மும்பை, November 11, 2016 /PRNewswire/ --
- மும்பையில் UBM India - வின் இந்தியாவிலேயே தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய துறைக்கான பெரிய வர்த்தகக் கண்காட்சி
- இந்தியா மற்றும் உலகளாவிய 160 ப்ராண்டுகளின் சங்கமம்
- 5வது ஆண்டின் தடமாக OSH India பாதுகாப்பு விருதுகளும் தொழில்துறை மாநாடும்
5வது Occupational Safety & Health (OSH) India-வின் (10, 11 நவம்பர் 2016) பாதுகாப்பு கண்காட்சியை புதியதும், பெரிய இடமுமான சிட்கோ கண்காட்சி மையத்தில் (CIDCO Exhibition Centre, Vashi, Navi Mumbai) UBM India இன்று தொடங்கி வைத்தது. வேலைபார்க்கும் இடத்தில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட துறையில் இருக்கும் மிகவும் இன்றியமையாத சில சவால்கள் குறித்துக் கலந்துரையாடவும், தீர்வுகள் காணவும் இந்தக் கண்காட்சி உலகப் புகழ்பெற்ற கன்காட்சியாளர்களையும், ஆலோசகர்களையும், தொழில் நிபுணர்களையும், முக்கியமான அரசு அலுவலர்களையும் ஓரு பொதுவான மேடையின் கீழ் கொண்டு வந்திருக்கிறது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20161110/437767 )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20161110/437768 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20161102/435226 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
OSH India 2016 -ன் ஆரம்பவிழா, Shri Sudhakar Sambhaji Sonawane, Honourable Mayor, Navi Mumbai Municipal Corporation (NMMC); Shri Jayendra Motghare, Directorate of Industrial Safety and Health, Government of Maharashtra; Shri Ajay Pandit, Director (Technical), Office of the Textile Commissioner, Ministry of Textiles, Government of India; Smt. K. Hemalatha, Regional Executive Director, Western Region, Airports Authority of India (AAI), Govt of India; Sanjay Pathak, Director, Ordnance Factory Board, Regional Controllerate of Safety (WR) Khadki Pune, Ministry of Defence, Government of India மற்றும் Mr Yogesh Mudras, நிர்வாக இயக்குநர், UBM India போன்ற பிரபலாமானவர்களின் மத்தியில் நடைபெற்றது.
அனைத்துத் தொழில் துறைகளிலிருந்தும் பிரபலக் கண்காட்சியாளர்கள் பங்கெடுத்துக் கொண்டது OSH India ஒரு தொழில் சார்ந்த நிகழ்வு என்பதற்கான தேவையையும், கவனத்தையும் உறுதி செய்கிறது. `ப்ரஸன்டிங் பார்ட்னர் - Dickies (ID Overseas Pvt. Ltd.), தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் பார்ட்னர்' - - Euro Safety Footwear (India) Pvt. Ltd.,, `ப்ளாட்டினம் பார்ட்னர்' - Udyogi International Pvt. Ltd., `கோல்ட் பார்ட்னர்' - Venus Safety & Health and HAWS Corporation,`சில்வர் பார்ட்னர்' - Prolite , Mallcom and Allen Cooper, `நாலெட்ஜ் பார்ட்னர்' - சூர் சேஃப்டி, `ரெஜிஸ்ட்ரேஷன் பார்ட்னர்' - Karam Industries, `ஒர்க் அட் ஹைட் பார்ட்னர்' - JLG மற்றும் Venus Safety & Health Pvt. Ltd, BATA India Limited E.I.Dupont India Pvt Ltd, NEBOSH Ltd, and Tyco Safety Products (I) Pvt. Ltd. இந்த ஆண்டு 160க்கும் மேலான ப்ராண்ட்கள் இந்தக் காட்சியில் இடம்பெற்றன. அதோடு அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜெர்மனி,ஸ்ரீலங்கா, நார்வே, ஜப்பான், மலேசியா போன்ற ஒரு சர்வதேசப் பங்கெடுப்பையும் கண்ணுற்றது.
இன்றைக்கு வேலைபார்க்கும் இடத்தில் மிகவும் இன்றியமையாத தேவைக்கு உறுதியான தீர்வுகளை OSH India வழங்க முற்படுகிறது. International Labour Organisation (ILO), World Health Organisation ( WHO) தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான விஷயத்தில் பராமரிப்பையும், தொழிலாளர்களின் ஆரோக்கியத்தையும், வேலைபார்க்கும் திறனையும் ஊக்குவிக்கவும்; வேலைக்கான சூழ்நிலையை மேம்படுத்தவும், வேலை பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்துக்கு உகந்ததாகவும், வேலை பார்க்கும் அமைப்புகளும், வேலைக் கலாச்சாரமும் வேலை பார்க்கும் இடத்தில் ஆரோக்கியத்துக்கும் பாதுகாப்புக்கும் ஆதரவு தரக்கூடிய வழிகாட்டுதல் என வெவ்வேறு நோக்கங்களைக் கொண்டுள்ளதாக இருக்கிறது. ஒரு நேர்மறையான சமூக சூழலையும், சிக்கலில்லாத செயல்பாட்டையும், உற்பத்தித்திறன் மேம்படுவதையும் இவை ஊக்குவிக்கும்.
OSH India 2016 ன் ஆரம்பவிழா நிகழ்ச்சியில் Mr. Yogesh Mudras, நிர்வாக இயக்குநர், UBM India பேசுகையில், `இந்தியாவில் தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தைச் சுற்றி அதிமாக பிரச்சனைகள் இருக்கின்றன. போதிய விழிப்புணர்வு இல்லாதது அல்லது பல்வேறுவிதமாக பங்குதாரர்களிடையே ஒருங்கிணைப்பு இல்லாதது, முறைச்சார பொருளாதாரத்தின் வளர்ச்சி, நெகிழ்வு தன்மை கொண்ட வேலைகளின் விரிவாக்கம், தொழிலாளர் புலம்பெயர்வின் விரிவாக்கம், புதிய தொழில்நுட்பம் உபயோகிப்பது சம்பந்தப்பட்ட நேரிடர்கள் போன்றவையும் இதில் அடங்கும். OSH India 2016, இந்த தேவைகளுக்கு பதில் அளிப்பதோடு, உலகெங்கிலும் உள்ள பாதுகாப்பு, ஆரோக்கிய விநியோகஸ்தர்கள் மற்றும் சேவை வழங்குபவர்கள் அவர்களுடைய புதுமைகளையும் ஞானத்தையும், ஊடுருவாத இந்தியச் சந்தையில் காட்சிப்படுத்த இது வாய்ப்பளிக்கிறது. தொழில் பாதுகாப்பும் ஆரோக்கியமும் நிறுவனங்களின் முன்னுரிமை என்பதை முன்னெடுத்துச் செல்வதற்கு இரண்டு நாள் மாநாடு நடைபெறுகிறது. இது தொழிலாளர்களின் ஆரோக்கியத்தையும், உற்பத்தித்திறனையும் சிறப்பாக ஆக்குவதால் நிறுவனமும், பொருளாதாரமும் ஆதாயமடையும்.
தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் சார்ந்த தொழில் பயன்பெறும் பொருட்டு காட்சிப்படுத்துபவர்கள் தங்களுடைய புதுமையான பொருட்களைப் ப்ரமோட் செய்யவும், காட்சிப்படுத்தவும் இன்னோவேஷன் மண்டலம் என்கிற ஒரு மேடையும் இந்த எக்ஸ்போவில் அடங்கும். இந்த வருடம் கண்காட்சி நடைபெறும் நாட்களில் புதிய அம்சமான `நேரடிக் கருத்தரங்கில்' பணியிட பாதுகாப்பு தொடர்புடைய சமீபத்திய தொழில்நுட்பங்கள், போக்குகள் மற்றும் தலைப்புகளில் முன்னணி பாதுகாப்பு பொருட்கள் உற்பத்தியாளர்களின் கலந்துரையாடலையும், செயல் விளக்கத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. `நேரடிக் கருத்தரங்கில்' இடம்பெறக் கூடிய சில தலைப்புகள் - தோண்டும்போதுள்ள பொறுப்பு;, பணியிடத்தில் பாதுகாப்பை நீங்கள் எப்படி உறுதி செய்யவேண்டும் (நடைமுறை ஆய்வுகள்); பாதுகாப்புத் தடுப்புகள்: உடல் பாதுகாப்பு (தரநிலைகளும்,நடைமுறையும்); இயலுலகு பற்றிய விளக்கமும், பொருட்கள் வரிசையும் / கேள்வி, பதில்; ஃபால் ப்ரொடெக்ஷன் (வீழ் பாதுகாப்பு): பொறியியல் வீழ் பாதுகாப்பு ; பாதுகாப்பு ஒளியமைப்பு: ஆல்டெக்ஸ், அமெரிக்க, இந்தியத் தரநிலைகள், பணியிடச் சூழலியல் போன்றவையாகும்.
இந்த ஆண்டு மாநாட்டு பிரதிநிதிகளுடன் சேர்ந்து உலகில் உள்ள சிறந்த நடைமுறைகள் குறித்த எண்ணப் படிவங்களை உருவாக்கவும் பகிர்ந்து கொள்ளவும் முடிந்ததோடு மட்டுமல்லாமல் அதே நேரத்தில் நடந்த கண்காட்சி பணியிடத்தில் இருக்கக்கூடிய மிக இன்றியமையாத சவால்களுக்கானத் தீர்வுகளை அடையாளம் கண்டுகொள்ளவும் உதவியது. முக்கிய நிகழ்வுகளிலும், குழு விவாதங்களிலும் பல நாடுகளிலிருந்தும், முன்னணி சர்வதேச அமைப்புகளிலிருந்து வந்திருந்த தொழில் நிபுணர்கள் பங்கு கொண்டார்கள். மாநாட்டின் முதல் நாள் : 'OSH Challenges in India and the Way Ahead', 'Globalisation and the Changing World of Work', 'An Integrated Approach to Worker Health' a case study on 'How Good leadership can Drive Improvements in Process Safety' ஆகிய தலைப்புகளிலும் `Vision Zero : From Vision to Reality' and `Behaviour Based Safety Management" என்ற தலைப்புகளில் ப்ரசண்டேஷனும் நடைபெற்றது. இரண்டாம் நாள், `Women and OSH' and `The Role of Industrial Hygiene in OSH' என்ற தலைப்புகளில் குழு கலந்துரையாடல்கள் நடைபெற்றது. 'Risk Assessment & Risk Governance', 'Fire and Electrical Hazard Prevention', 'Making Big Differences to Small Businesses' and 'Health and Safety Risks in Construction' ஆகிய தலைப்புகளில் ப்ரசண்டேஷனும் அளிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் Mr Vinayak Marathe, Senior Vice President, Reliance Industries Limited; Mr Suresh Tanwar, Chief Group Safety and Health, Tata Group; Mr Krishnanand Mavinkurve, Vice President & Head OSH, Adani Ports and Special Economic Zone Limited; Mr Sunil Bailwar, Vice President & Head Corporate Environment, Health & Safety - Hindalco Industries Limited; Mr Ashok Emani, Director & Head- ESG, IDFC Ltd.; Mr Badal Roy, General Manager, Head Safety Offshore Operations - Oil & Natural Gas Corporation Ltd. (ONGC); Mr Pankaj Singh, General Manager - HSSE, India & South Asia, BP Castrol India; Mr JC Sekar, Co - Founder & CEO, AcuiZen Technologies Singapore Pte. Ltd.; Mr Stephen Philip Storey, Corporate EHS Head, Larsen & Toubro Limited India ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாகக் கலந்துகொண்டனர். OSH 2016 நான்காம் ஆண்டு OSH India Safety Awards ல் `Innovation' அல்லது `Hero' விருது வகைகள் பணியிட ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கு இணக்கமாக இந்தியாவில் செயல்பட்டுவரும் நிறுவனங்கள், அமைப்புகள், பொதுத்துறை அல்லது தனியார் நிறுவன கூட்டணிகள், தனிப்பட்ட நபர்கள் ஆகியோர் பங்குபெறவும் அனுமதிக்கப்பட்டது. Euro Safety Footwear (India) Pvt Ltd அவார்ட்ஸ் நைட்டின் ப்ரசன்ட்டிங் பார்ட்னர் ஆவார்கள். தொழில்துறையைச் சேர்ந்த பிரபலங்களும், முன்னோடிகளும் ஒன்றாகச் சேர்ந்த கொண்டாடிய இந்த இரவில் கவர்ச்சியும் பொழுதுபோக்கும் தடம்பதித்தன.
UBM India மும்பையில் நடத்திய OSH 2016 ஒரு தொழில் மேடை என்பதையும், வருடாந்திர எக்ஸ்போவின் நோக்கத்தையும் வலியுறுத்துகிறது என்பதற்கான தொழில்துறையைச் சார்ந்தவர்களின் நிரூபணம்.
Ms Kavita Nigam, General Manager- Publicity & Promotion, Karam Industries பேசும்போது, இந்தியாவில் `OSH' ஒரு புதிய தொழில்துறையாக இருந்தாலும் கூட முக்கியமாக பன்னாட்டு நிறுவனங்களின் பங்கெடுப்பால் விரைவான வளர்ச்சியை வெளிபடுத்தியது. OSH India இந்தத் தொழிலைக் காட்சிப்படுத்தும் ஒரே வர்த்தகக் கண்காட்சியாக இருப்பதால் எங்களுடைய புதிய பொருட்களைக் காட்சிப்படுத்த பெரிய தளத்தை வழங்குவதோடு எங்களுடைய ப்ராண்டை மேலும் உருவாக்குவதற்கு இது உதவுகிறது. மிகவும் அவசியமான பாதுகாப்புப் பயிற்சியின் மேல் கவனம் செலுத்தும் KARAM பணியிடத்தில் பெண்களுக்கான பாதுகாப்பிற்கு விடையளிக்கும் வகையில் தனித்துவமான பொருட்களையும் கூட அறிமுகப்படுத்துகிறது. மற்ற வழக்கமான பொருட்கள், சேவைகளுடன் இவையும் சேர்ந்து OSH 2016 ல் காட்சிப்படுத்தப்படுவதால் அதிக வாடிக்கையாளர்கள் சென்றடைவதற்கு உதவும். எங்களுடைய ப்ராண்டை மேலும் உருவாக்கவும், பரந்த பொருள் பிரிவைக் காட்சிப்படுத்தவும் நாங்கள் OSH 2016 ஐ எதிர்பார்க்கிறோம்' எனக் கூறினார்.
Mr Ankur Jain, Assistant Vice President, Bata India Ltd, ` வருடாவருடம் 18 சதவிகித அளவிற்கு வளர்ந்து கொண்டு வரும் தொழில், பாதுகாப்பு, ஆரோக்கிய தொழில் துறை அடுத்த 3-5 ஆண்டுகளில் இந்தத் தொழிலில் மிகப் பெரும் சாத்தியத்தை நாம் எதிர்பார்க்கலாம். தொடர்ந்து இந்தத் தொழிலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே தளமாக OSH India இருந்து வருகிறது. நாங்களும் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து பங்கெடுத்து வருகின்றோம். நாங்கள் எங்களுடைய புதிய வண்ணமயமான சூட்டுக்கு இதமாகவும், அணிந்து கொள்ள செளகரியமாகவும் இருக்கக்கூடிய ஷூக்களை OSH 2016 ல் காட்சிப்படுத்தி அறிமுகப்படுத்த இருப்பதோடு பங்குதாரர்களான வாடிக்கையாளர்கள், வியாபாரிகளுடன் ஆன நெருக்கமான அளாவளாவலையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
UBM India- பற்றி
இந்தியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளரான UBM India பல வகையான கண்காட்சிகள், துறை சார்ந்த மாநாடுகள், கருத்தரங்குகள் வாயிலாக உலகமெங்கும் இருக்கும் வாங்குபவர்களையும், விற்பனையார்களையும் ஒருங்கே ஒரு தளத்துக்குக் கொண்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் 25 பெரிய காண்காட்சிகளையும், 40 கருத்தரங்குகளையும் UBM India நடத்தி வருகிறது. இது பலவகையான தொழில்களுக்கு இடையேயான வர்த்தகத்துக்கு வழிவகுக்கிறது. UBM ஏசியா நிறுவனமான UBM India-வுக்கு மும்பை, புதுதில்லி, பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM ஏசியா, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்டிருக்கும் UBM plc -க்கு சொந்தமானது. UBM ஏசியா ஆசியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளரும், சீனா, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளின் மிகப் பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலதிகத் தகவலுக்கு தயவு செய்து ubmindia.in என்கிற இணையத் தளத்துக்குச் செல்லவும்
ஊடகத் தொடர்பு:
Mili Lalwani,
[email protected] ,
022-61727000
UBM India
Share this article