ஹைதராபாத், இந்தியா, July 14, 2016 /PRNewswire/ --
இந்தியாவின் மிக விரிவான மதிப்பாய்வு, ஆய்வக, மருந்து இயந்திரம் மற்றும் ஒப்பந்த சேவைகள் நிகழ்வு
முன்னணி உலக மருந்து வர்த்தக கண்காட்சி மற்றும் மாநாடான CPhI மற்றும் P-MEC India ஒருங்கிணைப்பாளர், UBM India, இன்று Pharmalytica 2016வின் 3ஆ நிகழ்வை இன்று அறிவித்தது. இந்த இரண்டு நாள் கண்காட்சியானது HITEX கண்காட்சி மையம், ஹைதராபாத்தில், 5 மற்றும் 6 ஆகஸ்டு 2016இல் நடைபெறும்.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160713/10150475 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
இந்தியாவின் மருந்துத் துறையிலே நிரூபிக்கப்பட்ட நிபுணத்துவத்தினால் ஆதரிக்கப்பட்ட PharmaLytica, மதிப்பாய்வு மற்றும் உயிரி தொழில்நுட்பம், ஆய்வக கருவிகள் மற்றும் ஆய்வக இரசாயனங்கள், மருந்து இயந்திரங்கள் மற்றும் அவுட்சோர்சிங் தீர்வுகள் பின்னணியில் இருந்து வரும் மருந்துத் துறை நிபுணர்களுக்கான சிறந்த தளம் ஆகும். இக்கண்காட்சியானது இந்தியாவின் செழிப்பான மற்றும் உகந்த மருந்து தலைநகரமாகிய ஹைதராபாத்தில் நடைபெறும், இது இந்தியாவின் சிறந்த மொத்த மருந்து கேந்திரமாக கருதப்படுகின்றது மற்றும் இந்தியாவின் மருந்து ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்குக்கு உரியதாகவும் இருக்கிறது. PharmaLytica மாநாட்டின் பகுதியாக ஒட்டுமொத்த அமர்வுகள் மற்றும் விவாதங்களின் மூலமாக, இந்நிகழ்வானது மருந்து சமுதாயமானது மதிப்பாய்வு, உயிரிதொழில்நுட்பம், ஆய்வகம், மருந்து இயந்திரம் மற்றும் அவுட்சோர்சிங் சேவைகள் துறைக்கு தொடர்பான சமீபத்திய துறை போக்குகள் மற்றும் புதுமைகளை அறிந்துகொள்ளவும் உதவுகின்றது.
PharmaLyticaவின் 3ஆம் நிகழ்வில் நாடு முழுவதிலும் இருந்து 150 கண்காட்சியாளர்கள் பங்கேற்பார்கள். முக்கிய பங்கேற்பாளர்களில் உள்ளடங்கும் சிலர், Ingersoll Rand India Ltd., Kirloskar Pneumatic Co. Ltd., Chemipack India Pvt. Ltd., Shiv Shakti Process Equipment P. Ltd., GMP Technical Solutions Pvt. Ltd., Integrated Cleanroom Technology Pvt. Ltd., Galaxy Sivtek Pvt. Ltd., First Source Laboratory Solutions, Osworld Scientific Equipments Pvt. Ltd., Charles River Laboratories India Pvt. Ltd., Humidity Technologies Pvt. Ltd., Jay Instruments & Systems Pvt. Ltd., Daicel Chiral Technologies (India) Pvt. Ltd., Scientific Research Instruments Company Private Limited மற்றும் Sefar India Private Limited மற்றும் பலர்.
கண்காட்சியின் 3ஆம் நிகழ்வைப் பற்றிய அறிவிப்புகள் குறித்து கருத்து தெரிவித்த, Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India இவ்வாறு கூறினார், " இந்தியாவின் மொத்த மருந்து தலைநகரிலே PharmaLyticaவின் மூன்றாம் நிகழ்வை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்நிகழ்வானது தயாரிப்புகள் மற்றும் சேவைகளோடு மருந்துத் துறையின் ஒட்டுமொத்த மதிப்புச் சங்கிலியின் முக்கிய பிரிவுகளுக்கும் ஒரு முக்கியமான சந்தைவெளியாக மாறும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. PharmaLytica கண்காட்சியாளர்களும் பார்வையாளர்களும் இணைவதற்கு உதவுவதோடு மட்டும் இல்லாமல் மருந்து சமுதாயமானது மதிப்பாய்வு, உயிரிதொழில்நுட்பம், ஆய்வகம், மருந்து இயந்திரம் மற்றும் அவுட்சோர்சிங் சேவைகள் துறைக்கு தொடர்பான சமீபத்திய துறை போக்குகள் மற்றும் புதுமைகளை அறிந்துகொள்ளவும் உதவும்"
PharmaLytica 2016யின் முக்கிய நிகழ்வுகளில், துறைக்கு பெருமளவு தொடர்புடைய புதிய போக்குகள் மற்றும் கருத்துக்களை உடைய தலைப்புகளை உள்ளடக்கி இருக்கும். அமர்வுகளின் தலைப்புகளில் உள்ளடங்குபவை, 'Status and Trend of Global Innovative Drugs - The Power of Partnerships and Alliances', 'Contemporary Clinical Trials - Issues and Concerns', 'Good Pharmacovigilance Practice', 'Introduction to GMP Regulations for a Laboratory', 'Converting Pharmaceutical innovation into sustainable productivity', 'Diagnostic Clinics - Role of Real World Data', 'Advancements and Impacts of Analytical and Bioanalytical Techniques', 'Advances in Chromatography and Mass Spectrometry', 'nSMOL: Simplifying mAb Quantitation' மற்றும் 'Laboratory Analytical Market - Statusquo and Future'.
இந்த அமர்வுகளில் துறையின் சில புகழ்பெற்ற பெயர்கள் இடம்பெறும், உதாரணமாக Dr. Akhilesh Sharma, தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் உலகளாவிய தலைவர், Dr Reddy's Laboratories Limited; Dr. Ambrish Srivastava, துணை தலைவர் - மருத்துவ விவகாரங்கள், மருத்துவ ஆராய்ச்சி மற்றும் ஒழுங்குபடுத்தல், Alkem Labs Ltd.; Dr. Ajoy Roy, மூத்த மருத்துவ இயகுநர், இந்திய மருத்துவ சேவைகள் தலைவர், Parexel International (India) Pvt. Ltd., Dr. Deepa Arora, துணைத் தலைவர்- மருந்தாக்கியல் மற்றும் உலகத் தலைவர்- - மருந்து பாதுகாப்பு மற்றும் இடர் மேலாண்மை, Lupin Limited; Mr. Santosh Shevade, CSE குழுத்தலைவர், மருத்துவ வளர்ச்சி, Novartis Healthcare Pvt. Ltd.;Dr. Rashmi Hegde, இயக்குநர் - மருத்துவர், Abbott Healthcare India Limited; Dr. Sharad Mankumare, குறிப்பு தரநிலையான ஆய்வக இயக்குனர், United States of Pharmacopeia (USP), ஹைதராபாத்; Dr. Hemant Borgaonkar, தொழில்நுட்ப ஆலோசகர், Labindia.
இந்நிகழ்வைக் குறித்து மேலும் அறிந்துகொள்ளவும் நிகழ்வுக்கான இலவச நுழைவைப் பதிவுசெய்யவும், வருகைதாருங்கள்: http://www.ubmindia.in/pharmalytica
UBM India பற்றி
UBM India என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அது கண்காட்சிகளின் தொகுப்பு, உள்ளடக்கங்களினால் வழிநடத்தப்படும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், மூலமாக உலகெங்கும் இருந்து வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒன்று சேர்க்கும் தளங்களை அளிக்கிறது. UBM India ஆண்டுதோறும் நாடு முழுவதும் 25 பெரிய அளவு கண்காட்சிகளையும், 40 மாநாடுகளையும் அளிக்கிறது; இதன் மூலம் பல நிறுவன பிரிவுகளில் வணிகத்தை செயல்படுத்துகின்றது. ஒரு UBM Asia நிறுவனமான, UBM இந்தியாவுக்கு மும்பை, புதுதில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM ஆசியா லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM Plcக்கு சொந்தமானது. UBM Asiaவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகவும் சீனாவின் பெருநிலப்பகுதியிலும், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளில் வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து வருகைதாருங்கள்: www.ubmindia.in .
ஊடக தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
UBM India
Share this article