மும்பை, June 1, 2016 /PRNewswire/ --
மருந்துப்பொருள் பேக்கேஜிங் புத்துருவாக்கங்களுக்கான முதன்மைக் களம்
எண்ணற்ற வெற்றிகரமான மருந்துத் தயாரிப்பு சார்ந்த மாநாடுகளை நடத்தியுள்ள UBM India நிறுவனத்தின் ஒரு பிரிவாகிய CPhI Conferences, மும்பை Sahara Star-இல் ஜூன் 2016, 2 மற்றும் 3ஆம் தேதிகளில் 5வது வருடாந்திர InnoPack Pharma Confex நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. InnoPack ஆனது CPhI Worldwide-இன் ஒரு சர்வதேச பிராண்டு ஆகும் மற்றும் இது சர்வதேச மருந்துத் தயாரிப்புத் தொழில்துறையில் நடைபெறுகின்ற புகழ்பெற்ற நிகழ்வுகளில் ஒன்று ஆகும். இந்த மாநாடு பேக்கேஜிங் மற்றும் மருந்துத் தயாரிப்புத் தொழிற்சாலைகளைச் சேர்ந்த வாங்குவோரையும் வழங்குனர்களையும் ஒன்றிணைப்பதன் மூலம் அர்ப்பணிப்பு மிக்க உலகளாவிய அங்காடி வாயிலாக வணிக வாய்ப்புகளையும் உருவாக்குகிறது. இது எண்ணங்களையும் அறிவையும் ஒன்று திரட்டவும், பிணைக்கவும், பரிமாற்றிக்கொள்ளவும், எதிர்காலக் கூட்டு உடன்படிக்கைகளை உருவாக்கவும் மற்றும் மருந்துப் பொருள் பேக்கேஜிங் தொழிலின் எதிர்காலத்தை வடிவமைக்கவும் மருந்துத் தயாரிப்பு வல்லுநர்கள் அனைவரையும் ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைக்கிறது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160531/10147276 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
இந்த மாநாடு உலகளாவிய பேக்கேஜிங் கண்ணோட்டத்தின் மூலம் மருந்துப் பொருள் பேக்கேஜிங்கில் புதுமைகள் வாயிலாக நீடிப்புத்தன்மையில் கவனம் செலுத்தக்கூடிய பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்தும். இந்த மாநாடு புதிய மற்றும் முன்-அறிந்திராத சந்தைகளில் வாய்ப்புகளை உருவாக்கி தடம் பதிப்பதற்கு தொழில்துறைக்கு உதவி செய்யும்.
மருந்துப் பொருள் பேக்கேஜிங் புதுமைகளுக்கான மிகப் பெரிய களமாக இருக்கும் என உறுதியாக நம்பக்கூடிய இந்த மாநாட்டில் இந்தியாவின் மருந்துத் தயாரிப்புத் தொழிலுக்கான பண்புக்கூறுகள், இன்றியமையாத சவால்கள், மேம்பட்ட பேக்கேஜிங் தீர்வுகள் மற்றும் முன்னோக்கிய பாதை ஆகியவற்றைப் பற்றி விவாதிப்பதற்காக சந்திக்கக்கூடிய அறிவுசார் சிந்தனையாளர்கள் கலந்துகொள்வார்கள். மேலும் இதில் குழந்தைப் பாதுகாப்பு பேக்கேஜிங், கண்காணித்துக் கண்டறியும் பேக்கேஜிங் வடிவமைப்பு, தொடர் வெளியீடாக்குதல், வாடிக்கையாளர் பாதுகாப்பில் கவனம் செலுத்துதல், 3D அச்சிடுதல் ஆகியவை குறித்த நிகழ்வு ஆய்வு விவாதங்களும், மற்றும் முன்-நிரப்பப்பட்ட சிரிஞ்சுகள் மற்றும் வடித்திறக்கக்கூடியவை மற்றும் நீர்விட்டுக் கழுவக்கூடியவை ஆகியவை குறித்து பிரமுகர்களின் குழு விவாதங்களும் அதைத் தொடர்ந்து கேள்வி பதில் அமர்வுகளும் இடம் பெறும்.
இந்த ஆண்டு, இந்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் வர்த்தகத் துறை இணைச் செயலாளர் மதிப்புக்குரிய Shri Sudhanshu Pandey; மத்திய மருந்து தரநிலைக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் துணை மருந்துக் கட்டுப்பாளர் (இந்தியா) Dr. K Bangarurajan மற்றும் இந்திய மருந்து ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் இயக்குனர் ஜெனரல் Dr. Appaji PV ஆகியோரால் மாநாடு தொடங்கி வைக்கப்படும். இவர்கள் மருந்துப்பொருள் பேக்கேஜிங்குக்கான இந்திய மற்றும் ஏற்றுமதி ஒழுங்குவிதிகளைப் பற்றி விரிவாக விவாதிப்பார்கள்.
இந்த இரண்டு நாள் மாநாட்டில் Dr. Reddy's Laboratories-இன் பேக்கேஜிங் துறையின் முதுநிலை இயக்குனர் மற்றும் தலைவர் Mr. Sanjay Ghoshal; Mylan துணைத் தலைவர் Mr. Prabir Das; Global Scientific Affairs, Datwyler Pharma Packaging India முதுநிலை மேலாளர் Mr. Renaud Janssen; Sun Pharma இணை இயக்குனர் Mr. Santanu Chowdhury; West Pharmaceutical Packaging India நிறுவனத்தின் சந்தை மேம்பாடு, புத்துருவாக்கம் மற்றும் தொழில்நுட்பத் துறையின் இயக்குனர் Mr. Nicolas Brandes; Elmach Packages India-வின் தொழில்நுட்ப இயக்குனர் Mr. Sudish Sukumaran மற்றும் Lupin பேக்கேஜிங் இயக்குனர் Mr. Abhijit Chatterjee உள்ளிட்ட புகழ்பெற்ற பேச்சாளர்கள் பங்கேற்பார்கள்.
இந்த மாநாட்டைத் தொடர்ந்து Accupack நிறுவனத்துடன் இணைந்து India Packaging Awards வழங்கப்படும். இந்த விருதுகள் பேக்கேஜிங் தொழிலில் உள்ள சிறப்புத்தன்மை மற்றும் புத்துருவாக்கங்களை அடையாளம் கண்டறிந்து பேக்கேஜிங்கின் புதிய அடித்தளங்களைத் தகர்க்கின்ற சிந்தனையாளர்களையும் படைப்பாளர்களையும் பாராட்டுகின்றன.
மாலையில் தொழில்துறையின் சூத்திரதாரிகளை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக தொழில்துறையின் வெற்றியாளர்கள் ஒரே மேடையில் தோன்றுவார்கள் மற்றும் தொழில்துறையின் முன்னணி நிறுவனங்களின் விளக்கக்காட்சிகளும் இதில் இடம் பெறும். விருது மற்றும் அங்கீகார விழாவுடன் சேர்த்து பிரத்யேக தயாரிப்பு அறிமுகங்கள், பொழுதுபோக்குச் செயல்பாடுகள் ஆகியவையும் இடம் பெறும்.
India Packaging Awards பின்வரும் பிரிவுகளில் 100க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது:
5வது வருடாந்திர InnoPack Pharma Confex அறிவிப்பு குறித்துப் பேசும்போது, UBM India நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் Mr. Yogesh Mudras கூறியதாவது, "பேக்கேஜிங் ஒரு வளர்ந்துவரும் அறிவியல், வளர்ந்துவரும் பொறியியல் பிரிவு ஆகும் மற்றும் அது மருந்துத் தயாரிப்புத் தொழிற்சாலைகளுக்கான வெற்றிகரமான பங்களிப்பாளராக விளங்குகிறது. InnoPack Pharma Confex, மருந்துகள் பேக்கேஜிங்கில் புத்துருவாக்கங்கள் வாயிலாக நீடிப்புத்தன்மையில் கவனம் செலுத்துவதன் மூலம் உலகளாவிய பேக்கேஜிங் கண்ணோட்டத்தின் மூலம் பேக்கேஜிங்கின் பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்துவதற்கு உதவும். இந்த மாநாடு வாய்ப்புகளை உருவாக்குவதிலும் புதிய சந்தைகளில் தடம் பதிப்பதையும் மேலும் எளிதாக்கும்."
"மேலும் UBM India நிறுவனம் பேக்கேஜிங் கண்டுபிடிப்பாளர்களை சர்வதேசப் பார்வையாளர்களுக்கு வெளிக்காட்டுவதன் மூலம் சர்வதேச அளவில் பேக்கேஜிங் தொழில் மற்றும் சிந்தனைத் தலைமையில் சிறப்புத்தன்மையையும் புத்துருவாக்கங்களையும் அடையாளம் கண்டறிந்து பாராட்டும் வகையில் India Packaging Awards-ஐயும் வழங்குகிறது" என அவர் மேலும் கூறினார்.
UBM India பற்றி
UBM India என்பது கண்காட்சித் தொகுப்புகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் ஆகியவற்றின் வாயிலாக உலகம் முழுவதும் உள்ள வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் ஒருங்கிணைக்கும் களங்களை தொழில்துறையினருக்கு வழங்குகின்ற இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பு நிறுவனம் ஆகும். UBM India ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் சுமார் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் நடத்துகின்றது; அதன்மூலம் பல தொழில்துறை நிறுவனங்களுக்கிடையேயான வர்த்தகத்துக்கு உதவுகின்றது. ஒரு UBM Asia நிறுவனமாகிய UBM India-வின் அலுவலகங்கள் மும்பை, புதுதில்லி, பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. UBM Asia நிறுவனம் லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM plc நிறுவனத்துக்குச் சொந்தமானது ஆகும். UBM Asia நிறுவனம் ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும், மற்றும் அது சீனா, இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளராகவும் உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து பார்வையிடவும் : ubmindia.in
ஊடகத் தொடர்புநபர்:
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
UBM India
Share this article