சென்னை, June 24, 2016 /PRNewswire/ --
இந்த பிராந்தியத்தில் மிகப்பெரிய பாதுகாப்பு மற்றும் தீ பாதுகாப்பு நிகழ்வு
IFSEC India ஒருங்கிணைப்பாளர்களான UBM India நடத்திய மூன்று நாள் 'Security and Fire Expo (SAFE) - South India' 2016 (9-11 ஜூன்,2016) , வர்த்தக கண்காட்சியானது தனது இரண்டாம் நிகழ்வை சென்னை வர்த்தக மையத்தில் கடந்த வாரம் நிறைவுசெய்தது. Mr. K D Bhargava, பிராந்திய துணை தலைவர் (வடக்கு), APSA; Mr. Nanda Kumar, தலைவர், ESAI மற்றும் Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India ஆகியோர் பிரம்மாண்டமான கூட்டத்திற்கு மத்தியில் விளக்கு ஏற்றி கண்காட்சியைத் தொடங்கிவைத்தனர்.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160623/10149057 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20150417/10120853 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
இந்த கண்காட்சியானது கண்காணிப்பு, உள்நுழைவு மற்றும் வீட்டு தானியக்க துறையில் இருந்து புகழ்பெற்ற இந்திய மற்றும் சர்வதேச பிராண்டுகளின் 50க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் சர்வதேச விநியோகஸ்தர்கள், ஆலோசகர்கள், தொழில் நிபுணர்கள் மற்றும் முக்கிய அரசாங்க அதிகாரிகள் ஆகியோரை ஒருசேர கொண்டுவந்து, அவர்களை ஒன்றுதிரளவும், உரையாடவும், பிணைக்கவும், உலகளவில் முன்னணி நிறுவனங்களில் இருந்து சமீபத்திய புதுமைகளைக் காணவும், வர்த்தக தீர்வுகளைத் தேடவும், மதிப்புமிக்க நிபுணர் உதவியைப் பெறவும், ஒரே கூரையின் கீழ் இவ்வனைத்தையும் செய்ய வைத்துள்ளது.
இந்நிகழ்வு தகவலளிக்கும் செயல்முறை விளக்கங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தையும், துறைசார்ந்த போக்குகளையும் பார்வையாளர்கள் கற்றுக்கொள்ள ஏராளமான வாய்ப்புகளையும் அளித்து தங்கள் தொழில்களையும் வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கான சிறந்த தீர்வுகளைக் கண்டறியச் செய்கின்றது. தீவிரவாத செயல்களின் வளர்ச்சி, வளர்ந்துவரும் குற்றங்களில் விகிதங்கள், தரவு திருட்டுகள், தொலைநிலை கண்காணிப்பு, பொது உள்கட்டமைப்பின் வளர்ச்சி, வளர்ந்துவரும் தகவல்தொழில்நுட்ப செலவீனம், அரசாங்க முயற்சிகள் மற்றும் அதிகரிக்கும் பாதுகாப்புக்கான செலவீனங்கள் ஆகிய அனைத்தும் இந்தியாவிலே கண்காணிப்பு அமைப்புகளுக்கான சந்தையை ஊக்கப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கருத்து கொண்டு இருக்கின்றனர். இந்த நிலப்பரப்புக்கு எதிராக, SAFE 2016, இந்தியாவின் தெற்கு சந்தைக்கான முக்கிய பாதுகாப்பு மற்றும் தீ நிகழ்வானது தனது கண்காட்சியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் துறை போக்குகளை கற்பதற்கான வாய்ப்புகளை அளித்து தங்கள் தொழிலையும் வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கான சிறந்த தீர்வுகளையும் கண்டறியச் செய்தது.
CCTV மற்றும் வீடியோ கண்காணிப்பு, பயோமெட்ரிக்ஸ் & RFID, உள்ளமைக்கப்பட்ட அமைப்புகள், அணுகல் கட்டுப்பாடு, சைபர் பாதுகாப்பு, உள்ளமைந்த அமைப்புகள், இயல்ரீதியான பாதுகாப்பு, சுற்றளவு பாதுகாப்பு, தீ கண்டறிதல் அமைப்புகள், ஊடுருகிறவர் அலாரம்கள் மற்றும் தீ அலாரம்கள் போன்ற தயாரிப்புகள் இந்த கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.
இதன் இரண்டாம் ஆண்டிலே, SAFE India அளவிலும் ஆழத்திலும் வளர்ந்து, துறையின் முன்னணி வகிப்பவர்களையும், முக்கியமான கண்காட்சியாளர்களையும் கவர்ந்துள்ளது, அதில் நமது ப்ரீமியர் பங்காளர்களான Accu-Vision, ERD Technologies, Ontracking Fzco(Teltonica), Prama Hikvision, Samriddhi Automations Pvt. Ltd., Sparsh Unicam, XYZ Digital Pvt. Ltd., and others such as A-ID Systems (I) Pvt. Ltd., Altrox World Corp, APN Technologies, Atlanta Systems Pvt Ltd, ATSS, Automation Zone, Axestrack Software Solutions Pvt. Ltd., Cloud 9 Securities, Clumaxx Technology, Divine Eye, ESSL, Gasvigil Technologies Pvt. Ltd., In4 Solutions, Krinovate Services, Kubhera Cable Private Limited (Crest), Leaf Technologies Pvt Ltd, Mark Electronics, Matrix Comsec Pvt. Ltd., Metro Electronics, Mudra Electronics, MX-MDR Technologies Ltd, Onebee Technology Pvt. Ltd., Rahul Cable, Ranjana Computers, Rax-Tech International, Sidhi Vinayak Security Systems, Sun Security System, Supreme Computers, Swaraj Secutech Pvt. Ltd., TS Info systems, Unicom IT Solutions, Vamo Systems and ZKTeco, உள்ளிட்ட பலர் உள்ளடங்குவர்..
'Security and Fire Expo (SAFE) - South India' 2016இன் வெற்றிகரமான நிறைவு விழாவிலே பேசும்போது, Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India இவ்வாறு கூறினார், "இன்று, தொழிற்சாலை, வர்த்தக மற்றும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு நடுவே பாதுகாப்பு மற்றும் கண்காட்சிக்கு விரைவான வளர்ச்சி தேவைப்படுகின்றது. இந்த துறையின் முக்கியத்துவத்தை செயல்படுத்தி தனிச்சிறப்புப்படுத்தி காட்டுவது ஒரு அத்தியாவசியமாக மாறிவிட்டது, இதன் விளைவாக உலகெங்கிலும் இருந்து உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் தங்கள் தயாரிப்பு மற்றும் சேவை வழங்கல்களை காட்சிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகின்றது. இந்த தேவையை முன்னிறுத்தி, அதற்கு பதிலாக, புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த கட்டிடங்களிலே பாதுகாப்பை வலிமைப்படுத்துவதற்கு தேவையான தீர்வுகளை வெளிக்கொண்டு வந்ததன் மூலம் SAFE 2016க்கான தனது நோக்கத்தை UBM India நிறைவேற்றி இருக்கிறது."
"தெற்கு பகுதியிலே இருக்கும் இதுபோன்ற ஒரே வர்த்தக கண்காட்சியாக SAFE மூலமாக இந்த பகுதியிலே வளரும் சந்தைக்கான சந்தை நுழைவையும் தொழில் வாய்ப்புகளையும் வழங்கும் அதே சமயத்தில் துறையின் விநியோக சங்கிலி சுழற்சியையும் UBM India வலிமைப்படுத்துகின்றது," என்று அவர் கூடுதலாக தெரிவித்தார்.
இந்த கண்காட்சியானது துறையினால் பெருவாரியாக வரவேற்கப்பட்டு Electronic Security Association of India (ESAI) மற்றும் Asian Professional Security Association (APSA) ஆகியவற்றால் ஆதரிக்கப்பட்டது.
தொழிற்துறையானது SAFE 2016 நிகழ்வை ஒரு தொழில்ற்துறை தளமாக மதிப்பிட்டு UBM India நடத்தும் வருடாந்தர கண்காட்சிக்கான குறிக்கோளை மீண்டும் வலியுறுத்துகின்றது.
Mr. Kamal Pandey, துணை மேலாளர் - வாடிக்கையாளர் உறவுகள், Sparsh (Samriddhi Automations Pvt. Ltd.) இவ்வாறு கூறினார், "எங்கள் தொழில்நுட்பத்தை செயல்படுத்திக் காட்டுகின்ற ஒரு தளத்தை நாங்கள் தொடர்ச்சியாக தேடிக்கொண்டே இருகிறோம். SAFE South India 2016 அத்தகைய தளமாக எங்களுக்கு இருந்து வருகிறது. பாதுகாப்பு மற்றும் தீ பாதுகாப்பின் மீது கவனம்செலுத்தி, இந்நிகழ்வானது எங்களுக்கு பங்குதாரர் சமுதாயத்திற்கான அணுகலைக் கொடுத்து, இவ்வாண்டின் நிகழ்வானது தரமான பார்வையாளர்கள் மற்றும் மதிப்புமிக்க விசாரணைகளையும் கண்டது."
Vinod Ranka, Sidhi Vinayak Security Systems, இவ்வாறு கூறினார், " SAFE South India 2016யில் பங்குபெற்றதில் நாங்கள் திருப்தியடைகிறோம். இந்நிகழ்வு புதிய வாடிக்கையாளர்களை உருவாக்குவதற்கான வாய்ப்பை எங்களுக்கு கொடுத்தது. அடுத்த ஆண்டு நாங்கள் திரும்பவும் வருவோம்."
Mr. S. Harish, Pelikan Office Automation Pvt. Ltd., இவ்வாறு கூறினார், "துறையின் வாங்குநர்களையும் விநியோகஸ்தர்களையும் ஒருங்கே கொண்டுவருவதால் இந்நிகழ்ச்சி ஒரு மகத்தான தளம் ஆகும். தற்போதைய மற்றும் எதிர்கால தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதற்கு நிறுவனங்களுக்கு ஒரு வாய்ப்பை இந்நிகழ்வு அளிக்கிறது. இதன் விளைவாக இந்த சூழல் அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் மின்னணுத் துறையில் இருக்கும் தீர்மானம் எடுப்பவர்களுக்கு உதவுகின்றது. இக்கண்காட்சியின் அடுத்த நிகழ்விலே கண்காட்சியாளர்களாக பங்கேற்க நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்."
UBM India பற்றி
UBM India என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அது கண்காட்சிகளின் தொகுப்பு, உள்ளடக்கங்களினால் வழிநடத்தப்படும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், மூலமாக உலகெங்கும் இருந்து வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒன்று சேர்க்கும் தளங்களை அளிக்கிறது. UBM India ஆண்டுதோறும் நாடு முழுவதும் 25 பெரிய அளவு கண்காட்சிகளையும், 40 மாநாடுகளையும் அளிக்கிறது; இதன் மூலம் பல நிறுவன பிரிவுகளில் வணிகத்தை செயல்படுத்துகின்றது. ஒரு UBM Asia நிறுவனமான, UBM இந்தியாவுக்கு மும்பை, புதுதில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM ஆசியா லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM Plcக்கு சொந்தமானது. UBM Asiaவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகவும் சீனாவின் பெருநிலப்பகுதியிலும், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளில் வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து வருகைதாருங்கள் www.ubmindia.in
ஊடக தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
UBM India
Share this article