மும்பை, November 7, 2016 /PRNewswire/ --
UBM India -வினால் நடத்தப்பட்ட இத்துறையில் முதன்மையான கண்காட்சி
இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரான UBM India, மும்பையில் இந்திய நியூக்ளியர் எனர்ஜியின் (INE) 8-வது கண்காட்சியை (20-21 அக்டோபர்), அதன் முதலாவது பன்னாட்டு கண்காட்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. DAE-யினால் (அணு ஆற்றல் துறை) இணைந்து நடத்தப்பட்ட மற்றும் NPCIL-யினால் (Nuclear Power Corporation of India Ltd.) ஆதரவளிக்கப்பட்ட இந்த கண்காட்சியை தலைமை விருந்தினரான அணு ஆற்றல் துறையினால் நிறுவப்பட்ட ஹோமி பாபா சேர்-ல் (Homi Bhabha Chair) தற்போது இருக்கும் மிகச் சிறந்த அறிவியலாளரும், அணு ஆற்றல் ஆணையத்தின் உறுப்பினராகவும் உள்ள Dr. R.B. Grover அவர்களாலும், இந்தியாவிற்கான ஃபிரான்ஸின் தூதரான H.E Alexandre Ziegler அவர்களாலும்,முன்னணி French Utility giant - EDF-ன் புதிய அணுத் திட்டங்கள் & பொறியியலின் (New Nuclear Projects & Engineering) மேம்பாட்டுக்கான மூத்த துணைத் தலைவரான திரு. Vakisasai Ramany, அவர்களாலும் தொடங்கி வைக்கப்பட்டது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20161020/430832LOGO)
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c)
ஒரு சிறப்பு செக் நாட்டு வர்த்தகக் குழுவிற்கு தலைமை ஏற்று வந்த இந்தியாவிற்கான செக் குடியரசின் தூதுவரான H.E. Milan Hovorka, மற்றும் தெற்கு ஆசிய மார்க்கெட்டிங் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் ரொசாடோம்-ன் (South Asia Marketing (India) Pvt Ltd ROSATOM) Mr. Alexey Pimenov, மற்றும் அணு ஆற்றல் துறை, NCPW, SSSD-யின் தலைவரான Dr. Suresh Gangotra அவர்களும், அணு ஆற்றல் துறையின் பொது வழிப்புணர்வுப் பிரிவின் முன்னால் தலைவரும் Atomic Energy Education Society-யின் சிறந்த அறிவியலாளருமான Mr. S.K. Malhotra, மற்றும் Larsen & Toubro Ltd-ன் Vice President - Business Cluster (Process Plants& Nuclear) தலைவரான Mr. Anil Parab, மற்றும் Heavy Water Board-ன் முன்னால் தலைமை செயல் அதிகாரியும், தற்போது அணு ஆற்றல் துறையின் Raja Ramanna Chair-ல் இருக்கும், அணு ஆற்றல் கல்விச் சமூகத்தின் தலைவருமான Mr. Rajneesh Prakash, மற்றும் UBM இந்தியாவின் நிர்வாக இயக்குநரான Mr. Yogesh Mudras, மற்றும் UBM Indiaவின் குழு இயக்குநரான Mr. Rajneesh Khattar ஆகியவர்களும் இதில் கலந்துகொண்ட முக்கிய தலைவர்களாவர்.
60-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்ற இந்த கண்காட்சி, அணு ஆற்றல் துறை (DAE), நியூக்ளியர் பவர் கார்ப்பரேன் ஆஃப் இந்தியா லிமிடெட் (Nuclear Power Corporation of India Ltd (NPCIL)), பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC), வோர்ல்டு நியூக்ளியர் அசோசியேஷன் (World Nuclear Association (WNA)), ROSATOM, அட்டாமிக் எனர்ஜி ரெகுலேட்டரி போர்டு (AERB) ஆகியவற்றின் பல்வேறு மூத்த அதிகாரிகளையும் சிவில் நியூக்ளியர் துறையிலிருந்து வால்சந்தநகர் இன்டஸ்ட்ரீஸ் Walchandnagar Industries, Godrej & Boyce Mfg Co Ltd, Avarsala Technologies limited, ஃபோர்ப்ஸ் மார்ஷல் (Forbes Marshall), அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் (American Society of Mechanical Engineers (ASME), கிர்லோஸ்கர் பிரதர்ஸ் லிமிடெட் (Kirloskar Brothers Ltd), எல்&டி ஸ்பெஷல் ஸ்டீல்ஸ் (L&T Special Steels), நுவியா இந்தியா பிரைவேட் லிமிடெட் (Nuvia India Pvt Ltd) மற்றும் ஹெவி ஃபோர்ஜிங் பிரைவேட் லிமிடெட் (Heavy Forging Pvt Ltd) போன்ற பெருவணிக நிறுவனங்களையும் ஒருங்கிணைத்தது. உலக அளவில் ஃபிரான்ஸ் முன்னணி நாடாக இருப்பதால், இந்தக் கண்காட்சியில் ஃபிரான்ஸின் பங்கேற்பு முக்கியமாக இருந்தது. இந்நாட்டின் மிகப் பெரிய நிறுவனங்களான அக்ஸான் கேபிள்ஸ் (Axon' Cables SAS), AFCEN, பிஸினஸ் ஃபிரான்ஸ் (Business France), CMR குரூப், EDF, ESI குரூப், ஃபுஜி எலக்ட்ரிக் (Fuji Electric), குரூப் இந்தர்சின்திகால் தே லின்டஸ்திரி நியூளியேர் (Groupe Intersyndical de l'Industrie Nucléaire (G.I.I.N)), LATTY இன்டர்நேஷனல், மிரியன் டெக்னாலஜீஸ் (Mirion Technologies (Ist France)), நோவின்டெக் (Novintec), பார்தினாரியா ஃபிரான்ஸ் மோந்தே எலக்திரிசித்தி (Partenariat France Monde Electricite (PFME)), REEL SAS, சீல்கால் (Seagault) மற்றும் VSl ஆகியவை பங்கேற்றன.
மேலும், சிவில் நியூக்ளியர் துறைக்கான பொருட்களை வழங்கும் நிறுவனங்களின் புத்தாக்கங்கள், சிஸ்டம் ஆப்டிமைசேஷன்கள், பராமரிப்பு மற்றும் நிலைமையைக் கண்காணிக்கும் சாதனங்கள் உட்பட்ட மேம்பட்ட தொழில் நுட்பங்களையும் விநியோகங்களையும் INE காட்சிப்படுத்தியது. உள்நாட்டு அணுத் துறையில் உள்ள மிகப்பெரிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுவதற்காக ஃபிரான்ஸ், ரசியா, கனடா, கொரியா, அமெரிக்கா, ஃபின்லாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து கலந்து கொண்ட கண்காட்சி பங்கேற்பாளர்களோடு தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் உரையாடவும் கூட்டு ஏற்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது.
இரு நாட்களிலும் ஆழமான ஆய்வுத் தலைப்புகளில் மாநாட்டு அமர்வுகளும் தொழில்நுட்ப காட்சியளிப்புகளும் நடந்தது சிறப்பாக அமைந்தது. முதல் நாளில் அணுத் துறையின் அத்தனை விஷயங்களையும் உள்ளடக்கிய நான்கு வல்லுநர் குழு விவாதங்களும் பல ஆழமான தொழில்நுட்ப காட்சியளிப்புகளும் இருந்தன. இரண்டாவது நாள் முழுவதும் ROSATOM நடத்திய தொழில்நுட்ப கருத்தரங்கும் NPCIL (Nuclear Power Corporation of India Ltd) நடத்திய ஈ-போர்ட்டல் பதிவுக்கான சிறப்பு அமர்வும் MSME (Ministry of Small and Medium Industry) நடத்திய வெண்டார் டெவெலப்மென்ட் திட்டமும் நடைபெற்றன.
B2B விரைவுக் கூடடங்கள் மற்றும் இன்ஜினியரிங் புரொக்கியூர்மென்ட் அன்டு கண்ஸ்ட்ரக்ஷன் (EPCs), ஒரிஜினல் எக்கியூப்மென்ட் மேனுஃபேக்சரர்ஸ் (OEMs), சிஸ்டம் பில்டர்கள் மற்றும் என்டு யூசர்களுடன் ஆன்லைன் என்கேஜ்மென்ட் கூட்டங்கள் போன்றவை பிற முக்கிய சிறப்பம்சங்களாகும்.
8-வது INE கண்காட்சி வெற்றிகரமாக நிறைவடைந்த பின்னர், UBM Indiaவின் நிர்வாக இக்குனரான Mr. Yogesh Mudras பேசும்போது,"இந்திய சிவில் நியூக்ளியர் எனர்ஜி சந்தையின் எதிர்காலம், சமீபத்திய முன்னேற்றங்கள், வர்த்தக வாய்ப்புகள், பாலிசிகள் மற்றும் செயல்முறைகளைப் பற்றி விவாதிப்பதற்கு முன்னணி நிறுவனங்களையும் நிபுணர்களையும் ஒன்றினைப்பதற்கான சரியான தருணத்தை INE ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த சிவில் நியூக்ளியர் துறை நிறுவனங்களும் கூடுவதற்கும், தொடர்பு கொள்ளவும், கூட்டு ஏற்படுத்திக்கொள்ளவும் ஒரு சிறந்த தளமாக துறை சார்ந்த நிறுவனங்களுக்கு அமைந்தது. 2032-க்குள் 63 GWe மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான பிற ஒருங்கிணைந்த வழிகளைப் பற்றிச் சிந்திக்க வாய்ப்பாகவும் அமைந்தது" என்றார்.
UBM இந்தியா பற்றி:
UBM இந்தியா என்பது இந்திய அளவில் கண்காட்சிகளை ஏற்பாடு செய்யும் முன்னணி நிறுவனமாகும். இது இத்துறையில் வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் உலகம் முழுவதிலுமிருந்து கண்காட்சிகள், உள்ளடக்கமிக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குள் வழியாக ஒரே தளத்தில் சேர்க்கிறது. UBM இந்தியா 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறது. UBM ஆசியா நிறுவனமான, UBM இந்தியா மும்பை, புது டில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM plc-யினால் UBM ஆசியா நடத்தப்படுகிறது. இது லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் பட்டியலில் உள்ளது. UBM ஆசியா என்பது ஆசியாவில் கண்காட்சியை நடத்தும் முன்னணி நிறுவனமாகும். சைனாவின் முக்கியப் பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக நடத்துபவராகும்.
கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.ubmindia.in என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
ஊடகத் தொடர்பு:
Mili Lalwani
UBM India
[email protected]
+91-22-61727000
Share this article