புது தில்லி, September 19, 2016 /PRNewswire/ --
UBM India மூலம் நடைபெறவிருக்கும் வட இந்தியாவின் மிகப்பெரிய ஜுவல்லரி ட்ரேட் ஷோ (நகை வணிகக் கண்காட்சி)
UBM India - வினால் நடத்தப்படும் டெல்லி Jewellery and Gem Fair (DJGF) 2016 மீண்டும் அதி உயர்ந்த நகை வணிகர்களையும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வியாபாரிகளையும், தொழில் சார்ந்த அமைப்புகளையும் தலைநகரில் ஒன்றுசேரக் கொண்டுவரவிருக்கிறது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160916/408635LOGO )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
புது தில்லியில் உள்ள Pragati Maidan-தில் செப்டெம்பர் 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் இந்த ஐந்தாம் ஆண்டு DJGF, நகைவணிகத் தொழிலின் சமீபத்திய வசீகரிப்பு பொருட்கள் சிலவற்றை காட்சிப்படுத்தவிருக்கிறது. பிரபலமான அமைப்புகளான , Karol Bagh Jewellers' Association, Delhi Bullion & Jewellers Association, Delhi Jewellers Association, Uttarakhand State Jewellers Association, and Maliwara Jewellers Association. ஆகியவற்றின் ஆதாரவுடன் நடைபெறவிருக்கும் இந்த வணிகப் பொருட்காட்சி நகைத் தொழில் துறை மற்றும் இத்துறை சம்பந்தப்பட்ட அமைப்புகளையும் ஒருங்கிணைப்பும் ஒரு பொருட்காட்சி என அங்கீகாரம் கொண்டதாகும்.
250 கண்காட்சியாளர்கள் பங்கு பெறும் இந்தக் கண்காட்சி நகை வணிகர்கள் நகை மற்றும் ஆபரணகற்கள் கொள்முதல் செய்வதற்கான மிகப் பெரிய இலக்காக உண்மையிலேயே இந்த கண்காட்சி பரிணமித்திருக்கிறது. வரவிருக்கும் இந்தக் கண்காட்சி நகைக்கான மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதியாளர்கள், நகை உற்பத்தியாளர்கள், வைரம், ஆபரணகற்கள், முத்து விநியோகஸ்தர்கள் மற்றும் வியாபாரிகள், விலைமதிப்பு மிக்க உலோகம் மற்றும் நகைகளைப் பொருத்தும் வியாபாரிகள், விநியோகஸ்தர்கள், தொழில் மற்றும் அரசாங்க அமைப்பு சார்ந்த பிரதிநிதிகள் அனைவரும் ஒரே கூரையின் கீழ் சந்திப்பதற்கும், தொடர்பு கொள்வதற்கும், தொழிலை வளர்த்துக் கொள்வதற்கும் இது அமையும். அறிவு சார் கருந்தரங்கை Gemological Institute of America (GIA) நடத்துவதும் கூட இந்தப் பொருட்காட்சியில் குறிப்பிடப்படத்தக்க ஒன்றாகும்.
இந்த ஆண்டு பங்கு கொள்ளும் கண்காட்சியாளர்கள் பட்டியலில் - Chain - N - Chains Jewels Ltd., Damara Gold Pvt. Ltd., Hari Krishna Exports Pvt Ltd, M/s. Bhindi Jewellers, Royal Chains Pvt. Ltd., Swarnsarita Gold & Diamonds, Unique Chains Pvt Ltd., Vikas Chain & Jewellery Pvt. Ltd, Swarnshilp Chain & Jewellers Pvt Ltd, Yamuna Diamonds, Salonki, Vimal Diamonds, Vijay Enterprises போன்றவர்களும் மற்றவர்களும் அடங்குவர். பிரதான நிகழ்வுக்கு முன்பு இது தொடர்பான அறிமுக நிகழ்வுகளை தொடர்ச்சியாக வட இந்திய நகரங்களான லக்னோ, அம்பாலா, ஜலந்தர், சண்டிகார், அமிர்தசரஸ் ஆகிய நகரங்களில் UBM India வெற்றிகரமாக நடத்தியது.
DJGF ன் ஐந்தாம் பதிப்பு பற்றிய அறிவிப்பையும் வட இந்தியாவில் வளர்ந்து வரும் நகைத் தொழிலின் வாய்ப்புகள் குறித்தும் UBM India -வின் நிர்வாக இயக்குநர் , Mr. Yogesh Mudras,`இந்தியாவின் மிகப் பெரிய ஏற்றுமதியாளர்களில் முத்துக்கள் மற்றும் நகைகளும் ஒன்றாகும். நாட்டின் மொத்த வெளிநாட்டு இருப்புக்கு முக்கியப்பங்கீட்டை இத்துறை அளிப்பதால் இது இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் எனக் கருதப்படுகிறது. வண்ணமயமான ஆபரணகற்கள், வெள்ளி, குந்தன், மீனா, தங்கம் மற்றும் வைரத்தினால் ஆன மினுமினுப்பான நகைகளுக்கான சந்தை வட இந்தியாவில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. நம்முடைய தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக முக்கியமான பண்டிகைகள், திருமண காலங்களுக்கு முன்பாக இந்தத் துறையைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் மற்றும் சில்லறை வணிகர்கள் சந்திப்பதற்கும், தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்கும், வணிகத்தை உருவாக்கிக் கொள்வதற்கும் ஒரு மேடையாக டெல்லி பொருட்காட்சி அமையும்" என பேசினார்.
2016 ஆம் ஆண்டு DJGF ரீடெயில் Jewellers Guild Awards-ன் இரண்டாம் ஆண்டு நிகழ்வையும் பார்க்கவிருக்கிறது. இது இந்தியாவெங்கிலும் சில்லறை நகைத் தொழிலில் ஈடுபட்டுள்ள தனிப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புகளின் சிறப்பையும் முயற்சிகளையும் பாராட்டி அங்கீகரிப்பதற்கான UBM India -வின் தனித்துவமான முனைப்பாகும்.
ரீடெயில் Jewellers Guild Awards-ன் செயல்முறை ஆலோசகரான எர்ன்ஸ் அண்ட் யங்கோடு சேர்ந்து சீரான, தொழில்முறை வழியாக நாடெங்கிலும் சில்லறை நகைத் தொழிலில் உள்ள சிறந்த திறமையாளர்களை தேர்வு செய்யும். சில்லறை நகைத் தொழிலின் பல்வேறு செயல்பாடுகளை மனதில் கொண்டு இந்த ஆண்டுக்காக விரிவான விருது வகைகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. 'Store of the Year', 'Employer of the Year', 'Most Innovative Marketing Campaign', 'Excellence in Customer Service' and 'Excellence in Design'. ஆகியவை அடங்கும். இந்த இரண்டாம் ஆண்டு விருதுகளுக்கான பரிந்துரைகளும் 100 சதவிகத வளர்ச்சியைக் கண்டிருக்கிறது.
இந்த ஆண்டும் விருது வழங்கும் விழாவில் இத் தொழிலைச் சார்ந்த பிரபலங்கள் தொழில்சார்ந்த ஆழ்ந்த அறிவைப் பகிர்ந்து கொள்வதோடு, ஃபேஷன் உலகில் பிரபலமானவர்கள் பங்கேற்கேகும் பிரத்யேகமான ஃபேஷன் ஷோவில் அவர்கள் அதிர்ச்சியளிக்கக்கூடிய நகைகளை காட்சிப்படுத்துவதோடு தனித்துவமான செயல்திறனையும் காட்டவிருக்கிறார்கள். மாலை நேரத்தில் சில்லறை வணிகத் தொழிலை முன்னணி உற்பத்தியாளர்கள், வாங்குபவர்கள், வணிக உரிமை மேலாளர்கள், வங்கியாளர்கள் மற்றும் அதிக மதிப்புவாய்ந்த இறுதிப் பயனாளர்கள் ஆகியோரின் மனதில் முதலிடத்தில் வைக்கும் பொருட்டு Avalon Global Research - ன் இந்தியாவின் `Leading Retail Jewellery companies' என்கிற பிரத்யேக அறிக்கையின் இரண்டாம் பதிப்பையும் இந்நிகழ்வு காணவிருக்கிறது.
UBM India- பற்றி
இந்தியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளரான UBM India பல வகையான கண்காட்சிகள், துறை சார்ந்த மாநாடுகள், கருத்தரங்குகள் வாயிலாக உலகமெங்கும் இருக்கும் வாங்குபவர்களையும், விற்பனையார்களையும் ஒருங்கே ஒரு தளத்துக்குக் கொண்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் 25 பெரிய காண்காட்சிகளையும், 40 கருத்தரங்குகளையும் UBM India நடத்தி வருகிறது. இது பலவகையான தொழில்களுக்கு இடையேயான வர்த்தகத்துக்கு வழிவகுக்கிறது. UBM ஏசியா நிறுவனமான UBM India-வுக்கு மும்பை, புதுதில்லி, பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM ஏசியா, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்டிருக்கும் UBM plc -க்கு சொந்தமானது. UBM ஏசியா ஆசியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளரும், சீனா, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளின் மிகப் பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும்.
மேலதிகத் தகவலுக்கு தயவு செய்து ubindia.in என்கிற இணையத் தளத்துக்குச் செல்லவும்
ஊடகத் தொடர்பு:
Mili Lalwani,
[email protected] ,
022-61727000
UBM India
Share this article