மும்பை, May 9, 2016 /PRNewswire/ --
UBM இந்தியாவினால் மும்பையில் உள்ள பாம்பே கன்வென்ஷன் & எக்சிபிஷன் சென்டரில் நடத்தப்பட்ட சில்ட்ரன், பேபி & மட்டர்னிட்டி (CBME) இந்தியா எக்ஸ்போ 2016 (20 - 22 ஏப்ரல்) குழந்தைகள் மற்றும் தாய்மாருக்கான தயாரிப்புகளையும் சேவைகளையும் உற்பத்தி செய்து வழங்கும் இந்திய மற்றும் உலகளாவிய சப்ளையர்களை ஒரே குடையின்கீழ் வெற்றிகரமாக ஒருங்கிணைத்தது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160314/10142066 )
CBME இந்தியா 2016 பாராளுமன்ற உறுப்பினரான Smt. Poonam Mahajan, மும்பையின் மேயரான Snehal Ambekar, மும்பையின் ஆப்ஸ்டட்ரிக்ஸ் & கைனேகாலஜிக்கல் சொசைட்டியின் (மகப்பேறியல் & மகளிர் நோய் மருத்துவ அமைப்பு) தலைவியான Dr. Nandita Palshetkar மற்றும் UBM இந்தியாவின் நிர்வாக இயக்குனரான Mr. Yogesh Mudras ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த மூன்று நாள் நிகழ்ச்சியில் 100-க்கு மேற்பட்ட கண்காட்சியாளர்களும் 300-க்கு மேற்பட்ட இந்திய மற்றும் உலகளாவிய பிராண்டுகளும் இடம்பெற்றன. J L Morrison, TOONZ Retail, Chicco, Mother Care, Piramal, Me and Moms Pvt Ltd, Little's (India), Bonny Products, Lovi, Smitten Baby, Farlin, Gemini Lifestyle Private Ltd, Posh Baby and Kids India, R for Rabbit Baby Products Pvt Ltd, Momzjoy மற்றும் Royal Brushes Ltd போன்ற உலக அளவில் புகழ்வெற்ற பிராண்டுகள், சீனா, ஹாங்காங், பெல்ஜியம், இத்தாலி, மலேசியா, தாய்வான், தாய்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து கலந்துகொண்டன.
4-வது CBME இந்தியா கண்காட்சி வெற்றிகரமாக நிறைவடைந்த பின்னர் UBM இந்தியாவின் நிர்வாக இக்குனரான Mr.Yogesh Mudras பேசும்போது, குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான தயாரிப்புகள் துறை சிறந்த வளர்ச்சியைக் கண்டுள்ளது என்றும் இன்னும் வளரும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்றும், வளர்ந்துவரும் ஊடகம், அதிகரித்துவரும் செலவு செய்யும் ஆற்றல் ஆகியவற்றின் காரணமாக இத்தகை தயாரிப்புகளை நாடச் செய்துள்ளதே இந்த வளர்ச்சிக்குக் காரணம். இந்திய மற்றும் உலகளாவி அளவில் இத்தகைய தாயரிப்புகளை காட்சிப்படுத்தி, தொழில்துறை சமூகத்தை இதில் கைகோர்க்கச் செய்து, புதிய யோசனைகளைப் பகிர்ந்துகொண்டு ஒரே குடையின்கீழ் புதிய தயாரிப்புகளை வெளிவிடும் வாய்ப்பை வழங்கியதன் மூலம் UBM இந்தியா தனது 4-வது CBME கண்காட்சியின் நோக்கத்தை நிறைவு செய்துள்ளது" என்றார்.
இதில் சிறப்பான அம்சமாக இன்னோவேட்டிவ் பிராடக்ட் கார்னர் என்ற பகுதி இடம் பெற்றது. இதில், மிகச் சிறந்த வடிவமைப்புக்கான இன்னோவேட்டிவ் பிராடக்ட் விருது CBME இந்தியாவினால் வழங்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டது. மிகச் சிறந்த புதுமையான மற்றும் பேட்டன்ட் செய்யப்பட்ட தயாரிப்புகளுக்காக 12 நிறுவனங்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். மக்களின் வாக்குகள் மற்றும் வல்லுனர்கள் அடங்கிய நீதிபதிகள் குழுவினால் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்பட்டனர்.
குழந்தைகள் பராமரிப்பு, விளையாட்டுப் பொருட்கள், சுகாதார மற்றும் பாதுகாப்புத் தயாரிப்புகள், ஃபர்னிச்சர், குழந்தைகளின் உடைகள் மற்றும் குழந்தை வண்டிகள் போன்ற பல்வேறு பிரிவுகளிலிருந்து நிறுவனங்கள் கலந்துகொண்டு இன்னோவேட்டிவ் பிராடக்ட் கார்னரில் காட்சிப்படுத்தியிருந்தனர். குழந்தைகளுக்கான சுற்றுச் சூழலுக்கு உகந்த, மற்றும் மறுசுழற்சி செய்யத்தக்க ஃபர்னிச்சர்களின் தயாரிப்பாளரான Jayna Packaging Pvt. Ltd-க்கு மிகச் சிறந்த இன்னோவேட்டிங் பிராடக்ட் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. 200 கிலோவரைகூட எடையுடையவர்களாலும் பயன்படுத்தத் தக்க அதிக எடையைத் தாங்கும் புதுமையான ஃபர்னிச்சர் மற்றும் இருக்கை அமைப்புகள் கொண்ட பல வண்ணமிகு தயாரிப்புகளை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது.
ஏற்கனவே பிரசித்திபெற்ற மற்றும் வளரும் வடிவமைப்பாளர்கள், பிராண்டுகள் மற்றும் தயாரிப்பாளர்களிடமிருந்து குழந்தைகளுக்கான முதன்மையான அழகான ஆடை அலங்காரங்களைக் காட்டும் வகையில் இந்த கண்காட்சியின்போது Cool Kids Fashion India -வும் முதன்முறையாக நடத்தப்பட்டது. கிட்ஸ் ஃபேஷன் துறையில் இந்தியாவை இடம் பெறச் செய்வதில் இது முக்கிய இடம் பிடிக்கச் செய்யும் நடவடிக்கையாகும்.
CBME இந்தியா-வில் பங்கேற்றது குறித்து சில தொழில் துறையினரின் கருத்துக்கள்:
Rhea Retail Pvt. Ltd (மதர் கேர்) தலைமை நிர்வாக அதிகாரியான Mr. Sandeep Chadha, பேசும்போது, " மதர் கேர் CBME இந்தியாவின் கண்காட்சியில் தொடர்ந்து பங்கேற்று வருகிறது. இந்த கண்காட்சிகள் தொடங்கிய காலத்திலிருந்து நாங்கள் தொடர்ந்து பங்கேற்று வருகிறோம். இதற்கு முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற கண்காட்சியைப் போன்றே இதுவும் சிறப்பாக வெற்றியடைந்துள்ளது. புஷ் சேர்கள், கார் சீட்டுகள் மற்றும் பாதுகாப்புப் பொருட்கள் அடங்கிய எம்முடைய புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்த CBME இந்தியா 2016 ஒரு வாய்ப்பாக அமைந்தது. எங்களுடைய தயாரிப்புகள் அனைத்துமே பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன. இந்தக் கண்காட்சியின் வழியாக நாங்கள் பெற்றுள்ள கருத்துக்கள் அடுத்த ஆண்டு எங்களுடைய பங்கேற்பை உறுதி செய்துள்ளது" என்றார்.
JL Morison (India) Ltd.-ன் புரொமோட்டரும் நிர்வாகியுமான செல்வி Sakshi Mody பேசும்போது, "CBME இந்தியாவில் Morisons Baby Dreams ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்று வருகிறது. ஒரு பிராண்டு என்ற முறையில் நாடு முழுவதும் உள்ள சில்லறை வர்த்தகர்களிடமும், டிஸ்டிரிபியூட்டர்களிடமும் சப்ளையர்களிடமும் சென்றடைய இந்த கண்காட்சியில் கிடைக்கும் வெளிப்பாடு உதவுகிறது" என்று கூறினார்.
Me and Moms Pvt. Ltd-ன் Mr. Naresh Khattar, MD & CEO, பேசுகையில், "இந்தியாவில் குழந்தைகள் மற்றும் தாய்மாருக்கான தயாரிப்புகள் துறை CAGR 17% வீதத்தில் வேகமாக வளர்ந்து உச்ச நிலையில் உள்ளது. தங்களுடைய குழந்தைகளைப் பேணுவதற்கு, அதிகமான குடும்பங்கள் புதிய மற்றும் புதுமையான தயாரிப்புகளை நாடத் தொடங்கும்போது, இது மேலும் மேலும் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு, இந்தியாதான் எங்களுடைய இயல்பான இலக்காக உள்ளது. எம்முடைய வாடிக்கையாளர்கள் எம்முடைய விரிவடைந்த குடும்பமாக உள்ளனர். இந்தியா முழுவதும் 50+ வர்த்தக மையங்களைக் கொண்டுள்ள நாங்கள் எம்முடைய அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்கள் மற்றும் எம்முடைய எப்போதும் விரிவடைந்துவரும் விசுவாசமான ஆதரவாளர்களினால் நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து வருகிறோம். CBME இந்தியா 2016 இந்த அடித்தளத்தை வலுப்படுத்தி, விரிவடைந்து வரும் வாடிக்கையாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிறுவனங்கள் மற்றும் வாய்ப்புடைய பிராண்டு கூட்டாளித்துவ வலையமைப்பின் காரணமாக எம்முடைய தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது" என்றார்.
UBM இந்தியா பற்றி
UBM இந்தியா என்பது இந்திய அளவில் கண்காட்சிகளை ஏற்பாடு செய்யும் முன்னணி நிறுவனமாகும். இது இத்துறையில் வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் உலகம் முழுவதிலுமிருந்து கண்காட்சிகள், உள்ளடக்கமிக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குள் வழியாக ஒரே தளத்தில் சேர்க்கிறது. UBM இந்தியா 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறது. UBM ஆசியா நிறுவனமான, UBM இந்தியா மும்பை, புது டில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM plc-யினால் UBM ஆசியா நடத்தப்படுகிறது. இது லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் பட்டியலில் உள்ளது. UBM ஆசியா என்பது ஆசியாவில் கண்காட்சியை நடத்தும் முன்னணி நிறுவனமாகும். சைனாவின் முக்கியப் பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக நடத்துபவராகும். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து ubmindia.in என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
ஊடகத் தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
UBM India
Share this article