மும்பை, November 3, 2016 /PRNewswire/ --
- மும்பையில் தொழில் ரீதியான பாதுகாப்பு & ஆரோக்கிய துறைக்கான இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கண்காட்சியை நடத்துவோர் UBM India
- 5ஆம் நிகழ்வை குறிப்பிடுவதற்காக OSH India Safety Awards & தொழிற்துறை மாநாடு
Occupational Safety & Health (OSH) India உடைய 5ஆம் நிகழ்வை மும்பையில் UBM India அறிவித்தது. 10ஆம் மற்றும் 11ஆம் நவம்பர், 2016 நாட்களில் பெரிய மற்றும் புதிய இடமாகிய - CIDCO Exhibition Centre, வாஷி, நவி மும்பையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த கண்காட்சியானது புகழ்பெற்ற இந்திய மற்றும் சர்வதேச கண்காட்சியாளர்கள், ஆலோசகர்கள், தொழில் நிபுணர்கள் மற்றும் முக்கிய அரசாங்க அதிகாரிகளி இந்த தளத்திலே ஒன்றாக கொண்டு வந்து உலகளாவிய சிறந்த நடைமுறைகளை விவாதிக்கச் செய்து பணியிட பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்த சவால்களுக்கான தீர்வுகளை தேடச்செய்ய இலக்கு வைத்துள்ளது. இந்த கண்காட்சியானது Gujarat Safety Council, Indian Technical Textile Association, Taloja Industrial Association, Thane Manufacturer Association மற்றும் Indian Society of Ergonomics ஆகியோரால் ஆதரிக்கப்படுகின்றது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20161102/435226 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
OSH India இன்றைய பணியிடத்தில் மிகவும் அழுத்தம்கொடுக்கும் தேவைக்கான தொட்டுணரக்கூடிய தீர்வுகளை அளிக்க நாடுகிறது. The International Labour Organisation (ILO) மற்றும் World Health Organisation (WHO) அமைப்புகள் Occupational Safety Hazard என்கிற தலைப்புக்கு வெவ்வேறு குறிக்கோள்களை கொண்டு வந்துள்ளன, அவை பணியாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பணி செய்யும் ஆட்களின் எண்ணிக்கையை பராமரித்தல் மற்றும் முன்னேற்றுதல்; பணிச்சூழலை மேம்படுத்துதல் மற்றும் பணியானது பாதுகாப்பிற்கும் ஆரோக்கியத்திற்கும் இசைவானதாக மாறுதல் மற்றும் பணியில் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கான திசையிலே பணி நிறுவனங்கள் மற்றும் பணி கலாச்சாரங்கள் ஆகியவற்றின் வளர்ச்சிகள் இருக்க வேண்டும் என்பவை ஆகும். இவை ஒரு நேர்மறையான சமூக சூழலையும், இலகுவான செயல்பாட்டையும் முன்னிறுத்தி உற்பத்திதிறனை மேம்படுத்தும்.
இந்தியாவில், OSHஐ சுற்றி இருக்கும் பிரச்சனைகள் ஏராளம், அதில் பல்வேறு பங்குதாரர்கள் இடையே இருக்கும் விழிப்புணர்வு அல்லது ஒருங்கிணைப்பில் பற்றாக்குறை, ஒரு வளர்ந்துவரும் முறைசாரா பொருளாதாரம், வளைவுத்தன்மையுடைய வேலைவாய்ப்பு வடிவங்களின் விரிவாக்கம், பணியாளர் இடம்பெயர்தலின் விரிவாக்கம், புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்து தொடர்பான புதிய இடர்கள் ஆகியவை உள்ளடங்கும். OSH India 2016, இந்த தேவைக்கு தீர்வு அளித்து, உலகெங்கிலும் உள்ள பாதுகாப்பு மற்றும் சுகாதார விநியோகஸ்தர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு தங்கள் புதுமைகள் மற்றும் கல்வியை காட்சிப்படுத்த பெரிதும் பயன்படுத்தப்படாத இந்திய சந்தையின் தொழிற்துறை இடத்தின் நடுவிலே வாய்ப்பு அளிக்கும். நிறுவனங்களுக்கு தொழில் ரீதியான பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உந்துவதற்கான ஒரு இரண்டு நாள் மாநாடு நடைபெறும், இது நிறுவனங்களுக்கு முக்கியமானதாக அளிக்கப்படும், அவை அதை தொழிலாளிகளின் மேம்பட்ட ஆரோக்கியம் மற்றும் உற்பத்தி திறனாக மாற்றுவார்கள், இது அந்த நிறுவனத்திற்கும் பெரிய அளவில் பொருளாதாரத்திற்கும் பலனளிக்கும்.
இக்கண்காட்சியில் ஒரு (Innovation Zone) இடம்பெறும், இது கண்காட்சியாளர்கள் புதுமையான தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்கும் காட்சிப்படுத்துவதற்குமான ஒரு தளம் ஆகும், இது தொழில்ரீதியான பாதுகாப்பு மற்றும் சுகாதார துறைக்கு பெரிய அளவில் பலன் அளிக்கும். இதில் ஒரு புதிய அம்சம் இடம்பெறும் - ஒரு இரண்டு நாள் 'Live Seminar'. Live seminar என்பது ஒரு பாதுகாப்பு விழிப்புணர்வு மன்றம், இதில் பாதுகாப்பு தயாரிப்பு உற்பத்தியாளர்களிடம் இருந்து வரும் பாதுகாப்பு நிபுணர்கள் சமீபத்திய தொழில் நுட்பங்களை செயல்முறை விளக்கம் செய்து, பணியிடத்தில் பாதுகாப்பு தொடர்பான போக்குகள் மற்றும் தலைப்புகளை விவாதிப்பார்கள். Live Seminar உடைய சில தலைப்புகளில் உள்ளடங்குபவை - பொறுப்பை தோண்டி ஆராய்தல், பணியிடத்தில் நீங்கள் பாதுகாப்பை உறுதிசெய்வது எப்படி (நடைமுறை வழக்கு ஆய்வுகள்), பாதுகாப்பு மேலாடைகள்: உடல் பாதுகாப்பு (தரநிலைகள் மற்றும் நடைமுறைக்கேற்றவை), காஸ்மோஸ் குறித்த விளக்கம் மற்றும் தயாரிப்புகளின் வரிசை / கேள்வி பதில்கள், விழுதல் பாதுகாப்புக்கான கோட்பாடுகள்: கவன பொறியியல் வீழ்ச்சி பாதுகாப்பு, பாதுகாப்பு ஒளியிடுதல்: Atex, US standards மற்றும் Indian standards மற்றும் Ergonomics உள்ளிட்ட பலர்.
OSH India தொடர்ச்சியாக அளவிலும் ஆழத்திலும் வளர்ச்சி அடைந்து, தொழிற்துறை தலைவர்களையும் முக்கிய கண்காட்சியாளர்களையும் ஈர்த்துள்ளது, அதில் உள்ளடங்குபவர்கள் 'Presenting Partner' - Dickies (ID Overseas Pvt. Ltd.), 'Occupational Safety & Health Partner' - Euro Safety Footwear (India) Pvt Ltd., 'Platinum Partner - Udyogi International Pvt. Ltd., 'Knowledge partner'- Sure Safety, 'Registration Partner'- Karam Industries , Work at height Partner - JLG மற்றும் Venus Safety & Health Pvt Ltd, BATA India Limited, E.I.Dupont India Pvt Ltd, NEBOSH Ltd, and Tyco Safety Products (I) Pvt Ltd போன்ற பிறர். இந்த ஆண்டு, இந்த கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட ப்ராண்டுகளின் முன்னிலை இருக்கும், மற்றும் யுஎஸ்ஏ, யூகே, சீனா, ஜெர்மனி, இலங்கை, நார்வே, ஜப்பான் மற்றும் மலேசியா போன்ற நாடுகளின் பங்கேற்பும் இடம்பெறும்.
அறிவிப்பின்போது பேசிய, Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India Pvt. Ltd இவ்வாறு கூறினார், "மனித உயிர்களை பாதுகாப்பதற்கு காப்பாற்றுவதற்கும் நேரான ஒரு அத்தியாவசிய காரணி பாதுகாப்பு. பணியிடத்தில் அதிகரிக்கும் மணிநேரங்கள் செலவிடப்படுகையில், தொழிலாளிகளின் பாதுகாப்பையும் நலனையும் மேம்படுத்துவது பணியிட உற்பத்திதிறனையும் ஒட்டுமொத்தமாக வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் முக்கிய கருத்தாக இருக்கிறது. தொழில்ரீதியான பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் என்பது வளர்ந்துவரும் பொருளாதாரங்களுக்கு முற்றிலும் முக்கியத்துவமானது. தொழில் ரீதியான பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய இணக்கத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு இந்திய நிறுவனங்களிடையே பல ஆண்டுகளாக பெரிதாகியுள்ளது. உள்கட்டமைப்பை வளர்த்தல் மற்றும் பணியிட பாதுகாப்பை அளித்தல் குறித்த அரசாங்கங்களின் தொடர்ச்சியான வலியுறுத்தல்கள் ஆகியவற்றோடு இந்த பிரிவிலே உலகளாவிய முதலீடுகளின் அதிகரிப்பு ஆகியவற்றால், உலகெங்கிலும் உள்ள விநியோகஸ்தர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு தங்கள் தயாரிப்பையும் தீர்வு வழங்கல்களையும் அளிப்பதற்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கின்றன. OSH India மூலமாக நாங்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள தொழிற்துறைக்கு நாங்கள் சரியான தளத்தை அளிக்கிறோம்."
இந்த ஆண்டின் மாநாடு உலகளாவிய சிறந்த நடைமுறைகளை பிரதிநிதிகளுடன் பகிர்ந்துகொண்டு யோசிக்கவைக்க இலக்கு நிர்ணையித்துள்ளது; அதேசமயம் உடனியங்கும் கண்காட்சியானது பணியிட பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான மிகவும் அழுத்தம் நிறைந்த சவால்களுக்கான தீர்வுகளை கண்டறிய உதவும். மாநாட்டில் உள்ள முக்கிய அமர்வுகளும் பேனல் விவாதங்களும் துறைசார்ந்த நிபுணர்களால் நாடு முழுவதிலும் இருந்தும், சர்வதேச அமைப்புகளில் இருந்தும் பங்கேற்கப்படும். மாநாட்டில் விவாதிக்கப்படும் தலைப்புகளில் உள்ளடங்குபவை: 'இந்தியாவில் OSH சவால்கள் மற்றும் செல்ல வேண்டிய பாதை', 'உலகமயமாக்கல் மற்றும் பணி உலகை மாற்றுதல்', 'பணியாளர் ஆரோக்கியத்திற்கான ஒரு ஒருங்கிணைந்த அணுகல்', 'செயல்முறை பாதுகாப்பில் நல்ல தலைமை எவ்வாறு மேம்பாடுகளை உந்த முடியும்', 'பெண்கள் மற்றும் OSH', 'இடர் மதிப்பாய்வு மற்றும் இடர் நிர்வாகம்', 'தீ மற்றும் மின்சார தீங்கு தடுப்பு' மற்றும் 'கட்டுமானத்தில் ஆரோக்கிய மற்றும் பாதுகாப்பு இடர்கள்'.
மாநாட்டில் இடம்பெறும் புகழ்பெற்ற பேச்சாளர்களில் உள்ளடங்குபவர்கள் Mr Vinayak Marathe, மூத்த துணை தலைவர், Reliance Industries Limited; Mr Suresh Tanwar, தலைவர் குழு பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம், Tata Group; Mr Krishnanand Mavinkurve, துணை தலைவர் & தலைமை OSH, Adani Ports and Special Economic Zone Limited; Mr Sunil Bailwar, துணை தலைவர் & தலைவர் கார்ப்பரேட் சூழல், Health & Safety - Hindalco Industries Limited; Mr Binaya Debata, துணை தலைவர் - (SHE), Alembic Pharmaceuticals Ltd.; Mr Ashok Emani, இயக்குநர் & தலைவர்- ESG, IDFC Ltd.; Mr Umesh Kumar Purbey, கூடுதல் துணை தலைவர் & கார்ப்பரேட் தலைவர் - HSE & Fire, Reliance Energy Limited; Mr Badal Roy, பொது மேலாளர், தலைமை பாதுகாப்பு ஆஃப்ஷோர் செயல்பாடுகள் - Oil & Natural Gas Corporation Ltd. (ONGC); Mr Pankaj Singh, பொது மேலாளர் - HSSE, இந்தியா & தெற்கு ஆசியா, BP Castrol India; Mr JC Sekar, துணை நிறுவனர் & தலைமை நிர்வாக அதிகாரி, AcuiZen Technologies Singapore Pte. Ltd.; Mr Arvind Bodhankar, கார்ப்பரேட் தலைவர் - HSE & தலைமை பேண்தகைமை அதிகாரி, Tata Motors Limited; Mr Stephen Philip Storey, கார்ப்பரேட் EHS தலைவர், Larsen & Toubro Limited; Mr Viren Dhulla, தலைவர் - கார்ப்பரேட் ஆரோக்கியம் பாதுகாப்பு & நலன், Vodafone India உள்ளிட்ட பலர்.
OSH India 2016யில் 'OSH India Safety Awards 2016'உம் இடம் பெறும், இது Innovation அல்லது Hero awards பிரிவுகளில் ஏதேனும் ஒன்றோடு இசைகின்ற பணியிட சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு முயற்சி உடைய பொது அல்லது தனியார் துறையில் இருக்கும் இந்திய செயல்பாட்டு தொழில்கள், அமைப்புகள், கூட்டுநிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு இது திறந்து இருக்கிறது. 10 நவம்பர் 2016 அன்று விருதுகள் இரவுக்கான வழங்கும் பங்காளர் Euro Safety Footwear (India) Pvt. Ltd. இது துறையின் மேதைகள் மற்றும் முன்னோடிகள் ஒன்றாக வருவதன் ஒரு கொண்டாட்டம், இது கவர்ச்சி மற்றும் கேளிக்கைநிறைந்த இரவினால் இது அடையாளப்படுத்தப்படும்.
தொழிற்துறை OSH India 2016ஐ ஒரு தொழிற்துறை தளமாக மதிப்பீடுசெய்து, UBM India மும்பையில் நடத்தும் வருடாந்தர கண்காட்சியின் குறிக்கோளை மீண்டும் வலியுறுத்துகின்றது.
மேற்கோள்கள்:
Dickies (ID Overseas Pvt. Ltd.) - Apurba Chakraborty, தலைமை நிர்வாக அதிகாரி & இயக்குநர்
"இந்த கண்காட்சியானது எங்களுடைய மிகவும் உற்சாகமூட்டும் மற்றும் சாத்தியமுள்ள வாடிக்கையாளர்களுக்கு எங்கள் தயாரிப்பு ரகம், அதன் இணக்கத்தன்மை, செயல்திறன் மற்றும் R&D சார்ந்த புதுமை ஆகியவற்றை காட்சிப்படுத்தி சென்று அடைவதற்கான ஒரு தளம். நாங்கள் OSH India - Mumbai 2016ஐ எங்கள் பாதுகாப்பு காலணி, தொழிலுக்கான காலணி, தீ எதிர்ப்பு மற்றும் சுகாதார தயாரிப்பு ரகங்களை காட்சிப்படுத்துவதற்கான அதே தளமாக பயன்படுத்துவோம். இந்த வர்த்தக கண்காட்சியில் பங்கேற்பதன் மூலம் இந்தியாவில் எங்கள் ப்ராண்டை வளர்க்க நாங்கள் விரும்புகிறோம் - வருகையாளர்களின் மனதினுள் நுழைந்து இந்த மதிப்புக்கூட்டிய தயாரிப்புகள் மீதான அவர்களுடைய ஆர்வத்தை கவர்வோம்."
Youngman India Private ltd - Vanjul Jain, இயக்குநர்
"OSH India - Mumbai உடன் நாங்கள் இணைவது இதுவே முதல் முறை மற்றும் Youngman தனது புதிய தயாரிப்புகள் மற்றும் ஏணிகள், வேலை தளங்கள் முதல் அணுகல் கோபுரங்கள் வரையிலான தன் முழுமையான ரகங்களையும் காட்சிப்படுத்தும். Youngman வாடகை பிரிவு, மைய வெட்டும் இயந்திரங்கள் மற்றும் தூக்கும் இயந்திரங்களையும் எங்கள் அணுகல் கோபுர ரகங்களோடு வாடகைக்கு கொடுக்க தொடங்கி இருக்கிறது. எங்கள் பெரிய தொழில் தேவை இந்த நேரத்தில் எண்ணிக்கையிலும் தரத்திலும் சந்தையை 'அடைவது' தான். இந்த கண்காட்சி எங்களை இந்நாட்டின் அதிகம் இணைக்கப்பட்ட மற்றும் முன்னணி பாதுகாப்பு அதிகாரிகளை அடைந்து Youngman குறித்தும் எங்கள் தனித்துவமான வழங்கல்களை குறித்தும் வார்த்தைகளை பகிர்ந்து கொள்வதற்காக இந்த கண்காட்சியில் இருந்து எங்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் இருக்கின்றன."
Haws India Pvt. Ltd - Mr. Sanjeev Kumar, தேசிய மேலாளர் - இந்தியா மற்றும் தெற்கு ஆசியா
"நாங்கள் 109 ஆண்டு பழமையான யூஎஸ் நாட்டை சார்ந்த நிறுவனம். Haws குடிநீர் ஊற்றுகள் மற்றும் தரநிலையான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட அவசரநிலை பதிலளிப்பு தயாரிப்புகளின் கண்டுபிடிப்பாளர் மற்றும் உற்பத்தியாளராக இருக்கிறது. ஒரு ஆண்டிற்கு முன்பாக நாங்கள் எங்கள் செயல்பாடுகளை இந்தியாவில் தொடங்கினோம் மற்றும் முதல் முறையாக OSH India - Mumbai இல் பங்கேற்கிறோம். நாங்கள் அவசரநிலை கருவி மாடல்: 4000ஐ 1600 லிட்டர்கள் கொள்திறனோடு வெளியிடுவோம், இது தூசு/ரசாயன தெறிப்புகளை கையாள்கிறது மற்றும் கண்காட்சியில் இரண்டு தொழிற்துறை குறிக்கோல்களுக்காகவும் பயன்படுத்தப்படலாம். OSH India - Mumbai 2016வில் எங்கள் பங்கேற்புடன் நாங்கள் தரமான பார்வையாளர்கள் மற்றும் மதிப்புமிக்க தொழில் விசாரனைகளை எதிர்பார்க்கிறோம்."
Superhouse Limited - Iqbal Hussain, பொது மேலாளர்
"வரவிருக்கும் ஆண்டுகளில் உற்பத்தி துறையில் ஈடுபடும் மனித உயிர்களின் முக்கியத்துவம் குறித்த ஒட்டுமொத்த விழிப்புணர்வு மற்றும் இந்திய அரசாங்கத்தினால் செயல்படுத்தப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட கடுமையான விதிமுறைகளினாலும் OSH துறையின் வளர்ச்சிக்கான வாய்ப்பு அதிகமாக நேர்மறையான பக்கத்தில். நாங்கள் முதல் முறையாக OSH India - Mumbai இல் பங்கேற்கிறோம் மற்றும் இந்த நிகழ்விலே வெற்றிகரமான அனுபவத்தை பெறுவோம் என்று நம்புகிறோம். நாங்கள் பாதுகாப்பு காலணி, பாதுகாப்பு ஆடைகள், விழுதல் தடுப்பு கருவி மற்றும் கை உறைகளை உற்பத்தி செய்கிறோம் மற்றும் எங்கள் சமீபத்திய மற்றும் எங்கள் தற்போதைய ரகங்களில் இருக்கும் தனித்துவமான தொகுப்பை காட்சிப்படுத்துவோம். OSH India - Mumbai 2016 நிச்சயமாகவே எங்கள் ப்ராண்ட் விழிப்புணர்வை இந்த களத்திலே பரப்புவதற்கு உதவி, எங்கள் உற்சாகமூட்டும் மற்றும் இலக்குவைத்திருக்கும் வாடிக்கையாளர்களுடன் நேரடியான உரையாடல்களுக்கு ஒரு தளத்தை வழங்கியுள்ளது."
Tyco Safety Products (I) Pvt Ltd - Sandeep Earully, தேசிய மேலாளர் (இந்தியா மற்றும் SAARC), Scott Safety
"கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் OSH India உடன் இணைந்து இருக்கிறோம், எங்கள் தற்போதைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களுடன் இணைவதற்கு ஒரு தளத்தை உருவாக்குவதில் அவர்கள் எப்போதுமே வெற்றிகரமாக இருந்துள்ளார்கள். சந்தையானது இப்போது மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கு நேராக நகர்கிறது, இது தயாரிப்புகளின் இறுதி பயனாளிகளின் வாழ்க்கையை மிக சுலபமானதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றுகிறது, சில தயாரிப்பு பிரிவுகளில் எலக்ட்ரானிகை பயன்படுத்துவதன் மூலம் பயனர் திடமான நம்பிக்கையை சார்ந்து அல்ல தன் கருவியில் இருந்து கிடைக்கும் நிலைமை குறித்த துல்லியமான தகவல்களை பெறுகின்ற போக்கு இருக்கிறது, Scott safety தனது புதிய சக்தியூட்டப்பட்ட காற்று சுவாசிப்பான், ப்ரீமியம் எதிர்மறை அழுத்த சுவாசிப்பான்கள் ஆகியவற்றோடு Gas detectors மற்றும் தன் தற்போதைய தயாரிப்பு ரகங்களையும் வெளியிட்டது. OSH India - Mumbai இதே Scott Safety உடைய காரணியை நம்புகிறது, எங்களை போலவே வாடிக்கையாளருக்கு கல்விபுகட்டி, புதிய தொழில் நுட்பங்களை அவர்களுக்கு அருகே கொண்டு வந்து அவர்களுடைய உயிர்களை பாதுகாப்பானதாக மாற்றுகிறது, ஆகவே OSH உடன் இணைவது எங்களுக்கு ஒரு வெற்றி-வெற்றி சூழ்நிலை ஆகும்."
UBM India பற்றி
UBM India என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அது கண்காட்சிகளின் தொகுப்பு, உள்ளடக்கங்களினால் வழிநடத்தப்படும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், மூலமாக உலகெங்கும் இருந்து வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒன்று சேர்க்கும் தளங்களைஅளிக்கிறது. UBM India ஆண்டுதோறும் நாடு முழுவதும் 25 பெரிய அளவு கண்காட்சிகளையும், 40 மாநாடுகளையும் அளிக்கிறது; இதன் மூலம் பல நிறுவன பிரிவுகளில் வணிகத்தை செயல்படுத்துகின்றது. ஒரு UBM Asia நிறுவனமான, UBM இந்தியாவுக்கு மும்பை, புது தில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM ஆசியா லண்டன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM Plcக்கு சொந்தமானது. UBM Asiaவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகவும் சீனாவின் பெருநிலப்பகுதியிலும், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளில் வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு, தயவு செய்து வருகை தாருங்கள் ubmindia.in.
ஊடக தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
UBM India
Share this article