சென்னை, May 27, 2016 /PRNewswire/ --
UBM India மூலம் நடத்தப்படும் தென்னிந்தியாவின் ஒரேயொரு பாதுகாப்பு மற்றும் தீ கண்காட்சி
முதலாவது நிகழ்வை வெற்றிகரமாக முடித்த பிறகு, IFSEC India வின் ஒருங்கிணைப்பாளர்களாகிய UBM India, 'பாதுகாப்பு மற்றும் தீ கண்காட்சி (SAFE) - தென்னிந்தியா'வின் இரண்டாவது நிகழ்வை அறிவித்தது. Chennai Trade Centre இல் ஜூன் 2016, 9 முதல் 11ஆம் தேதி வரை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி, கண்காணிப்பு, நுழைவாயில் மற்றும் வீட்டுக்கான தானியங்கி உபகரணங்கள் தொழில்துறையிலிருந்து 60க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற இந்திய மற்றும் சர்வதேச பிராண்டுகள், ஆலோசகர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகள் ஆகியோரை உலகின் முன்னணி நிறுவனங்களின் சமீபத்திய புதிய கண்டுபிடிப்புகளையும் ஆதார வணிகத் தீர்வுகளையும் ஒன்றுதிரட்டுவது, தொடர்புகொள்வது, பிணைப்பது, பார்ப்பது மற்றும் மதிப்புமிக்க வல்லுநர் ஆதரவைத் திரட்டுவது ஆகிய அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தக் கண்காட்சிக்கு Electronic Security Association of India (ESAI) மற்றும் Asian Professional Security Association (APSA) ஆகியவை ஆதரவளித்துள்ளன.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20150417/10120853 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
இந்தக் கண்காட்சி சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறைப் போக்குகளைப் பற்றித் தெரிந்துகொள்ளவும், தங்களுடைய வணிகத்தையும் வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கான சிறந்த தீர்வுகளைக் கண்டுபிடிப்பதற்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்குகிறது. SAFE - தென்னிந்தியா, CCTV மற்றும் வீடியோ கண்காணிப்பு, பயோமெட்ரிக்ஸ் மற்றும் RFID, ஒருங்கிணைந்த அமைப்புகள், அணுகல் கட்டுப்பாடு, சைபர் பாதுகாப்பு, ஒருங்கிணைந்த அமைப்புகள், புறப் பாதுகாப்பு, எல்லைப் பாதுகாப்பு, தீ கண்டறியும் அமைப்புகள், வெளிநபர் எச்சரிக்கை அலாரங்கள் மற்றும் தீ விபத்து அலாரங்கள் என்பன போன்ற தயாரிப்புகளைக் காட்சிக்கு வைப்பதன் மூலம் இந்தியாவின் தென்மண்டலச் சந்தையின் முக்கிய பாதுகாப்பு மற்றும் தீ சார்ந்த நிகழ்ச்சியாகி உள்ளது.
தனது இரண்டாவது ஆண்டில், எங்களது முதன்மையான கூட்டாளர் நிறுவனங்களாகிய Accu-Vision, ERD Technologies, Prama Hikvision, Hi-Focus, Unicam, XYZ Digital Pvt. Ltd., Samriddhi Automations Pvt. Ltd., Sparsh , Uniview மற்றும் இதர நிறுவனங்களாகிய A-ID Systems (I) Pvt. Ltd., Altrox World Corp, Atlanta Systems Pvt Ltd, ATSS, Automation Zone, Axestrack Software Solutions Pvt. Ltd., Cloud 9 Securities, Clumaxx Technology, Divine Eye, Gasvigil Technologies Pvt. Ltd., In4 Solutions, Jack Enterprises, Krinovate Services, Kubhera Cable Private Limited (Crest), Leaf Technologies Pvt Ltd, Mark Electronics, Matrix Comsec Pvt. Ltd., Metro Electronics, Movision Technologies, Mudra Electronics, MX-MDR Technologies Ltd, Onebee technology Pvt. Ltd., Ontracking Fzco, Rahul Cable, Ranjana Computers, Rax-Tech International, Sidhi Vinayak Security Systems, Sun Security System, Swaraj Secutech Pvt. Ltd., Unicom IT Solutions ஆகியவை உள்ளிட்ட தொழில்துறையில் முன்னிலையில் விளங்கும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் முக்கியக் காட்சியாளர்களைக் கவர்ந்திழுத்திருப்பதன் மூலம் SAFE India தனது அளவிலும் ஆழத்திலும் பெருகியுள்ளது.
இந்த அறிவிப்பு குறித்துப் பேசியபோது, UBM India Pvt. Ltd.நிர்வாக இயக்குநர் Mr. Yogesh Mudras கூறியதாவது, "இன்று, உலகின் மிகப் பாதுகாப்பான நகரங்கள் சிலவற்றில் ஏற்கப்பட்டுள்ள மிகச் சிறந்த நடைமுறைகளுக்கு இயைந்த வகையில் பாதுகாப்பான பணிபுரியும் சூழ்நிலையை வழங்குவதற்கான தேவை குறித்து தென்னிந்திய மாநில அரசுகள் மத்தியில் பெருகியுள்ள ஒருமித்த கருத்து பாதுகாப்புத் தொழில்துறையில் முன்னணி நிறுவனங்களுக்கிடையே கடுமையான போட்டிக்கான களத்தை அமைத்துள்ளதன் வாயிலாக ஒரு பெரும் சந்தையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வர்த்தக மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புக்கான முக்கியமான வர்த்தக மையமாக தென்னிந்தியா நீண்ட காலமாக இருந்து வருகின்றது. இந்தப் பகுதியில் நடைபெறும் அத்தகைய ஒரே வர்த்தக நிகழ்ச்சியான SAFE 2016 மூலம், UBM India தொழில்துறையின் விநியோகச் சங்கிலிச் சுழற்சியை வலுப்படுத்துகின்ற அதே நேரம் இந்தப் பகுதியில் வளர்ந்துவரும் சந்தைக்கான சந்தை-நுழைவையும் வர்த்தக வாய்ப்புகளையும் வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளது."
"கண்காணிப்பு, நுழைவாயில் மற்றும் வீட்டுக்கான தானியங்கி உபகரணங்கள் தொழில்துறையிலிருந்து இந்திய மற்றும் சர்வதேச பிராண்டுகளை ஒருங்கே கொண்டுவருவது, உலகம் முழுவதும் உள்ள முன்னணி நிறுவனங்களின் சமீபத்திய கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்துவது, வணிகத் தீர்வுகள் வழங்குவது மற்றும் மதிப்புமிக்க வல்லுநர் ஆதரவைப் பெறுவது ஆகிய அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவர எண்ணியுள்ளது," என அவர் மேலும் கூறினார்.
இந்தக் கண்காட்சி முக்கிய வணிக முடிவு மேற்கொள்பவர்களுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் அதே சமயம், வளர்ந்து வரும் சந்தையில் தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கு முன்னணி பாதுகாப்பு நிறுவனங்களுக்கான ஒரு அறிமுகத் தளத்தையும் வழங்கும். இந்தக் கண்காட்சியில் விருந்தோம்பல் துறையிலிருந்து தற்காப்பு மற்றும் பாதுகாப்பு மேலாளர்கள், IT/BPO மற்றும் சேவைத் துறை, ரியஸ் எஸ்டேட், துறைமுக அதிகாரிகள், மின் உற்பத்தி நிலையங்கள், லாஜிஸ்டிக்ஸ், கட்டுமானம், கட்டிடக் கலை, வாகனம், தயாரிப்பு, தொழில்துறை, சில்லறை விற்பனை, ஆபரணங்கள், சுகாதாரம், கல்வி, IT, நெட்வொர்க்கிங், தொலைத்தொடர்பு, தன்னியக்கமாக்கல் மற்றும் BFSI ஆகிய துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் கலந்துகொள்வார்கள்.
UBM India பற்றி
UBM India என்பது கண்காட்சித் தொகுப்புகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் ஆகியவற்றின் வாயிலாக உலகம் முழுவதும் உள்ள வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் ஒருங்கிணைக்கும் களங்களை தொழில்துறையினருக்கு வழங்குகின்ற இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பு நிறுவனம் ஆகும். UBM India ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் சுமார் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் நடத்துகின்றது; அதன்மூலம் பல தொழில்துறை நிறுவனங்களுக்கிடையேயான வர்த்தகத்துக்கு உதவுகின்றது. ஒரு UBM Asia நிறுவனமாகிய UBM India-வின் அலுவலகங்கள் மும்பை, புதுதில்லி, பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. UBM Asia நிறுவனம் லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM plc நிறுவனத்துக்குச் சொந்தமானது ஆகும். UBM Asia நிறுவனம் ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும், மற்றும் அது சீனா, இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளராகவும் உள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து பார்வையிடவும்: http://www.ubmindia.in/home
ஊடகத் தொடர்புநபர்:
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
UBM India
Share this article