சென்னை, June 10, 2016 /PRNewswire/ --
UBM India வழங்கும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு மற்றும் தீ பாதுகாப்பு நிகழ்வு
IFSEC India உடைய ஒருங்கிணைப்பாளர்களான UBM Indiaவின் 'Security and Fire Expo (SAFE) - South India' 2016, மூன்று நாள் (9 -11 ஜூன் 2016' ) வர்த்தக கண்காட்சியானது இன்று சென்னை வர்த்தக மையத்திலே தொடங்கியது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160609/10148038 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20150417/10120853 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
இந்த கண்காட்சியானது கண்காணிப்பு, உள்நுழைவு மற்றும் வீட்டு தானியக்க துறையில் இருந்து புகழ்பெற்ற இந்திய மற்றும் சர்வதேச பிராண்டுகளின் 50க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் சர்வதேச விநியோகஸ்தர்கள், ஆலோசகர்கள், தொழில் நிபுணர்கள் மற்றும் முக்கிய அரசாங்க அதிகாரிகள் ஆகியோரை ஒருசேர கொண்டுவந்து, அவர்களை ஒன்று திரளவும், உரையாடவும், பிணைக்கவும், உலகளவில் முன்னணி நிறுவனங்களில் இருந்து சமீபத்திய புதுமைகளைக் காணவும், வர்த்தக தீர்வுகளைத் தேடவும், மதிப்புமிக்க நிபுணர் உதவியைப் பெறவும், ஒரே கூரையின் கீழ் இவ்வனைத்தையும் செய்ய வைத்துள்ளது.
இந்நிகழ்வு தகவலளிக்கும் செயல்முறை விளக்கங்கள் மற்றும் நவீன தொழில் நுட்பத்தையும், துறைசார்ந்த போக்குகளையும் பார்வையாளர்கள் கற்றுக்கொள்ள ஏராளமான வாய்ப்புகளையும் அளித்து தங்கள் தொழில்களையும் வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கான சிறந்த தீர்வுகளைக் கண்டறியச் செய்கின்றது. தீவிரவாத செயல்களின் வளர்ச்சி, வளர்ந்துவரும் குற்றங்களில் விகிதங்கள், தரவு திருட்டுகள், தொலைநிலை கண்காணிப்பு, பொது உள்கட்டமைப்பின் வளர்ச்சி, வளர்ந்துவரும் தகவல்தொழில்நுட்ப செலவீனம், அரசாங்க முயற்சிகள் மற்றும் அதிகரிக்கும் பாதுகாப்புக்கான செலவீனங்கள் ஆகிய அனைத்தும் இந்தியாவிலே கண்காணிப்பு அமைப்புகளுக்கான சந்தையை ஊக்கப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கருத்து கொண்டு இருக்கின்றனர். இந்த நிலப்பரப்புக்கு எதிராக, SAFE 2016, இந்தியாவின் தெற்கு சந்தைக்கான முக்கிய பாதுகாப்பு மற்றும் தீ நிகழ்வானது தனது கண்காட்சியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் துறை போக்குகளை கற்பதற்கான வாய்ப்புகளை அளித்து தங்கள் தொழில்களையும் வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளச் செய்ய CCTV மற்றும் வீடியோ கண்காணிப்பு, பயோமெட்ரிக்ஸ் & RFID, உள்ளமைக்கப்பட்ட அமைப்புகள், அணுகல் கட்டுப்பாடு, சைபர் பாதுகாப்பு, உள்ளமைந்த அமைப்புகள், இயல்ரீதியான பாதுகாப்பு, சுற்றளவு பாதுகாப்பு, தீ கண்டறிதல் அமைப்புகள், ஊடுருகிறவர் அலாரம்கள் மற்றும் தீ அலாரம்கள் போன்ற தயாரிப்புகளை காட்சியில் வைத்தன.
இதன் இரண்டாம் ஆண்டிலே, SAFE India அளவிலும் ஆழத்திலும் வளர்ந்து, துறையின் முன்னணி வகிப்பவர்களையும், முக்கியமான கண்காட்சியாளர்களையும் கவர்ந்துள்ளது, அதில் நமது ப்ரீமியர் பங்காளர்களான Accu-Vision, ERD Technologies, Prama Hikvision, Hi-Focus, Unicam, XYZ Digital Pvt. Ltd., Samriddhi Automations Pvt. Ltd., Sparsh , Uniview and others such as A-ID Systems (I) Pvt. Ltd., Altrox World Corp, Atlanta Systems Pvt Ltd, ATSS, Automation Zone, Axestrack Software Solutions Pvt. Ltd., Cloud 9 Securities, Clumaxx Technology, Divine Eye, Gasvigil Technologies Pvt. Ltd., In4 Solutions, Jack Enterprises, Krinovate Services, Kubhera Cable Private Limited (Crest), Leaf Technologies Pvt Ltd, Mark Electronics, Matrix Comsec Pvt. Ltd., Metro Electronics, Movision Technologies, Mudra Electronics, MX-MDR Technologies Ltd, Onebee technology Pvt. Ltd., Ontracking Fzco, Rahul Cable, Ranjana Computers, Rax-Tech International, Sidhi Vinayak Security Systems, Sun Security System, Swaraj Secutech Pvt. Ltd., Unicom IT Solutions உள்ளிட்ட பலர் உள்ளடங்குவர்.
'Security and Fire Expo (SAFE) - South India' 2016 உடைய தொடக்கவிழாவிலே பேசும்போது, Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India இவ்வாறு கூறினார், "ஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் காலத்திலே, ஸ்மார்ட் நகரங்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்க, smart securityக்கான தேவை உச்சகட்ட முக்கியத்துவத்தைப் பெறுகின்றது. இன்று, துறைசார்ந்த, வர்த்தக மற்றும் குடியிருப்பு நிறுவுதல்களுக்கு நடுவே பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கு துரிதமான வளர்ச்சி தேவைப்படுகின்றது. SAFE 2016க்கான UBM Indiaவின் குறிக்கோளானது, இந்த தேவையை முன்னுக்கு கொண்டு வந்து அதற்கு பதிலளிக்கும் விதமாக தேவையான தீர்வுகளை புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வழங்கி, இந்த நிறுவனங்களின் பாதுகாப்பை வலிமைப்படுத்துவது ஆகும்."
இந்த கண்காட்சியானது தொழிற்துறையினால் பெருவாரியான வரவேற்பைப் பெற்றது, அதற்கு ஆதரவாக Electronic Security Association of India (ESAI) மற்றும் Asian Professional Security Association (APSA) இருந்தன.
தொழிற்துறையானது SAFE 2016 நிகழ்வை ஒரு தொழில்ற்துறை தளமாக மதிப்பிட்டு UBM India நடத்தும் வருடாந்திர கண்காட்சிக்கான குறிக்கோளை மீண்டும் வலியுறுத்துகின்றது.
Mr. Benni Gasper, தொழில் வளர்ச்சி மேலாளர், RAX Tech International இவ்வாறு கூறினார், "வளர்ந்துவரும் விழிப்புணர்வு காரணமாக கவனம் மற்றும் பாதுகாப்பு தொழிற்துறையானது வளர்ச்சியடைந்து வருகின்றது. இந்த துறையிலே மகத்தான ஆற்றல் இருக்கிறது ஆனால் வாய்ப்புள்ள வாடிக்கையாளர்களைக் கண்டறிந்து அவர்களை அடைவதே இதற்கான சவால். கவனம் மற்றும் பாதுகாப்புக்கான கவலைகளைக் குறித்தும், நமது தயாரிப்புகள் அவற்றை மேற்கொள்ள எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது நமக்கு முக்கியமானது. விழிப்புணர்வை ஏற்படுத்தவும் புதிய தொழில் வாய்ப்புகளை கண்டறியவும் SAFE ஒரு அற்புதமான தளம் என்று நாங்கள் நம்புகிறோம். SAFE இல் பங்கெடுத்தல் எங்கள் தொழில்கள் மீது ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற நம்பிக்கை எங்களிடம் இருக்கிறது."
Mr. Sandeep Jain, HiFocus Electronics India Pvt. Ltd இவ்வாறு கூறினார், "தொழிற்துறையானது HD analogue இல் இருந்து IPக்கு நகர்கின்றது மற்றும் IP தொழில்நுட்ப சந்தையிலே மகத்தான வாய்ப்பு இருக்கிறது. தொழிற்துறைக்கு ஒரு தீர்வு சார்ந்த தொழில்நுட்பம் தேவைப்படுகிறது, அது IP தொழில்நுட்பம் மூலம் நிறைவேற்றப்பட முடியும். உள்ளூர் சந்தையில் இருக்கும் ஒரு அம்சமானது நிறுவனத்திற்கு பயனுள்ளதாக இருக்கும், ஏனென்றால் அது உள்ளூர் சந்தைக்கான வெளிப்பாட்டைக் கொடுக்கும். SAFEஇன் இந்த நிகழ்வு தெற்கு சந்தையிலும், அதே சமயம் பான் இந்தியாவிலும் எங்களுக்கான வாய்ப்புகளை திறந்துகொடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்."
Mr.Pratheep Gandhi -தலைமை நிர்வாக அதிகாரி, Altrox World Corp இவ்வாறு கூறினார், "இதன் தொடக்கத்தில் இருந்தே நாங்கள் SAFE உடன் இணைந்து இருக்கிறோம். தொடர்ச்சியாக புதுமைகளை காட்சிப்படுத்துவதன் மூலமாகவும் சமீபத்திய தொழில்நுட்பங்களைக் கொண்டுவருவதன் மூலமாகவும் இந்த வர்த்தக கண்காட்சி அதிக முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. SAFE Indiaவில் பங்கெடுப்பது ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல அனுபவமாக இருந்து வருகிறது, ஏனென்றால் தென் இந்தியா முழுவதிலும் எங்கள் தொழிலை விரிவுபடுத்த உதவியது SAFE India உடன் இணைந்த பிறகு வர்த்தக தகுதி பெறுவதும் சாத்தியமானது."
Mr. B. Yuvraj -மேலாண்மை இயக்குநர், In4 Solutions இவ்வாறு கூறினார், "தொடக்கத்தில் இருந்தே In4 Solutions SAFE Indiaவில் பங்கேற்று வருகிறது. SAFE உடன் இணைந்ததில் இருந்து எங்கள் தொழில் 30 முதல் 40% வளர்ச்சி அடைந்துள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது மற்றும் இது எங்கள் தொழிலை சர்வதேச அளவில் விரிவுபடுத்த உதவியுள்ளது எ.கா. கதார், மலேசியா, சவுதி அரேபியா, உள்ளிட்ட சில நாடுகள். SAFE சென்னையில் நடைபெறும் தனித்துவமான கண்காட்சி ஆகும், இது எங்கள் பிராண்டு உள்ளூர் டீலர்களை அடைய உதவும் மற்றும் தயாரிப்புகளையும் தீர்வுகளையும் காட்சிப்படுத்துவதை சுலபமாக்கும்.."
SAFE 2016 இல் வெளியிடப்படுபவை
SAFE2016 நிகழ்விலே Matrix Comsec Pvt. Ltd இரண்டு வெளியீடுகள் செய்வதைக் காணமுடியும். - அதிநவீன, பிரத்தியேகமான IP சார்ந்த அணுகல் கட்டுப்பாட்டு பேனல், COSEC ARC, வழக்கமான அணுகல் கட்டுப்பாட்டு பேனல்களைக் காட்டிலும் பல பலன்களைக் கொண்டுள்ளது மற்றும் ஒரு நிறுவன தரம்வாய்ந்த மையப்படுத்தப்பட்ட வீடியோ கண்காணிப்பு தீர்வு - SATATYA SAMAS.
Mr. Jatin Desai -தயாரிப்பு மேலாளர், அணுகல் கட்டுப்பாடு மற்றும் நேர-வருகை தீர்வு, Matrix Comsec Pvt. Ltd. இவ்வாறு கூறினார், "அணுகல் கட்டுப்பாடு மற்றும் நேர-வருகை களத்திலே, வழக்கமான அணுகல் கட்டுப்பாட்டு பேனல்களைக் காட்டிலும் பல பலன்களைக் கொண்டுள்ள, அதிநவீன, பிரத்தியேகமான IP சார்ந்த அணுகல் கட்டுப்பாட்டு பேனல், COSEC ARCஐ Matrix இந்நிகழ்விலே வெளியிடும். PoE சார்ந்து இருப்பதால், இது சிக்கலான ஒயரிங் மற்றும் உள்ளூர் மின்சார தேவைகளை நீக்கிவிடுகின்றது. இதன் டின் ரயில் மற்றும் வால் மவுண்ட் குறுகலான இடத்திலும்கூட மேலே வைக்கப்படுவதற்கான வளைவுத்தன்மையைக் கொடுக்கின்றது. கூடுதலாக, Matrix தனது ரகத்திலான நிறுவன தரம்வாந்த நேர-வருகை மற்றும் அணுகல் கட்டுப்பாட்டு தீர்வுகளை நிகழ்விலே வெளியிடும். 'உங்கள் மொபைல் உங்கள் அடையாளம்' தொழில்நுட்பத்தின் மீது கவனம் செலுத்தி QR குறியீடு சார்ந்த அணுகல் கட்டுப்பாடு, ப்ளூடூத் சார்ந்த அணுகல் கட்டுப்பாடு மற்றும் ஸ்மார்ட் ஃபோனைப் பயன்படுத்தி தானியக்க வருகைப்பதிவு குறித்தல் ஆகியவை முக்கியமான கண்காட்சியில் இருக்கும்."
Mr. Kaushal Kadakia -தயாரிப்பு மேலாளர், வீடியோ கண்காணிப்பு , Matrix Comsec Pvt Ltd. இவ்வாறு கூறினார், "செயல்பாடு நிறைந்த மற்றும் நம்பகமான ரகத்திலான NVRகள், HVRகள் மற்றும் IP கேமராக்களை தனது வீடியோ கண்காணிப்பு சுயவிவரத்திலே சேர்த்ததோடு அடுத்தகட்டமாக, தனது நிறுவன தரம்வாய்ந்த மையப்படுத்தப்பட்ட வீடியோ கண்காணிப்பு தீர்வு - SATATYA SAMASஐMatrix வெளியிடும். "பார்க்கக்கூடிய நிலை, கட்டுப்பாடு, அறிவாற்றல் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகிய நான்கு தூண்களின் மேல் கட்டப்பட்ட இது பெரிய மற்றும் பல இடங்களில் இருக்கும் நிறுவனத்தின் வித்தியாசமான மற்றும் சிக்கலான தேவைகளை மேற்கொள்கின்றது. இந்த அளவிடக்கூடிய மற்றும் மாடுலர் தீர்வோடு அறிவாற்றல் மிக்க அம்சங்களும் வீடியோ பகுப்பாய்வுகளும் நிறுவனமானது முன்னெச்சரிக்கையுடன் பதிலளித்து சம்பவங்களைத் தவிர்க்க உதவும்."
UBM India பற்றி
UBM India என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அது கண்காட்சிகளின் தொகுப்பு, உள்ளடக்கங்களினால் வழிநடத்தப்படும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், மூலமாக உலகெங்கும் இருந்து வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒன்று சேர்க்கும் தளங்களை அளிக்கிறது. UBM India ஆண்டுதோறும் நாடு முழுவதும் 25 பெரிய அளவு கண்காட்சிகளையும், 40 மாநாடுகளையும் அளிக்கிறது; இதன் மூலம் பல நிறுவன பிரிவுகளில் வணிகத்தை செயல்படுத்துகின்றது. ஒரு UBM Asia நிறுவனமான, UBM இந்தியாவுக்கு மும்பை, புதுதில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM ஆசியா லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM Plcக்கு சொந்தமானது. UBM Asiaவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகவும் சீனாவின் பெருநிலப்பகுதியிலும், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளில் வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து வருகைதாருங்கள் www.ubmindia.in .
ஊடக தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
UBM India
Share this article