புதுதில்லி, September 26, 2016 /PRNewswire/ --
UBM India நடத்தும் வட இந்தியாவின் மிகப் பெரிய நகை வர்த்தகக் கண்காட்சி
UBM India நிறுவனத்தால் நடத்தப்படுகின்ற தில்லி நகைகள் மற்றும் இரத்தினக் கற்கள் கண்காட்சி (DJGF) 2016, மீண்டும் ஒரு முறை தலைசிறந்த தங்க ஆபரணத் தயாரிப்பாளர்கள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வியாபாரிகள் மற்றும் தொழில்துறைச் சங்கங்கள் ஆகியோரை தலைநகருக்கு வரவழைத்துள்ளது. இந்த மூன்று நாள் கண்காட்சி (செப்டம்பர் 24 முதல் 26ஆம் தேதி வரை) மாட்சிமை பொருந்திய தொழில்துறைப் பிரமுகர்கள் மத்தியில் புதுதில்லி பிரகதி மைதானத்தில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது. தில்லி நகைகள் மற்றும் இரத்தினக் கற்கள் கண்காட்சி வட இந்தியாவின் மிகப் பெரிய B2B நகைக் கண்காட்சி ஆகும் மற்றும் இது UBM India நிறுவனத்தால் pan-India அளவில் நடத்தப்படுகின்ற நான்கு முக்கியமான நகைகள் மற்றும் இரத்தினக் கற்கள் கண்காட்சியில் ஒன்றாக விளங்குகிறது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160924/411470 )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160924/411471 )
இந்தக் கண்காட்சி Ms. Nirupa Bhatt - MD GIA India and Middle East; Mr. Ramavtar Verma - தலைவர் Delhi Bullion and Jewellers Association; Mr Yogesh Shingal - செயலர், Delhi Bullion and Jewellers Association; Mr. Pawan Gupta - இயக்குநர், PPJ; Mr. Yogesh Mudras - MD UBM India மற்றும் Mr. Abhijit Mukherjee - குழுமத்தின் இயக்குநர் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தக் கண்காட்சி Karol Bagh Jewellers Association, Delhi Bullion & Jewellers Association, Delhi Jewellers Association &Uttarakhand State Jewellers Association மற்றும் Maliwara Jewellers Association ஆகிய புகழ்பெற்ற சங்கங்களின் ஆதரவுடன் நகைத் துறையின் ஒருங்கிணைந்த பகுதியாக சங்கங்களாலும், பெருமளவில் தொழில்துறையினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள புகழ்பெற்ற கண்காட்சி பங்கேற்பாளர்களில் Damara Gold Pvt. Ltd., Hari Krishna Exports Pvt Ltd, M/s. Bhindi Jewellers, Royal Chains Pvt. Ltd., Swarnsarita Gold & Diamonds, Unique Chains Pvt Ltd., Vikas Chain & Jewellery Pvt. Ltd, Swarnshilp Chain & Jewellers Pvt Ltd, Yamuna Diamonds, Salonki, Lumineux UNO போன்றவை உள்ளிட்ட பல நகை உற்பத்தியாளர்கள் உள்ளடங்குவர்.
மூன்று அரங்குகளில் முழுவதுமாகப் பரவியுள்ள இந்தக் கண்காட்சியில் 300க்கும் மேற்பட்ட பிராண்டுகளின் பிரகாசமான காட்சியளிப்பு இடம் பெற்றிருந்தது, மற்றும் இது பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிரா போன்ற அண்டை மாநிலங்கள் உள்ளிட்ட பல மாநிலங்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்ற இக் கண்காட்சி ஒரு தொழில்துறைக் களமாகவும் நகை விற்பனையாளர்களுக்கு நகை மற்றும் இரத்தினக்கற்களுக்கான மிகப் பெரிய ஆதாரத் தளமாகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. இந்தக் கண்காட்சி, நகைகளுக்கான மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள், நகை உற்பத்தியாளர்கள், வைரம், இரத்தினக் கற்கள், முத்து ஆகியவற்றின் வழங்குநர்கள் மற்றும் வர்த்தகர்கள், விலைமதிப்புள்ள உலோகம் மற்றும் நகை பொருத்தும் வர்த்தகர்கள் மற்றும் வழங்குநர்கள், மற்றும் வர்த்தக மற்றும் அரசாங்க நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஆகிய அனைவரும் ஒரே கூரையின் கீழ் சந்திப்பதற்கு, ஈடுபடுவதற்கு, வலையமைப்பை ஏற்படுத்துவதற்கு மற்றும் தங்கள் வணிகத்தை வளர்ப்பதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'Spotlight on Synthetics' என்ற தலைப்பில் Gemological Institute of America (GIA) ஆல் நடத்தப்பட்ட ஒரு கருத்தரங்கம் 100க்கும் மேற்பட்ட ஆதரவாளர் வாங்குநர் திட்டத்துடன் சேர்த்து கண்காட்சியின் சிறப்பம்சங்களில் ஒன்றாக விளங்கியது.
இந்த மாபெரும் கண்காட்சிக்குப் பெருமை சேர்க்கும் விதமாக, வட இந்தியாவில் உள்ள 20,000க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற நகை வியாபாரிகளை இணைக்கும் விதமாக, லக்னோ, அம்பாலா, ஜலந்தர், சண்டிகர் மற்றும் அமிர்தசரஸ் போன்ற பல்வேறு வட நாட்டு மையங்களில் UBM India பல வெற்றிகரமான ரோட் ஷோக்களையும் ஸ்டோர் நடவடிக்கைகளையும் அரங்கேற்றியது.
இன் 5வது பதிப்பு துவக்க விழாவில் பேசும்போது, UBM India நிர்வாக இயக்குநர் Mr. Yogesh Mudras கூறியதாவது, "இந்தியா கடந்த இரண்டு ஆண்டுகளாக மிக அதிகமாக தங்கம் வாங்கும் நாடுகளில் முதலிடத்திலும், வைரத்தைப் பொறுத்த வரை அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக மூன்றாம் இடத்திலும் உள்ளது. முகலாயர்களின் பழமையான நகைகள், தங்கம், வைரம் மற்றும் குந்தன் நவரத்தினம் என்பன போன்ற சில பளபளப்பான மற்றும் ஸ்டேட்மெண்ட் நகைகளுக்கான பெருவிருப்பம் கொண்டவர்களுக்கான முக்கிய சந்தையாக வட இந்தியா விளங்குகிறது. இந்த பிரகாசத்துக்கான விருப்பத்தை UBM India புரிந்துகொண்டுள்ளது மற்றும் வட இந்தியாவின் மிகப் பெரிய அளவிலான ஒரே ஒரு கண்காட்சியாகிய தில்லி நகைகள் மற்றும் இரத்தினக்கற்கள் கண்காட்சியின் வாயிலாக இந்தத் துறையை மேலும் மேம்படுத்துகின்றது. ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய இடங்களில் வெற்றிகரமாக நடைபெற்ற கண்காட்சியுடன் சேர்ந்து, இந்தக் கண்காட்சி நகைத் துறையில் இந்தியாவின் காலடிகளை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளது."
"இந்த ஆண்டு, முன்னணி உற்பத்தியாளர்கள், வாங்குநர்கள், கடை மேலார்கள், வங்கியாளர்கள் மற்றும் அதிக மதிப்புமிக்க இறுதிப் பயனர்கள் ஆகியோரின் மனங்களில் சில்லறை நகை வணிகத்தைப் பற்றிப் பெருமையாக உணரச் செய்த Avalon Global Research உடன் இணைந்து வெளியிடப்பட்ட ஒரு தனித்துவமிக்க அறிக்கையாகிய 'இந்தியாவின் முன்னணி சில்லறை விற்பனை நகைத் தயாரிப்பு நிறுவனங்கள்'-இன் இரண்டாவது பதிப்பை பிரத்தியேகமாக வெளியிட்டதன் மூலம், வட இந்தியாவின் சில்லறை விற்பனை நகை வணிகத்தில் மிகச் சிறந்த திறமைக்கு மதிப்பளிக்கும் தனித்துவமிக்க முயற்சியாகிய The Retail Jewellers Guild Awards-இன் இரண்டாவது பதிப்பும் DJGF இல் இடம் பெறும்" என அவர் மேலும் கூறினார்.
UBM India பற்றி
UBM India, கண்காட்சித் தொகுப்புகள், உள்ளடக்கம் நிறைந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் ஆகியவற்றின் வாயிலாக உலகம் முழுவதும் உள்ள வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் ஒருங்கிணைக்கும் களங்களை தொழில்துறையினருக்கு வழங்குகின்ற ஒரு முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பு நிறுவனம் ஆகும். UBM India ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் சுமார் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் நடத்துகின்றது; அதன்மூலம் பல தொழில்துறை நிறுவனங்களுக்கிடையேயான வர்த்தகத்துக்கு உதவுகின்றது. UBM Asia நிறுவனமாகிய UBM India வின் அலுவலகங்கள் மும்பை, புதுதில்லி, பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. UBM Asia நிறுவனம் லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM plc நிறுவனத்துக்குச் சொந்தமானது ஆகும். UBM Asia நிறுவனம் ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும், மற்றும் அது சீனா, இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டு நிறுவனமாகவும் உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து பார்வையிடவும் ubmindia.in
ஊடகத் தொடர்பு:
Mili Lalwani
UBM India
[email protected]
+22-61727000
Share this article