சென்னை, June 17, 2016 /PRNewswire/ --
UBM India-வினால் நடத்தப்படும் தொழில் தொடர்பான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு-க்கான தென்னிந்தியாவின் மாபெரும் வர்த்தகக் கண்காட்சி
OSH சென்னை 2016, சென்னை வர்த்தக மையத்தில் கடந்த ஜூன் 10 அன்று UBM India-வினால் வெற்றிகரமாக நடத்தி முடித்த தொழில் சார்ந்த பாதுகாப்பும், சுகாதாரமும் பற்றிய தென்னிந்தியாவின் மாபெரும் சர்வதேச வர்த்தக நிகழ்ச்சி தென்னிந்தியாவில் தொழில்துறையின் ஆற்றலையும் வழிமுறைகளையும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. திரு. K. Kalaiannan, Additional Director, Directorate Industrial Safety and Health, Government of Tamil Nadu அவர்களின் முன்னிலையில் இக்கண்காட்சி தொடக்கி வைக்கப்பட்டது. இதில் கௌரவ விருந்தினராக
திரு. V.V.G. Raju, Regional Executive Director - Southern Region, Airport Authority of India அவர்களும், திரு. A. K. Megharaj, Deputy Director General Mines Safety, Southern Zone, Directorate Mines Safety, Government of India; திரு. Karthikeya R. Reddy, CEO and Director, Dickies India and ID Overseas Pvt. Ltd.; திரு. Badrinath Gulur, Director, Training and Capacity Building - Social Accountability International (SAI); திரு.Varun Budhiraja, Director, Euro Safety Footwear, India and Dr P.C. Ghosh, Director Retired (Physiology and Ergonomics), Central Labour Institute, Mumbai and திரு.Yogesh Mudras, Managing Director, UBM India அவர்களும் மற்ற முக்கிய பிரமுகர்களும் உடனிருந்தனர்.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160616/10148551 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160517/10146337 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
தொழில்சார்ந்த பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையில் தரமான தீர்வுகளுக்காக உலகளாவிய மற்றும் உள்நாட்டு சப்ளையர்கள், பாதுகாப்பு நிபுணர்கள், ஆலோசகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்களுடன் பல துறைகளையும் சார்ந்த பிரமுகர்கள் கலந்துரையாடுவதற்கான ஒரு தொழில் தளத்தை இந்த இரண்டு நாள் நிகழ்வு அளித்தது. இந்தக் கண்காட்சியில் புகழ்பெற்ற நிறுவனங்கள் பல பங்கேற்றன. Dickies India - 'Presenting Partner'; Euro Safety Footwear (India) Pvt. Ltd. - 'Occupational Safety & Health Partner'; Mallcom India Ltd; Venus Safety and Health Pvt Ltd; Acme Safetywears Ltd; Accent Industries Ltd; Prolite Autoglo Ltd; Acme Fabrik Plast Co; Lakeland Glove and Safety Apparels Pvt Ltd; Allied Safety Equipments Pvt Ltd; JLG Industries; Aktion Safety Solutions Pvt Ltd; Tobit Engineers; Tej Engineering; Prem Safety Works; Hetal International and NIST Institute Pvt. Ltd. முதலானவர்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்றனர்.
நாடு முழுவதிலுமிருந்து வந்த நிபுணர்களும், பன்னாட்டு முன்னணி நிறுவனங்களும் தொழில்துறையில் உள்ள சவால்களும் உலகளாவிய சிறந்த நடவடிக்கைகளும் பற்றி உரையாடும்போது தொழில்துறையில் தொழில் சார்ந்த பாதுகாப்பு என்பது மிக முக்கியமான விஷயம் என்று விளக்கும் வகையில் நடத்தப்பட்ட இரண்டு நாள் மாநாடுதான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாகும். மாநாட்டில் 'Building a Culture of Prevention in Occupational Safety and Health', 'Responsible Care - A Comprehensive Safety System for Chemical Industries', 'Building Safety Leadership and Talent', 'Process Safety Excellence', 'Fire Safety Challenges in India', 'Construction Industry: Building a Proactive Safety Culture' முதல் 'Workplace Stress: A Collective Challenge' வரை பல தலைப்புகளில் உரையாடல்கள் நடந்தன.
திரு. Birendra Verma, Joint President and Group Head Safety, Aditya Birla Group; திரு. Michael Sanderson, EHS Head - Metro and Defence, Larsen and Toubro, Chennai; செல்வி. Gitanjali J.B., Chairperson and Managing Director, AUM Hospitals; திரு. R.A. Venkitachalam, Vice President, Public Safety, Underwriters Laboratories Inc; Dr Ashish Arora, Occupational Health Physician, Shell India; திரு. Shailesh Raval, Head-Health, Safety and Environment, Deepak Nitrite Ltd. and திரு. J.C. Sekar, CEO, AcuiZen Technologies Singapore Pte. Ltd முதலானவர்கள் இந்த மாநாட்டில் உரையாற்றினர். திரு. Badrinath Gulur, Director, Training and Capacity Building - Social Accountability International (SAI) அவர்களால் நடத்தப்பட்ட கலந்துரையாடலுடன் கூடிய சான்றுபெற்ற வகுப்பறை பாணியிலான பயிலரங்கு பங்கேற்பாளர்களின் பாராட்டைப் பெற்றது. தொழிலாளர்கள் மத்தியிலும் நிறுவனங்கள் மத்தியிலும் பாதுகாப்புக் கலாச்சாரத்தை எப்படி ஊக்குவிப்பது என்பதே முக்கியமான செய்தியாக அமைந்தது.
OSH சென்னை 2016 வெற்றிகரமாக நிறைவடைந்த பின்னர் திரு. Yogesh Mudras, Managing Director, UBM India பேசும்போது, "நம்முடைய நாட்டில் வளர்ந்து வரும் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கான தொழில்துறையின் அட்வோகஸியை நாங்கள் பிரதிபலிக்கிறோம். வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒட்டுமொத்தமாக வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு தொழில் சார்ந்த பாதுகாப்பும் சுகாதாரமும் மிகமிக முக்கியமானது. இந்தத் துறையின் முக்கியத்துவத்தை விளக்கிக் காட்டுவதும் நடைமுறைப் படுத்துவதும் அவசியமாகி விட்டது. உலகம் முழுவதிலுமிருந்தும் வரும் சப்ளையர்களும் சேவை வழங்கும் நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளையும் வழங்கும் தீர்வுகளையும் காட்சிப்படுத்துவதற்கு வாய்ப்பாக அமைந்தது. தென்னிந்தியாவில் உள்ள தொழில் துறைக்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள சிறந்த தளத்தை அளித்ததன் மூலம் மூன்றாவது OSH சென்னையின் நோக்கத்தை UBM India நிறைவேற்றியுள்ளது."
OSH சென்னை 2016-ல் தொடங்கப்பட்டவை:
Dickies India
OSH சென்னை 2016-ன் 'Presenting Partner'-ஆன உலக அளவில் முன்னணியில் இருக்கும் ஒர்க் வேர் பிராண்டான 'Dickies' தங்களுடைய புதிய பாதுகாப்பு காலணியையும் பெர்ஃபார்மன்ஸ் ஆக்குப்பேஷனல் ஒர்க் வேர் லைனையும் கண்காட்சியில் வெளியிட்டனர்"
OSH சென்னை 2016-ன் Presenting Partners என்ற முறையில் தங்களுடைய வெளியீடு பற்றிப் பேசிய திரு. Karthikeya R. Reddy, CEO and Director, Dickies India அவர்கள் பேசும்போது, " Dickies தன்னுடைய தயாரிப்புகளை இந்தியத் தொழிலாளர்களிடம் அறிமுகப்படுத்த OSH இந்தியா ஒரு சிறந்த வாய்ப்பை அளிக்கிறது. இந்த ஆண்டுக்கான கண்காட்சியின் Presenting Partner-ஆக இருப்பதிலும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியத் தொழிலாளர்களுக்கு உலகளாவிய மிகப்பெரிய வொர்க் வேர் பிராண்டை நாங்கள் அறிமுகம் செய்துள்ளோம். இதற்கு OSH ஒரு மாபெரும் வாய்ப்பாக அமைந்தது. எமது புதிய பாதுகாப்பு காலணியையும் பெர்ஃபார்மன்ஸ் ஆக்குப்பேஷனல் ஒர்க் வேர் லைனையும் OSH சென்னையில் ஜூன் 2016-ல் வெளியிட்டுள்ளோம்."
Euro Safety Footwear
OSH சென்னை 2016-கான 'ஆக்குப்பேஷனல் சேஃப்டி & ஹெல்த் பார்ட்னரான' யூரோ சேஃப்டி ஃபுட்வேர் தங்களுடைய புதிதாக வடிவமைக்கப்பட்ட தனிநபர் பாதுகாப்பு சாதனத்தை (Personal Protective Equipment (PPE)) காட்சிப்படுத்தியது. எல்லா வகையான தொழில்களுக்கும் ஏற்ற விதத்தில் தயாரிப்புகளை வழங்கும் விதத்தில் இருந்தது.
தங்களுடைய புதிய வெளியீடுகள் பற்றியும் OSH சென்னை 2016-உடன் தங்களுடைய தொடர்பு பற்றியும் பேசிய திரு. Varun Budhiraja, Director, Euro Safety Footwear (India) Pvt. Ltd. பேசும்போது "பல மாதங்களாக எம்முடைய புதிய தயாரிப்புகளுக்காக கடுமையாக வேலை செய்திருக்கிறோம். ஒரு சந்தைக்குள் எந்த ஒரு புதிய நிறுவனமும் நுழையும்போது, தற்போதைய பாணியைப் பின்பற்றி மக்கள் ஏற்கனவே எவற்றை வாங்குகிறார்களோ அவற்றையே வழங்கும். நாங்கள் அளிப்பவை புதிதானவை. மக்கள் அவற்றை வாங்க விரும்புகின்றனர். தொழிலாளர்கள் பாதுகாப்போடு கூடிய சௌகரியத்தையும், வசதியையும், நல்ல தோற்றத்தையும் விரும்புகின்றனர். இதைத்தான் நாங்களும் வழங்கியுள்ளோம். OSH மற்றும் Euro Safety Footwear இணைந்து தொழில் சார்ந்த பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வைத் தொடர்ந்து பரப்பி வருகின்றன. எம்முடைய நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் முதல் முறையாக, 'Occupational Safety & Health Partner' என்ற முறையில் இந்தக் கண்காட்சிக்கு ஆதரவு அளித்துள்ளோம். ஒரு தொழிலாளரின் பாதுகாப்பில் சமரசம் செய்து இன்று சேமிக்கும் பணம் உயிரிழப்பிற்குச் செலவிடப்படுகிறது என்பதை நாம் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். அதில் எஞ்சியிருப்பது குற்ற உணர்வு மட்டுமே."
Karam
சேஃப் இன்டியா டிரைவ் பிரச்சாரத்தை Karam தொடங்கியது. இது, தொழிலாளர் பாதுகாப்பினை எட்டும் தொடர் முயிற்சியின் ஒரு அங்கமாக ஒரு நடமாடும் கண்காட்சி டெமோ வேனாகும். KARAM Mobile Studio-வானது நாடு முழுவதும் வேலை செய்யும் இடங்களில் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வினை வழங்கும்.
ஃபால் புரொட்டெக்ஷன் எக்கியூப்மென்ட் மற்றும் PPE தயாரிப்பில் முன்னிலையில் இருப்பதாலும், பாதுகாப்பு ஆலோசனைக்கு ஒட்டுமொத்த தீர்வாக இருப்பதாலும், பாதுகாப்பு பற்றியும், உயரத்தில் வேலை செய்யும்போதும் குறுகலான இடங்களில் வேலை செய்யும்போதும் அபாயங்களைக் குறைக்க உதவும் பாதுகாப்பு சாதனங்களை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்துவது பற்றியும் நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் விழிப்புணர்வு அளிக்கும் பொறுப்பினை நிறுவனம் உணர்ந்துள்ளது.
இந்த வேன் அவர்களுடைய இடங்களுக்கே சென்று புதிய புதுமையான தயாரிப்புகளை அவர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பினை அளிக்கும். அவர்களுடைய தயாரிப்புகளின் பலத்தை நேரடியாகப் பரிசோதித்துக் காட்டி ஃபால் புரொட்டெக்ஷன் எக்கியூப்மென்டைப் பயன்படுத்துவது பற்றி பயிற்சியளிக்கும். இதற்கு ஒட்டுமொத்தமாக 90 நிமிடங்கள் ஆகும். ஒரு நாளில் பலமுறை தயாரிப்பு பற்றிய பயிற்சி பெறும்வரை மீண்டும் மீண்டும் வாடிக்கையாளர்கள் திருப்தியடையும்வரை செய்யலாம்.
UBM India பற்றி:
UBM India என்பது இந்திய அளவில் கண்காட்சிகளை ஏற்பாடு செய்யும் முன்னணி நிறுவனமாகும். இது இத்துறையில் வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் உலகம் முழுவதிலுமிருந்து கண்காட்சிகள், உள்ளடக்கமிக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக ஒரே தளத்தில் சேர்க்கிறது. UBM India 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறது. UBM Asia நிறுவனமான, UBM India மும்பை, புது டில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM plc-யினால் UBM Asia நடத்தப்படுகிறது. இது லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் பட்டியலில் உள்ளது. UBM Asia என்பது ஆசியாவில் கண்காட்சியை நடத்தும் முன்னணி நிறுவனமாகும். சைனாவின் முக்கியப் பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக நடத்துபவராகும். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து ubmindia.in என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
ஊடகத் தொடர்பு:
Mili Lalwani
[email protected]
022-61727000
UBM India
Share this article