ஹைதராபாத், இந்தியா, August 16, 2016 /PRNewswire/ --
UBM India ஏற்பாடு செய்திருந்த PharmaLytica வின் மூன்றாவது பதிப்பு Hitex Exhibition Centre-ல் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த ஆண்டு, PharmaLytica -விற்கு மருந்துத் தொழில்துறையிலிருந்து காட்சிப்படுத்துபவர்களும், பார்வையாளர்களும் அதிகமான அளவில் வந்திருந்ததைப் பார்க்கமுடிந்தது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
இந்தியாவின் விரிவான பகுப்பாய்வு மற்றும் ஒப்பந்த சேவை நிகழ்வு, PharmaLytica 2016 என நிலைப்படுத்தப்பட்டிருந்ததால் மருந்துத் தொழிலின் சமீபத்திய போக்குகளையும், புதுமைகளையும், பகுப்பாய்வு, உயிரியல் தொழில் நுட்பம், பரிசோதனைக்கூடம், மருந்து தயாரிக்கும் இயந்திரங்கள், புறஒப்படைப்பு சேவைகளுடன் வர்த்தகம் என மருந்துத் தொழில் சார்ந்த அனைவரையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்திருந்தது.
இனோவேஷன் காலரி (கண்டுபிடிப்புக் கூடம்) இந்தக் கண்காட்சியின் முக்கிய சிறப்பம்சமாக இருந்தது. Biopharmax India Pvt. Ltd., Galaxy Sivtek Pvt. Ltd., Gandhi Automations Pvt. Ltd., Scientific Research Instruments Company Private Limited, POLMON INSTRUMENTS PVT. LTD., S. K. Pharma Machinery Pvt. Ltd., Landsky Engineers Pvt. Ltd. and Orbit Technologies Pvt. Ltd. போன்ற நிறுவனங்கள் புதிதாக கண்டுபிடித்த அவர்களுடைய பொருட்களை கண்காட்சிக் கூடத்தின் ஒரு பகுதியாக வைத்திருந்தார்கள். இந்த பிரமாதமான பொருட்களை (படையல்களை) பிரபலமான நபர்களைக் கொண்ட சான்றாயக் குழு (ஜூரி)வினாலும், பார்வையாளர்களினாலும் பரிசீலித்துத் தேர்வு செய்யப்பட்டது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் UBM India சார்பாக பாராட்டப்பெற்றது.
புதுமையான MP98 Automated Melting Point Apparatus அறிமுகப்படுத்தியதற்காக Jury's Choice Award Polmon Instruments Pvt Ltd பரிசு வழங்கப்பட்டது. MP98 என்பது ஒரே நேரத்தில் மூன்று பரிசோதனை மாதிரிகளின் உருகு நிலையையும், உருகும் வரம்பையும் அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு இயந்திரமாகும். உருகுநிலையின் அனைத்து செயல் முறைகளையும் காண்பிப்பதற்கு சாதகமாக வண்ண தொடுதிரை இருப்பதால் வெளியே ஒரு கணினியோ தட்டச்சுப் பலகையோ தேவையில்லாமல் சுதந்தரமாக கையாளமுடியும்.
Biopharmax Group Ltd நிறுவனம் Biopharmax: தி நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஆஃப் பார்மாசூட்டிகல் ப்ரீ-ட்ரீட்மெண்ட் வாட்டர் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக Visitor's Choice Award பெற்றது. அணுக்கமான சுற்றுப்புறச்சூழல், சுத்தம், நம்பகமான மற்றும் திறமையான முறையில் ரசாயனமில்லாத, கடினத்தன்மை குறைந்த நீரை RO - வுக்கு உகந்த நீராக கூடுதல் பதப்படுத்தல் எதுவும் தேவையற்ற நிலையில் விநியோகிப்பதை இந்த முன் செயலாக்க செயல்முறை உறுதிப்படுத்தும்
Mr. Yogesh Mudras, நிர்வாக இயக்குநர், UBM India பேசும் போது, PharmaLytica 2016 ல் இந்திய மற்றும் உலக நிறுவனங்கள் பெருமளவில் கலந்து கொண்டிருப்பதை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இனோவேஷனுக்காகப் பரிசு வாங்கியவர்களையும் நான் பாராட்ட விரும்புகிறேன். பொருட்களில் புதுமையையும், நம்முடைய காட்சிப்படுத்தலின் கட்டமைப்புக்குள் கருத்துப் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதிலும் UBM India தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது. வரக்கூடிய ஆண்டுகளில் இந்த மதிப்புமிக்க தளத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதை எதிர்ப்பார்த்திருக்கிறோம்' என்று கூறினார்.
UBM India பற்றி:
இந்தியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளரான UBM India பல வகையான கண்காட்சிகள், துறை சார்ந்த மாநாடுகள், கருத்தரங்குகள் வாயிலாக உலகமெங்கும் இருக்கும் வாங்குபவர்களையும், விற்பனையார்களையும் ஒருங்கே ஒரு தளத்துக்குக் கொண்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் 25 பெரிய காண்காட்சிகளையும், 40 கருத்தரங்குகளையும் UBM India நடத்தி வருகிறது. இது பலவகையான தொழில்களுக்கு இடையேயான வர்த்தகத்துக்கு வழிவகுக்கிறது. UBM ஏசியா நிறுவனமான UBM India-வுக்கு மும்பை, புதுதில்லி, பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM ஏசியா, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்டிருக்கும் UBM பிஎல்சி -க்கு சொந்தமானது. UBM ஏசியா ஆசியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளரும், சீனா, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளின் மிகப் பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலதிகத் தகவலுக்கு தயவு செய்து www.ubmindia.in என்கிற இணையத் தளத்துக்குச் செல்லவும்.
ஊடகத் தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
UBM India
Share this article