மும்பை, October 17, 2016 /PRNewswire/ --
UBM India, இந்தியாவின் முன்னணி கண்காட்சிகள் ஒருங்கிணைப்பாளர், உள்நாட்டு அணுசக்தித் துறைக்கான தனது முன்னோடி சர்வதேச கண்காட்சியின் 8வது நிகழ்வான India Nuclear Energyயை 20-21 அக்டோபர் 2016 நேரு செண்டர், வோர்லி, மும்பையில் நடத்தும். உள்நாட்டு அணுசக்தித் துறையை ஆதரித்து அதன் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதற்கான பிரத்தியேகமான ஒரே கண்காட்சியும் உச்சிமாநாடும் இது மட்டுமே. INEயை இணைந்து ஒருங்கிணைப்பு செய்தது DAE (Department of Atomic Energy) மற்றும் ஆதரித்தது NPCIL (Nuclear Power Corporation of India Ltd.).
(Logo: http://photos.prnewswire.com/prnh/20161014/428725LOGO )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
INE 2016 உடைய தொடக்க விழாவில் திரளான பிரமுகர்கள் மற்றும் துறைத் தலைவர்களின் கூடுகை இடம்பெறும். H.E. Alexandre Ziegler, இந்தியாவில் உள்ள பிரான்ஸ் தூதுவர், H.E. Milan Hovorka, இந்தியாவில் உள்ள செக் தூதரகத்தின் தூதுவர், H.E. Andrei Zhiltsov, மும்பையில் உள்ள ரஷ்ய தூதுவர், Mr. Alexey Pimenov - தலைமை நிர்வாக அதிகாரி, Russian State Atomic Energy Corporation (ROSATOM), South Asia, மற்றும்
Mr. Vakisasai Ramany, மூத்த துணைத் தலைவர் - வளர்ச்சி - New Nuclear Projects & Engineering EDF, France, ஆகியோர் இந்த ப்ரீமியர் தொழிற்துறை நிகழ்விலே மற்றவர்களுடன் பங்குபெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
60 கண்காட்சியாளர்களுக்கும் மேலாகப் பெற்ற இந்த கண்காட்சியானது, DAE, NPCIL, Bhabha Atomic Research Centre (BARC), World Nuclear Association (WNA), ROSATOM, Atomic Energy Regulatory Board (AERB) மூத்த அதிகாரிகளையும் உள்நாட்டு அணுசக்தி துறையில் இருந்து தனியார் நிறுவனங்களான Walchandnagar Industries, Kirloskar Brothers Ltd, L&T Special Steels and Heavy Forging Pvt. Ltd., ஆகியவற்றில் இருந்து மூத்த அதிகாரிகளையும் கொண்டு வரும். இது சமீபத்திய வழங்கல்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை காட்சிப்படுத்தும், அதில் உள்நாட்டு அணுத் துறையில் இருந்து புதுமைகள், அமைப்பு உகந்ததாக்குதல், பராமரிப்பு மற்றும் நிலைமை கண்காணிப்பு கருவி ஆகியவையும் உள்ளடங்கும்.
இந்த இரண்டு நாள் நிகழ்வானது தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் பிரான்ஸ், ரஷ்யா, கொரியா, யுஎஸ்ஏ, பின்லாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வரும் கண்காட்சியாளர்களுடன் உரையாடவும் பிணைப்பை ஏற்படுத்தவும், அதன் மூலம் அணு துறையின் மகத்தான ஆற்றலை பயன்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பை அளிக்கும்.
இந்த நிகழ்வானது இரண்டு நாட்களிலும் ஆழமான மாநாடுகளினால் குறிப்பிடப்படுகின்றது. நாள் 1இல் இந்த கருத்திலே விவாதங்கள் நடைபெறும் - 'Exploring Infinity in an Atom: Vision 2032'. இதில் வட்ட மேசை விவாதம் 'Setting the Tone: A Roundtable Discussion on Vision 2032' மீது நடத்தப்பட்டு, சிறந்த நடைமுறைகள் மீதும் 2032 ஆம் ஆண்டில் 63,000 MW அடைய வேண்டும் என்கிற இந்தியாவின் திட்டம் மீதும் கவனம் செலுத்தபப்டும். இதில் பின்வரும் தலைப்புகளில் பேனல் விவாதங்கள் நடைபெறும் - 'Spelling Out the Supply Chain: Manufacturer's Perspective', 'Recovering, Reprocessing and Recycling: The fundamental significance of Nuclear Fuel & Material in ensuring a smooth supply' and 'Reiterating the Obvious: The Importance of Technology Transfer, Training and Skill Development'.
முக்கியமான பிரச்சனைகள் மீதான அதிக எண்ணிக்கையிலான தொழில்நுட்ப வழங்கல்கள் விவாதங்களுக்கு ஆதரவாக இருக்கும். Engineering Procurement and Construction (EPCs), Original Equipment Manufacturer (OEMs), அமைப்பு கட்டுகிறவர்கள் மற்றும் இறுதிப் பயனர் பிரிவில் உள்ள முன்னணி நிறுவனங்கள் உடனான B2B துரித கூடுகைகள் மற்றும் ஆன்சைட் ஈடுபாட்டு கூடுகைகள் உறுதிசெய்யும். நாள் 2இல் 'Public Acceptance - Role of Professional Bodies' மீதான ROSATOM வழங்கும் அமர்வுகள் இடம்பெறும். அமர்வுகளின் தலைப்புகளில் உள்ளடங்குபவை, 'Ecology and Safety of Atomic Energy', 'Radiation Technologies' and 'Public Acceptance as an Integral Part of Nuclear Industry Infrastructure,' இது தவிர NPCIL வழங்கும் 'e-Portal Registration' அமர்வும் Micro Small & Medium Enterprises Development Institute, Government of India (MSME) வழங்கும் 'State Vendor Development program' அமர்வும் இடம்பெறும்.
இந்த கண்காட்சியிலே Dr. RB Grover, Homi Bhabha நாற்காலி உறுப்பினர், Atomic Energy Commission மற்றும் உலகெங்கிலும் இருந்து வரும் புகழ்பெற்ற பேச்சாளர்கள் Mr. Kaustubh Shukla, தலைமை இயக்க அதிகாரி - தொழிற்சாலை தயாரிப்புகள் பிரிவு, M/s. Godrej & Boyce Mfg Co Ltd., Mr. Nikita Mazein துணை தலைவர், ROSATOM Overseas, Mr. Raphaël Hernandez, தொழிற்சாலை கொள்கைக்கான நிர்வாக ஆலோசகர் - புதிய அணுசக்தி செயல்திட்டங்கள் மற்றும் பொறியியல் பிரிவு, EDF France, Mr. Haïkel Ben Aoun, வளர்ச்சி மேலாளர் GIIN & PROMINF, Mr. CK Asnani, தலைமை மேலாண்மை இயக்குநர், Uranium Corporation of India Limited (UCIL),Mr. Oussama Ashy, தொழில் வளர்ச்சி இயக்குநர், Western Services Corporation, Mr. Mani TT, மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, Avasarala, Mr. Shah Nawaz Ahmad, மூத்த ஆலோசகர், India Middle East and South-East Asia, World Nuclear Association (WNA), London, Mr. Juha Asanti, பிராந்திய மேலாளர், The Middle East and South East Asia., Cadmatic போன்ற முக்கிய பிரதிநிதிகளின் முன்னிலை இருக்கும் மற்றும் அவர்கள் அணு சக்தி தொடர்பான முக்கிய பிரச்சனைகள் மற்றும் போக்குகளை விவாதிப்பார்கள்.
INE உடைய 8வது நிகழ்வின் அறிவிப்பின்போது பேசிய, Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India இவ்வாறு கூறினார், "மின்சக்தியே வளர்ச்சியை உந்துகிறது மற்றும் இந்தியாவின் மின்சக்தி தேவைகளை நிறைவுசெய்ய அணுசக்தி அத்தியாவசியமானது. முதலில் தன்னிறைவை அடையவும் விரைவான ரியாக்டர்கள் மற்றும் தோரியம் எரிபொருள் சுழற்சியிலும் தனக்கு இருக்கும் நிபுணத்துவத்தை வைத்து உலகத்தின் அணுசக்தி தொழில்நுட்பத்தில் முதன்மையாக திகழவும் நமது நாட்டிற்கு ஒரு தரிசனம் இருக்கிறது. நாட்டை ஒரு மின் மிகை சூழலுக்குள் கொண்டு செல்ல உதவும் தளத்தை உருவாக்குகின்ற தொழில்நுட்பங்களைக் குறித்து India Nuclear Energy 2016 பேசும். இது பங்குதாரர்களுக்கும் ஒட்டுமொத்த இந்திய உள்நாட்டு அணுசக்தி சகோதரத்துவத்துடன் ஊடாடவும் பிணைப்பை ஏற்படுத்தவும் ஒரு சிறந்த தளத்தை அளிக்கும். "
"COP 21 ஒப்பந்தங்களுக்கு இந்தியா அர்ப்பணிப்புடன் இருப்பதால், சுத்தமான அணுசக்தி என்பது NSG பேச்சுவார்த்தை சூழலில் ஒரு கூட்டு சாதகத்தன்மையை அளிக்கிறது, எதிர்பார்ப்பும் நேர்மறையான சிந்தனையும் இந்த ஆண்டு உத்வேகம் பெற்றுள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.
UBM India பற்றி
UBM India என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அது கண்காட்சிகளின் தொகுப்பு, உள்ளடக்கங்களினால் வழிநடத்தப்படும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், மூலமாக உலகெங்கும் இருந்து வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒன்று சேர்க்கும் தளங்களைஅளிக்கிறது. UBM India ஆண்டுதோறும் நாடு முழுவதும் 25 பெரிய அளவு கண்காட்சிகளையும், 40 மாநாடுகளையும் அளிக்கிறது; இதன் மூலம் பல நிறுவன பிரிவுகளில் வணிகத்தை செயல்படுத்துகின்றது. ஒரு UBM Asia நிறுவனமான, UBM இந்தியாவுக்கு மும்பை, புது தில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM ஆசியா லண்டன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM Plcக்கு சொந்தமானது. UBM Asiaவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகவும் சீனாவின் பெருநிலப்பகுதியிலும், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளில் வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு, தயவு செய்து வருகை தாருங்கள்ubmindia.in.
ஊடக தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
UBM India
Share this article