சென்னை, November 3, 2016 /PRNewswire/ --
MJDMA, UBM India - வினால் நடத்தப்பட்ட தென் இந்தியாவின் மிகப் பெரிய B2B இண்ட்டர்நேஷனல் ஜூவல்லரி கண்காட்சி .
GJIIE 2016 ஒரு கண்ணோட்டம்:
பனிரெண்டாம் ஆண்டு Gem & Jewellery India International Exhibition (GJIIE 2016) ஆடம்பரமான மூன்று நாள் B2B ஜெம், ஜூவல்லரி காட்சி வெற்றிகரமாகவும் நம்பிக்கையான குறிப்புடன் முடிவடைந்தது. இந்தக் கண்காட்சி Chennai Trade Centre அக்டோபர் 2016, 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெற்றது. கண்காட்சியை சிறப்பு விருந்தினர் பத்மஸ்ரீ விருது பெற்ற
Dr. Nalli Kuppuswami Chetti ஆரம்பித்து வைக்க Mr. Rajesh Vummidi, சேர்மன், MJDMA - GJIIE
Mr. Jayantilal Chalani, தலைவர், MJDMA, Mr. Yogesh Mudras, நிர்வாக இயக்குநர், UBM India,
Mr. Abhijit Mukherjee, குழும இயக்குநர், UBM India ஆகிய முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20161102/435229 )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20161102/435228 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
வெற்றிகரமாக முடிவடைந்த 12 ஆவது ஆண்டு GJIIE -ல் Mr. Yogesh Mudras, நிர்வாக இயக்குநர், UBM India, பேசும்போது, `நாட்டில் தங்கம் மற்றும் வைர நகைகளுக்கான முக்கிய நுகர்வோராக தென் இந்தியா இருந்து வருகிறது. GJIIE 2016 வாயிலாக நகைகள், வைரம், முத்து, மாணிக்கக் கற்கள் விற்பனையாளர்கள், தென் பிராந்தியத்தைச் சேர்ந்த உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் வாங்குபவர்களில் முக்கியமானவர்களைச் சந்திக்கவும், ஊடாடவும், நெட்வொர்க் செய்து கொள்ளவும் சர்வதேச வணிகத் தளத்தை UBM India வழங்கியிருக்கிறது. இத் தொழிலைச் சார்ந்தவர்களின் பேரளவிலான ஆதரவு சாத்தியமுள்ள தென் இந்தியச் சந்தையைக் கவர்வதற்கு, கண்காட்சியாளர்களுக்கும், வருகை தருபவர்களுக்கும், ஒரு பெரிய தொழில் சார்ந்த தளம் தேவை என்பதை மேலும் நிரூபித்திருக்கிறது. MJDMA உடன் இணந்து UBM India ஆண்டு தோறும் நடத்தும் இந்த எக்ஸ்போ நாட்டிலேயே இரண்டாவது பெரிய ஜூவல்லரி எக்ஸ்போவும், நாடு முழுவதும் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நான்கு ஜூவல்லரி எக்ஸ்போக்களில் ஒன்றாகும். இந்த எக்ஸ்போவில் மும்பை, ஹைதராபாத், அகமதாபாத், சென்னை, டெல்லி, ஜெய்ப்பூர், திருச்சூர், கோயம்புத்தூர், திருவனந்தபுரம், மதுரை என பல நகரங்களிலிருந்து கலந்து கொண்ட கண்காட்சியாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 35% வளர்ச்சியைக் கண்டிருக்கிறது" எனக் கூறினார்.
இந்தியாவிலேயே பெரிய அளவில் மூன்று நாட்கள் நடந்த இந்த இரண்டாவது ஜெம்ஸ் & ஜூவல்லரி B2B கண்காட்சியில் மொத்த வணிகர்கள், சில்லறை வியாபாரிகள், இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், நகை உற்பத்தியாளர்கள், வைரம், மாணிக்கக்கற்கள், முத்து விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள், விலை மதிப்பற்ற உலோகம் மற்றும் நகைகளை பதிக்கும் விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள், வணிகம் மற்றும் அரசாங்க அமைப்புகளின் பிரதிநிதிகள் என 350க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இது இந்தியாவின் ஜூவல்லரி சந்தையில் நுழைவதற்கு ஒரு வழியாகவும், வாங்குபவர்களும், விற்பவர்களும் தொடர்பு கொள்ளவும், நெட்வொர்க் செய்து கொள்ளவும், கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், இனி வரக்கூடிய போக்குகளைக் கண்டுபிடிக்கவும், வணிகத்திற்கான வாய்ப்புகளுக்கும் இது ஒரு சிறந்த தளமாக இருந்தது. மும்பை, டெல்லி, பெங்களூர், ஜெய்ப்பூர், அகமதாபாத், ஹைதராபாத் போன்ற நகரங்களோடு இந்தியாவில் உள்ள சாத்தியமான II மற்றும் III அடுக்கு நகரங்களும், மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளின் பிரதிநிதிகளும் இந்தக் கண்காட்சியில் கலந்து கொண்டதால் இது ஒரு சர்வதேச அளவைச் சென்றடைந்ததோடு GJIIE 2016 ன் இருத்தலையும் நிரூபித்திருக்கிறது.
இதில் கலந்து கொண்ட காட்சியாளர்கள் வைரம், முத்துக்கள், மாணிக்கக்கற்கள், பதித்த நகைகள், தென் இந்தியாவைச் சேர்ந்த அழகிய தங்க நகைகளான டெம்பிள் நாக்ஸி ஜுவல்லரி, கல் பதித்த நகைகள், திருமணத்திற்கான நகைகளான மங்கல மாலை, காசு மாலை, பாச்சி வடிவங்கள் என பலவகையான பொருட்களைக் காட்சிப்படுத்தியிருந்தார்கள். Challani Jewellery Mart, Bhahubali யிலிருந்து Rudramadevi Jeweller, Guinness World Records- ன் சான்றிதழ் பெற்ற GRT Jewellers-ன் 1.5 கிலோகிராம் எடையுள்ள கனமான தங்க காதணிகள், Gomathi Jewellers-ன் மிகவும் சிறிய அளவிலான உலகக் கோப்பை, வேலை செய்யக்கூடிய தங்கத்தினால் ஆன காற்றாடி போன்ற சில புதுமையான பொருட்களும் எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்டிருந்தன.
குறிப்பிடத்தக்க கண்காட்சியாளர்களில் மும்பை, ஹைதாரபாத், ராஜ்கோட், அகமதாபாத், சென்னை, டெல்லி, ஜெய்ப்புர், பெங்களூர், கோலாப்பூர், கள்ளிக்கோட்டை, சூரத், விஜயவாடா போன்ற நகரங்களோடு திருச்சூர், கோயம்புத்தூர், திருவனந்தபுரம், மதுரை, கொச்சின் ஆகிய நகரங்களைச் சேர்ந்தப் பிரபலமான நிறுவனங்கள் கலந்து கொண்டன. கண்காட்சியாளர்களில் Emerald, Krizz, Royal Chains, Sangam Chains, Damara Gold, Jewel Park, Mehta Gold, White Fire, Laxmi Diamonds, Bonitas Diamonds, Chain N Chains, Angel Gold, Anmol Swarn, Silver Emporium, Derewala, Harish Creations Ashlyn Chemunnoor போன்ற பிரபலமானவர்களும் அடங்குவர்.
இந்த வருடம், GIIJE 2016, தென் பிராந்தியத்தின் சில்லறை ஜூவல்லரி வணிகத்தில் சிறப்பானவர்களை கெளரவிக்கும் விதமாக Tamil Nadu Retail Jewellers Awards அவார்டு என்கிற தனித்துவ முன்னெடுப்பையும் கண்ணுற்றது. இந்த விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட வகைகளில் சில - `சிறந்த வடிவமைப்பு', `சிறந்த பத்திரிகை விளம்பரம்', சிறந்த மார்க்கெட்டிங் பிரச்சாரம்', `ஸ்டோர் ஆஃப் தி இயர்', `சிறப்பான நுகர்வோர் சேவை', `வருடத்தின் சிறந்த சில்லறை வணிகக் குழு' போன்றவை ஆகும். விருது வழங்குவதற்கு இடையில் காலத்திற்கேற்ற போக்குகளை காட்டும் வகையில் ஆச்சரியமூட்டக்கூட்ட ஜூவல்லரிகளைக் காட்சிப்படுத்தும் ஃபாஷன் ஷோவும் நடைபெற்றது.
இது போல புகழ்பெற்ற ஜூவல்லரி கண்காட்சிகளை உலகளவில் நடத்திவரக்கூடிய UBM India சுமார் முப்பது ஆண்டுகளாக ஜூவல்லரி தொழில் துறையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். GIIJE என்பது UBM India - வினால் வருடந்தோறும் நடத்தப்பட்டுவரும் நான்கு நகரங்களின் (கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், டெல்லி) ஜூவல்லரி கண்காட்சியில் ஒன்றாகும்.
UBM India- பற்றி
இந்தியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளரான UBM India பல வகையான கண்காட்சிகள், துறை சார்ந்த மாநாடுகள், கருத்தரங்குகள் வாயிலாக உலகமெங்கும் இருக்கும் வாங்குபவர்களையும், விற்பனையார்களையும் ஒருங்கே ஒரு தளத்துக்குக் கொண்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் 25 பெரிய காண்காட்சிகளையும், 40 கருத்தரங்குகளையும் UBM India நடத்தி வருகிறது. இது பலவகையான தொழில்களுக்கு இடையேயான வர்த்தகத்துக்கு வழிவகுக்கிறது. UBM ஏசியா நிறுவனமான UBM India-வுக்கு மும்பை, புதுதில்லி, பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM ஏசியா, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்டிருக்கும் UBM plc -க்கு சொந்தமானது. UBM ஏசியா ஆசியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளரும், சீனா, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளின் மிகப் பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும்.
மேலதிகத் தகவலுக்கு தயவு செய்து ubindia.in என்கிற இணையத் தளத்துக்குச் செல்லவும்
ஊடகத் தொடர்பு:
Mili Lalwani
[email protected]
022-61727000
UBM India
Share this article