ஹைதராபாத், இந்தியா, May 19, 2016 /PRNewswire/ --
முத்துக்களின் நகரத்தில் இந்தியாவின் முன்னணி நகைக்கடைகளின் ஒரு வணிக கண்காட்சி
Hyderabad Jewellery, Pearl and Gem Fair (HJF 2016), இந்தியாவின் முன்னணி நகை கண்காட்சி, மீண்டுமாக தன்னுடன் தலைசிறந்த நகைக்கடைகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வணிகர்கள் மற்றும் தொழிற்துறை கழகங்களை முத்துக்களின் நகரமாகிய ஹைதராபாத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160518/10146361 )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160518/10146361-b )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
HJF உடைய 9ஆம் நிகழ்வு இரண்டு நாள் கண்காட்சியாக ஜூன் 4ஆம் & 5ஆம் தேதியில் HICC, Novotel, Hitech City ஹைதராபாத்தில் நடைபெறும் மற்றும் நகைத் துறையில் உள்ள சில சமீபத்திய தயாரிப்புகளைக் காட்சிப்படுத்து.
இவ்வாண்டு 150 கண்காட்சியாளர்கள் பங்கேற்பார்கள், இதில் நகை ப்ராண்டுகள், மொத்தவியாபாரிகள், இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், வைரம் மற்றும் ரத்தினக்கல் விநியோகஸ்தர்கள் மற்றும் வணிக மற்றும் அரசாங்க நிறுவனங்களில் இருந்து வரும் பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளடங்குவர். ஹைதராபாத் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருக்கும் 40க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்களால் முன்வைக்கப்படும் விக்டோரியா காலம், நிஜாம் காலம் மற்றும் பழங்கால கலெக்ஷன் ஆகியவை, இவ்வாண்டின் கண்காட்சியில் அனைவருடைய மனதையும் கொள்ளைகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
HJF 2016, தென்னிந்தியாவின் முக்கியமான B2B சர்வதேச நகைக் கண்காட்சியானது இந்திய நகை சந்தைக்கான வாசலாக இருக்கும் என்கிற உத்தரவாதத்தை அளிக்கிறது, வாங்குநர்களும் விநியோகஸ்தர்களும் இணையவும், பிணைப்பை ஏற்படுத்தவும், கருத்துக்களை பரிமாறவும், வரவிருக்கும் போக்குகளைக் கண்டறிந்து தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தவும் ஒரு மகத்தான தளத்தை ஏற்படுத்துகிறது. இந்த இரண்டு நாள் கண்காட்சியானது வைரங்கள், முத்துக்கள், ரத்தினக்கற்கள், அழகிய பொன் நகைகள் மற்றும் தொடர்புடைய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கும். இவ்வாண்டு பங்கேற்கும் குறிப்பிடத்தக்க கண்காட்சியாளர்களில் Anmol Jewellers, Swaroop Jewellers, Meenakshi Jewellers, Lalit Jewellers, Inderlal balmukund Jewellers, Sri Balaji Jewellers, Siddi Vinayak Jewellers & Exporters மற்றும் P Mangatram Jewellers Pvt. Ltd. உள்ளிட்ட பலர் இடம்பெறுகிறார்கள். இந்த கண்காட்சியானது தென்னிந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு முக்கிய நகை கழகங்களால் ஆதரிக்கப்படுகின்றது, இதில், Hyderabad Jewellers Manufacturers Association (HJMA) மற்றும் AP Gold Silver & Diamond Merchant Association ஆகியவையும் உள்ளடங்கும்.
இத்தருணத்தில் பேசிய, Mr Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India,
"Hyderabad Jewellery, Pearl and Gem Fair என்பது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நகை, வைரம், முத்து மற்றும் ரத்தினக்கல் விநியோகஸ்தற்கள் முக்கியமான உள்நாட்டு மற்றும் சர்வதேச வாங்குநர்களை சந்திக்க வகைசெய்யும் ஒரு சர்வதேச வணிகதளம் ஆகும்" என்றார்.
"ஹைதராபாத் பெரிய மற்றும் வளர்ந்துவரும் உற்பத்தி மற்றும் சில்லரைவர்த்தக சந்தைகளை பிரதிபலிக்கிறது மற்றும் இந்த பகுதியிலே முக்கிய பங்கு வகிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், விற்பனையை உருவாக்குகிறோம் மற்றும் நகை துறை நிறுவனங்கள் மத்தியில் மேம்பட்ட தொழில் உறவுகளை வளர்க்கிறோம் " என மேலும் தெரிவித்தார்
HJF உடனான ஒருங்கிணைப்பு குறித்து பேசும்போது, Mr. Mahender Kumar Tayal, தலைவர், Hyderabad Jewellery Manufacturers
Association இவ்வாறு கூறினார், " UBM India உடன் பணிசெய்வது பெருமைக்குரியது. HyderabadJewellery, Pearl & Gems Fair என்பது ஹைதராபாத்தில் உள்ள சில்லரைவர்த்தகர்களுக்கும் மொத்தவியாபாரிகளுகும் பல்வேறு ரகங்களிலான பிரத்தியேக நகைகளை காண்பதற்கும் துறையின் முக்கிய விநியோகஸ்தர்களுடன் இணைந்து பிணைப்பை ஏற்படுத்துவதற்கும் ஒரு அற்புதமான தளம் ஆகும். தெலுங்கானா மாநிலத்தின் முக்கியமான கண்காட்சியாகும், இது இந்தியாவின் 5வது மிகப்பெரிய உற்பத்தி கேந்திரம் மற்றும் ஸ்டட்டட் மற்றும் நகாஷி வேலைப்பட்டை உருவாக்கிய மாநிலமும் ஆகும். "
HJF உடனான ஒருங்கிணைப்பு குறித்து பேசும்போது, Mr. Nitin Agarwal, பங்காளர்,
Meenakshi Jewellers இவ்வாறு கூறினார், "கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் Hyderabad Jewellery, Pearl & Gems Fair உடைய ஒருங்கிணைந்த அங்கமாக இருந்துவருகிறோம் மற்றும் இவ்வாண்டு நாங்கள் எங்களுடைய பிரத்தியேகமான வெட்டப்படாத polki வைர கலெக்ஷனை முன்வைப்போம். ஒவ்வொரு ஆண்டும் இந்த கண்காட்சியைக் காண்பதில் நாங்கள் நிச்சயமாக மகிழ்ச்சி அடைகிறோம் , அதோடு கருத்துருவாக்கம்செய்து இத்தனை பெரிய எண்ணிக்கையிலான உற்பத்தியாளர்/வணிகர்களை உள்ளூர் நகை சில்லரைவர்த்தகர்கள் மற்றும் மொத்த வியாபாரிகளுக்கு அருகாமையில் கொண்டுவருவதற்காகவும் UBM நிறுவனத்தை உண்மையாகவே பாராட்டுகின்றோம்."
HJF 2016 நிகழ்விலே Telangana & AP Retail Jewellers Awards 2016-உம் இடம்பெறும், இது இம்மாநிலங்களின் சிறந்த சில்லரை நகை தொழில் செய்பவர்களை கௌரவிக்கும் ஒரு பிரத்தியேகமான முயற்சி. சில்லரை நகை வியாபார துறையில் சிறந்துவிளங்கிய சில தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு துறைக்கான அவர்களுடைய பங்களிப்புக்காக ஒரு கோப்பையும் சான்றிதழும் வழங்கப்படும். இந்த விருதுகளைத் தொடந்து ஒரு ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெறும் அதில் தொழிற்துறையில் சிறந்த திறமைப்படைத்தவர்கள் மேடையில் ஏறி வியக்கவைக்கும் நகைகளைக் காட்சிப்படுத்துவார்கள்.
UBM ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக நகைத் துறையின் ஒரு ஒருங்கிணைந்த அங்கமாக இருந்து, உலகெங்கும் இதுபோன்ற புகழ்பெற்ற நகை கண்காட்சிகளை ஒருங்கிணைத்து வருகின்றது. HJF என்பது ஆண்டு முழுவதும் நடத்தப்படுகின்ற நான்கு நகரங்களில் ஒன்றினால் நடத்தப்படும் (கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத் மற்றும் தில்லி)கண்காட்சியாகும். 2008இல் இதன் முதல் நிகழ்வைத் தொடர்ந்து, 2015இல் நடைபெற்ற HJFவின் 8ஆம் நிகழ்வு துறைக்கான சரியான தொழில் வாய்ப்புகளை உருவாக்கியது மற்றும் கண்காட்சியானது உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் இருந்து கண்காட்சியாளர்களைக் கவர்ந்து அற்புதமான விளைவைக் கொடுத்தது. இக்கண்காட்சி மூன்று நாள் கண்காட்சிக்கான பெரிய எண்ணிக்கையிலான வாங்குநர்களையும் விற்பனையாளர்களையும் கவர்ந்தது மற்றும் இந்நிகழ்வின் பெரும் புகழைக் காணும்போது, இவ்வாண்டின் பார்வையாளர் வருகை 5000 பார்வையாளர்களுக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கபப்டுகின்றது.
UBM India பற்றி
UBM India என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அது கண்காட்சிகளின் தொகுப்பு, உள்ளடக்கங்களினால் வழிநடத்தப்படும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், மூலமாக உலகெங்கும் இருந்து வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒன்று சேர்க்கும் தளங்களை அளிக்கிறது. UBM India ஆண்டுதோறும் நாடு முழுவதும் 25 பெரிய அளவு கண்காட்சிகளையும், 40 மாநாடுகளையும் அளிக்கிறது; இதன் மூலம் பல நிறுவன பிரிவுகளில் வணிகத்தை செயல்படுத்துகின்றது. ஒரு UBM Asia நிறுவனமான, UBM இந்தியாவுக்கு மும்பை, புதுதில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM ஆசியா லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM Plcக்கு சொந்தமானது. UBM Asiaவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகவும் சீனாவின் பெருநிலப்பகுதியிலும், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளில் வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து வருகைதாருங்கள் www.ubmindia.in.
ஊடக தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
UBM India
Share this article