ஹைதராபாத், இந்தியா, June 13, 2016 /PRNewswire/ --
பார்வையாளர் வருகை கடந்த நிகழ்வைக் காட்டிலும் 20 விகிதம் அதிகரித்து உள்ளது
Hyderabad Jewellery, Pearl and Gem Fair (HJF 2016)ஐ ஒருங்கிணைத்தது UBM India, இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர், தனது 9வது நிகழ்வை Hyderabad International Convention Centre, Novotelஇல் சென்றவாரம் நிறைவுசெய்தது. 100க்கும் மேற்பட்ட பிராண்டுகளுடன், இதற்கு முந்தைய நிகழ்வுகளைக் காட்டிலும் முன் எப்பொழுதும் இல்லாத 20 சதவிகித பார்வையாளர் வளர்ச்சியை HJF 2016 கண்டது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160610/10148155 )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160610/10148155-a )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160610/10148155-b )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
சிறப்பு விருந்தினர், Shri Bonthu Ram Mohan, மேயர் - Greater Hyderabad Municipal Corporation மற்றும் பிற பிரமுகர்களின் முன்னிலையிலே பிரமுகர்களான, Ms. Jittima Nakamano, Royal Thai Consulate General உடைய தூதுவர் (வர்த்தகம்) மற்றும் Thai Trade Center உடைய இயக்குநர்; Mr. G V Sreedhar, தலைவர், All India Gems & Jewellery Trade Federation; Mr. Mahendra Tayal, தலைவர், Hitech City Jewellers Manufacturers Association மற்றும் Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India கண்காட்சியின் தொடக்க விழாவிலே இந்த கண்காட்சியானது ஒரு துறைசார்ந்த தளமாக மதிப்பிடப்பட்டது.
UBM Indiaவின் இரண்டு நாள் HJF கண்காட்சியானது (4 முதல் 5 ஜூன்) 100க்கும் மேற்பட்ட நகை உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள், சில்லரை வர்த்தகர்கள், இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், வைரம் மற்றும் ரத்தினக்கல் விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தக மற்றும் அரசாங்க அமைப்புகளில் இருந்து பிரதிநிதிகள் என 100க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களைக் கொண்ட மிகப்பெரிய ரத்தினக்கற்கள் மற்றும் நகைகளுக்கான B2B கண்காட்சிகளில் ஒன்று ஆகும். இந்திய நகை சந்தைக்கான நுழைவாயில் ஆகும் மற்றும் இது வாங்குநர்களும் விநியோகஸ்தர்களும் இணையவும், பிணைப்பை ஏற்படுத்தவும், கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும், வரவிருக்கும் போக்குகளை கண்டுபிடிக்கவும், தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும் அற்புதமான தளத்தை அளிக்கிறது. கண்காட்சியிலே, வைரங்கள், முத்துக்கள், ரத்தினக்கற்கள், கல் பதிக்கப்பட்ட நகைகள், ஹைதராபாத் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வந்து இவ்வாண்டின் கண்காட்சியை கவர்ந்த 40 உற்பத்தியாளர்களின், விக்டோரியா கால, நிஜாம் கால மற்றும் பழங்கால நகை தொகுப்பு ஆகியவை உள்ளடங்கிய அழகிய தென்னிந்திய தங்க நகைகள் ஆகிய பரவலான ரகங்களினால் விற்பனைப்பொருட்களை காட்சியாளர்கள் முன்வைத்தனர். உற்பத்தி செயல்முறையில் பயன்படுத்தப்படும் சமீபத்திய இயந்திரங்கள் மற்றும் பிற தொடர்புடைய பொருட்கள் மற்றும் சேவைகளும் காட்சியில் வைக்கப்பட்டன.
முதல் முறையாக, இந்த HJF நிகழ்விலே Telangana & AP Retail Jewellers Awards 2016 (4th June) இடம்பெற்றது, இது இந்த மாநிலங்களின் சிறந்த சில்லரைவர்த்தக நகை வியாபாரத்தை கௌரவிப்பதற்கான ஒரு பிரத்தியேக முயற்சி ஆகும். சில்லரைவர்த்தக துறையிலே சிறப்பாக திகழ்ந்த சில தேர்வுசெய்யப்பட்ட நிறுவனங்களுக்கு துறைக்கான அவர்களுடைய பங்களிப்புக்கு ஒரு கோப்பையும் ஒரு சான்றிதழும் வழங்கப்பட்டன. இந்த விருதுகளைத் தொடர்ந்து ஒரு அலங்கார அணிவகுப்பும் நடைபெற்றது அதிலெ துறையில் உள்ள மகத்தான திறமைகள் மேடைக்கு வந்து வியக்கவைக்கும் நகைகளை காட்சிப்படுத்திய நிகழ்வு நடைபெற்றது.
The Telangana & AP Retail Jewellers Awards 2016 ஐந்து பிரிவுகளிலே 150 பரிந்துரைகளைப் பெற்றது, அவற்றில் கீழ்கண்ட நிறுவனங்கள் வெற்றியாளர்களாக விருதுபெற்றனர்.
TAP RJA WINNERS 2016
சிறப்பான சந்தைப்படுத்தல்
ஆண்டின் சிறந்த அச்சிடப்பட்ட விளம்பரம் Malabar Gold & Diamonds
மிகவும் புதுமையான சந்தைப்படுத்தல் விளம்பரம் Kirtilal Kalidas Jewellers Pvt Ltd
சிறப்பான செயல்பாடு (ஸ்டோர்)
ஆண்டின் சிறந்த கடை 5000 சதுர அடிக்கும் குறைவானது
Niharika Jewelry Ensemble
5000 சதுர அடிக்கும் அதிகமானது
Krishna Jewellers, Pearls & Gems
ஆண்டின் சிறந்த சில்லரைவர்த்தக குழு Kirtilal Kalidas Jewellers Pvt Ltd
சிறப்பான வடிவமைப்பு
சிறப்பான வடிவமைப்பு – நெக்லஸ் G R Thanga Maligai Jewellers (India)
Pvt Ltd
சிறப்பான வடிவமைப்பு -வளையல்கள்
& ப்ரேஸ்லெட்கள் Mor Jewellers
சிறப்பான வடிவமைப்பு - காதணிகள் Shobha Asar Jewellery Pvt Ltd
சிறப்பான வடிவமைப்பு - மோதிரங்கள் G R Thanga Maligai Jewellers
(India) Pvt Ltd
சிறப்பான வடிவமைப்பு - மற்றவை Neelkanth Jewellers
சிறப்பான வடிவமைப்பு - மற்றவை Sri Balaji Jewellers
நடுவர் மன்றம் தேர்வு செய்த விருதுகள்
வாழ்நாள் சாதனை விருது Mr. Radheshyam Gupta
ஆண்டின் எழும் நட்சத்திரம் Mr. Mahendra Tayal
ஆண்டின் பெண் தொழிலதிபர் Vasundhara Kasaraneni
UBM முதன்முயற்சி விருதுகள்
ஆண்டின் வளரும் நிறுவனம் Doshi Gems & Jewels
சிறப்பு அங்கீகாரம் Namo Jewels
HJF 2016 உடைய வெற்றி குறித்து பேசும்போது, Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India இவ்வாறு கூறினார், "HJF இவ்வாண்டு துறையில் இருந்து மகத்தான வரவேற்பைப் பெற்றது. இந்த வகையிலான நேர்மறையான வரவேற்பானது ஊக்கமளிப்பதோடு இந்த துறையின் ஆற்றலை மேலும் உறுதிப்படுத்துவதாகவும் மட்டுமே இருக்கிறது. இந்த கண்காட்சியானது, இந்த மாநிலத்தின் இப்படிப்பட்ட அளவிலும், தொகையிலும் இருக்கும் ஒரே கண்காட்சி என்பதோடு கூடுதலாக, இந்த பிராந்தியத்திலே துறைக்கான அளவுகோலாகவும் மாறி இருக்கிறது."
"இவ்வாண்டு முதல் முறையாக, Telangana & AP Retail Jewellers Awards தொடங்கப்படுவதையும் HJF கண்டது, இது இந்த மாநிலங்களின் சில்லரை நகை வியாபாரத்தின் சிறப்பான திறமைகளை கௌரவப்படுத்தி கொண்டாடுவதற்கான ஒரு பிரத்தியேக முயற்சி ஆகும். இந்த விருதுகளைப் பெற ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் இருந்து நேர்த்தியான சில்லரை நகை வியாபாரிகள் ஒரே மேடைக்கு வந்து ஒரு பாரபட்சமற்ற வெளிப்படையான தளத்திலே போட்டியிடுவதைக் கண்டது," என்று அவர் கூடுதலாக தெரிவித்தார்.
இவ்வாண்டு பங்கேற்ற சில குறிப்பிடத்தக்க கண்காட்சியாளர்களில் உள்ளடங்குபவர்கள்: Anmol Jewellers, Swaroop Jewellers, Meenakshi Jewellers, Ramesh Chand Jewellers, Inderlal Balmukund Jewellers, Sri Balaji Jewellers, Siddi Vinayak Jewellers & Exporters and P Mangatram Jewellers Pvt. Ltd. உள்ளிட்ட பலர். இந்த கண்காட்சியானது தென்னிந்தியாவின் முக்கிய நகை கழகங்களினால் ஆதரிக்கப்பட்டது, அதில் Hyderabad Jewellers Manufacturers Association (HJMA), AP Gold Silver & Diamond Merchant Association மற்றும் 100க்கும் மேற்பட்ட மாவட்ட கழகங்களும் உள்ளடங்கும்.
UBM தற்போது முப்பது ஆண்டுகளாக நகை துறையின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது, இதேபோன்ற புகழ்பெற்ற நகை கண்காட்சிகளை உலகமெங்கும் ஒருங்கிணைத்து வருகின்றது. HJF என்பது ஆண்டு முழுவதிலும் UBM India நடத்துகின்ற ஒரு நான்கு நகர நகை கண்காட்சிகளில் (கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத் மற்றும் தில்லி) ஒன்றாகும். 2008இல் இதன் தொடக்கவிழாவைத் தொடர்ந்து, 2015இல் HJF துறைக்கான சரியான வாய்ப்புகளை உருவாக்கியது மற்றும் இக்கண்காட்சியானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் இருந்து கண்காட்சியாளர்களை ஈர்த்து அற்புதமான விளைவைக் கொடுத்தது. இக்கண்காட்சி மூன்று நாள் கண்காட்சிக்கான பெரிய எண்ணிக்கையிலான வாங்குநர்களையும் விற்பனையாளர்களையும் கவர்ந்தது மற்றும் இந்நிகழ்வின் பெரும் புகழைக் காணும்போது, இவ்வாண்டின் பார்வையாளர் வருகை 5000 பார்வையாளர்களுக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கபப்டுகின்றது.
UBM India பற்றி
UBM India என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அது கண்காட்சிகளின் தொகுப்பு, உள்ளடக்கங்களினால் வழிநடத்தப்படும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், மூலமாக உலகெங்கும் இருந்து வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒன்று சேர்க்கும் தளங்களை அளிக்கிறது. UBM India ஆண்டுதோறும் நாடு முழுவதும் 25 பெரிய அளவு கண்காட்சிகளையும், 40 மாநாடுகளையும் அளிக்கிறது; இதன் மூலம் பல நிறுவன பிரிவுகளில் வணிகத்தை செயல்படுத்துகின்றது. ஒரு UBM Asia நிறுவனமான, UBM இந்தியாவுக்கு மும்பை, புதுதில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM ஆசியா லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM Plcக்கு சொந்தமானது. UBM Asiaவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகவும் சீனாவின் பெருநிலப்பகுதியிலும், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளில் வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து வருகைதாருங்கள் ubmindia.in.
ஊடக தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
UBM India
Share this article