புது தில்லி, July 29, 2016 /PRNewswire/ --
UBM India மூலமாக தனிப்பட்ட பராமரிப்பு உட்பொருட்கள், இயந்திரம் மற்றும் பேக்கேஜின் துறைக்கு சேவை செய்யும் இந்தியாவின் முதல் சர்வதேச வணிக நிகழ்வும்
UBM India, இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணப்பாளர், Personal Care India Expo (PCIE), என்னும் தனிப்பட்ட பராமரிப்பு, அழகு சாதனம் & வீட்டு பராமரிப்பு உட்பொருட்கள், இயந்திரம் மற்றும் பேக்கேஜிங் துறைகளுக்கு சேவைசெய்யும் இந்தியாவின் முதல் சர்வதேச வணிக நிகழ்வின் 2ஆம் நிகழ்வை அறிவித்தது. இந்நிகழ்வானது 22-24 ஆகஸ்டு 2016 வரை பிரகதி மைதானம், புது தில்லியில் நடைபெறும்.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160728/10151497 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
இக்கண்காட்சியானது Fragrances & Flavours Association of India (FAFAI), The Indian Home & Personal Care Industry Association (IHPCIA), மற்றும் Essential Oil Association of India (EOAI) ஆகியோரின் ஆதரவைப் பெற்று துறையினால் வெகுவாக வரவேற்கப்பட்டது.
மூன்று நாட்களாக நடைபெற்ற PCIE தான் தனிப்பட்ட பராமரிப்பு பிரிவில் உள்ள உட்பொருட்கள், பேக்கேஜிங் மற்றும் இயந்திரம் ஆகியவற்றுக்கான மிகவும் விரிவான சர்வதேச B2B கண்காட்சி. இந்தியாவின் துடிப்பான மற்றும் விரைவாக வளர்ச்சியடையும் சந்தையில் தனிப்பட்ட பராமரிப்புத் துறை உருவாகப்படுவதற்கும் வளர்வதற்குமான சிறந்த தளம் இது. காட்சிப்படுத்தப்படும் பிரிவுகளில் அழகுசாதன உட்பொருட்கள், மூல பொருட்கள் மற்றும் ஒப்பந்த உற்பத்திசெய்தல், பேக்கேஜிங் மற்றும் இயந்திரம், ஆயுர்வேதம் மற்றும் நியூட்ராசூட்டிகல் உட்பொருட்களை உள்ளடக்கி இருக்கும்.
இக்கண்காட்சியானது CLAIMS என்னும் ஒரு மருத்துவ ஆராய்ச்சி அமைப்பின் துணையோடு, ஒழுங்குமுறை, உலக சந்தை போகுகள், அழகுசாதன மற்றும் சரும சிகிச்சை தயாரிப்புகள், சூரிய பராமரிப்பு தயாரிப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மீதான ஒரு ஆற்றல் மிக்க மாநாட்டினால் குறிப்பிடப்படும். மற்ற நிகழ்ச்சி சிறப்பம்சங்களில் ஒரு 'Beauty Zone' உள்ளடங்கும், இது கண்காட்சியின் ஒரு புதிய அம்சம், இது அழகுசாதனங்கள் & குளியல்பொருட்கள், இயற்கை சுகாதாரம், பேக்கேஜிங் & OEM ஆகியவற்றில் இருந்து வெளிவரும் தயாரிப்புகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பிரத்தியேக B2B பிரிவு ஆகும். இக்கண்காட்சியானது புதுமையான தயாரிப்பு காட்சியகம் மற்றும் வாங்குநர்-விற்பனையாளர் சந்திப்புகளினால் குறிப்பிடப்படும்.
Personal Care India Expoவின் 2ஆம் நிகழ்வின் அறிவிப்பின்போது பேசிய, Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India இவ்வாறு கூறினார், "இந்திய தனிப்பட்ட பாராமரிப்பு உட்பொருட்கள் துறையானது கடந்த சில ஆண்டுகளில் விரைவான அடி எடுத்து வைத்துள்ளது, அதிகம் அதிகமான தனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்புகள் தங்கள் உருவாக்கங்களில் சிறப்பான உட்பொருட்களை உள்ளடக்கி உள்ளன. விருப்பமான மக்கள் தொகை காரணிகள் மற்றும் அதிகரிக்கும் அழகு உணர்வு ஆகியவை தனிப்பட பராமரிப்பு மற்றும் குறிப்பாக ஈடுபாடுள்ள உட்பொருட்களுக்கான எதிர்கால தேவையை குறிக்கின்றது. மேலும், புதுமைகளினால் உந்தப்படும் சந்தை தேவைகளுடன், இது இயற்கை உட்பொருட்களுக்காண ஒரு தேவையை காட்சிப்படுத்துகிறது, ஏனெனில் வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் தயாரிப்புகளின் உட்பொருட்கள் குறித்து அதிக கவனமாக மாறி வருகிறார்கள். இதன் மூலம் தயாரிப்பு உற்பத்தியாளர்களின் தேவைகளை உந்துகின்றனர். இந்த சந்தை வளர்ச்சியின் மத்தியில், UBM India'வின் Personal Care India Expo 2ஆம் நிகழ்வுவானது தனிப்பட்ட பராமரிப்பு உட்பொருட்கள், இயந்திரம் மற்றும் பேக்கேஜிங் துறையில் இருந்து வரும் இந்திய மற்றும் உலகளாவிய வாங்குநர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சந்திக்கவும், பிணைக்கவும், நுகர்வோரின் தேவைகளை புரிந்துகொண்டு தங்கள் துறையை வளர்த்துக்கொள்ளவும் ஒரு துறை தளத்தை அளிக்கிறது."
கண்காட்சியிலுள்ள முக்கிய காட்சியாளர்களில் Suru Chemicals & Pharmaceuticals Pvt. Ltd., Arjun Bees Wax Industries, N V Organics, Rakesh Sandal Industries, Markem-Imaje India Pvt. Ltd.,Vivimed Labs Ltd., Shahnaz Ayurvedics, Kumar Organic Products Limited, National Plastics and Acron Plast Pvt. Ltd., உள்ளிட்ட பலர் உள்ளடங்குவார்கள். இக்கண்காட்சியில் சீனா மற்றும் தாய்வானில் இருந்து தேச முகாம்களும் இடம்பெறும், மற்றும் நேபால், வங்காளதேசம், இலங்கை, சீனா, தாவான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து சர்வதேச பார்வையாளர்களும் இடம் பெறுவார்கள்.
UBM India பற்றி
UBM India என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அது கண்காட்சிகளின் தொகுப்பு, உள்ளடக்கங்களினால் வழிநடத்தப்படும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், மூலமாக உலகெங்கும் இருந்து வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒன்று சேர்க்கும் தளங்களைஅளிக்கிறது. UBM India ஆண்டுதோறும் நாடு முழுவதும் 25 பெரிய அளவு கண்காட்சிகளையும், 40 மாநாடுகளையும் அளிக்கிறது; இதன் மூலம் பல நிறுவன பிரிவுகளில் வணிகத்தை செயல்படுத்துகின்றது. ஒரு UBM Asia நிறுவனமான, UBM இந்தியாவுக்கு மும்பை, புது தில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM ஆசியா லண்டன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM Plcக்கு சொந்தமானது. UBM Asiaவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகவும் சீனாவின் பெருநிலப்பகுதியிலும், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளில் வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு, தயவு செய்து வருகை தாருங்கள் ubmindia.in.
Media Contact:
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
UBM India
Share this article