மும்பை, May 30, 2016 /PRNewswire/ --
கண்காட்சியின் 4வது பதிப்பை இத் துறையைச் சார்ந்த புகழ்பெற்ற இந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பங்கேற்புடன் UBM India வெற்றிகரமாக நடத்தி முடித்தது
மும்பையில் உள்ள பாம்பே மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில், தயாரிப்புகள், தீர்வுகள் மற்றும் சேவைகளின் தொழில்துறைக் காட்சியளிப்புகளுக்கு மத்தியில், 10 நாடுகளிலிருந்து 150க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் சர்வதேச வழங்குனர்களும் தயாரிப்பாளர்களும், மற்றும் 5500க்கும் மேற்பட்ட வர்த்தகப் பார்வையாளர்களும் பங்கேற்ற கான்கிரீட் கண்காட்சி இந்தியா-வின் 4வது பதிப்பை UBM India கடந்த வாரம் (மே 2015, 19 முதல் 21ஆம் தேதி வரை) வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160422/10144607 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
இந்தக் கண்காட்சி Maharashtra State Road Development Corporation Ltd. (MSRDC) இணை நிர்வாக இயக்குநர் Shri. S. M. Ramchandani அவர்களின் தலைமை உரையுடனும், சிறப்பு விருந்தினராகிய Shri. Eknath Sambhaji Shinde, கேபினட் அமைச்சர், PWD (MSRDC, பொதுத் துறை), மஹாராஷ்டிர அரசு அவர்களின் சிறப்புரையுடனும் கோலாகலமாகத் தொடங்கியது. இவர்களுடன், முக்கியப் பிரமுகர்களாகிய நாடாளுமன்ற உறுப்பினர்(MP) Shri Gajanan Kirtikar, இளைஞரணி உறுப்பினர் Shri. Varun Sardesai, Cement Manufacturers Association (CMA) பொதுச் செயலாளர் Shri. N. A. Viswanathan, Indian Concrete Institute (ICI) தலைவர் Dr. Manamohan R Kalgal மற்றும் UBM India நிர்வாக இயக்குநர் Mr. Yogesh Mudras ஆகியோரும், இத் துறையைச் சேர்ந்த இதர பல பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
கான்கிரீட் கண்காட்சி இந்தியா இத் துறைக்கான புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துவதற்கு உதவி செய்யும் என்றும், இது மாநில அளவில் தொடங்கப்பட்டுள்ள புதிய செயல்திட்டங்களுக்கு மதிப்புச் சேர்க்கும் என்றும் தொடக்க நிகழ்ச்சியில் பேசும்போது தலைமை விருந்தினர் Shri. Eknath Shinde சுட்டிக்காட்டினார். மேலும் அவர் கூறும்போது 'Make in India' பிரச்சாரத்தில் மஹாராஷ்டிராவின் பங்களிப்பு மிகப் பெரிய அளவில் இருக்க வேண்டுமெனத் தெரிவித்தார். சாலைத் திட்டங்களின் கட்டுமானத்துக்காக அவர்கள் Maharashtra State Road Development Corporation Ltd. (MSRDC) உடன் கூட்டுச் சேர்ந்துள்ளனர் மற்றும் எதிர்காலத்தில் அத்தகைய திட்டங்களை முடிப்பதற்கு ஆகும் நேரத்தைக் குறைக்க உதவக்கூடிய மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் அவர்கள் கவனம் செலுத்துவார்கள்.
தொழில்நுட்பப் போக்குகள் மற்றும் சந்தை நடவடிக்கைகள் தொடர்பான ஆழ்ந்த பார்வையைப் பெறுவதற்கு சீனா, துருக்கி, ஜெர்மனி, கொரியா, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா மற்றும் மதிப்புச் சங்கிலி முழுவதும் இருந்து உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானத் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தியா வந்தனர். இந்தக் கண்காட்சியில் இதர நிகழ்ச்சிகளுக்கிடையே L&T Construction, Gammon India Limited, Ambuja Cements Limited மற்றும் Bauchemie (India) Private Limited போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களைச் சேர்ந்த தொழில்துறைப் பேச்சாளர்களைக் கொண்டு நடத்தப்பட்ட அறிவு சார்ந்த அமர்வுகளுக்கான நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. முதலாவது நாளில் மற்றவற்றுக்கு இடையே, மறுவலுவூட்டப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் (RCC) கட்டமைப்புகளுக்கான வடிவமைப்புத் தொழில்நுட்பத்தில் மேம்பாடுகள், அடுக்குமாடிக் கட்டிடங்களுக்கான நில அதிர்வு வடிவமைப்பு, மேம்பாலங்களின் வடிவமைப்பிலும் கட்டுமானத்திலும் நவீன உத்திகள், உயர்ந்த கட்டிடங்கள் மற்றும் சுரங்க வழிகள் ஆகிய தலைப்புகளில் விளக்க உரைகள் இடம் பெற்றிருந்தன. அதே சமயம், இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் மற்றவற்றுக்கு இடையே உள்கட்டமைப்பு, பாலங்களின் வடிவமைப்பும் கட்டுமானமும்: சிறந்த நடைமுறைகள், ஆய்வு, பழுதுபார்ப்பு, பாலங்களின் மறுசீரமைப்பு மற்றும் பராமரிப்பு மற்றும் இதர கட்டமைப்புகள், தர உறுதிப்பாட்டு அமைப்பு மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கான TQM மற்றும் கான்கிரீட் கலவைத் தொழில்நுட்பம் ஆகிய கருத்துக்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்றன.
கண்டுபிடிப்புகள் பகுதி, தயாரிப்புகள் அறிமுகம் மற்றும் கான்கிரீட் மனிதன் ஆகியவை நிகழ்ச்சியின் சில முக்கியக் கூறுகளாக இடம் பெற்றிருந்தன.
கண்டுபிடிப்புகள் பகுதியில் Hicrete, Ashtech, Lucid colloids, UN Sons மற்றும் J.K.Cement ஆகிய ஐந்து நிறுவனங்கள் பங்கேற்றன. கண்டுபிடிப்புகள் பகுதியில் Viewer's Choice விருதை இந்தியாவில் பல்வேறு அலங்கார கான்கிரீட் தரை அமைப்புகளுக்கான கருத்தை அறிமுகப்படுத்திய Hicrete Decorative Systems Pvt.Ltd. நிறுவனம் வென்றது. இது உயர் தரமான அலங்கார கான்கிரீட் தயாரிப்புகள், சேவை, உபகரணம் மற்றும் ஆதரவு ஆகிய அனைத்தையும் ஒரே இடத்தில் நமக்கு வழங்கும் நிறுவனம் ஆகும்.
கான்கிரீட் கண்காட்சி இந்தியா 2016 வெற்றிகரமாக முடிந்ததைப் பற்றிப் பேசும்போது, UBM India நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் Mr. Yogesh Mudras கூறியதாவது, "உள்கட்டமைப்பு மற்றும் சாலைத் திட்டங்களில் அரசாங்கம் காட்டி வரும் பெரிய ஈடுபாடு கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புத் துறையிலுள்ள பங்குதாரர்களுக்கு மிகப் பெரிய சாத்தியத்தை வழங்குகிறது. இந்தியாவில் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளுடன் சேர்த்து உள்கட்டமைப்பில் அரசாங்கம் சமீபத்தில் தனது முதலீட்டை அதிகரித்திருப்பது துறையின் சாத்தியத்துக்கும் அதன் உண்மைக்கும் இடையிலுள்ள இடைவெளியைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. UBM India, கான்கிரீட் கண்காட்சி இந்தியாவின் 4வது பதிப்பின் வாயிலாக சிறந்த தொழில்நுட்பங்கள், நடைமுறைகள், வளர்ச்சிகள், பிராண்டுகள், வழிவகை அறிவு மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை உண்டாக்கியதன் மூலம் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புத் தொழிலுக்கு ஒரு களத்தை வழங்கியதன் மூலமாக கான்கிரீட் கண்காட்சி இந்தியா தனது குறிக்கோளை ஒரே நேரத்தில் அடைந்துள்ளது. முதல் முறையாக பல காலாண்டுகளுக்குப் பிறகு சிமெண்ட்டுக்கான தேவை அதிகரித்துள்ளதை நாம் காண்கிறோம்."
இக் கண்காட்சியில் முன்னணி நிறுவனங்களாகிய Cosben Equipments, Elematic India Private Limited, Godrej Construction, Hess Concrete Machinery India Pvt. Ltd., Hyundai Aluminum Co. Ltd., J K Cement, JSW Cement, Masa Concrete Plants India Pvt. Ltd., Perma Construction Aids Pvt. Ltd., PERI India Private Limited, ROTHO - Robert Thomas, Smooth-On, Inc., Sommer Anlagentechnik GmbH, Toyota Forms, WAM India Pvt. Ltd., Putzmeister, Ultra Tech Cement, Sika, Greaves Cotton, Imagico, Kyb-Conmat, Ajax Fiori மற்றும் Wehrhahn Gmbh ஆகியவை உள்ளிட்ட பல நிறுவனங்கள் பங்கேற்றன.
இந்தக் கண்காட்சி இந்திய கான்கிரீட் நிறுவனம் (ICI), இந்திய கட்டுமானதாரர் சங்கம் (BAI), கன்சல்டிங் சிவில் என்ஜினியர்கள் சங்கம் (இந்தியா) (ACCE), இந்திய கட்டமைப்புப் பொறியாளர்கள் சங்கம் (ISSE), இந்தியப் பொறியாளர்கள் நிறுவனம் (IEI), இந்திய கட்டமைப்புப் பொறியாளர்கள் சங்கம் (IAstruct), இந்திய பாலங்கள் பொறியியல் நிறுவனம் (IIBE), சிமெண்ட் தயாரிப்பாளர்கள் சங்கம் (CMA), கட்டுமான வேதிப்பொருட்கள் உற்பத்தியாளர் சங்கம் (CCMA) மற்றும் ரெடி மிக்ஸ்டு கான்கிரீட் தயாரிப்பாளர்கள் சங்கம் (RMCMA) ஆகியோரின் ஆதரவுடன் பெரிய வரவேற்பைப் பெற்றது.
தொழில்துறை, கான்கிரீட் கண்காட்சி இந்தியா 2016ஐ ஒரு தொழில்துறைக் களமாக உற்பத்தி செய்துள்ளது மற்றும் UBM India மூலம் நடத்தப்படும் வருடாந்திரக் கண்காட்சியின் நோக்கத்தை மீண்டும் வலியுறுத்துகிறது.
மேற்கோள்கள்:
Mr. Rahul Akkara, துணைத் தலைவர், உத்தி மற்றும் பிராண்டு - JSW Cement
" JSW Cement நிறுவனம் தனது கண்டுபிடிப்புகளையும் பல்வேறு தயாரிப்புகளையும் தனது வாடிக்கையாளர்களுக்குக் காட்சிப்படுத்துவதற்கான ஒரு சிறந்த களமாக கான்கிரீட் கண்காட்சி இந்தியா எப்பொழுதுமே இருந்து வருகிறது. நாங்கள் தொடர்ந்து 2வது ஆண்டாக இதில் பங்கேற்றுள்ளோம். இந்தியா முழுவதும் எங்களுடைய சாத்தியமுள்ள வாடிக்கையாளர்களைச் சென்றடைவதற்கு இந்தக் களம் உதவியுள்ளதால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளோம்."
Mr. Rajkumar Oswal, இயக்குநர் - Toyota Forms India Pvt Ltd
"கான்கிரீட் இந்தியா கண்காட்சியில் நாங்கள் மூன்றாவது ஆண்டாகப் பங்கேற்றிருக்கிறோம். கான்கிரீட் இந்தியா கண்காட்சியில் எங்களுக்கு உள்ள முந்தைய அனுபவத்தின் காரணமாக, தொழில்துறையில் உள்ள முக்கிய முடிவெடுப்பவர்கள் மற்றும் வாங்குநர்களுடன் தொடர்புகொண்டதன் வாயிலாக எங்களது விற்பனையில் நாங்கள் வளர்ச்சி கண்டுள்ளோம். வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான எங்களது திட்டங்கள் மூலம், அகமதாபாத்தில் ஒரு புதிய தயாரிப்புக் கிளையை நாங்கள் அமைத்துள்ளோம். இந்த நிகழ்ச்சியின் மூலம் அகமதாபாத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் வாய்ப்புகளைப் பெறுவதற்கு எங்களுக்கு உதவும் என நாங்கள் நம்புகிறோம். எங்களது பிரீகாஸ்ட் தயாரிப்புகளாகிய மேன்ஹோல் மற்றும் மோல்ட்களைக் காட்சிப்படுத்துவதற்கான ஒரு களமாகவும் இதை நாங்கள் எடுத்துக்கொள்வோம்."
Mr. Punit Mehta, மேலாளர் - Tally Solutions
"இந்தக் கண்காட்சி எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது மற்றும் B2B வாடிக்கையாளர்களிடமிருந்து நாங்கள் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளோம். இந்தியாவின் இதர பகுதிகளிலிருந்து எங்களை பலர் விசாரித்துச் சென்றுள்ளனர் மற்றும் தென்னிந்தியச் சந்தையில் ஒரு பெரும் சாத்தியத்தை நாங்கள் பார்க்கிறோம்."
Mr. Maninder Singh, விற்பனை மேலாளர் (இந்தியா) - Sommer Anlagentechnik GmbH
"கான்கிரீட் இந்தியா கண்காட்சியில் நாங்கள் இரண்டாவது ஆண்டாகப் பங்கேற்றிருக்கிறோம். இந்தக் கண்காட்சி ஒரு நல்ல கருத்து மற்றும் சூழலின் அடிப்படையில் அமைந்துள்ளதன் காரணமாக நாங்கள் எப்பொழுதுமே தொழில்துறை சார்ந்த விசாரணைகள் மூலம் தரமான பார்வையாளர்களைப் பெற்று வந்திருக்கிறோம். இந்தக் கண்காட்சி முக்கிய முடிவெடுப்பவர்களுடன் இணைவதற்கான சிறந்த களத்தை வழங்குகிறது மற்றும் இது ஒவ்வொரு ஆண்டும் புதுமையான வளர்ச்சிகளைக் காண்கிறது. தில்லி மற்றும் பெங்களூரு ஆகியவை இந்தக் கண்காட்சியின் மூலம் நாங்கள் பெற்றுள்ள இதர சாத்தியமுள்ள சந்தைகள் ஆகும்."
Ms. Saumya Mittal, வணிக வளர்ச்சி மேலாளர் - GoRMC
"இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சியில் பல சாத்தியமுள்ள முதன்மைகளை நாங்கள் கண்டுள்ளோம். இந்த நிகழ்ச்சி மிகவும் தொழில்முறையாக கையாளப்பட்டது, மேலும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு வகைப்பட்ட வாடிக்கையாளர்களை நாங்கள் பார்த்தோம். கான்கிரீட் இந்தியா கண்காட்சியின் வாயிலாக பல்வேறு சந்தைப் போக்குகளை நாங்கள் புரிந்துகொண்டோம் மற்றும் இது தொழில்துறையைக் கூர்ந்து ஆராய்வதற்கு இதர நிறுவனங்களை ஆய்வு செய்வதற்கும் எங்களுக்கு உதவுகிறது. தொழில்துறை வல்லுநர்கள் எங்கள் காட்சியிடத்தைப் பார்வையிட்டனர், இது எதிர்காலத்துக்கான சாத்தியமுள்ள வழிகாட்டுதலை உருவாக்கியது."
Mr. Jijo James, மண்டல மேலாளர் - Putzmeister
"கான்கிரீட் இந்தியா கண்காட்சியில் நாங்கள் இந்த ஆண்டு தான் முதல் முறையாகப் பங்கேற்கிறோம். இது போன்ற நிகழ்ச்சி புதிய மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் தொழில்துறை வளர்ச்சியடைவதற்கு உதவுகிறது. தென்னிந்தியச் சந்தையில் மிகப் பெரிய வாய்ப்புள்ளது மற்றும் அந்தப் பகுதிகளில் கூட விளம்பரத்தின் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். எங்கள் காட்சியிடத்தைப் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை எங்களுக்குத் திருப்தியளிப்பதாக இருந்தது."
Mr. Prakash Kandaraj, இயக்குநர், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் - Cetas
"எங்களுடைய முதல் வருடப் பங்கேற்பிலேயே பார்வையாளர்களைப் பொறுத்த வரை நாங்கள் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளோம். எதிர்காலத்தில் எங்களது வளர்ச்சி அதிகரிக்கும் என்பதால் மேற்கு மண்டலத்திலிருந்து அதிகமான வாடிக்கையாளர்களை நாங்கள் கவர வேண்டும் என்பதை உணர்கிறோம். தெற்குப் பகுதிச் சந்தையும் வளர்ந்து வருகிறது, எனவே அங்கும் கூட ஒரு கண்காட்சியில் பங்கேற்பதற்கு நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்."
Mr. Rajendra Sonawane, நிர்வாக இயக்குநர் - AHP Machines
"எங்களது காட்சியிடத்துக்குக் கிடைத்த வரவேற்பு பாராட்டத்தக்கதாக இருந்தது. சந்தையில் நிலவுகின்ற புதுமைப் படைப்புகளைக் காண்பது மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. நாங்கள் முதல் முறையாக கலந்துகொள்ளும் இந்த கான்கிரீட் கண்காட்சி இந்தியா நிகழ்ச்சியில் எங்களுக்குக் கிடைத்த ஒட்டுமொத்த அனுபவம் எங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. அடுத்த ஆண்டு நாங்கள் மீண்டும் பங்கேற்போம் என நம்புகிறோம்."
UBM India பற்றி
UBM India என்பது கண்காட்சித் தொகுப்புகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் ஆகியவற்றின் வாயிலாக உலகம் முழுவதும் உள்ள வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் ஒருங்கிணைக்கும் களங்களை தொழில்துறையினருக்கு வழங்குகின்ற இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பு நிறுவனம் ஆகும். UBM India ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் சுமார் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் நடத்துகின்றது; அதன்மூலம் பல தொழில்துறை நிறுவனங்களுக்கிடையேயான வர்த்தகத்துக்கு உதவுகின்றது. ஒரு UBM Asia நிறுவனமாகிய UBM India-வின் அலுவலகங்கள் மும்பை, புதுதில்லி, பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. UBM Asia நிறுவனம் லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM plc நிறுவனத்துக்குச் சொந்தமானது ஆகும். UBM Asia நிறுவனம் ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும், மற்றும் அது சீனா, இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளராகவும் உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து பார்வையிடவும் : ubmindia.in
ஊடகத் தொடர்புநபர்:
Mili Lalwani
[email protected]
022-61727000
UBM India
Share this article