சென்னை, June 10, 2016 /PRNewswire/ --
UBM India மூலம் நடத்தப்படும் 100 புகழ்பெற்ற இந்திய மற்றும் சர்வதேச பிராண்டுகளின் திரட்சி
UBM India நிறுவனம் இரண்டு நாள் (9 - 10, ஜூன் 2016) பாதுகாப்புக் கண்காட்சியாகிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் (OSH) இந்தியா-சென்னை கண்காட்சியின் 3வது பதிப்பை சென்னை வர்த்தக மையத்தில் இன்று தொடங்கியது. இந்தக் கண்காட்சி தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான சவால்களுக்கு சர்வதேச அளவில் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வதற்கும், மிகவும் இன்றியமையாத சில சவால்களுக்கான தீர்வுகளைக் காண்பதற்கும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கண்காட்சியாளர்கள், ஆலோசகர்கள், வணிக வல்லுநர்கள் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகள் ஆகியோரை ஒருங்கிணைத்தது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160609/10148035-a )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160609/10148035-b )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20150810/10128411 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
OSH இந்தியா, சென்னை 2016இன் தொடக்க நிகழ்ச்சி தலைமை விருந்தினரான தமிழக அரசின் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரகத்தின் கூடுதல் இயக்குனர் Shri. Thiru K Kalaiannan. சிறப்பு விருந்தினரான Airport Authority of India-வின் தென் மண்டலத்தின் மண்டல நிர்வாக இயக்குனர் Shri V.V.G. Raju, மற்றும் முக்கியப் பிரமுகர்களாகிய இந்திய அரசின் சுரங்கப் பாதுகாப்பு இயக்குனரகத்தின் தென் மண்டல சுரங்கப் பாதுகாப்பு துணை இயக்குனர் ஜெனரல் Shri A K Megharaj; Dickies India மற்றும் ID Overseas Pvt Ltd. நிறுவனங்களின் CEO மற்றும் இயக்குனர் Mr Karthikeya R. Reddy; Social Accountability International (SAI) நிறுவனத்தின் பயிற்சி மற்றும் திறன் உருவாக்க இயக்குனர் Mr Badrinath Gulur; Euro Safety Footwear, India நிறுவனத்தின் இயக்குனர் Mr. Varun Budhiraja; Central Labour Institute, Mumbai யின் ஓய்வு பெற்ற இயக்குனர் (உடற்செயலியல் மற்றும் பணிச்சூழலியல்) Mr. Dr P.C. Ghosh மற்றும் UBM India-வின் நிர்வாக இயக்குனர் Yogesh Mudras ஆகியோர் முன்னிலையில் நடைபெற, தொழில்துறையைச் சேர்ந்த மாட்சிமை பொருந்திய பலர் கலந்துகொண்டனர்.
தொழில்துறையைச் சேர்ந்த பல முன்னணிக் கண்காட்சியாளர்களின் பங்கேற்பு ஒரு தொழில்துறை நிகழ்வாக OSH இந்தியா மாநாட்டின் தேவையையும் முக்கியத்துவத்தையும் மீண்டும் உறுதிப்படுத்தியது. இவற்றில் 'வழங்கும் கூட்டாளர்' - Dickies India, 'தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் கூட்டாளர்' - Euro Safety Footwear (India) Pvt. Ltd. மற்றும் Mallcom India Ltd; Venus Safety and Health Pvt Ltd; Acme Safetywears Ltd; Accent Industries Ltd; Prolite Autoglo Ltd; Acme Fabrik Plast Co; Lakeland Glove and Safety Apparels Pvt Ltd; Allied Safety Equipments Pvt Ltd; JLG Industries; Aktion Safety Solutions Pvt Ltd; Tobit Engineers; Tej Engineering; Prem Safety Works; Hetal International மற்றும் NIST Institute Pvt. Ltd. போன்ற இதர நிறுவனங்களும் உள்ளடங்கும்.
OSH சென்னை மாநாட்டின் 3வது பதிப்பின் தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றும்போது, UBM India வின் நிர்வாக இயக்குனர் Mr. Yogesh Mudras கூறும்போது, "உற்பத்தித் திறனும் இலாபமும் மற்றும் சுகாதாரமும் பாதுகாப்பும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை ஆகும். பெருகிவரும் பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து தக்கவைப்பதற்கும் ஒட்டுமொத்தமாக வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், வளர்ந்துவரும் பொருளாதாரத்துக்கு தொழில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாகும். இந்தியாவின் தொழில்துறை எல்லைகள் பெருகி வருவதன் காரணமாக ஏற்பட்டுள்ள பரவலான தொழிலாளர் அதிகரிப்பின் மூலம், இந்தத் துறையைச் செயல்படுத்துவதும், இதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டுவதும் அத்தியாவசியமாகியுள்ளது. இந்தத் துறையில் சர்வதேச முதலீடுகள் அதிகரித்து வரும் நிலையில் அத்துடன் இணைந்து தொழில் பாதுகாப்பை வழங்குவது குறித்து அரசாங்கங்கள் முறையான முக்கியத்துவம் வழங்குவதன் மூலம், உலகம் முழுவதும் உள்ள அளிப்பாளர்களுக்கும் சேவை வழங்குனர்களுக்கும் தங்களுடைய தயாரிப்புகளையும் தீர்வுகளையும் காட்சிப்படுத்துவதற்கான ஒரு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. OSH சென்னை மூலம் நாங்கள் மேற்கொண்ட முயற்சியின் வாயிலாக இந்த வாய்ப்பை உணர்ந்துகொள்வதற்கான சரியான களத்தை தொழில்துறையினருக்கு நாங்கள் வழங்குகிறோம்" என்றார்.
OSH சென்னையின் இரண்டு நாள் மாநாடு நாடு முழுவதிலிருந்தும் மற்றும் முன்னணி சர்வதேச நிறுவனங்களிலிருந்தும் வந்திருந்த வல்லுநர்கள் மூலம் தொழில் பாதுகாப்பை முன்னிடத்துக்குக் கொண்டுவந்துள்ளது, அதே சமயம் தொழில்துறையில் நிலவும் சவால்கள் பற்றியும் உலகளவில் புகழ்பெற்ற நடைமுறைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. மாநாட்டில் 'தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தில் தடுப்புக் கலாச்சாரத்தை உருவாக்குதல்'; 'பொறுப்பான பராமரிப்பு - வேதித் தொழிற்சாலைகளுக்கான முழுமையான பாதுகாப்பு அமைப்பு'; 'பாதுகாப்புத் தலைமை மற்றும் திறமையை உருவாக்குதல்'; 'செயல்முறைப் பாதுகாப்புச் சிறப்பு'; 'இந்தியாவில் தீ பாதுகாப்பு சவால்கள்'; 'கட்டுமானத் தொழில் - ஒரு உயிர்ப்பான பாதுகாப்புக் கலாச்சாரத்தை உருவாக்குதல்' என்பதிலிருந்து 'பணியிட அழுத்தம்: ஒரு கூட்டு சவால்' வரையிலான தலைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளைப் பற்றிய விவாதங்கள் இடம் பெற்றிருந்தன.
இந்த மாநாட்டில் Hindustan Petroleum Corporation Limited (HPCL) பெருநிறுவன HSE நிர்வாக இயக்குனர் Mr. Narasimham; IndiGo Airlines விமானப் பாதுகாப்புத் தலைவர் Capt. Dhruv Rebbapragada; Underwriters Laboratories Inc. நிறுவனத்தின் பொதுப் பாதுகாப்பு துணைத் தலைவர் Mr. R.A.Venkitachalam; Shell India நிறுவனத்தின் தொழில் சுகாதார மருத்துவர் Dr Ashish Arora; Deepak Nitrite Ltd. நிறுவனத்தின் சுகாதார, பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தலைவர் Mr. Shailesh Raval; Larsen & Toubro Limited நிறுவனத்தின் பெருநிறுவன EHS தலைவர் Mr. Stephen Philip Storey மற்றும் AcuiZen Technologies Singapore Pte. Ltd.நிறுவனத்தின் CEO Mr. JC Sekar ஆகியோர் உள்ளிட்ட பல தலைசிறந்த பேச்சாளர்களும் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.
OSH சென்னை 2016 மாநாட்டை ஒரு தொழில்துறைக் களமாக தொழில்துறை மதிப்பிடுகின்றது மற்றும் UBM India மூலம் தென்னிந்தியாவில் நடத்தப்படும் வருடாந்திரக் கண்காட்சியின் நோக்கத்தை மீண்டும் வலியுறுத்திக் கூறுகின்றது.
Dickies India
OSH சென்னை 2016-இன் 'வழங்கும் கூட்டாளராகிய' முன்னணி சர்வதேச பணி ஆடை பிராண்டாகிய 'Dickies', கண்காட்சியில் தங்களுடைய புதிய பாதுகாப்புக் காலணியையும் செயல்திறன் தொழில்சார் பணி ஆடைகளையும் அறிமுகப்படுத்தும்.
தங்களுடைய அறிமுகத்தைப் பற்றியும் OSH சென்னை 2016-இல் வழங்கும் கூட்டாளர்களாகப் பங்கேற்பது பற்றியும் Dickies India நிறுவனத்தின் CEO மற்றும் இயக்குனர் Mr. Karthikeya R. Reddy கூறும்போது, "Dickies நிறுவனம் தனது தயாரிப்புகளை இந்தியத் தொழிலாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கான ஒரு சிறப்பான களத்தை OSH இந்தியா வழங்குகிறது. இந்த ஆண்டுக்கான பதிப்பின் ஆதரவாளர்களாக இந்தக் கண்காட்சியை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியத் தொழிலாளர்களுக்கு சர்வதேச அளவில் மிகப் பெரிய பணி ஆடைக்கான பிராண்டை நாங்கள் அறிமுகப்படுத்த விரும்புகிறோம் மற்றும் OSH அதற்கான ஒரு சிறந்த களமாக விளங்கும் என நாங்கள் நம்புகிறோம். ஜூன் 2016-இல் OSH சென்னை கண்காட்சியில் எங்களுடைய புதிய பாதுகாப்புக் காலணியையும் செயல்திறன் தொழில்சார் பணி ஆடையையும் நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம்" என்றார்.
Euro Safety Footwear
OSH சென்னை 2016-க்கான 'தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் கூட்டாளராகிய' Euro Safety Footwear, ஒவ்வொரு வகை தொழிலுக்கும் தேவையான நம்பிக்கைக்குரிய பொருட்களின் மூலம் தாங்கள் புதிதாகத் தயாரித்துள்ள பல வகையான தனிநபர் பாதுகாப்பு உபகரணத்தை (PPE) காட்சிப்படுத்தும்.
தங்களுடைய அறிமுகத்தைப் பற்றியும் OSH சென்னை 2016 உடனான தொடர்பைப் பற்றியும் பேசும்போது, Euro Safety Footwear (India) Pvt. Ltd. நிறுவனத்தின் இயக்குனர் Mr. Varun Budhiraja கூறும்போது, "நாங்கள் சில மாதங்களாகவே எங்களது புதிய தயாரிப்புக்காகப் பணிபுரிந்து வருகிறோம். ஒரு புதிய நிறுவனம் சந்தைக்குள் நுழையும்போது, அது தற்போது சந்தையின் நிலவும் பாணியைப் பின்பற்றுகிறது மற்றும் மக்கள் ஏற்கனவே வாங்கிக்கொண்டிருக்கும் தயாரிப்புகளை வழங்குகிறது. நாங்கள் சற்றுப் புதுமையாக மக்கள் வாங்க விரும்பக்கூடிய தயாரிப்புகளை வழங்க இருக்கிறோம். வசதி, சௌகரியம், தோற்றம் அனைத்தும் பாதுகாப்பு என்ற ஒரே போர்வைக்குள் இருக்க வேண்டும் என தொழிலாளர்கள் விரும்புகிறார்கள், நாங்களும் அதையே தான் வழங்குகிறோம். OSH மற்றும் Euro Safety Footwear ஆகியவை தொழில் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்கு ஒன்றிணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. முதல் முறையாக, எங்களது நம்பிக்கைக்கு வலுவூட்டும் விதமாக தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் கூட்டாளராக கண்காட்சிக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம். ஒரு தொழிலாளரின் பாதுகாப்பை விட்டுக்கொடுத்து இன்று சேமிக்கப்படும் பணம் அவரின் மரணத்துக்கே செலவிடப்படுகிறது; அதனால் குற்ற உணர்வு மட்டுமே மிஞ்சுகிறது என்பதை நாம் எப்பொழுதுமே நினைவில் கொள்ள வேண்டும்" என்றார்.
UBM India பற்றி
UBM India என்பது கண்காட்சித் தொகுப்புகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் ஆகியவற்றின் வாயிலாக உலகம் முழுவதும் உள்ள வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் ஒருங்கிணைக்கும் களங்களை தொழில்துறையினருக்கு வழங்குகின்ற இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பு நிறுவனம் ஆகும். UBM India ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் சுமார் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் நடத்துகின்றது; அதன்மூலம் பல தொழில்துறை நிறுவனங்களுக்கிடையேயான வர்த்தகத்துக்கு உதவுகின்றது. ஒரு UBM Asia நிறுவனமாகிய UBM India-வின் அலுவலகங்கள் மும்பை, புதுதில்லி, பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. UBM Asia நிறுவனம் லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM plc நிறுவனத்துக்குச் சொந்தமானது ஆகும். UBM Asia நிறுவனம் ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும், மற்றும் அது சீனா, இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளராகவும் உள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து பார்வையிடவும் ubmindia.in.
ஊடகத் தொடர்புநபர்:
மிலி லால்வானி
[email protected]
+91-22-61727000
UBM India
Share this article