100க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற பிராண்டுகள் India Kitchen and Bath-இன் 2ஆம் நிகழ்வில் காட்சிப்படுத்த இருக்கின்றன
புது தில்லி, July 8, 2016 /PRNewswire/ --
UBM Index Trade Fairs நடத்தும் சமையலறை மற்றும் குளியலறை துறைக்கான ஒரு முன்னோடி கண்காட்சி
Index Fairs என்னும் தொடக்க கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான UBM Index Trade Fairs, India Kitchen & Bath என்னும் சமையலறை மற்றும் குளியலறை துறைக்கான இதன் முன்னோடி கண்காட்சியின் 2ஆம் நிகழ்வை நடத்திவைக்கும். இக்கண்காட்சியானது 22முதல் 24 ஜூலை 2016 வரை Pragati Maidan, புது தில்லியில் நடைபெறும்.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160708/10150087 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20151008/10132188 )
இந்த மூன்றுநாள் வர்த்தக கண்காட்சியானது சமையலறை மற்றும் குளியல் கருவிகள், OEM வெள்ளை சரக்குகள், துணைபொருட்கள், சமையலறை மற்றும் குளியலறை ஃபர்னிச்சர் மற்றும் ஃபிட்டிங்கள், ஒளிதரும் தயாரிப்புகள் ஆகிய துறைகளில் இருந்து வாங்குநர்கள் மற்றும் வணிகர்களுடன், கட்டிடக்கலைஞர்கள், உட்புற வடிவமைப்பாளர்கள், கட்டிடம் கட்டுபவர்கள், செயல்திட்ட மேலாளர்கள், ஆலோசகர்கள், கொள்முதல் தலைவர்கள் ஆகியோரை விருந்தோம்கள், கார்ப்பரேட் மற்றும் அரசாங்க துறைகளில் இருந்து, அனைவரையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும் ஒரு திட்ட தளம் ஆகும். இந்த நிகழ்வுக்கு ஆதரவு அளிப்பவர்கள் Institute of Indian Interior Designers (IIID), All India Hardware Association, Hospitality Purchasing Managers Forum, India Council of Ceramic Tiles and Sanitaryware மற்றும் இதற்கு ஒப்புதல் அளிப்பவர்கள் India Design Council (IDC).
இந்த கண்காட்சியானது கல்வி மன்றங்கள், கருத்தரங்குகள், ஒரு கலை உறைவிடம், ஒரு சிற்ப மண்டலம் மற்றும் ஒரு வாழ்த்து கேலரி (இந்திய கட்டிடக்கலை வடிவமைப்புக்கான ஒரு அஞ்சலி) ஆகியவற்றினால் குறிப்பிடப்படும். இந்த வர்த்தக கண்காட்சியானது துளிர்விடும் கட்டிடக்கலைஞர்கள் மற்றும் துறையின் வடிவமைப்பாளர்களின் புதுமைகளை ஊக்குவிப்பதற்காக India Design Council நடத்தும் 'India Design Mark' மீதான ஒரு வழங்கலையும் கொண்டு இருக்கும். 'Design Yatra' என்னும் பெரும்கூட்டங்களில் வடிவமைப்பை பரப்புவதற்கான Institute of Indian Interior Designers (IIID) உடைய அனைத்து இந்திய முதன் முயற்சியும் இந்த நிகழ்வின் தனிச்சிறப்புகளில் ஒன்றாகும். Design Yatra என்பது பிப்ரவரி 2016இல் இந்தூரில் IIIDயின் தேசிய மாநாட்டிலே தொடங்கிவைக்கப்பட்ட நான்கு nano கார்களின் தொடரணி ஆகும். IKB 2016இல் தனது பயணத்தைத் தொடங்கும் இந்த தொடரணியானது IIIDயின் பிராந்திய அத்தியாயங்கள் மற்றும் மையங்களைக் கொண்டுள்ள 30 நகரங்களில் பிரச்சாரம் செய்து, 'Design for the masses' என்னும் கருத்தைச் சுற்றி எண்ணற்ற நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும். நிகழ்வின் இரண்டாம் நாளிலே Ar. Tony Joseph மற்றும் IIID, தில்லி அத்தியாயம் நடத்தும் 'A treat in retreat' என்னும் ஊடாடல்மிக்க கல்வி கருத்தரங்கு நடைபெறும், இதோடு 'Design Yatra'வின் தொடக்கவிழாவும் நடைபெறும், இதில் 80 புகழ்பெற்ற கட்டிடக்கலைஞர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
India Kitchen & Bath 2016யில் புகழ்பெற்ற பிராண்டுகளான Hafele, Geberit, Godrej Interio, Century Ply, Kkolar, Labacha, Saniflo, Hardwyn, Blum, Liebherr, Nagold, Glint Faucets, Lifetime, Brassage, Ecostone, JB Glass, Slimline, Karcher, Wadbros, Aquarium Bath, Sanituf, Mahalaxmi lumbers, Supreme Solar, Venus and Surajwood மற்றும் பலருடைய முன்னிலை இருக்கும், இவர்கள் தங்கள் தயாரிப்புகளையும் வழங்கல்களையும் முன்வைப்பார்கள். இந்நிகழ்விலே பிரான்ஸ், தென் கொரியா மற்றும் சீனா போன்ற பிற நாடுகளின் பங்கேற்பும் இருக்கும்.
India Kitchen & Bath 2016இன் இரண்டாம் நிகழ்வு குறித்த அறிவிப்பின்போது பேசிய,
Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India இவ்வாறு கூறினார், "கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் ஆடம்பர சந்தையானது 25 சதவிகிதத்திற்கும் மேலான CAGR உடன் வளர்ச்சியடைகையில், மாடுலார் கிட்சன் மற்றும் சானிடரி வேர் சந்தைகள் பயன்பாட்டில் இருந்து ஆடம்பரத்திற்கு மாற்றமடைவதைக் கண்டன. அதிகரித்த செலவழிப்பு வருமானம், உயர்ந்த வாழ்க்கைத் தரநிலைகள், வீடுகளை அழகுபடுத்துவதற்காக அதிகரிக்கும் செலவீனங்கள் மற்றும் ப்ரீமியம் தயாரிப்புகளின் கொள்முதல் ஆகிய காரணிகளால் வரும் ஆண்டுகளில் இத்துறையானது மேலும் வளர்ச்சியடைவதை எதிர்பார்க்கலாம். இந்த நிலப்பரப்புக்கு எதிரே, UBM Index Fairs India தனது India Kitchen & Bath உடைய இரண்டாம் நிகழ்வானது இந்தியாவில் தனது வளரும் சந்தைக்கான ஆற்றலுக்கு பாதையமைத்து பயன்படுத்த உதவிசெய்யும்."
" India Kitchen & Bath வடக்குப் பகுதியிலே ஒரு முன்னணி வர்த்தக நிகழ்வுகளில் ஒன்றாக இருப்பதால், குறிப்பான் சமுதாயத்திற்கு UBM Index Fairs ஒரு அற்புதமான தளத்தை வழங்கும். இது இந்த பகுதியிலே வளரும் சந்தைக்கான சந்தை நுழைவையும் தொழில் வாய்ப்புகளையும் வழங்கும், அதேசமயம் துறையின் விநியோக சங்கிலி சுழற்சியையும் வலிமைப்படுத்தும்," என்று அவர் கூடுதலாக தெரிவித்தார்.
Mr L.A Khan, மேலாண்மை இயக்குநர், UBM Index Trade Fairs மேலும் விவரித்ததாவது,"விரைவான நகரமயமாக்கல் அதிகரித்த வாழ்க்கைத் தரத்திற்கு வழிவகுத்துள்ளது, இது சூப்பர்-ப்ரீமியம் அல்லது ஆடம்பர குளியலறை தயாரிப்புகள், மற்றும் முன்பே வடிவமைக்கப்பட்ட சமையலறைகளுக்கான தேவையை உயரச்செய்துள்ளது. India Kitchen & Bath என்பது கடந்த 28 ஆண்டுகளாக நாங்கள் சேவை செய்து வரும் குறிப்பான் துறையின் முக்கிய பிரிவுக்கான எங்கள் வழங்கலின் விரிவுபடுத்தல் ஆகும். இது இந்திய மற்றும் உலகளாவிய பிராண்டுகள் தங்கள் தயாரிப்புகள், தொழில்நுட்பம் மற்றும் புதுமையை காட்சிப்படுத்துவதற்கான ஒரு வெளிப்பாட்டை அளிக்கும் ஒரு தளம் மற்றும் இது வாங்குநர்கள் தங்கள் தொழிலை வளர்த்துக்கொள்ள தரமான பிராண்டுகளை சந்தித்து உரையாடவும் உதவும்."
இந்தியாவின் மிகப்பெரிய உட்புறங்கள், கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு நிகழ்வான UBM Indexஐ UBM India ஆண்டுதோறும் மும்பையில் நடத்துகின்றது, இதில் சீனா, துருக்கி, யூகே மற்றும் ஸ்பெயினில் இருந்து 300க்கும் மேற்பட்ட தேசிய கூடாரங்களில் 25,000க்கும் மேற்பட்ட வர்த்தக பார்வையாளர்கள் பங்குபெறுகிறார்கள்.
UBM India பற்றி
UBM India என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அது கண்காட்சிகளின் தொகுப்பு, உள்ளடக்கங்களினால் வழிநடத்தப்படும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், மூலமாக உலகெங்கும் இருந்து வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒன்று சேர்க்கும் தளங்களை அளிக்கிறது. UBM India ஆண்டுதோறும் நாடு முழுவதும் 25 பெரிய அளவு கண்காட்சிகளையும், 40 மாநாடுகளையும் அளிக்கிறது; இதன் மூலம் பல நிறுவன பிரிவுகளில் வணிகத்தை செயல்படுத்துகின்றது. ஒரு UBM Asia நிறுவனமான, UBM இந்தியாவுக்கு மும்பை, புதுதில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM ஆசியா லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM Plcக்கு சொந்தமானது. UBM Asiaவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகவும் சீனாவின் பெருநிலப்பகுதியிலும், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளில் வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து வருகைதாருங்கள் ubmindia.in.
ஊடக தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
UBM India
Share this article