பூனே, இந்தியா, May 9, 2016 /PRNewswire/ --
Mahindra Powerol, புதிதாக உருவாக்கப்பட்ட Mahindra Powertrain உடைய ஒரு தொழில் மற்றும் $16.9 பில்லியன் Mahindra Group உடைய ஒரு பகுதி, இன்று தனது புத்தம் புதிய 125kVA டீசல் ஜெனரேட்டர்கள் (டிஜி) ரகத்தை வெளியிட்டது. சென்னையில் உள்ள இதன் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கேந்திரமாகிய - Mahindra Research Valley-இல் வடிவமைக்கப்பட்ட இந்த புதிய ரக டீசல் ஜெனரேட்டர்கள் தோற்றத்தில் அழகாகவும், வடிவமைப்பில் எதிர்காலத்திற்குரியதாகவும் 20% மிகவும் சிறியதாகவும் உள்ளது. Mahindra Powertrain மேலும் ஐந்து ஆண்டு Super Shield திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இது வாடிக்கையாளர்களின் முழுமையான மன அமைதியை உறுதிப்படுத்துகின்ற டிஜி செட் உரிமையாளர்களுக்கு, அனைத்தும் உள்ளடங்கிய பணமில்லா சேவை ஆகும்.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160506/10145661 )
Rajan Wadhera, தலைவர் மற்றும் தலைமைச் செயலாளர் - Truck & Powertrain மற்றும் தலைவர் - Mahindra Research Valley, Mahindra & Mahindra Ltd, இவ்வாறு கூறினார், "அணுகக்கூடிய தொழில்நுட்பமே Mahindraவின் அனைத்து முயற்சிகளுக்கும் மையப்புள்ளியாக இருந்துவருகிறது மற்றும் இன்றைய டிஜி வெளியீடு இந்த கோட்பாட்டிற்கு சான்றாக அமைகின்றது. எங்களுடைய முதல் முறை சேவை சலுகையான Super Shield Plan உடன் நாங்கள் வாடிக்கையாளரை மையமாகக்கொண்ட நிறுவனம் என்கிற பெயரைப் பெறுவோம் என்று நம்புகிறோம். வரும் நாட்களில், நாங்கள் தொடர்ந்து Mahindra Powerolஐ மின் உற்பத்தி தொழில்ற்துறையினுள் எங்களுடைய எதிர்கால தயாரிப்பு மற்றும் சேவை சலுகைகள் மூலம் துரிதப்பாதையில் வைப்போம்."
இதனுடைய தனித்துவமான பொறியியல் விதான வடிவமைப்பு மற்றும் கச்சிதமான அளவோடு, 125kVA ரக டீசல் ஜெனரேட்டர்கள் குறைவான நிருவல் இடத்தைப் பயன்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்குப் பயனளிக்கும். இந்த கச்சிதமான டிஜி செட் போக்குவரத்தின்போது எரிவாயுவை மிச்சப்படுத்துவதன் மூலம் கரியமில தடத்தை குறைக்க உதவும். மேலும், Powerol உருவாக்கிய, காப்புரிமைப்பெற்ற தொழில்நுட்பமான, குழல்வடிவான சைலென்சர், புகைபோக்கியின் இறைச்சலைக் குறைக்கும். மேலும், அதன் கடினத்தன்மை மற்றும் உறுதியை சமரசம் செய்யாமல் விதானத்தின் ஒட்டுமொத்த எடையில் 30% குறைதல் உள்ளது.
பிரதானமாக ஒரு சேவை சார்ந்த தொழிற்துறையாக, டிஜி செட்களை வாங்குவதற்கான தீர்மானம் சேவை பிணையத்தையும் விற்பனைக்கு பிந்தைய பழுதுபார்க்கும் அர்ப்பணிப்பையும் சார்ந்து இருக்கிறது. Super Shield Plan, உடைய அறிமுகம், ஒரு சேவை முயற்சியாக, வாடிக்கையாளர்களுக்கு முழு மன அமைதியைக் கொடுக்க நீண்ட தூரம் செல்லும். இந்த அனைத்தும் உள்ளடங்கிய காப்பீடு வாடிக்கையாளருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு பராமரிப்பு செலவு இல்லை, பழுதுபார்க்கும் கட்டணம் இல்லை மற்றும் உதிரிபாகம் மாற்றும் செலவு இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்றது. இச்சலுகை 82.5kVA முதல் 200kVAரக டிஜி செட்களுக்குப் பொருந்தும்.
Mahindra Powerol பற்றி:
Mahindra Powerol என்பது 16.9 பில்லியம் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் Mahindra குழுமத்தின் வாகன & விவசாய கருவி பிரிவுகளின் கீழ் (AFS) புதிதாக உருவாக்கப்பட்ட Mahindra Powertrain பிரிவின் ஒரு பகுதியாகும். இந்நிறுவனம் 2001-02 ஆம் ஆண்டு மின் உற்பத்தி துறையில் நுழைந்தது. நிதி ஆண்டு 2002 முதல், இத்தொழில் பலமடங்காக வளர்ந்து நிதி ஆண்டு 2009-10இல் ரூ.1000 கோடி தொழிலாக மாறியது. இன்று, Mahindra Powerol இடம் இருந்து வரும் என்ஜின்கள் 5kVA முதல் 200 kVA வரையிலான டீசல் ஜெனரேட்டிங் செட்களுக்கு சக்தியூட்டுகின்றன.
இதன் தொடக்கத்தில் இருந்தே, Mahindra Powerol மிகக்குறைந்த காலத்திலேயே இந்திய ஜென்செட் தொழிற்துறையினுள் விரைவாக அடியெடுத்து வைத்துள்ளது. Mahindra Powerol டிஜி செட்கள் இந்தியாவிலும் உலகளவிலுமான பெரும் தொலைதொடர்பு நிறுவனங்களின் முதல் தேர்வாக உள்ளன.
Mahindra Powerolக்குசமீபத்தில் கௌரவமிக்க Deming Prize 2014இல் வழங்கப்பட்டது. The Deming Prize என்பது ஒட்டுமொத்த தர மேலாண்மையை (TQM) வெற்றிகரமாக செயல்படுத்திய ஜப்பானிய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் கழகத்தினால் (JUSE)அமைக்கப்பட்ட ஒரு உலகத்தரம்வாய்ந்த விருது
Mahindra Powerol Frost & Sullivan 'Voice of Customer' விருது, Master Brand, Power Brand மற்றும் சமீபத்தில் Superbrand ஆக பல்வேறு விருதுகளை வென்றுள்ளது.
தொலைதொடர்பு தவிற, Mahindra Powerol டிஜி செட்கள், வங்கிகள், கட்டிடம் மற்றும் கட்டுமானப்பணி, பொதுத்துறை அலகுகள், மருத்துவமனைகள், ஓட்டல்கள், வீடுகள் மற்றும் இந்தியா மற்றும் உலக சந்தையிலுள்ள உற்பத்தி அலகுகள் போன்ற வாடிக்கையாளரின் பல்வேறு வகையான தொழிற்துறைளுக்கு சக்தியூட்டுகின்றது.
Mahindra பற்றி:
Mahindra Group போக்குவரத்துக்கு சக்தியூட்டுகின்ற, கிராம செழிப்பை உந்துகின்ற, நகர்புற வாழ்க்கை முறைகளை மேபடுத்துகின்ற மற்றும் தொழில் செயல்திறனை அதிகரிக்கின்ற தீர்வுகள் மூலம் மக்களை எழுப்புவதில் கவனம்செலுத்துகின்றது.
மும்பை, இந்தியாவில் இருக்கின்ற ஒரு 16.9 பில்லியன் அமெரிக்க டாலர் பன்னாட்டு குழுமமான, Mahindra 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 200,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கிறது. Mahindra பொருளாதார வளர்ச்சியை உந்துகின்ற முக்கியமான தொழில்துறைகளில் செயல்படுகின்றது டிராக்டர்கள், பயன்பாட்டு வாகனங்கள், தகவல் தொழில்நுட்பம், நிதி சேவைகள் and விடுமுறை உரிமைத்துவம் ஆகியவற்றில் முன்னிலையை அனுபவிக்கிறது.கூடுதலாக, Mahindra வேளாண்தொழில், வான்வெளி, உதிரிபாகங்கள், ஆலோசனை சேவைகள், ராணுவம், மின்சக்தி, தொழிற்சாலை கருவி, இடம்பெயர்ப்பு, ரியல் எஸ்டேட், சில்லரைவர்த்தகம், இரும்பு, வியாபார வாகனங்கள் மற்றும் இருசர்க்கர வாகன தொழிற்துறைகளில் வலிமையான இருப்பை அனுபவித்துவருகிறது.
2015 இல், Mahindra & Mahindra இந்தியாவில் 'Best Company for CSR' என்கிற அங்கீகாரத்தை Economic Times நடத்திய ஒரு ஆய்விலே பெற்றது. 2014 இல், Mahindra வருவாய், லாபம், சொத்துக்கள் மற்றும் சந்தை மதிப்பீட்டினால் அளக்கப்பட்டForbes Global 2000, என்னும் உலகின் மிகப்பெரிய, மிக சக்திவாய்ந்த பொது நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றது. Mahindra Group மேலும் Financial Times 'Boldness in Business' விருதை 'Emerging Markets' பிரிவில் 2013இல் பெற்றது.
வருகைதாருங்கள் http://www.mahindra.com
எங்கள் சமூக ஊடக சேனல்கள்:
Twitter - https://twitter.com/MahindraRise
Facebook - https://www.facebook.com/MahindraRise
ஊடக தொடர்பு:
Mohan Nair
[email protected]
+91-22-28468510
மூத்த பொது மேலாளர் (தகவல்தொடர்புகள்)
Mahindra & Mahindra Ltd. (வாகன & விவசாய கருவி பிரிவுகள்)
Share this article