சென்னை, May 18, 2016 /PRNewswire/ --
UBM India நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும் தென்னிந்தியாவின் ஒரேயொரு தொழில் சுகாதார மற்றும் பாதுகாப்பு வர்த்தகக் கண்காட்சி
UBM India நிறுவனம் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் (OSH) இந்தியா கண்காட்சியின் 3வது பதிப்பு சென்னையில் தொடங்கப்படுவதாக அறிவித்துள்ளது. சென்னை வர்த்தக மையத்தில் 2016, ஜூன் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான சவால்களுக்கு சர்வதேச அளவில் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வதற்கும், சவால்களுக்கான தீர்வுகளைக் காண்பதற்கும் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற கண்காட்சியாளர்கள், ஆலோசகர்கள், வணிக வல்லுநர்கள் மற்றும் தொழில்துறையில் உள்ள முக்கிய அரசு அதிகாரிகள் ஆகியோரை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தக் கண்காட்சி குஜராத் பாதுகாப்புக் குழு மற்றும் இந்திய ஜவுளித் தொழில்நுட்ப சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் நடைபெறவிருக்கிறது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160517/10146337 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
OSH சென்னை 2016, பரந்த அளவில் பயன்படுத்தப்படாத இந்தியச் சந்தையின் தொழில்துறை நிலத்தோற்றங்களுக்கு இடையே தங்களுடைய கண்டுபிடிப்புகளையும் திறமைகளையும் காட்சிப்படுத்துவதற்கு உலகம் முழுவதும் உள்ள சப்ளையர்கள் மற்றும் சேவை வழங்குநர்களின் சுகாதரத்துக்கும் பாதுகாப்புக்கும் வாய்ப்பு வழங்குவதோடு, நிறுவனம் தனது தொழிலாளர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பில் முதலீடு செய்வதன் வாயிலாக தனது அமைப்புமுறை மற்றும் பொருளாதாரத்தின் வணிகப் பலன்களை மீண்டும் வலியுறுத்துகின்ற அதே சமயம், நிறுவனங்களுக்கான தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதரத்தை நடைமுறைப்படுத்துவதை முன்னுரிமையாகக் கொண்டு இரண்டு நாள் மாநாடு ஒன்றும் நடைபெற இருக்கின்றது. இந்தக் கண்காட்சியில் புத்துருவாக்கங்களுக்கான பகுதி ஒன்றும் இடம் பெறும், அது தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறைக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் புதுமையான தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்கும் காட்சிப்படுத்துவதற்கும் காட்சியாளர்களுக்கு உதவுகின்ற ஒரு களமாக விளங்கும்.
எங்களது தற்போதைய கூட்டாளர் நிறுவனமாகிய Dickies, தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் கூட்டாளராகிய Euro Safety Footwear (India) Pvt Ltd மற்றும் Mallcom India Ltd; Venus Safety and Health Pvt Ltd; Acme Safetywears Ltd; Accent Industries Ltd; Prolite Autoglo Ltd; Acme Fabrik Plast Co; Lakeland Glove and Safety Apparels Pvt Ltd; Allied Safety Equipments Pvt Ltd; JLG Industries; Aktion Safety Solutions Pvt Ltd; Tobit Engineers; Tej Engineering; Prem Safety Works; Hetal International and NIST Institute Pvt. Ltd. ஆகிய இதர நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில்துறையின் முன்னணி நிறுவனங்கள் மற்றும் முக்கியக் காட்சியாளர்களைக் கவர்வதன் மூலம் OSH சென்னை அளவிலும் ஆழத்திலும் இடைவிடாது வளர்ந்து வருகிறது. இந்தக் கண்காட்சியில் சர்வதேச அளவில் அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்தும் பங்கேற்பாளர்கள் கலந்துகொள்வார்கள்.
இந்த அறிவிப்பு பற்றிக் கூறும்போது India Pvt. Ltd. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்
Mr. Yogesh Mudras கூறியதாவது, "பாதுகாப்பற்ற பணியிடங்களில் அதிகரித்து வரும் இறப்புகளுடன் சேர்ந்து சர்வதேச அளவில் தொழில் பாதுகாப்புக்கான வளர்ந்துவரும் விழிப்புணர்வு மற்றும் தேவை இந்திய நிறுவனங்களுக்கிடையிலும் தொழில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பைக் கடைப்பிடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது. துறையில் சர்வதேச முதலீடுகளை அதிகரிக்கின்ற அதே சமயம் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் பணியிடப் பாதுகாப்பை வழங்குவது ஆகியவை குறித்து அரசாங்கங்கள் இடைவிடாது வலியுறுத்துவதன் காரணமாக, தங்களுடைய தயாரிப்பு மற்றும் தீர்வுக்கான படைப்புகளை காட்சிப்படுத்துவதற்கு உலகம் முழுவதும் உள்ள சப்ளையர்களுக்கு வழங்குநர்களுக்கும் ஒரு பெரிய வாய்ப்புக் காத்திருக்கிறது. OSH சென்னை வாயிலாக, இந்த வாய்ப்பைப் புரிந்துகொள்வதற்கு தொழில்துறைக்கு சரியான களத்தை நாங்கள் வழங்குகிறோம்."
OSH சென்னை 2016 கண்காட்சியின் ஆதரவு நிறுவனமாகிய சர்வதேச அளவில் பணி ஆடைகள் தயாரிப்பில் முன்னணி பிராண்டான Dickies, இந்தக் கண்காட்சியில் தங்களுடைய புதிய பாதுகாப்புக் காலணி மற்றும் செயல்திறன் சார்ந்த தொழிலுக்கான பணி ஆடைகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்த இருக்கிறது. கடினமான, நீடித்து உழைக்கக்கூடிய மற்றும் செயல்திறன் சார்ந்த ஆடைகள் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமான நிறுவனமாகிய Dickies, 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பலவகைப்பட்ட ஆடைகள், காலணிகள் மற்றும் உரிமம் பெற்ற பொருட்களின் ஒப்பற்ற மதிப்புமிக்க மேம்பட்ட தரமுடைய தயாரிப்புகளை வழங்குகிறது.
OSH சென்னை 2016 கண்காட்சியின் ஆதரவு நிறுவனமாகிய Dickies-இன் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநர் Mr. Karthikeya R. Reddy இந்த அறிமுகத்தைப் பற்றியும் இந்தக் காண்காட்சியுடனான அவர்களது தொடர்பைப் பற்றியும் கூறும்போது, "Dickies நிறுவனம் தனது தயாரிப்புகளை இந்தியத் தொழிலாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கான ஒரு சிறப்பான களத்தை OSH இந்தியா வழங்குகிறது. இந்த ஆண்டுக்கான பதிப்பின் ஆதரவாளர்களாக இந்தக் கண்காட்சியை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியத் தொழிலாளர்களுக்கு சர்வதேச அளவில் மிகப் பெரிய பணி ஆடைக்கான பிராண்டை நாங்கள் அறிமுகப்படுத்த விரும்புகிறோம் மற்றும் OSH அதற்கான மிகச் சிறந்த களமாக விளங்குகிறது. ஜூன் 2016இல் நடைபெறவுள்ள OSH சென்னை கண்காட்சியில் புதிய பாதுகாப்புக் காலணியையும் செயல்திறன் தொழில்சார்ந்த பணி ஆடைகளையும் நாங்கள் அறிமுக்கப்படுத்தவிருக்கிறோம்" என்றார்.
இந்த ஆண்டு, OSH சென்னை 2016 கண்காட்சிக்கான தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் கூட்டாளராகிய Euro Safety Footwear நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட புரட்சிமிக்க பாதுகாப்புத் தயாரிப்புகளின் அறிமுகத்தையும் நீங்கள் காண்பீர்கள். இந்த நிறுவனம் அனைத்துத் தொழில்துறையின் தேவைகளையும் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்தும் விதமாக தங்களுடைய புதிதாகத் தயாரிக்கப்பட்ட பல வகையான தனிநபர் பாதுகாப்பு உபகரணத்தை (PPE) காட்சிப்படுத்த இருக்கிறது. இந்தத் தயாரிப்புகள் பயனர்களின் முழுமையான திருப்திக்காக R&D மற்றும் சந்தைப்படுத்தல் அணியினரால் முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பிறகு தயாரிக்கப்பட்டுள்ளன.
Euro Safety Footwear (India) Pvt. Ltd. நிறுவனத்தின் இயக்குநர் Mr. Varun Budhiraja இந்த அறிமுகத்தைப் பற்றியும் OSH சென்னை 2016 கண்காட்சியுடனான அவர்களது தொடர்பைப் பற்றியும் கூறும்போது, "நாங்கள் சில மாதங்களாகவே எங்களது புதிய தயாரிப்புக்காகப் பணிபுரிந்து வருகிறோம். ஒரு புதிய நிறுவனம் சந்தைக்குள் நுழையும்போது, அது தற்போது சந்தையின் நிலவும் பாணியைப் பின்பற்றுகிறது மற்றும் மக்கள் ஏற்கனவே வாங்கிக்கொண்டிருக்கும் தயாரிப்புகளை வழங்குகிறது. நாங்கள் சற்றுப் புதுமையாக மக்கள் வாங்க விரும்பக்கூடிய தயாரிப்புகளை வழங்க இருக்கிறோம். வசதி, சௌகரியம், தோற்றம் அனைத்தும் பாதுகாப்பு என்ற ஒரே போர்வைக்குள் இருக்க வேண்டும் என தொழிலாளர்கள் விரும்புகிறார்கள், நாங்களும் அதைத் தான் வழங்குகிறோம். OSH மற்றும் Euro Safety Footwear ஆகியவை தொழில் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்கு ஒன்றிணைந்து செயல்படுகின்றன. முதல் முறையாக, எங்களது நம்பிக்கைக்கு வலுவூட்டும் விதமாக தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் கூட்டாளராக கண்காட்சிக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம். ஒரு தொழிலாளரின் பாதுகாப்பை விட்டுக்கொடுத்து இன்று சேமிக்கப்படும் பணம் அவரின் மரணத்துக்கே செலவிடப்படுகிறது; அதனால் குற்ற உணர்வு மட்டுமே மிஞ்சுகிறது என்பதை நாம் எப்பொழுதுமே நினைவில் கொள்ள வேண்டும்" என்றார்.
இரண்டு நாள் மாநாடு நாடு முழுவதுமிருந்தும், முன்னணியிலுள்ள சர்வதேச நிறுவனங்களிலிருந்தும் கலந்துகொள்ளும் வல்லுநர்களுடன் தொழில்துறை சவால்களையும், உலகளாவிய சிறந்த நடைமுறைகளையும் பற்றி விவாதிப்பதன் மூலம் தொழில் பாதுகாப்பை முன்னிடத்துக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாநாட்டில் பின்வருபவை உள்ளிட்ட தலைப்புகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது: தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தில் முன்னெச்சரிக்கைக் கலாச்சாரத்தை உருவாக்குதல்; பொறுப்புள்ள கவனிப்பு - வேதித் தொழிற்சாலைகளுக்கான முழுமையான பாதுகாப்பு; பாதுகாப்பான தலைமை மற்றும் திறமையை உருவாக்குதல்; செயல்முறைப் பாதுகாப்புச் சிறப்புத்தன்மை; இந்தியாவில் நிலவும் தீ பாதுகாப்பு சவால்கள்; கட்டுமானத் தொழில்துறை; செயலூக்கம் வாய்ந்த பாதுகாப்புக் கலாச்சாரத்தை உருவாக்குதல்; பணியிட அழுத்தம்: மற்றவற்றுக்கு மத்தியில் ஒட்டுமொத்த சவால்.
மாநாட்டில் கலந்துகொள்ளும் புகழ்பெற்ற பேச்சாளர்களில் Mr. Narasimham, நிர்வாக இயக்குநர், பெருநிறுவன HSE, Hindustan Petroleum Corporation Limited (HPCL), Capt. Dhruv Rebbapragada, விமானப் பாதுகாப்புத் தலைவர், IndiGo Airlines; துணைத் தலைவர், R.A.Venkitachalam, பொதுப் பாதுகாப்பு, Underwriters Laboratories Inc; Dr Ashish Arora, தொழில் சுகாதார மருத்துவர், Shell India; Mr Shailesh Raval, தலைவர் - சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல், Deepak Nitrite Ltd.; Mr Stephen Philip Storey, பெருநிறுவன EHS தலைவர், Larsen & Toubro Limited மற்றும்
Mr. JC Sekar, CEO, AcuiZen Technologies Singapore Pte. Ltd. ஆகியோர் உள்ளடங்குவர்.
UBM India பற்றி
UBM India என்பது கண்காட்சித் தொகுப்புகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் ஆகியவற்றின் வாயிலாக உலகம் முழுவதும் உள்ள வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் ஒருங்கிணைக்கும் களங்களை தொழில்துறையினருக்கு வழங்குகின்ற இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பு நிறுவனம் ஆகும். UBM India ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் சுமார் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் நடத்துகின்றது; அதன்மூலம் பல தொழில்துறை நிறுவனங்களுக்கிடையேயான வர்த்தகத்துக்கு உதவுகின்றது. ஒரு UBM Asia நிறுவனமாகிய UBM India-வின் அலுவலகங்கள் மும்பை, புதுதில்லி, பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. UBM Asia நிறுவனம் லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM plc நிறுவனத்துக்குச் சொந்தமானது ஆகும். UBM Asia நிறுவனம் ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும், மற்றும் அது சீனா, இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளராகவும் உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து பார்வையிடவும் www.ubmindia.in .
ஊடகத் தொடர்புநபர்:
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
UBM India
Share this article