மும்பை, November 15, 2016 /PRNewswire/ --
கண்காட்சியின் பத்து ஆண்டு கால வெற்றியை 1 வார மகிழ்ச்சியுடன் கொண்டாடுதல்
- தனது சிறப்பு வாய்ந்த 10வது ஆண்டு விழாவுக்காக, தெற்காசியாவின் மிகப்பெரிய ஃபார்மா நிகழ்ச்சியாகிய CPhI மற்றும் P-MEC India முதல் முறையாக பாம்பே எக்ஸிபிஷன் சென்டர்(குர்கான்) மற்றும் முதல் முயற்சியாக எம் எம் ஆர் டி ஏ மைதானம் (பி கே சி), மும்பை ஆகிய இரண்டு வெவ்வேறு இடங்களில் நடத்தப்படும்.
- 100க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 40,000க்கும் மேற்பட்ட வருகையாளர்கள் மற்றும் 1,300 கண்காட்சியாளர்கள்.
- நவம்பர் 17-இல் உள்ளார்ந்த முன்-இணைப்பு அமர்வுடன் தொடங்கிய India Pharma Week மும்பை முழுவதும் 10க்கும் மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்ச்சிகளின் அரங்கேற்றத்துடன் கண்காட்சிக்கும் முன்னரே தொடங்கியது.
இந்தியாவின் முன்னோடி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகிய UBM India நிறுவனம், மும்பையில் உலகின் முன்னணி மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களை இணைக்கும் நிகழ்ச்சியாகிய CPhI மற்றும் P-MEC India 2016-ஐ நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது. தனது பத்தாவது ஆண்டுவிழாவில் இந்தக் India Pharma Week (IPW, நவம்பர் 2016, 17 முதல் 23ஆம் தேதி வரை) தொடங்கியதன் மூலம், மூன்று-நாள் கண்காட்சி என்ற நிலையிலிருந்து ஒரு வார கண்காட்சியாக மாற்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20161114/438671LOGO )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20161114/438670LOGO )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
2006-இல் CPhI Worldwide நிறுவனத்தால் தொடங்கப்பட்ட CPhI & P-MEC India, தெற்காசியாவின் முன்னணி மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் சந்திக்கும் இடமாகத் திகழ்கின்றது. இது மருந்துக் கண்டுபிடிப்பு முதல் இறுதி செய்யப்பட்ட மருந்தளவு வரை, விநியோகச் சங்கிலியின் ஒவ்வொரு படியையும் உள்ளடக்கியுள்ளது. அதே சமயம் P-MEC ஆனது மருந்துத் தயாரிப்பு இயந்திரங்களின் உற்பத்தியாளர்கள், தயாரிப்புகள் மற்றும் பொதியிடுதல் ஆகியவற்றை உள்ளடக்குகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காட்சியாளர்களும் பார்வையாளர்களும் வணிகத்தில் குறிப்பிடத்தக்க அளவு ஈடுபாடு காட்டியதன் விளைவாக இந்தக் கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் அதிவேகமாக வளர்ந்துள்ளது,
இந்தக் கண்காட்சியின் பத்தாவது நிகழ்வில், இது மும்பையில் பி இ சி மற்றும் எம் எம் ஆர் டி ஏ மைதானம், பாந்த்ரா குர்ளா காம்ப்ளக்ஸ் (பி கே சி) ஆகிய இரண்டு இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்படும். முதலாவதாக குறிப்பிடப்பட்டுள்ள இடம் CPhI மற்றும் P-MEC-இன் பாரம்பரிய பங்கேற்பாளர்களைக் கொண்டிருக்கும் அதே சமயம், புதிய இடமாகிய BKC ஆனது ICSE & BioPh-க்கான பங்கேற்பாளர்களை உள்ளடக்கியதாக இருக்கும். இந்தக் கண்காட்சி வழங்குநரைக் கண்டறியும் மேசை (சேவைகள் அல்லது நிறுவனத்தின் பெயர்களின் அடிப்படையில் கண்காட்சியாளர்களைக் கண்டுபிடிக்க பார்வையாளர்களுக்கு உதவக்கூடிய ஒரு டிஜிட்டல் தளத் திட்டம்), புதுமைகளுக்கான காட்சிக்கூடம் (ஒரு சர்வதேச செயற்களத்தில் தங்களுடைய புதுக் கண்டுபிடிப்புகளைக் காண்பிப்பதற்கு கண்காட்சியாளர்கள் ஊக்குவிக்கப்படும் இடம்) மற்றும் கண்காட்சியாளர் காட்சியிடம் (தயாரிப்பு அறிமுகங்கள் மற்றும் கண்காட்சியாளர்களால் வழங்கப்படும் சலுகைகள் ஆகியவை சிறப்பித்துக் காட்டப்படும் இடம்) போன்ற அற்புதமான அம்சங்களைக் கொண்டுள்ளதாக இருக்கும்.
இந்த வருடம் CPhI-இல் Hetero Limited; Nectar Lifesciences Limited; Alembic Pharmaceuticals Limited; Glenmark Pharmaceuticals Ltd. மற்றும் Aurobindo Pharma Ltd. ஆகியவை உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்துகின்றன. மாறாக, ACG Worldwide; Shimadzu Analytical; Gansons Ltd; Fette GmbH மற்றும் Accupack Engineering Pvt Ltd. போன்ற சில முன்னணி நிறுவனங்கள்
P-MEC-இல் தங்களுடைய தயாரிப்புகளை காட்சிப்படுத்தும்.
UBM India நிர்வாக இயக்குநர் Mr. Yogesh Mudras கூறியதாவது, "CPhI & P-MEC India 2016 இந்தியாவில் மருந்துத் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒரு விரிவான தொழில் மேடையை வழங்க முற்படுகின்றது. CPhI மற்றும் P-MEC மூலம், புதிய கண்டுபிடிப்புகள் மூலம் தங்களுடைய வணிகத்தை உயர்த்தியதற்கும் மருந்துத் தயாரிப்புத் தொழிலில் மாற்றத்தை ஏற்படுத்தியதற்கும் தொழில்துறையின் அதிகாரமையங்களை நாங்கள் ஈடுபடுத்தியுள்ள வழி எங்களுக்குப் பெருமையளிப்பதாக உள்ளது. இந்த வருடம், இந்த செயற்களத்தில் பத்தாண்டு வெற்றியை கொண்டாடுவதற்கான மற்றும் சிறப்பிப்பதற்கான வழியாகத் திகழும் India Pharma Week எங்களுக்கு உற்சாகமளிப்பதாக இருக்கிறது. கடந்த பத்தாண்டுகள் மிகவும் நம்பிக்கையளிப்பதாக இருந்துள்ள அதே சமயம், இந்தக் கண்காட்சி மற்றும் இணை நிகழ்வுகள் வரவிருக்கும் தசாப்தம் தன்னை எப்படி வடிவமைத்துக்கொள்ளப் போகிறது என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவும்."
India Pharma Week வணிகத்தின் தூண்களாகிய அறிவு, தலைமை, புதுக் கண்டுபிடிப்பு, அங்கீகாரம் மற்றும் மருந்துத் தயாரிப்புக் களத்தில் தொடர்பு ஏற்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றது.
நவம்பர் 17 அன்று நடைபெறும் Pre- Connect Congress IPW-ஐ செயல்படச் செய்கிறது மற்றும் இந்தியாவின் மருந்துத் தயாரிப்பு ஒழுங்குமுறைத் தேவைகள், வளர்ச்சி மற்றும் எதிர்கால வணிகத்துக்கான வளர்ந்துவரும் பிரிவுகள் ஆகியவற்றைப் பற்றிக் கற்றுக்கொள்வதற்கு சர்வதேச நிறுவனங்களுக்கான ஒரு வாய்ப்பாகச் செயல்படுகின்றது. இந்தக் கூட்டத்தில் முன்னணி மருந்துத் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர்களான IPA பொதுச் செயலாளர் D G Shah; Sharad Tyagi, எம் டி (நிர்வாக இயக்குநர்), Boehring Ingelheim; Srini Srinivasan, எம் டி (நிர்வாக இயக்குநர்), Hospira Healthcare (A Pfizer Company); Sanjit Singh Lamba, எம் டி (நிர்வாக இயக்குநர்),, Eisai Pharmaceuticals மற்றும் CT Ranganathan, எம் டி (நிர்வாக இயக்குநர்),, RPG Lifesciences ஆகியோருடன் மற்றும் பலரும் கலந்து கொண்டு தொழில் துறையில் நிலவும் போக்குகள் குறித்த தனித்துவமிக்க உள் நோக்கினை வழங்குவார்கள்.
நவம்பர் 18 அன்று நடைபெறும் The Women in Pharma-Power Breakfast அமர்வில் இந்திய மருந்துத் தயாரிப்புத் தொழிலில் உள்ள மொத்தப் பணியாளர்களில் 15 சதவீதம் மட்டுமே பெண்கள் இருக்கின்றனர் என்ற உண்மை பற்றி விவாதிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த விவாதங்கள் மருந்துத் துறையில் இந்த நிலையைத் தகர்த்தெறிந்த Samina Vaziralli, எக்ஸிக்யூடிவ் வைஸ்-சேர்மன், Cipla; Dr Anurita Majumdar, சீனியர் மெடிக்கல் டைரக்டர் & க்ளோபல் எஸ்டாபிலிஸ்ட் மெடிக்கல் லீட், Pfizer; மற்றும் Dr Rashmi Hegde, - டைரக்டர் - மெடிக்கல், Abbott போன்றோர் உள்ளிட்ட பெண்களின் தலைமையில் நடைபெறும்.
நவம்பர் 18 மாலையில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்படுள்ள, மருந்துத் தயாரிப்புத் துறையின் சிறப்பு, சாதனைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை அங்கீகரித்துக் கொண்டாடக்கூடிய ஒரு முயற்சியாகிய India Pharma Awards, வலையமைப்பு வாய்ப்புகள், விளக்கக் காட்சிகள் மற்றும் கவர்ச்சியான பொழுதுபோக்குச் செயல்கள் ஆகியவற்றின் மூலம் வலுவூட்டுவதாக உள்ளது.
தொழில்துறைச் சிந்தனை கொண்ட தலைவர்களின் பிரத்தியேக கூட்டமாகிய நவம்பர் 22 அன்று நடைபெறும் உள்ளரங்கு CEO Round Table முன்னணி மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் சி இ ஓ-க்களை தொழில்துறையில் நிலவுகின்ற முக்கியச் சவால்கள் குறித்து சிந்தனையைத் தூண்டுகின்ற, தீர்வு-சார்ந்த விவாதங்களில் ஆழ்ந்து ஈடுபடுவதற்காக ஒன்று திரட்டும், அதன் விளைவாக கொள்கை உருவாக்குபவர்களுக்கு வெள்ளை அறிக்கை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
IPW ஆதரவின் கீழ் மேற்கொள்ளப்படும் சில பிரபலமில்லாத தடகள நிகழ்வுகள் நவம்பர் 19 அன்று மேற்கொள்ளப்படும் Plant Visit (எதிர்கால மருந்துத் தயாரிப்பு வணிகத்துக்கான இடமாக இந்தியாவை நிலைப்படுத்துவதற்கு உள்ளூர் மற்றும் சர்வதேச வருகையாளர்களுக்கான தொழிற்சாலைச் சுற்றுப்பயணங்கள்) மற்றும் நவம்பர் 20 அன்று நடைபெறும் Pharma Leaders' Golf (ஃபார்மா தலைவர்கள் குளிர்கால சூரிய வெளிச்சத்தின் கீழ் பந்தினை பந்தடி மேடை மீது வைத்து அடித்தல், வலையமைப்பு மற்றும் வணிகத் தொடர்புகளால் நிரம்பியிருத்தல்) ஆகியவை ஆகும்.
India Pharma Week என்பது ஆற்றல் மிக்க இந்திய மருந்துத் தயாரிப்புச் சந்தையைக் காட்சிப்படுத்து- வதற்கான பல பரிமாணக் களம் ஆகும். அளவின் அடிப்படையில் இந்த தொழில்துறை மூன்றாம் இடம் வகிக்கின்றது மற்றும் 2020-க்குள் இது வருடம் ஒன்றுக்கு 15 சதவீதத்துக்கும் மேற்பட்ட வளர்ச்சியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியா சர்வதேச அளவில் ஜெனரிக் மருந்துகளின் மிகப் பெரிய வழங்குநராகத் திகழ்கிறது, அளவின் அடிப்படையில் சர்வதேச ஏற்றுமதியில் இந்திய ஜெனரிக் மருந்துகள் 20 சதவீத பங்களிப்பைப் பெற்றுள்ளன. தற்சமயம் எய்ட்ஸை எதிர்த்துப் போராடுவதற்கு உலகளவில் பயன்படுத்தப்படும் ஆன்டிரெட்ரோவைரல் மருந்துகளில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவை இந்திய மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களால் விநியோகிக்கப்படுகின்றன. வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கருத்துப்படி, ஒவ்வொரு வருடமும் 11.44 சதவீத வளர்ச்சியுடன் FY 2015-16 ஆம் நிதியாண்டில் US$ 12.91 பில்லியன் மருந்துப் பொருட்கள் ஏற்றுமதியுடன் இந்தியா சீனாவை விட முன்னிலை பெற்றுள்ளது.
UBM India பற்றி
UBM India என்பது கண்காட்சித் தொகுப்புகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் ஆகியவற்றின் வாயிலாக உலகம் முழுவதும் உள்ள வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் ஒருங்கிணைக்கும் களங்களை தொழில்துறையினருக்கு வழங்குகின்ற இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பு நிறுவனம் ஆகும். UBM India ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் சுமார் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் நடத்துகின்றது; அதன்மூலம் பல தொழில்துறை நிறுவனங்களுக்கிடையேயான வர்த்தகத்துக்கு உதவுகின்றது. ஒரு UBM Asia நிறுவனமாகிய UBM India-வின் அலுவலகங்கள் மும்பை, புதுதில்லி, பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. UBM Asia நிறுவனம் லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM plc நிறுவனத்துக்குச் சொந்தமானது ஆகும். UBM Asia நிறுவனம் ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும், மற்றும் அது சீனா, இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளராகவும் உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து பார்வையிடவும் : ubmindia.in
ஊடகத் தொடர்புநபர்:
Mili Lalwani,
UBM India
[email protected]
+91-22-61727000
Share this article