புதுதில்லி, September 9, 2016 /PRNewswire/ --
பத்தாவது வருடாந்திர புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இண்டியா எக்ஸோபோவின் முன்நிகழ்வாக செப்டெம்பர் 6ஆம் தேதி UBM India வழங்கும் Renewable Energy India (REI) Awards நிகழ்ச்சி க்ரேட்டர் நோய்டாவில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் செயல்முறை ஆலோசகரான எர்னஸ்ட் அண்ட் யங் உடன் இணைந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டத்தின் மேம்பாடு மற்றும் செயல்திறனின் பல்வேறு பிரிவுகளின் தலையாய பணியை சிறப்பிக்கும் வகையில் The Renewable Energy India Awards, வழங்கும் விழா ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இதில் புதுப்பிக்கத்தக்க சக்தித்துறையில் சாதனை செய்த, பங்களித்த மேம்பாட்டாளர்கள், உற்பத்தியாளர்கள், தனி நபர்கள் மற்றும் பலரும் அடங்குவர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வெளியில் தலையாயசிறப்பு மற்றும் புதுமை என்கிற காரணிகளின் அடிப்படையில் இத் தொழில் சார்ந்த சாம்பியன்களை உலகளவிலான பார்வையாளர்களுக்கு இது வெளிப்படுத்தியது. இந்த விருதுவழங்கும் இரவு குறிப்பாக Mr Hans-Josef Fell, தலைவர், எனர்ஜி வாட்ச் குரூப், எரிசக்தி ஆலோசகர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர், அரசு மற்றும் தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் பிரபல தொழிலதிபர்களையும் கண்ணுற்றது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160908/405555 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160908/405556 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
மாலை நிகழ்வு Mr. Yogesh Mudras, நிர்வாக இயக்குநர், UBM India அவர்களின் உரையுடன் ஆரம்பிக்க Dr. A K Tripathi, ஆலோசகர், Ministry of New and Renewable Energy (MNRE). தலைமையுரையாற்றினார்.
மாலையில் `எதிர்கால மின்கட்டமைப்புக்கான மாற்றம் - சந்தை, தொழில்நுட்ப கண்ணோட்டம்' என்கிற கருத்தில் இந்தத் தொழில்துறையைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்தவர்கள் ஸ்மார்ட்டர் மற்றும் நெகிழ்ச்சியான கட்டமைப்பை நோக்கி செல்வது குறித்து கலந்துரையாடினார்கள். இந்த நிகழ்வுக்கு Dr. Pramod Deo, முன்னாள் சேர்மன், Central Electricity Regulatory Commission தலைமை தாங்க பிரபல நிபுணர்களான
Mr. K S Popli, சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர், Indian Renewable Energy Development Agency (IREDA), Dr. Bharat Bhargava, டைரக்டர் ஜெனரல், ONGC Energy Centre, Mr. Pankaj Batra, தலைமை பொறியியலாளர், Central Electricity Authority and Mr. Shuvendu Bose, செயல் இயக்குநர், Advisory Services, Ernst & Young and Dr. Bibek Bandyopadhyay, முன்னாள் ஆலோசகர், MNRE and மூத்த ஆலோசகர், PACE D Technical Assistance Program ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பரிந்துரை வகைகளில் வெற்றிபெற்றவர்கள்:
முன்னணி ரெனிவபிள் எனர்ஜி மேம்பாட்டாளர் என்கிற துணைப் பிரிவில் வெற்றி பெற்றவர்கள் : சூரிய ஆற்றலில் முன்னணி மேம்பாட்டளர் விருது Acme Cleantech Solutions, காற்று ஆற்றலில் முன்னணி மேம்பாட்டாளர் விருது Mytrah Energy India Private Limited, உயிர்கூள ஆற்றலில் (பயோமாஸ்) முன்னணி மேம்பாட்டாளர் விருது Kalpataru Power Transmission Ltd.
EPC பிரிவில், Tata Power Solar Systems Ltd விருதைப் பெற்றது. முன்னணி உற்பத்தியாளர் பிரிவில் Emmvee Photovoltaic Power Private Limited, சூரிய ஆற்றலில் முன்னணி உற்பத்தியாளராகவும், Suzlon Energy Ltd காற்று ஆற்றலில் முன்னணி உற்பத்தியாளராகவும், Punjab Renewable Energy Systems Private Limited உயிர்க்கூள ஆற்றலில் முன்னணி உற்பத்தியாளராகவும் தெரிவு செய்யப்பட்டு விருதுகளைப் பெற்றது. `ஸ்ட்டேட் லோட் டெஸ்பாட்ச் செண்டர்' என்கிற பிரிவில் ஒதிஸா மாநிலத்துக்கு விருது வழங்கப்பட்டது. முன்னணி `Renewable Energy Storage Solution Provider' பிரிவில் பானாசோனிக் இண்டியாவும், முன்னணி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பம்/புதுமையான பொருட்கள் என்கிற பிரிவில் Schneider Electric India Private Limited -க்கும் விருது வழங்கப்பட்டது.
மதிப்புமிக்க ஜூரி விருது வெற்றி பெற்றவர்கள்: எரிசக்தித் துறையில் பெரும் பங்களிக்கும் செய்ததற்கும், நீண்ட காலம் எரிசக்தித் துறையின் சீரமைப்பாளராக இருந்து சீர்த்திருத்தங்களைக் கொண்டுவந்ததற்கும் Dr Pramod Deo, முன்னாள் தலைவர், Central Electricity Regulatory Commission அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும். Shri Piyush Goyal, Union Minister of State (IC) for Power, Coal, New & Renewable Energy and Mines _ க்கு நாட்டின் ஆற்றல் துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை நாடுமுழுவதும் அதிகரிக்க உதவியதற்கும் ` 'Transformative Leadership Award' -ம் வழங்கப்பட்டன. இவர் Ujwal DISCOM Assurance Yojana (UDAY) என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தி மாநில விநியோக நிறுவனங்களை நிதி மற்றும் செயல்பாட்டு திறமையின்மையிலிருந்து மீட்டெடுத்த பொறுப்பாளரும் ஆவார்.
Shri Upendra Tripathy, IAS, Secretary, Ministry of New & Renewable Energy (MNRE), Government of India வுக்கு `'Renewable Energy Crusader of the Year' என்கிற விருது இந்தத் துறையில் அவர் எடுத்த முன்னெடுப்புகளுக்கும், பாரம்பரிய ஆளுமைத் தன்மைக்குப் பதிலாக மிகவும் திறந்த எதிர்வினை வழங்கும் அமைப்பை முயற்சித்ததற்கும் வழங்கப்பட்டது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் காற்று ஆற்றல் உற்பத்தியின் முன்னோடியான Mr. Tulsi Tanti -க்கு 'Industry Man of the Year' விருதும், நிதி வழங்கும் முன்னெடுப்பாக பசுமை சக்தி நிதிக்கு உத்வேகம் கொடுக்கும் விதத்தில் IREDA வுடன் ஒப்பந்தப் புரிந்துணர்வு செய்து கொண்டதற்கும், 2014 ஆம் ஆண்டு ஐநா-வின் காலநிலை மாநாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 500 மெகாவாட் சுத்தமான எரிசக்திக்குத் தேவையான நிதியை வழங்குவதாக YES Bank இலக்கு நிர்ணயித்து உறுதி அளித்ததுடன் அதே ஆண்டு 1100 மெகாவாட்டுக்கு நிதி உதவி அளித்ததற்கும் Renewable Energy Funding விருது அதன் முன்னோடியான YES Bank-ன் தலைமைச் செயல் அதிகாரியான Mr. Rana Kapoor -க்கு கொடுக்கப்பட்டது. 5 ஆண்டுகளில் 5000 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு நிதி உதவி அளிப்பதாக RE-INVEST 2015 ன் போது இந்திய அரசுக்கு `'Green Energy Commitment' கொடுத்த முதல் வங்கியும் YES Bank - தான். IREDA -க்கு 'Best funding Agency of the year' விருதும் , TERI க்கு 'Renewable Energy Think-tank' விருதும், 'Special Recognition' விருதுகள் என்கிற பிரிவில் `Paschim Group - க்கு முன்னணி ஹைட்ரோ மேம்பாட்டாளார் விருதும், Britannia Industries Limited - க்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான முன்னணி முதலீட்டாளர் என்கிற விருதும் வழங்கப்பட்டன.
மதிப்புக்க ஜூரி குழு புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் தொழில் சார்ந்த பிரபலங்களான Mr. Ajit Gupta, முன்னாள் ஆலோசகர், MNRE; Mr. K S Popli, சேர்மன் & நிர்வாக இயக்குநர், IREDA; Dr. Bibek Bandyopadhyay, முன்னாள் ஆலோசகர், MNRE and மூத்த ஆலோசகர், PACE D Technical Assistance Program; Ms. Rajasree Ray, பொருளாதார ஆலோசகர் MNRE, Dr. S N Srinivas, ப்ரோக்ராம் அனலிஸ்ட், UNDP; Mr. Pankaj Batra, தலைமைப் பொறியாளர், Central Electricity Authority and Mr. Shirish Garud, இயக்குநர் & முதுநிலை ஆய்வாளர், The Energy and Resources Institute (TERI) ஆகியோரை உள்ளடக்கியதாக இருந்தது.
UBM India- பற்றி
இந்தியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளரான UBM India பல வகையான கண்காட்சிகள், துறை சார்ந்த மாநாடுகள், கருத்தரங்குகள் வாயிலாக உலகமெங்கும் இருக்கும் வாங்குபவர்களையும், விற்பனையார்களையும் ஒருங்கே ஒரு தளத்துக்குக் கொண்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் 25 பெரிய காண்காட்சிகளையும், 40 கருத்தரங்குகளையும் UBM India நடத்தி வருகிறது. இது பலவகையான தொழில்களுக்கு இடையேயான வர்த்தகத்துக்கு வழிவகுக்கிறது. UBM ஏசியா நிறுவனமான UBM India-வுக்கு மும்பை, புதுதில்லி, பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM ஏசியா, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்டிருக்கும் UBM plc -க்கு சொந்தமானது. UBM ஏசியா ஆசியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளரும், சீனா, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளின் மிகப் பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலதிகத் தகவலுக்கு தயவு செய்து ubindia.in என்கிற இணையத் தளத்துக்குச் செல்லவும்
ஊடகத் தொடர்பு:
Mili Lalwani,
[email protected] ,
022-61727000
UBM India
Share this article