புதுதில்லி, August 26, 2016 /PRNewswire/ --
- நல்ல குறிப்போடு இதனுடைய முதல் பதிப்பு முடிவடைகிறது
- MoUD, SBM ஆதரவுடனான கழிவு மற்றும் துப்புரவு தொழிலுக்கான இந்தியாவின் மிகவும் விரிவான தளம் (மேடை)
இந்தியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளரான UBM India வின் முனைப்போடு நடத்தப்பட்ட WasTe and SaniTech India 2016 புது தில்லியிலுள்ள Pragati Maidan-ல் ஆகஸ்ட் 19 ஆம் தேதியன்று வெற்றிகரமாக முடிவடைந்தது. தொழில்துறையைச் சேர்ந்த பிரபலமானவர்களுக்கு மத்தியில் மூன்று நாள் ட்ரேட் எக்ஸ்போ (17-19 ஆகஸ்ட்)வை Shri. P.K. Gupta, IAS, முனிசிபல் கமிஷனர், நார்த் டெல்லி முனிசிபல் கார்ப்பொரேஷன், Shri. V.K. Madhavan, சீஃப் எக்ஸிகியூட்டிவ் Water Aid India, Mr. Yogesh Mudras, (நிர்வாக இயக்குநர்) மானேஜிங் டைரக்டர், UBM India ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
இந்த எக்ஸ்போவின் மூன்று நாட்களில், இந்தியாவின் கழிவு மேலாண்மை, மறு சுழற்சி, சுகாதாரம் சம்பந்தப்பட்ட அனைவரையும் அவர்களுடைய பொருட்கள், தொழில் நுட்பம், புதுமைகள் ஆகியவற்றை கொண்டுவந்து செல்வாக்கு மிக்க தொழில் சமூகத்தின் முன்பாக ஒரே கூரைக்குக் கீழ் காட்சிப்படுத்தப்பட்டது. தொழில்துறையைச் சார்ந்தவர்கள் ஒன்று கூடி தொழில் போக்குகளையும், சவால்களையும், சந்தை நுண்ணறிவையும் கலந்துரையாடி அவர்களுடைய தொழிலை பரவலாக்க உதவும் வகையில் ஆழமான தீர்வுகளை வழங்குவதற்கு ஏற்றவொரு தளமாக இது அமைந்தது.
WasTe And SaniTech India 2016 Ministry of Urban Development ( MoUD ), Swachh Bharat Mission (SBM) Central Pollution Control Board (CPCB), ஆகியவற்றின் அதிகாரத்துடனும் Metal Recycling Association of India (MRAI), Indian Pollution Control Association (IPCA), Indian Bio Gas (IBA) Association, All India Plastics Industries Association (AIPIA), NGO பங்களிப்பாளரான - Sulabh International and Toxic Link, Sanitation Partner - WaterAid அறிவுசால் பங்களிப்பாளரான - The Energy and Resource Institute (TERI) துணை பங்களிப்பாளரான - 3S India ஆகியவற்றின் ஆதரவுடனும் நடத்தப்பட்டது.
உற்பத்தியாளர்களையும், தொழில்நுட்பம் வழங்கும் நிறுவனங்களையும் ஒருங்கே கொண்டுவந்த இந்த எக்ஸ்போவில் முக்கியமான கண்காட்சியளர்களாக ஆந்திரபிரதேஷ், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களும், Swachh Andhra Corporation, Municipal Corporation Delhi- East (MCD) ஆகிய முனிசிபல் கார்ப்பொரேஷன்களும், MRT Systems, Dhara Groups, Bharti Hygiene, Frontier Polymer, Rashtriya Furnace போன்ற பல நிறுவனங்களும் பங்கெடுத்துக் கொண்டன. இந்தத் துறை சார்ந்த புதிய ஸ்டார்ட் - அப் நிறுவனங்கள் தங்களுடைய புதுமைகளை காட்சிப்படுத்துவதற்கும் இந்த எக்ஸ்போ ஒரு பரிபூரணமான மேடையாகும்.
தொழில்துறை எதிர் கொண்டிருக்கும் சவால்கள் பற்றியும் அது எதிர்பார்க்கும் தீர்வுகள் குறித்தும் நடந்த சக்தி மிக்க, தொழில் கவனமிக்க மாநாடுகளும்,தொழில் நுட்பக் கருத்தரங்குகளும் இரண்டு நாட்கள் நடந்த இந்த எக்ஸ்போவின் சிறப்பம்சங்களாகும். தொழில்நுட்பக் கருத்தரங்குகள் முனிசிபல் திட கழிவு மேலாண்மை, அபாயகரமான பொருட்களின் கழிவு மேலாண்மை, ப்ளாஸ்டிக் கழிவு மேலாண்மை, e-கழிவு மேலாண்மை, உயிர் மருத்துவ கழிவு மேலாண்மை, கட்டமைப்பு மற்றும் இடிபாடுகள் கழிவு மேலாண்மை போன்ற தலைப்புகளை உள்ளடக்கியதாக இருந்தது.
UBM Indiaவுடன் இணைந்து The Energy and Resource Institute (TERI) டின் `Solid Waste to Resource', வாட்டர் எய்ட் சார்பாக `Urban Sanitation in India' என தொழில் சார்ந்த இரண்டு அறிக்கைகளும் இந்த எக்ஸ்போவில் வெளியிடப்பட்டன.
முதல் WasTe and SaniTech India, வெற்றிகரமாக நடந்து முடிந்தது குறித்து Yogesh Mudras, (நிர்வாக இயக்குநர்) மேனேஜிங் டைரக்டர், UBM India பேசுகையில், "இன்றைய இந்தியாவின் நில அமைவில் உண்டாக்கப்படும் பெருவாரியான முனிசிபல், அபாயகரமான, e-கழிவு, உயிர் மருத்துவக் கழிவுகளுக்கு மத்தியில் கழிவு, துப்புரவு சேவைகளை விரைவாக அதிகமாக்குவது தேவையானதாகும். இந்தியர்களில் நாற்பது சதவிகிதத்தினருக்கே மேம்படுத்தப்பட்ட துப்புரவு வசதிகளும், சுத்தமான தண்ணீரும் கிடைக்கும் பட்சத்தில் இந்தியாவில் கழிவு, துப்புரவு சேவைகள் மிகவும் குறைவாகவே இருப்பது அதிகப்படியான சுகாதர செலவுக்கு இட்டுச் செல்லும். WasTe and SaniTech India-வை UBM India அறிமுகப்படுத்துவதின் நோக்கம் என்னவெனில் இந்த உண்மைகளை முன்னிலைப்படுத்துவதும் புதுமை மற்றும் தொழில்நுட்ப அடிப்படையில் அதற்குத் தேவையான புதிய, நடைமுறைக்கேற்ற தீர்வுகளை நம்முடைய மதிப்பிற்குரிய பிரதம மந்திரியின் தொலைநோக்குப் பார்வையும் தேசிய அளவில் நடுவண் அரசின் முக்கியத் திட்டமான ஸ்வாச் பாரத் அபியானுடன் இணைப்பதுதான். எங்களின் முயற்சிக்கு அளவற்ற ஆதரவைக் காட்டும் நகர்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கும், ஸ்வாச் பாரத் மிஷனுக்கும் நாங்கள் நன்றி கூறிக் கொள்கிறோம்" என்றார்.
WasTe and SaniTech India 2016-ன் பலாபலனை தொழில் துறை மதிப்பிட்டு அது ஒரு தொழில்சார்ந்த தளம் என்பதோடு UBN Indiaவின் இந்த வருடாந்திர எக்ஸ்போவின் குறிக்கோளையும் வலியுறுத்தியிருக்கிறது.
பிரமுகர்கள்
- Mr. Naresh Kumar, IAS , சேர்மன், நியூ டெல்லி முனிசிபல் கவுன்சில் கழிவு, துப்புரவு "மேலாண்மை புலம் சார்ந்த அனைத்துப் பங்குதாரர்களும் வந்திருந்து அவர்களது சிறந்த நடைமுறைகளையும், தொழில் நுட்பங்களையும் பகிர்ந்து கொள்ள WasTe and SaniTech India ஒரு சிறந்த மேடையாகும்"
- Shri. Praveen Prakash, IAS, இணைச் செயலாளர் - நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் "இந்த "கண்காட்சி எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த மாதிரியான கண்காட்சிகள் (மேடைகள்) மூலம் மட்டுந்தான் நகர மற்றும் மாநில அளவிலான கொள்கைகளை உருவாக்குபவர்களுக்கு இந்திய துப்புரவு மற்றும் கழிவுத் துறையில் புதிய நிறுவனங்களினுடைய சமீபத்திய தொழில்நுட்பங்கள் குறித்த வெளிப்பாடு கிடைக்கும்"
கண்காட்சியாளர்
- Mr. Ajit Tiwari, குவாலிட்டி இன் -சார்ஜ், ILF & FS Environment
"இந்த காலகட்டத்தில் கழிவு, துப்புரவுத் துறைக்கு UBM Indiaவின் மேடை அவசரத் தேவையாகும். இன்றைக்கு வரைக்கும், கழிவு என்பது நகர எல்லையிலிருந்து மிகவும் தூரமான இடத்தில் நிலநிரப்பலுக்கு உபயோகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்தக் கண்காட்சி கழிவை திறமையுடன் உபயோகித்தால் அதிலிருந்து வளங்களைப் பெறமுடியும் என்று நிறுவனங்களிடையே ஒரு விழிப்புணர்வை உருவாக்கும்"
- Mr. Vipin Jolly, பிரதிநிதி, MRT, சுவீடன் - ARG Infratech Pvt. Ltd.
"கழிவு மறுசுழற்சியில் உள்ள சமீபத்திய தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்த இந்த மேடை மிகவும் உபயோகமாக இருப்பதுடன் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களின் கூட்டம் புதிய வாய்ப்புகளுக்கானக் கதவுகளை கண்டிப்பாகத் திறக்கும்"
- Ms. Sushmita Sinha, BODA, CDD Society
"இந்தக் கண்காட்சியும், மாநாடும் மிகவும் சுவராசியமானது ஏனென்றால் இது துப்புரவு சவால்களுக்கான சேவைகளையும் தொழில்நுட்பங்களையும் வழங்கும் மக்களுக்கான ஒரு மேடையாகும். இது ஒரு நல்ல அனுபவம். நமக்கு நல்ல தொழில் வாய்ப்புகள் கிடைப்பதுடன் தொழில்துறையில் உள்ள புதிய தொழில்நுட்பங்களைப் பற்றியும் தெரிந்து கொள்கிறோம்."
- Mr. Claes Ryden, எக்ஸிகியூட்டிவ் டைரக்ட்டர் - MRT System - Sweden
"நாங்கள் பாதரசம் கலந்த கழிவை மறுசுழற்சி செய்யக்கூடிய கருவிகளைத் தயாரிப்பவர்கள். இந்தியச் சந்தையில் எங்களுடைய ப்ராண்டை அறிமுகப்படுத்துவதற்காக WasTe and SaniTech-ல் அதைக் காட்சிப்படுத்தியிருக்கிறோம். அரசாங்கத்துடனும் தனியார் அமைப்புகளுடனும் தொடர்பு கொள்வதற்கு இந்த மேடை மிகவும் உபயோகமானது"
- Mr. Piyush Mohapatra, சீனியர் ப்ரோக்ராம் கோஆர்டினேட்டர், Toxic link
"கழிவு, துப்புரவின் பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடல் நடக்கும் இந்நேரத்தில் UBM India நல்ல முனைப்பை எடுத்திருக்கிறது. வேஸ்ட் இனிமேல் வேஸ்ட் இல்லை அது ஒரு வளம் என்பதால் இந்த மேடை புதிய தொழில்களை வழங்குவதற்கான ஒரு நுழைவாயிலாகும். "
- Ms. Chetana, உதவி துணைத்தலைவர், மார்க்கெட்டிங் & கம்யூனிகேஷன்ஸ் - Namo E-Waste Pvt. Ltd.
"இந்த எக்ஸ்போ உண்மையிலேயே மிகவும் நன்றாக இருந்தது. நான் தனிப்பட்ட முறையில், கழிவு தீர்வுகளுக்காக பலவகையான தொழில்நுட்பங்களுடன் கூடிய கண்காட்சியாளர்களை விரும்புகிறேன். இந்த மாதிரியான மேடைகள் NGO-க்கள், அரசு, தனியார் நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து புதிய வாய்ப்புகளை உருவாக்க உதவும்.
- Puneet Srivastava, மேனேஜர் பாலிசி - WATERAID INDIA
"இந்த மாதிரியான நிகழ்வுகள் இன்னும் அதிகமாக நமக்குத் தேவை. இது மேலான, மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குகின்றன. கிராமங்களிலும், நகரங்களிலும் ஸ்வாச் பாரத் மிஷனை நிறைவேற்றுவதிலிருக்கும் சவால்கள் குறித்து பங்குதாரர்கள் அனைவரும் ஒருங்கே வந்து கலந்துரையாடுவதற்கும் இது ஒரு நல்ல மேடையாகும். இந்தத் துறையில் உள்ள முக்கியமான சவால்களுக்கு தீர்வு கண்டுபிடிக்கக் கூட இந்த மாதிரியான எக்ஸ்போக்கள் உதவும்"
- Mr. Shrikrant, மார்க்கெட்டிங் மேனேஜர், Hind Pharma
"Hindi Pharma தண்ணீரை சுத்தப்படுத்தும் மாத்திரை ( வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், கிராமங்கள் மற்றும் பாதுகாப்பான தண்ணீர் கிடைக்காத இடங்களில் உபயோகப்படுத்தப்படும்), கிருமிநாசினி, மேற்பூச்சு மருந்துகள், ஆயிண்ட்மெண்ட் & க்ரீம்கள், உடல் நலம் & சுகாதரப் பொருட்கள், பவுடர் & பொதுவான மருந்துகள் ஆகியவற்றைத் தயாரிக்கிறோம். WasTe and SaniTech India-வில் எங்களுடய பொருட்களை காட்சிப்படுத்தியபோது நல்ல எண்ணிக்கையில் தொழில் விசாரணைகள் வந்தன. இந்த எக்ஸ்போவினுடனான எங்கள் அனுபவம் சிறப்பானது. எதிர்காலத்திலும் இதோடு இணைந்திருப்பது எங்களுக்கு குதூகலமானதாகும்"
- Mr. Hari Prasad Chaturvedi (ரிலேஷன்ஷிப் மானேஜர்), Aruna Green Ventures Pvt. Ltd.
"எங்களுடைய பொருட்களைக் காட்சிப்படுத்த UBM மிகவும் நல்ல ஒரு மேடையாகும். வருகையாளர்களின் எண்ணிக்கையோடு தர ரீதியிலும் இதில் கலந்து கொள்வது மதிப்பு மிக்கதாக இருந்தது. புதிய தொழில் வாய்ப்புகளுக்கு UBM India-வுடன் எதிர்காலத்தில் இணைந்திருப்பதை எதிர்பார்க்கிறோம்"
- Mr. Jacob Paulose, ப்ராஜெக்ட் இன்ஜினீயர், Center for Urban and Regional
"திடக் கழிவு மேலாண்மை, துப்புரவு, நீர் தரக்குறைவு போன்ற பல்வேறு விதமான அம்சங்களை WasTe and SaniTech India-வில் தேடிக் கண்டறிகிறது. இங்கு நாங்கள் காட்சிப்படுத்தியிருந்த பரவலாக்க நீர் சிகிச்சை முறை மாதிரி குறித்து விசாரணைகள் வந்துள்ளன. எங்கள் ஸ்டாலுக்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை நன்றாக இருந்தது. இந்த எக்ஸ்போவில் கலந்து கொண்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்."
- Ms. Harshita Jadav, ஜெனரல் மேனேஜர், 3S Sara Plast
`3S India சிறிய கழிப்பறைகள், வீட்டுக் கழிப்பறைகள், பொதுக்கழிப்பறைகள் ஆகியவற்றை வாடகைக்குக் கொடுப்பதோடு விற்பனையும் செய்பவர்கள். கழிப்பறைகள் உற்பத்தி செய்வதிலிருந்து சுத்தப்படுத்தி சேவை செய்வது, கழிவை சேகரித்து சுத்தப்படுத்தி, அப்புறப்படுத்தி, அதை சுத்திகரிப்பு செய்வது வரை நாங்கள் ஆரம்பத்திலிருந்து முடிவு வரைக்குமான தீர்வைக் கொடுக்கிறோம். பயோ டைஜெஸ்டர்ஸ், பயோ-டாய்லெட்ஸ், மற்றும் கூட்டுக் குழும சமூகப் பொறுப்பையும் கிராமத்திலிருக்கும் வீடுகளுக்காகச் செய்கிறோம். WasTe and SaniTech India பற்றி கூறும்போது, அரசு அதிகாரிகளுடனும், அதிகாரத்தில் இருப்பவர்களுடனும் தொடர்பு கொண்டு நாங்கள் என்ன செய்கிறோம் என்பதைக் காட்சிப்படுத்துவதோடு எங்களுக்கு அதிக பிசினஸைப் பெறுவதற்கும் இது ஒரு சிறந்த மேடை என்பதை நாங்கள் உணர்கிறோம்.
- Mr. Kartik Dubey, மார்க்கெட்டிங் அண்ட் ரிசர்ச் அனலிஸ்ட் - Technology Transfer, Teri
"Teri என்கிற அமைப்பு கிட்டத்தட்ட கடந்த 40 ஆண்டுகளாக நீடித்த மேம்பாடு சம்பந்தமாக வேலை செய்து வருகிறது. எனவே நாங்கள் நீர் துப்புரவு துறையில் வேலை செய்து வருவதோடு, நீடித்த மேம்பாடு சம்பந்தப்பட்ட எதுவாக இருந்தாலும் அரசு சார்ந்த அமைப்புகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறோம். இது ஒரு நல்ல மேடை. எங்கள் ஸ்டாலுக்கு நிறைய வருகையாளர்கள் வந்தார்கள். இந்த நிகழ்வில் எதிர்காலத்திலும் கண்டிப்பாகக் கலந்து கொள்ளும் எதிர்பார்ப்பில் இருக்கிறோம்."
- Mr. Manoj Kumar, சயிண்டிஸ்ட், Sulabh International
"பல சர்வதேச நிறுவனங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டன. ஆகையால், தொடர்புக்கான வாய்ப்புகளையும், வித்தியாசமான தொழில்நுட்பங்களைப் பார்ப்பதற்கான வாய்ப்புகளையும் இது வழங்கியது. WasTe and SaniTech India மிகவும் நல்ல மேடை. துப்புரவு புலத்திலிருந்து வந்த மக்களை சந்தித்ததும் யோசனைகளைப் பகிர்ந்து கொண்டதும் மிகவும் நல்ல ஒரு அனுபவம். எங்களுடைய NGO துப்புரவு வெளியைச் சார்ந்தது. இந்தப் புலத்தில் புதிய தொழில்நுட்பங்களையும், யோசனைகளையும் கண்டறிவதில் நாங்கள் எப்போதும் ஆர்வமாக இருக்கிறோம். உண்மையிலேயே UBM India நல்ல ஒரு வேலை செய்திருக்கிறது. இந்த அமைப்பின் எதிர்வரும் நிகழ்வுகளிலும் கலந்து கொள்வதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்."
பேச்சாளர்
- Dr. P K Jha, சேர்மன், Foundation of Environment & Sanitation
"தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் ஒருங்கே வந்து ஒருவருக்கொருவர் உரையாடிக் கொள்வதற்கு ஒரு சிறப்பான மேடையை UBM India வழங்கியிருக்கிறது. இந்த மாதிரியான கண்காட்சிகள் புதிதாக வாய்ப்புகள் வளர்வதற்கும், ஒருவருக்கொருவர் ஒரே கூரையின் கீழ் யோசனைகளை பகிர்ந்து கொள்வதற்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்."
பார்வையாளர் (வருகையாளர்)
- Mr. Kabir Bilankar, Execon Social, Mumbai
"WasTe and SaniTech India 2016க்கு வருகை தந்தது ஒரு மிகப் பெரிய அனுபவமாகும். இது போன்ற கண்காட்சிகளும், மாநாடுகளும் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில், நமக்கு இந்த மாதிரியான தொடர்புகள் தேவை. இந்தப் புள்ளிகளையெல்லாம் ஒன்று சேர்ப்பதில் UBM India பிரமாதமான வேலையைச் செய்து வருகிறது."
UBM India பற்றி
இந்தியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளரான UBM India பல வகையான கண்காட்சிகள், துறை சார்ந்த மாநாடுகள், கருத்தரங்குகள் வாயிலாக உலகமெங்கும் இருக்கும் வாங்குபவர்களையும், விற்பனையார்களையும் ஒருங்கே ஒரு தளத்துக்குக் கொண்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் 25 பெரிய காண்காட்சிகளையும், 40 கருத்தரங்குகளையும் UBM India நடத்தி வருகிறது. இது பலவகையான தொழில்களுக்கு இடையேயான வர்த்தகத்துக்கு வழிவகுக்கிறது. UBM ஏசியா நிறுவனமான UBM India-வுக்கு மும்பை, புதுதில்லி, பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM ஏசியா, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்டிருக்கும் UBM plc -க்கு சொந்தமானது. UBM ஏசியா ஆசியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளரும், சீனா, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளின் மிகப் பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலதிகத் தகவலுக்கு தயவு செய்து ubmindia.in என்கிற இணையத் தளத்துக்குச் செல்லவும்.
ஊடகத் தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
UBM India
Share this article