கொல்கத்தா, July 4, 2016 /PRNewswire/ --
- இந்தியாவில் முதல் முறையாக ROG GL502 மடிக்கணினி மற்றும் ROG G11 டெஸ்க்டாப்பை காட்சிப்படுத்துகின்றது
- ஜூலை 5 ஆம் தேதி புபனேஷ்வரில் இரண்டாம் ஸ்டோர் தொடங்கப்பட இருக்கின்றது
- ROGயின் முதல் இந்திய CS:GO டோர்னமெண்டை ரூ.2,80,000 சேகரிக்கப்பட்ட பரிசுத்தொகையுடன் கொல்கத்தா மற்றும் புபனேஷ்வரில் ஒருங்கிணைக்கிறது
மகிழ்ச்சியின் நகரத்திற்கு தற்போது குதூகலிக்க ஒரு புதிய காரணம் கிடைத்துள்ளது. ASUS இன்று, இந்தியாவின் முதன் முதலான 'Republic of Gamers' (ROG) ஸ்டோரை கொல்கத்தாவில் திறப்பது பற்றி அறிவிப்பு அளித்து இருக்கிறது. 50 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த ஸ்டோருக்கு, விளையாடுபவர்கள் திங்கள் முதல் ஞாயிறு வரை 10:00 முதல் 21:00 மணி வரை வருகைபுரிந்து நவீன கருவிகள், விளையாட்டு பட்டங்கள் மற்றும் துணைபொருட்களின் அனுபவத்தைப் பெறலாம். இந்த ஸ்டோரிலே ஒரு 'Battle Ground' வைக்கப்பட்டு இருக்கிறது, இதில் 6 விளையாட்டாளர்கள் ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டு LAN கேமிங் உடைய சிறப்பை அனுபவிக்கலாம். இந்த ஸ்டோரில் ஒரு தயாரிப்பு செயல்முறை மண்டலமும் ஒரு அனுபவ மையமும் இருக்கிறது, இவற்றில் பயனர்கள் புதிய வன்பொருளை பரிசோதித்துப் பார்க்கலாம்.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160701/10149717 )
Asus ROG தன் முதன் முதலான 'Counter Strike: Global Offensive'இந்திய கேமிங் டோர்னமெண்டை கொல்கத்தாவில் ஜூலை 02 முதல்ஜூலை 03 வரை தன் புதிய ஸ்டோரில் ஒருங்கிணைத்துள்ளது. கொல்கத்தாவில் இந்த டோர்னமெண்டிற்கு பரிசளிப்பதற்காக ரூ.1,40,000/- சேகரிக்கப்பட்டுள்ளது.ROG தனது இரண்டாவது இந்திய ஸ்டோரை புபனேஷ்வரில் ஜூலை 4 ஆம் தேதி தொடங்கி, ஜூலை 5, 2016 அன்று இதேபோன்ற ஒரு டோர்னமெண்ட் நடத்தப்படும் இதற்கான பரிசளிப்புக்காக சேகரிக்கப்பட்டத் தொகை ரூ.1,40,000/-.
ASUS ROG ஸ்டோர் கொல்கத்தாவில் தொடங்கப்படுவது குறித்து மேலும் விரிவுபடுத்திய, Peter Chang, பிராந்திய தலைவர்-தெற்கு ஆசியா&தேசிய மேலாளர்-அமைப்பு வர்த்தக குழு - ASUS India, இவ்வாறு கூறினார், "பெரும்பாலான விளையாட்டாளர்கள் இன்று தாங்கள் அதை வாங்குவதற்கு முன்பாக நவீன வன்பொருள் மற்றும் மென்பொருளை முயற்சிசெய்து பரிசோதிக்க முடியவில்லை. இந்த ஸ்டோருடன் எங்கள் நோக்கமானது, விளையாட்டாளர்கள் வந்து நவீன விளையாட்டு தொழில்நுட்பத்தையும் விளையாட்டு பட்டங்களையும் வாங்காமலேயே முதல் முறையாக முயற்சிசெய்து பார்கும்படியான ஒரு சோதனை மண்டலத்தை உருவாக்க வேண்டும் என்பது தான். இந்த ROG ஸ்டோர் என்பது பல்வேறு விளையாட்டு தயாரிப்புகளை விற்பதற்கான இடம் மட்டும் அல்ல, அதற்கும் மேலானது, இது விளையாட்டாளர்கள் சந்தித்து, தகவல்களை பரிமாறிக்கொண்டு, தங்கள் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்திக்கொள்ளக்கூடிய ஒரு முக்கியத்துவம்வாய்ந்த விளையாட்டு சுற்றுப்பாதையாக மாற்ற வேண்டும் என்று இலக்கு வைத்து இருக்கிறோம்."
ROG Strix GL502 என்பது ஒரு சிறிய வியப்பூட்டும் காட்சிகளை வெளியிடுகின்ற பிரம்மிப்பூட்டும் திரையைக் கொண்ட15.6-அங்குல கேமிங் மடிக்கணினி. சமீபத்திய quad-core Intel® Core™ i7 புராசசர் மற்றும் ஒரு அர்ப்பணிக்கப்பட்ட NVIDIA® GeForce® GTX 980M GPU, Strix GL502 வரை பெற்றுள்ள இது ஒரு விளையாட்டுக்கான சக்திக்கூடம், இது இலகுவான செயல்பாட்டையும் உயர்ந்த விவரிப்புள்ள கிராஃபிக்சையும், புத்தம்புதிய, அதிகம் தேவைப்படுகின்ற பட்டங்களுடன் அளிக்கிறது. இதன் லேசான எடையோடு, அல்ட்ரா-போர்டபிள் வடிவமைப்பு, Strix GL502 ஆகியவை பயனர்கள் உயர் தர விளையாட்டை எங்கிருந்தும் அனுபவிக்கச் செய்கின்றது.
ஸ்டோரில் உள்ள 'Battle Ground' சமீபத்திய Asus ROG GL552VWஐ காட்சிப்படுத்துகின்றது, இது ஒரு மெயின்ஸ்ட்ரீம் விளையாடுவதற்கான மடிக்கணினி, இதில் Quad core 6th Gen Intel core i7 (Skylake) மற்றும் NVIDIA GeForce GTX™ 900 தொடர் கிராபிக்ஸ் இருக்கின்றன.
இந்நிறுவனம் தனது மெயின்ஸ்ட்ரீம் மற்றும் மலிவுவிலை டெஸ்க்டாப் - ASUS ROG G11ஐயும் காட்சிப்படுத்தியது, இது அதிக செலவு வைக்காத உயர் செயல்திறன்கொண்ட கேமிங் தளத்தை விரும்பும் அலட்டிக்கொள்ளாத விளையாட்டாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டது. இந்த அதிநவீன சேசிசின் உள்ளே இருப்பது ஒரு 6th-generation Intel® Core™ processor, Windows 10 Home, மற்றும் தனித்துவமான புராசசிங் சக்திக்கும் காட்சி திறனுக்கும் NVIDIA® GeForce® GTX™ 970 வரையிலான கிராபிக்ஸ் கார்டு. இது ஒரு PCIe Gen 3 x4 SSD, DDR4 நினைவகத்தையும் மற்றும் அதிவேக அணுகலுக்காக USB 3.1 ஆதரிக்கிறது.
செயல்முறைவிளக்க மண்டலத்திலே காட்சிப்படுத்தப்பட்டுள்ள மற்ற டெஸ்க்டாப் மாதிரிகள் ROG G20 மற்றும் ROG GT51. சமீபத்திய மடிக்கணினி மாதிரிகளான ROG G501, ROG G551 மற்றும் ROG G752 ஆகியவையும் செயல்முறைவிளக்க மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்தன. ஒரு வளமான, நீடித்து நிலைக்கும் மற்றும் தொல்லையில்லாத விளையாடல் அனுபவத்தை உறுதிப்படுத்துகின்ற சமீபத்திய மாதிரிகள் குளிரூட்டும் தொழில்நுட்பத்தின் பாராட்டுதலுக்குரிய வகைகளுடன் விரைவாக உஷ்ணமாகும் பிரச்சனையைக் குறைக்கின்றன.
புதிதாக வெளியிடப்பட்ட தயாரிப்புகள் பின்வருமாறு:
டெஸ்க்டாப்கள்:
மடிக்கணினிகள்:
ROG நோட்புக்குகள் மற்றும் டெஸ்க்டாப்கள் பற்றி மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பின்வரும் இணைப்புகளுக்கு வருகை தாருங்கள்:
நோட்புக்: http://www.asus.com/in/ROG-Republic-Of-Gamers/Notebooks-Products/
டெஸ்க்டாப்: http://www.asus.com/in/ROG-Republic-Of-Gamers/Desktops-Products/
ASUS பற்றி
ASUS, ஓர் உலகளாவிய, முதல் மூன்று நுகர்வோர் நோட்புக் விற்பனையாளரும், உலகின் விற்பனையில் சாதனை படைக்கின்ற, விருது வெல்லும் மதர்போர்டுகளின் உற்பத்தியாளரும் ஆகும். புதிய டிஜிட்டல் தலைமுறையின் முன்னணி நிறுவனமான ASUS, மதர்போர்டுகள், கிராஃபிக்ஸ் கார்டுகள், ஆப்டிகல் டிரைவ்கள், டிஸ்பிளேக்கள், டெஸ்க்டாப் மற்றும் அனைத்தும் அடங்கிய பிசிக்கள், நோட்புக்குகள், நெட்புக்குகள், சர்வர்கள், மல்டிமீடியா சாதனங்கள், ஒயர்லெஸ் தீர்வுகள், வலையமைப்பு சாதனங்கள், டாப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்ஃபோன்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளுடன், இன்றைய டிஜிட்டல் வீடு மற்றும் அலுவலகத்தின் தேவைகளைக் கச்சிதமாகப் பூர்த்தி செய்கின்ற பொருட்களை வடிவமைத்து, உற்பத்தி செய்கிறது. புத்தமைவினால் தூண்டப்பட்டு, தரத்திற்கு பொறுப்புறுதி ஏற்றுள்ள ASUS, 2015-ல் 4368 விருதுகளை வென்றுள்ளதுடன், தனது Eee PC™ மூலம் பிசி தொழில்துறையை புரட்சிகரமாக ஆக்கியதற்கான மிகப்பெரிய பெருமையையும் பெற்றுள்ளது. ASUS, உலகம் முழுவதும் 17,000-க்கும் அதிகமான பணியாளர்களுடன், 5500பொறியாளர்கள் இடம்பெற்றுள்ள உலகத்தரம் வாய்ந்த ஓர் R&D குழுவையும் கொண்டுள்ளது. 2015-க்கான இந்நிறுவனத்தின் வருமானம் சுமார் US$14 பில்லியன் ஆகும்.
மேலும் தகவல்களுக்கு, வருகைதாருங்கள்: http://www.asus.com/in/.
ஊடக தொடர்பு:
Manoj Kumar
[email protected]
+91-9818520082
Asus India Pvt. Ltd.
Share this article