புதுடெல்லி, July 22, 2016 /PRNewswire/ --
- உலகளாவிய முதலீடுகள் மற்றும் தொழில்நுட்ப சாதனைகள் 10வது பதிப்பின் சிறப்பம்சங்களாகும்
- REI: (செப்டம்பர் 7-9) UBM India நடத்தும் தெற்கு ஆசியாவின் முன்னணி புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி வர்த்தகக் கண்காட்சி; 40 பங்கேற்கும் நாடுகள், 650-க்கும் அதிகமான காட்சியாளர்கள், 1000 + பிரதிநிதிகள் மற்றும் இது கவர்ந்திழுக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ள 25,000-க்கும் அதிகமான வருகையாளர்கள்.
- மூன்று நாள் ஆற்றல் நிரம்பிய மாநாடு - 'புதுப்பிக்கக்கூடியவை: முன்னோக்கி விரைகின்றன' ('Renewables : Surging Ahead'): (செப்டம்பர் 7-9) மாநாடு, புதிய கண்டுபிடிப்புகள், சவால்கள் மற்றும் முன்னேற்றப் பாதையை சிறப்பித்துக் காட்ட உள்ளது.
- Renewable Energy India விருதுகளின் 2வது பதிப்பு: (6 செப்டம்பர் ) புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித் துறையில் புதிய கண்டுபிடிப்பு மற்றும் சீரிய சாதனைக்காக.
இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரான UBM India, 7 முதல் 9 செப்டம்பர் 2016 வரை, தனது சிறப்புமிகு நிகழ்ச்சியான Renewable Energy India Expo (REI)-ன் 10வது பதிப்பை கிரேட்டர் நொய்டாவிலுள்ள இந்தியா எக்ஸ்போ சென்டரில் நடத்தும். தொழில்துறையின் போக்குகள், சவால்கள் மற்றும் இந்திய ஒழுங்கமைப்பு கட்டமைப்பு உள்ளிட்ட சந்தை குறித்த கணிப்புகளை கலந்தாலோசிப்பதற்காக, அயல்நாட்டு பங்கேற்பாளர் உள்ளிட்ட இந்தியாவின் பசுமை பொருளாதார சமுதாயம் ஒன்றுகூடுகின்ற ஓர் உலகளாவிய தளமாக REI அமைகிறது. இந்நிகழ்ச்சி, புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி மூலவளங்களின் பயன்பாடுகளை மேம்படுத்தி, அவற்றைப் பொதுப் போக்கிற்குக் கொண்டுவருதல், புதிய கண்டுபிடிப்புகளைக் அறிமுகப்படுத்துதல், புத்தமைவுகள் மற்றும் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டுத் தளத்தின் வாயிலாக முன்யோசனைகளுக்கு மேலும் வளமூட்டுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டதாகும்.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160721/10151009 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
கண்காட்சியின் 10 ஆண்டு நிறைவு நிகழ்ச்சியான REI 2016, இந்தியா, ஜப்பான் சுவிட்சர்லாந்து, யூஎஸ்ஏ, கொரியா, தைவான், சீனா, ஆஸ்திரேலியா, இத்தாலி, கனடா, மலேசியா, நெதர்லாந்து, இஸ்ரேல், ஜெர்மனி, ஸ்பெயின், சிங்கப்பூர், பெல்ஜியம் போன்ற நாடுகளின் பங்கேற்பைக் காண்பதுடன், இந்திய அரசின் Ministry of New and Renewable Energy, (MNRE), Indian Renewable Energy Development Agency Ltd (IREDA), Solar Energy Corporation of India Limited (SECI), National Institute of Wind Energy (NIWE) மற்றும் International collaboration through Indo German Energy Forum (IGEF) மற்றும் Bloomberg New Energy Finance(BNEF) ஆகிய அமைப்புகளால் ஆதரவளிக்கப்படுகிறது.
இக்கண்காட்சிக்கு UFI, The Global Association of the Exhibitions Industry ஆகியவை சான்றளித்திருப்பதுடன், முக்கியப் பிரமுகர்களில் Shri. Upendra Tripathi, செயலர், புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி துறை, இந்திய அரசு; Shri. Ashvini Kumar, நிர்வாக இயக்குனர், SECI; Shri. K.S. Popli, CMD, IREDA; திரு. Simon Stolp, முன்னணி எரிசக்தி நிபுணர், World Bank; திரு. AK Jain, CMD, Rajasthan Electronics and Instruments Limited. திரு. Justin Wu, ஆசியத் தலைவர், Bloomberg New Energy Finance; மேதகு திரு. James Gordon Carr, இயற்கை வளங்கள் அமைச்சர், Canada மற்றும் திரு. Munehiko Tsuchiya, செயலதிகார இயக்குனர், NEDO, ஜப்பான் ஆகியோரும் பங்கேற்பார்கள்.
உற்பத்தியாளர்கள், EPC-க்கள் மற்றும் சேவை வழங்குனர்களை ஒன்று சேர்த்துள்ள REI 2015 வர்த்தகக் கண்காட்சியில், Lerri Solar, Adani, Skypower, Trina Solar, Tata Power, JA Solar, KRYFS, Suzlon, Solargise, Waaree, Vikram Solar, L&T, Rays Power, Canadian Solar, Sova Power, Azure Power, Delta Power, Fronius, SMA India, Huawei, Bosch, ABB India, Moser Baer, Talesun Power, Mahindra Susten, GCL, Senvion, Gamesa India, Inox Wind, DHHI, Renesola போன்ற நிறுவனங்கள் உட்பட 650-க்கும் மேற்பட்ட மேலும் பல பங்கேற்கும் காட்சியாளர்கள் கலந்து கொள்வார்கள். இக்கண்காட்சியில், ஜப்பான், கனடா, இத்தாலி, தைவான் மற்றும் சீனாவிலிருந்து, தேசிய அரங்குகளும் இடம்பெறும்.
கண்காட்சியின் முக்கிய அம்சங்களில், MNRE, Bloomberg New Energy Finance, IBA, IGEF, Bridge to India, Solar Thermal Federation of India, Council on Energy Environment and Water (CEEW), Mercom மற்றும் NIWE நடத்தும் உள்ளடக்கம் செறிந்த 'Renewables: Surging Ahead' என்ற தலைப்பிலான ஓர் ஆற்றல்மிக்க மூன்று-நாள் மாநாடும் அடங்கும். இந்த அமர்வுகளில், பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகளான 'Market landscape: இந்தியாவின் RE இலக்குகள் மீது கவனம் செலுத்துதல்; எட்டப்பட்ட மைல்கற்கள்; மற்றும் எதிர்நோக்கும் சவால்கள்', 'Tipping Point: போட்டி நிறைநத கேட்பின் அதிகரிக்கும் போக்கு', 'Wind: 60 கிவா இலக்கிற்கான கொள்கை வரைபடம்; எந்த அளவிற்கு நாம் எட்டியுள்ளோம்; இத்துறையிலுள்ள குறிப்பிட்ட சவால்கள் எவை; கடல்சாராதவைக்கான நிதிசார் சவால்கள் மற்றும் கொள்கை ஊக்கிகள்', 'Looking Beyond Installation: நீண்ட கால திட்டங்களின் நிலைதத்தன்மையின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு', 'OnTop of the Roof: வீடுசார் சோலார் தொடர்பான 40 கிவா கூரை இலக்கினை மதிப்பிடல்' மற்றும் 'Riding the Manufacturing high:, இந்தியாவில் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கு எந்த அளவு? எவ்வளவு தூரம்? எத்தனை காலம்? Make in India போன்றவையும் அடங்கும். மற்ற தொழில்துறை வல்லுனர்களிடையே, முக்கியப் பேச்சாளர்களான திரு. Simon Stolp, Lead Energy Specialist, World Bank, திரு. Praveer Sinha, CMD, Tata Power DDL; Sanjay Sharma, Head of Contracts, SECI; Sanjay Mandavkar, மூத்த தலைவர், தொழில்துறை நிதி, YES BANK; Sunil Jain, MD, Hero Future Energies; .திரு. Gyanesh Chaudhary- MD & CEO, Vikram Solar; David Keck; தலைவர் மற்றும் CEO, GTAT technologies, USA; Pankaj Batra, முக்கிய பொறியாளர், Central Electricity Authority; Gerhard Mütter, தொழில்நுட்ப இயக்குனர், Alternative Energy Solutions GmbH, ஆஸ்திரியா; டாக்டர். Klaus Eberhardt, தொழில்நுட்ப மேலாளர், M+W Group; Juergen Sutterlueti, எரிசக்தி பிரிவு மற்றும் தொழில் மேம்பாட்டுத் துறை தலைவர், Gantner Instruments Group, ஆஸ்திரியா போன்றவர்கள், புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி தொடர்பான முக்கிய விவகாரங்கள் மற்றும் போக்குகளைப் பற்றி கலந்தாலோசிப்பார்கள்.
இக்கண்காட்சியின் இதர சிறப்பம்சங்களில், தொழில்நுட்ப பேச்சு மற்றும் தயாரிப்பு அறிமுகம், பல பயிலரங்கங்கள், CEO கான்கிளேவ், ஸ்மார்ட் கிரிட் மீதான அமர்வு, நிதி வட்டமேஜை மற்றும் National Institute of Wind Energy நடத்தும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி ஆகியவற்றிற்கான ரவுண்ட்டேபிள், வேர்ல்ட் ஆஃப் இன்னொவேஷன் என்ற அரங்கும் அடங்கும்.
இக்கண்காட்சி, மிகவும் பிரபலமான தொழில் திட்டப் போட்டியையும் TiE (டெல்லி) உடன் இணைந்து நடத்தும், இதில், தேர்ந்தெடுக்கப்படும் நுழைவுதாரர்கள் ஒரு புதுமையான தொழில் யோசனையை வழங்குவார்கள், அது முதலீட்டாளர்கள், தொழில்முனைவர்கள் மற்றும் தொழில்நுட்பக் குருக்கள் அடங்கிய நடுவர் குழு ஒன்றினால் தரநிலைப்படுத்தப்படும். இந்நிகழ்ச்சியில், 'Opportunities in Cleantech & Renewables Sector: Scenario for Entrepreneurs' மீதான ஓர் ஈடுபாடுமிக்க குழுக் கலந்தாலோசனையும் நடத்தப்படும். இதைத் தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்படும் நுழைவுதாரர்களின் தனிப்பட்ட வழங்கல்கள் மற்றும் அவர்களுடைய தொழில் திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டு, சிறந்த யோசனைகளுக்கு விருதுகள் வழங்கப்படும். மேலும் முன்னேறிச் சென்று, துறை வல்லுனருடன் ஒவ்வொரு அம்சத்தையும் ஆழமாக ஆராயும் குறிப்பிட்ட யோசனை மேஜை மாநாடு நடத்தப்படும், இது வளரும் தொழில்முனைவர்களுக்கு, தொழில்துறையின் மிகச்சிறந்தவர்களால் கண்காணிக்கப்படுகின்ற தனித்துவமான வாய்ப்பினை வழங்கும்.
Renewable Energy India-வின் 10வது ஆண்டு நிறைவு விழாவை அறிவித்துப் பேசிய UBM India-வின் நிர்வாக இயக்குனர் திரு. Yogesh Mudras, கூறியதாவது, "எரிசக்தி தேவையில் அதிவிரைவான மற்றும் நிலையான வளர்ச்சிக் காலத்திற்கு இந்தியா தயார்நிலையில் உள்ளது மற்றும் ஒவ்வொரு வீட்டிற்கும் மின் விநியோகம் செய்ய வேண்டுமென்ற அரசு திட்டத்தின் ஒரு பகுதியாக, 2022-க்குள் தனது புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி உற்பத்தித் திறனை 175 கிகாவாட் ஆக நான்கு மடங்காக்குவதற்கும் திட்டமிட்டுள்ளது. உலக மக்கள்தொகையில் 18% கொண்டுள்ள இந்தியா, உலகின் முதன்மை எரிசக்தியில் 6% மட்டுமே பயன்படுத்துகிறது. 2000ம் ஆண்டு முதல், இந்தியாவின் எரிசக்தி பயன்பாடு ஏறத்தாழ இருமடங்காகியுள்ளது மற்றும் இது மேலும் வளர்வதற்கான வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. ஒரு வலிமைமிக்க சூழல்அமைப்பை உருவாக்குவதே இச்சமயத்தின் தேவையாக உள்ளது மற்றும் 'Make in India' இயக்கத்தின் கீழ், சாத்தியமுள்ள திட்டங்களுக்கு உதவ, உற்பத்தி தொழிற்சாலைகளை அமைக்க, தொழில்நுட்பம் மற்றும் இந்தியாவில் முதலீடுகள் செய்பவர்கள் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளைக் கொண்டு வருவதில் ஊக்கியாகச் செயல்படுவதன் மூலம் இந்நோக்கத்திற்கு ஆதரவளிக்க REI உடன் இணைந்து UBM India தயார்நிலையில் உள்ளது.
"இவ்வாண்டு, இக்கண்காட்சியின் 10வது ஆண்டு நிறைவுடன் நாங்கள் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டி, ஒரு புதிய வேகத்தை அடைந்துள்ளோம். புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி சமுதாயத்தைச் சேர்ந்த சம்பந்தப்பட்டவர்கள் ஒன்றுகூடி, இவ்வளர்ச்சிக்கு வேகத்தடைகளாக உள்ள சவால்களைக் கையாள்வதற்கான ஒரு கச்சிதமான தளமாக இக்கண்காட்சி அமையும். பல நாடுகளின் பங்கேற்பு, சிறந்த தொழில்நுட்பம், சிக்கனமான தீர்வுகள், தொழில்துறையிலுள்ள முன்னணி நிறுவனங்களின் பங்கேற்பு, பல்வேறு நாடுகளின் பிரதிநிதித்துவம், தங்கள் தயாரிப்பு மற்றும் தீர்வு வழங்கல்களைக் காட்சிப்படுத்தும் மிகச்சிறந்த உலக பிராண்டுகள் மற்றும் உள்ளடக்கம் செறிந்த மாநாடு ஆகியவற்றையும் இது கொண்டிருக்கும்." என்று அவர் மேலும் கூறினர்.
இவ்வர்த்தகக் கண்காட்சிக்கு முன்னதாக 2வது Renewable Energy India விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும், 6 செப்டம்பர், 2016 நடைபெறவுள்ள இது, இத்தொழில்துறையின் முயற்சிகள், புத்தமைவு மற்றும் சிறப்பினை அங்கீகரித்து, திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விருது வழங்கும் நிகழ்ச்சியில், உற்பத்தி மற்றும் செயல்படுத்தும் சமுதாயங்கள் ஆகிய இரண்டிலிருந்தும், பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டியிடும் தொழில்துறை ஜாம்பவான்களின் பெருமைமிகு பங்கேற்பு இருக்கும்.
UBM India பற்றி
UBM India, ஏராளமான கண்காட்சிகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாக இணைக்கும் தளங்களை தொழில்துறைக்கு வழங்கும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும். UBM India, ஒவ்வொரு ஆண்டும், நாடெங்கிலும் 25 மிகப்பெரிய கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; இதன் மூலம் பலவகை தொழில்களிலும் வர்த்தகத்திற்கு உதவுகிறது. UBM Asiaவின் ஒரு நிறுவனமான UBM India, மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM plc-க்கு சொந்தமான UBM Asia, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM Asia, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரும், சீன பிரதான பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து அணுகவும் ubmindia.in.
ஊடகத் தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
UBM India
Share this article