ஹைதராபாத், இந்தியா, August 8, 2016 /PRNewswire/ --
- இந்தியாவின் மருந்து தலை நகரம் ஹைதராபாத்தில், இந்தியாவின் மிக விரிவான மதிப்பாய்வு, ஆய்வகம், மருந்து இயந்திரம் மற்றும் ஒப்பந்த சேவைகள் நிகழ்வு
- இந்தியா முழுவதிலும் இருந்து 150க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் 4500+ பார்வையாளர்களை ஈர்க்கப்போவதாக கணக்கிடப்பட்டுள்ளது
- புகழ்பெற்ற தொழிற்துறை நிபுணர்களுடன் ஆற்றல் மிக்க துறைசார்ந்த கவனமுடைய மாநாடு
உலகளாவிய முன்னணி மருந்து வர்த்தக கண்காட்சி மற்றும் மாநாடு, CPhI மற்றும் P-MEC Indiaவின் ஒருங்கிணைப்பாளர்கள், UBM India, PharmaLytica 2016 மூன்றாம் நிகழ்வை இன்று நடத்தியது (5 - 6 ஆகஸ்ட்டு). இந்த இரண்டு நாள் நிகழ்வானது Dr. PV Appaji, பொது இயகுநர், Pharmexcil; Mr. Partha Sarathi Reddy, தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், Hetero Drugs; Mr. AVS Chakravarthi, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர், Ecobliss India Pvt Ltd; Dr. Rao Vadlamudi, தலைவர், Indian Pharmaceutical Association (IPA) மற்றும் Mr. Yogesh Mudras, மேலாண்மை இயகுநர், UBM India ஆகியோரால் HITEX கண்காட்சி மையத்தில் தொடங்கிவைக்கப்பட்டது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160805/395944 )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160805/395943 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160713/10150475 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
இந்தியாவின் மருந்துத் துறையில் வர்த்தகங்களை வளர்ப்பதில் நிரூபிக்கப்பட்ட நிபுணத்துவத்தை பின்னணியாகக் கொண்டு, PharmaLyticaவினால் மதிப்பாய்வு மற்றும் உயிரி தொழில் நுட்பம், ஆய்வக கருவிகள் மற்றும் ஆய்வக இரசாயனங்கள், மருந்து இயந்திரங்கள் மற்றும் அவுட்சோர்சிங் தீர்வுகள் பின்னணியில் இருந்து வரும் மருந்துத் துறை நிபுணர்களுக்கான சிறந்த தளத்தை உருவாக்க முடிகிறது. இக்கண்காட்சியானது இந்தியாவின் செழிப்பான மற்றும் உகந்த மருந்து தலை நகரமாகிய ஹைதராபாத்தில் நடைபெறும், இது இந்தியாவின் சிறந்த மொத்த மருந்து கேந்திரமாக கருதப்படுகின்றது மற்றும் இந்தியாவின் மருந்து ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்குக்கு உரியதாகவும் இருக்கிறது.
PharmaLytica மாநாட்டின் பகுதியாக ஒட்டுமொத்த அமர்வுகள் மற்றும் விவாதங்களின் மூலமாக, இந்நிகழ்வானது மருந்து சமுதாயமானது மதிப்பாவு, உயிரிதொழில்நுட்பம், ஆய்வகம், மருந்து இயந்திரம் மற்றும் அவுட்சோர்சிங் சேவைகள் துறைக்கு தொடர்பான சமீபத்திய துறை போக்குகள் மற்றும் புதுமைகளை அறிந்துகொள்ளவும் உதவுகின்றது.
PharmaLyticaவின் 3ஆம் நிகழ்வில் நாடு முழுவதிலும் இருந்து 150க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்பார்கள். முக்கிய பங்கேற்பாளர்களில் உள்ளடங்கும் சிலர், Ingersoll Rand India Ltd., Chemipack India Pvt. Ltd., Kirloskar Co. Ltd., Newtronic Lifecare, Shiv Shakti Process Equipment, GMP Technical Solutions, Integrated Cleanroom Technology, Captech Systems, Galaxy Sivtek, First Source Laboratory Solutions, Polmon Instruments, Osworld Scientific Equipments, Charles River Laboratories - India, Humidity Technologies, Medica Instruments, Jay Instruments & Systems, Daicel Chiral Technologies (India), Scientific Research Instruments Company, Sefar India மற்றும் Suntec Teknopak Cleanrooms & Containments உள்ளிட்ட பலர்.
இந்நிகழ்வின் மூன்றாம் பதிப்பின் தொடக்கவிழாவில் பேசிய, Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India இவ்வாறு கூறினார், "தரம், ஆராய்ச்சி, ஒழுக்கநெறி மற்றும் சுற்றுச்சூழல் இணக்கங்களின் காரணமாக மதிப்பாய்வு, உயிர்-தொழில்நுட்பம், ஆய்வக சாதனம், மருந்து இயந்திரம் மற்றும் இந்தியாவிலுள்ள அவுட்சோர்சிங் சேவைகள் பெரும் வளர்ச்சிக்கு தயாராக உள்ளன. இதன் விளைவாக, இன்றைய நிலப்பரப்பின் ஆற்றலை மேம்பட்ட தயாரிப்பு மற்றும் சேவை சலுகைகளின் மூலமாக உகந்ததாக்குதலே இந்திய துறைசார்ந்த நிறுவனத்தினரின் தற்போதைய தேவை ஆகும். இந்த வழங்கல்களை அகன்ற பார்வையாளர்களுக்கு கொண்டு செல்லவும், அதன் விளைவாக முக்கியமான மருந்துத் துறையில் வர்த்தகத்தை ஊக்கப்படுத்தவும், PharmaLyticaவின் மூன்றாம் நிகழ்வை UBM India கொண்டு வருகிறது, இது மதிப்பாய்வு, அவுட்சோர்சிங், ஆய்வகம், மருந்து இயந்திரம் மற்றும் உயிர் தொழில்நுட்ப பிரிவுகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தொழிற்துறை தளம் ஆகும். PharmaLytica, காட்சியாளர்களையும் பார்வையாளர்களையும் பிணைப்பை ஏற்படுத்தவும் இணைந்துகொள்ளவும் உதவுவது மட்டும் இல்லாமல் மருந்துச் சமுதாயமானது இந்த துறைகள் சார்ந்த சமீபத்திய துறை சார்ந்த போக்குகளையும் கண்டுபிடிப்புகளையும் இதன் ஆற்றல் மிக்க மாநாடுகள் மூலம் அறிந்து கொள்ள உதவும்."
அவர் மேலும் கூறியதாவது, "இவ்வாண்டு மருந்து கண்காட்சிவெளியில் முன்னோடியாக இருக்கும் UBM India, பத்து ஆண்டுகாள CPhI மற்றும் P-MEC கொண்டாடும் சமயத்திலே 'India Pharma Week'ஐ தொடங்கிவைப்பதை அறிவிப்பதில் பெருமிதம்கொள்கிறது. வாரம் முழுவதிலும் ஒரேசமயத்தில் மும்பையில் Bombay Convention and Exhibition Centre (BCEC) மற்றும் Bandra Kurla Complex (BKC) ஆகிய இடங்களில் நடைபெறும் நிகழ்விலே மருந்துத்துறையில் வர்த்தகம், கல்வி, தலைமைத்துவம், புதுமை மற்றும் அங்கீகரிப்பு ஆகியவை குறித்த 10 உப-நிகழ்வுகள் நடத்தப்பட்டு, இந்த பிரிவிலே நாங்கள் வலிமையாக கால்பதிக்கச் செய்யும்."
PharmaLytica 2016இன் முக்கிய அமர்வுகள் பெரிய அளவில் துறையோடு தொடர்புடைய புதிய போக்குகள் மற்றும் கருத்துக்களை உடைய தலைப்புகளை பயிற்றுவிகும். நாள் 1இன் அமர்வுகளில் 'Status and Trend of Global Innovative Drugs - The Power of Partnerships and Alliances', 'Contemporary Clinical Trials - Issues and Concerns', 'Good Pharmacovigilance Practice', 'Role of Technology and Health Outcomes: A Peek into the Future','Converting Pharmaceutical Innovation into Sustainable Productivity' மற்றும் 'Diagnostic Clinics - Role of Real World Data' ஆகியவை இடம்பெற்றன.
நாள் 2இல் 'India's Continued Alignment with the Global Pharmaceutical Industry', 'GMP Regulations for Pharma Industry', 'Advancements and Impacts of Analytical and Bioanalytical Techniques', 'Advances in Chromatography and Mass Spectrometry', 'Laboratory Analytical Market - Statusquo and Future', 'Global impact of Industry 4.0 on Pharma Manufacturing' மற்றும் 'ISA Standards in the Context of the Food and Pharmaceutical industry' குறித்த அமர்வுகள் இடம்பெறும்.
இந்த அமர்வுகளில் தொழிற்துறையில் இருந்து சில புகழ்பெற்ற பெயர்கள் இடம்பெறும் அதில்
Dr. Akhilesh Sharma, தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் உலகளாவிய தலைவர், Dr Reddy's Laboratories Limited; Dr. Ambrish Srivastava, துணைத் தலைவர், மருத்துவ விவகாரங்கள், மருத்துவ ஆராய்ச்சி மற்றும் ஒழுக்கநெறி, Alkem Labs Ltd.; Dr. Ajoy Roy, மூத்த மருத்துவ இயக்குநர், Head India Medical Services, Parexel International (India) Pvt. Ltd.; Dr Shubhadeep Sinha, துணை தலைவர் மற்றும் தலைமை உலகளாவிய மருந்தாக்கியல் மருத்துவ வளர்ச்சி, Hetero Group; Mr. Santosh Shevade, CSE குழு தலைவர், மருத்துவ வளர்ச்சி, Novartis Healthcare Pvt. Ltd.; Dr. Rashmi Hegde, இயக்குநர்-மருத்துவம், Abbott Healthcare India Limited; Dr. Bhavana Bhagat, DGM மருந்து பாதுகாப்பு & இடர் மேலாண்மை, Lupin Limited; Dr. Sharad Mankumare, ஒப்பீட்டு தரநிலை ஆய்வகத்தின் இயக்குநர், United States of Pharmacopeia (USP), ஹைதராபாத்; Dr Hemant Borgaonkar, தொழில்நுட்ப ஆலோசகர், Labindia; Mr. Sivaram PV, மேலாண்மை இயக்குநர், B&R Industrial Automation Pvt. Ltd.; Mr. Sharad Karve, பொது மேலாளர், Schneider Electric மற்றும் தலைவர் ISA (International Society for Automation, Hyderabad) மற்றும் Dr. Keshava Prasad, ஆசிரியர் விஞ்ஞானி, Institute of Bioinformatics, Bangalore.
இந்த நிகழ்விலே எட்டு பங்கேற்கும் நிறூவனங்கள் தங்கள் புதுமை மற்றும் சமீபத்திய தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்தும் ஒரு புதுமை களஞ்சியமும் உள்ளடங்கும். பங்குபெறும் நிறுவனங்கள் Biopharmax India Pvt. Ltd., Galaxy Sivtek Pvt. Ltd., Gandhi Automations Pvt. Ltd., Scientific Research Instruments Company Private Limited, POLMON Instruments Pvt. Ltd., S. K. Pharma Machinery Pvt. Ltd., Landsky Engineers Pvt. Ltd. மற்றும் Orbit Technologies Pvt. Ltd., ஹைதராபாத்.
இந்நிகழ்வைக் குறித்து மேலும் அறிந்துகொள்ள, வருகைதாருங்கள் - http://www.ubmindia.in/pharmalytica
நாட்டின் மிகப்பெரிய மருந்து நிகழ்வான CPhI மற்றும் P-MECஐ இவ்வாண்டு ஒரு பிரம்மாண்டமான முறையிலே 'India Pharma Week' உடன் இதைக் கொண்டாட UBM India அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. மூன்று நாள் கண்காட்சியில் இருந்து, CPhI மற்றும் P-MEC India ஒரு வாரம் வரை நிகழும் நிகழ்வாக வளர்ந்துள்ளது மற்றும் இது 17 முதல் 23 நவம்பர் 2016 வரை நடைபெறும். India Pharma Week நிகழ்விலே மும்பை முழுவதிலும் மருந்துத் துறையில் வர்த்தகம், கல்வி, தலைமைத்துவம், புதுமை, அங்கீகாரம் மற்றும் பிணைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி 10 நிகழ்வுகளுகும் மேலாக நடத்தப்படும்.
UBM India பற்றி
UBM India என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அது கண்காட்சிகளின் தொகுப்பு, உள்ளடக்கங்களினால் வழிநடத்தப்படும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், மூலமாக உலகெங்கும் இருந்து வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒன்று சேர்க்கும் தளங்களை அளிக்கிறது. UBM India ஆண்டுதோறும் நாடு முழுவதும் 25 பெரிய அளவு கண்காட்சிகளையும், 40 மாநாடுகளையும் அளிக்கிறது; இதன் மூலம் பல நிறுவன பிரிவுகளில் வணிகத்தை செயல்படுத்துகின்றது. ஒரு UBM Asia நிறுவனமான, UBM இந்தியாவுக்கு மும்பை, புதுதில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM ஆசியா லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM Plcக்கு சொந்தமானது. UBM Asiaவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகவும் சீனாவின் பெருநிலப்பகுதியிலும், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளில் வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து வருகைதாருங்கள் ubmindia.in
ஊடக தொடர்பு:
Mili Lalwani
[email protected]
022-61727000
UBM India
Share this article