாடு செய்யப்படும். இந்த சந்திப்பில் இடம்பெறும் சில முக்கிய பிரதிநிதிகளில் Sanjiv Navangul, மேலாண்மை இயக்குநர், Janssen India, (Johnson and Johnson-ன் ஒரு மருந்துக் கம்பெனி; Sudarshan Jain, மேலாண்மை இயக்குநர், Abbott Healthcare; Dr BPS Reddy, தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், Hetero Drugs; Dr Dinesh Dua, தலைமை நிர்வாக அதிகாரி, Nectar Lifesciences; DG Shah, தலைவர், IPA; Madan Mohan Reddy, இயக்குநர், Aurobindo; Kanchana TK, தலைவர், OPPI; Prashant Nagre, தலைமை நிர்வாக அதிகாரி, Fermenta Biotech; Dr. Ketan R. Patel, தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், Troikaa மற்றும் Dr. Dushyant R Patel, தலைவர்மற்றும் மேலாண்மை இயக்குநர், Astral SteriTech.
India Pharma Week என்பது ஆற்றல் மிக்க இந்திய மருந்துத் தயாரிப்புச் சந்தையைக் காட்சிப்படுத்து- வதற்கான பல பரிமாணக் களம் ஆகும். அளவின் அடிப்படையில் இந்த தொழில்துறை மூன்றாம் இடம் வகிக்கின்றது மற்றும் 2020-க்குள் இது வருடம் ஒன்றுக்கு 15 சதவீதத்துக்கும் மேற்பட்ட வளர்ச்சியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியா சர்வதேச அளவில் ஜெனரிக் மருந்துகளின் மிகப் பெரிய வழங்குநராகத் திகழ்கிறது, அளவின் அடிப்படையில் சர்வதேச ஏற்றுமதியில் இந்திய ஜெனரிக் மருந்துகள் 20 சதவீத பங்களிப்பைப் பெற்றுள்ளன. தற்சமயம் எய்ட்ஸை எதிர்த்துப் போராடுவதற்கு உலகளவில் பயன்படுத்தப்படும் ஆன்டிரெட்ரோவைரல் மருந்துகளில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவை இந்திய மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களால் விநியோகிக்கப்படுகின்றன. வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கருத்துப்படி, ஒவ்வொரு வருடமும் 11.44 சதவீத வளர்ச்சியுடன் FY 2015-16 ஆம் நிதியாண்டில் US$ 12.91 பில்லியன் மருந்துப் பொருட்கள் ஏற்றுமதியுடன் இந்தியா சீனாவை விட முன்னிலை பெற்றுள்ளது.
India Pharma Week தொடக்க விழாவில் பேசிய Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India இவ்வாறு கூறினார், " India Pharma Week என்பது கருத்துக்களின் ஒரு உருகும் பானையாகவும் ஒரு முழுமையான கல்வி பகிரப்படுவதற்கான தளமாகவும் இருக்கிறது, இதன் மூலம் எங்கள் முன்னோடி மருந்து நிகழ்வு CPhI&P-MEC சுவர்களுக்குள் நடக்கும் கண்காட்சி என்பதை கடந்து சென்று கணிசமான அறிவுசார்ந்த மதிப்பை கூட்டியுள்ளது. இது முக்கிய பங்குதாரர்களை உரையாடச் செய்யவும், ஒருங்கிணைக்கவும், கூட்டணி ஏற்படுத்தவும், கற்கவும், பகிரவும் அதே நேரம் வளர்ந்த மற்றும் வளர்கின்ற சந்தைகளில் வெளிப்படுகின்ற முக்கிய வாய்ப்புகளை கண்டறியவும் ஒரு வாய்ப்பை அளிக்கிறது. தொழில், கல்வி, தலைமைத்துவம், புதுமை, அங்கீகாரம் மற்றும் நெட்வொர்கிங் என்னும் தூண்களில் கவனம் செலுத்தி, UBM Indiaவில் இருக்கும் நாங்கள் மருந்து துறையிலே ஏற்படும் மாற்றத்திற்கு ஊக்கசக்தியாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம் - இதற்கு துறையில் இருந்து வரும் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் புதுமைபுகுத்துவோரின் சரிசமமான ஆதரவு உள்ளது."
UBM India பற்றி
UBM India என்பது கண்காட்சித் தொகுப்புகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் ஆகியவற்றின் வாயிலாக உலகம் முழுவதும் உள்ள வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் ஒருங்கிணைக்கும் களங்களை தொழில்துறையினருக்கு வழங்குகின்ற இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பு நிறுவனம் ஆகும். UBM India ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் சுமார் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் நடத்துகின்றது; அதன்மூலம் பல தொழில்துறை நிறுவனங்களுக்கிடையேயான வர்த்தகத்துக்கு உதவுகின்றது. ஒரு UBM Asia நிறுவனமாகிய UBM India-வின் அலுவலகங்கள் மும்பை, புதுதில்லி, பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. UBM Asia நிறுவனம் லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM plc நிறுவனத்துக்குச் சொந்தமானது ஆகும். UBM Asia நிறுவனம் ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும், மற்றும் அது சீனா, இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளராகவும் உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து பார்வையிடவும் ubmindia.in.
ஊடகத் தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-022-61727000
UBM India
Share this article