குவஹாத்தி, இந்தியா, May 6, 2016 /PRNewswire/ --
- இப்பகுதியில் 230+ பங்காளர்களுடன் மிகப்பெரிய சந்திப்பை ஒழுங்குபடுத்தி சந்தைக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறது
- வெளியிடப்பட்ட சமீபத்திய தயாரிப்புகளாவன:
- ZenFone Max சக்திவாய்ந்த 5000 mAH பேட்டரியுடன், அது ஆற்றல், ஆடம்பரம் மற்றும் வசதியைக் கொண்டு வருகிறது
- ZenFone Zoom - 3X ஆப்டிக்கல் ஜூம் உடைய உலகின் மெல்லிய ஸ்மார்ட் ஃபோன்
- இதன் முதன்மையான ரிபப்ளிக் ஆஃப் கேமர்ஸ் (ROG) விளையாட்டுத் தொடரின் சமீபத்திய ரகம், 4 உயர் செயல்திறன்கொண்ட மடிக்கணினிகள் ROG G752VY, G551, GL552VW மற்றும் மெல்லிய, நலினமான மற்றும் அல்ட்ராபோர்ட்டபிள் G501 ஆகியவற்றுடன்.
- உயர் தர விளையாட்டு டெஸ்க்டாப்கள் G20 & GT51 & ப்ரீமியம் அல்ட்ராபோர்ட்டபிள் Zenbook UX303
- புதிய 'A' சீரீஸ் முக்கியபோக்கு மடிக்கணினிகள்
ASUS இன்று தன்னுடைய சமீபத்திய ரகத்திலானா ப்ரீமியம் தயாரிப்புகளான ஸ்மார்ட்போன்கள், நோட்புக்குகள் மற்றும் டெஸ்டாப்பை இந்தியாவின் வடகிழக்குப் பகுதியிலே வெளியிட்டு அறிவித்தன. ஸ்மார்ட்போன்களில் ZenFone Max, இது நீடித்து உழைக்கும் மின்கலனை விரும்புகின்றோரான தொழில்வல்லுநர்கள் மற்றும் இளம் தலைமுறை பயனாளிகளுக்கு பொருத்தமாக இருக்கும் மற்றும் ZenFone Zoom, 3X ஆப்டிக்கல் ஜூம் உடைய உலகின் மெல்லிய ஸ்மார்ட்போன் என்கிற தனித்துவம்வாய்ந்த, ஒரு புரட்சிகரமான புதிய யுகத்திற்கான ஸ்மார்ட்போன் போட்டோகிராபி ஆகியவை உள்ளடங்கும். ASUS மேலும் தன்னுடைய முதன்மையான ரிபப்ளிக் ஆஃப் கேமர்ஸ் (ROG) விளையாட்டுத் தொடரை இந்த பகுதியிலே வெளியிட்டது, விளையாடுதலை முற்றிலுமாக வேறு நிலைக்கு இது கொண்டு செல்கிறது. குவாட் கோர் 6ஆம் தலைமுறை Intel core i7 (Skylake) மற்றும் NVIDIA GeForce GTX™ 900 தொடர் கிராபிக்ஸைப் பெற்று, 6 அடுத்த தலைமுறை விளையாட்டு தொடர்களை இளமையான தொழில்நுட்பரீதியாக நன்கு பரீட்சையமான கூட்டம் உடைய நகரத்திலே ASUS வெளியிடுகிறது. ROG தொடருடன் சேர்க்கப்பட்டுள்ள புதிய டெஸ்க்டாப் தொடர்களாவன G20 மற்றும் GT51 இவற்றோடு G501VW, G551VW, G752VY மற்றும் ROG GL552VW விளையாட்டு நோட்புக்குகள். இந்த விளையாட்டு தொடர்கள் தவிற, ASUS மேலும் தனது முதன்மையான அல்ட்ராபோர்ட்டபிள் மற்றும் மெல்லிய - Zenbook UX303 மற்றும் புதிய 'A' சீரீஸ் முக்கியபோக்கு மடிக்கணினிகளை இரண்டு வருட உலகளாவிய உத்தரவாதத்துடன் வெளியிட்டது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160505/10145545 )
சமீபத்தில் போட்டியில்லாமல் ASUS சேர்த்துக்கொண்டவற்றில் செம்மைபடுத்தப்பட்ட அழகியல் கொண்ட இரண்டு விளையாட்டு கிரேடு டெக்ஸ்க்டாப்புகள் மற்றும் நான்கு உயர் செயல்திறன் நோட்புக்குகள் ஆகியவை உள்ளடங்கும். நீடித்துழைக்கும் மற்றும் இடையூறில்லா விளையாட்டு அனுபவத்தை உறுதிப்படுத்தும்படியாக, சமீபத்திய மாதிரிகள் பாராட்டக்கூடிய குளிரூட்டும் தொழில்நுட்பத்துடன் துரிதமான சூடேறுதல் பிரச்சனையை எதிர்கொள்கின்றன.
நிகழ்ச்சியின் முக்கியசெய்திகளில் விரிவுரையாற்றிய, Peter Chang, பிராந்திய தலைவர் - தெற்காசியா & தேசிய மேலாளர் - System Business Group - ASUS India, இவ்வாறு கூறினார், "வடகிழக்கு சந்தை நாட்டின் எங்களுடைய முதன்மையான முக்கியத்துவத்தைப் பெறுகின்ற பகுதிகளில் ஒன்று மற்றும் எங்களுடைய வலிமையான பங்காளர் பிணையங்களில் ஒன்றும் ஆகும். தொழில்நுட்பம் குறித்த பரீட்சையம் உடைய மற்றும் நாட்டின் பிற பகுதிகளோடும் உலகத்தோடும் தங்களை இசைவாக்கிக்கொள்ளும்படி சமீபத்திய கருவிகளை அனுபவிக்க விரும்புகின்ற இளமையான ஊக்கமுள்ள மக்களின் தாயகம் இது. இந்த பகுதியிலே ப்ரீமியம் தயாரிப்புகளுக்கான மகத்தான தேவையை நாங்கள் கண்டு இருக்கிறோம் மற்றும் இந்த புதிய தயாரிப்புகள் கிடைப்பதன் மூலம், தொழில்நுட்ப அனுபவம் வளமைப் பெறும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பானதாக இருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்."
ZenFone Zoom, 3X ஆப்டிக்கல் ஜூம் உடைய உலகின் மெல்லிய ஸ்மார்ட்போன் என்கிற தனித்துவம்வாய்ந்த, ஒரு புரட்சிகரமான புதிய யுகத்திற்கான ஸ்மார்ட்போன். இது புதுமையான 10-பகுதி HOYA லென்ஸ் ஒழுங்கமைப்பைப் பயன்படுத்துகிறது, அது தனிச்சிறப்புவாய்ந்த தெளிவை கொடுப்பதோடு 12X மொத்த பெரிதாக்குதல் வரை க்ளோஸ்-அப்-ஐ செயல்படுத்துகின்றது. அசைவுகள் மற்றும் மங்களான ஷாட்களை நீக்குவதற்கான உள்ளமைந்த பார்வை பட நிலைப்படுத்தலுடனும் (OIS), உயர் செயல்திறன் குவாட்-கோர் Intel® Atom™ ப்ராசசருடனும், அல்ட்ரா-ஃபாஸ்ட் செயல்திறனுக்காக 4GB RAM உடனும், 5மிமி அளவே உடைய ஒரு உலோக கட்டமைப்பிலே DSLR போன்ற ஸ்டைலை ZenFone Zoom தன்வசம் வைத்துள்ளது, இதன்மூலம் இது வசதியாக பாக்கெட்டிற்குள் நழுவிச் செல்கின்றது. இந்த ஸ்மார்ட்போன் Flipkart மற்றும் ASUS பிரத்தியேக கடைகளிலும் கிடைக்கிறது.
நீடித்து உழைக்கும் மின்கலனை விரும்புகின்றோரான தொழில்வல்லுநர்கள் மற்றும் இளம் தலைமுறை பயனாளிகளுக்கு பொருத்தமாக இருக்கும், ZenFone Max , 5000 mAH பேட்டரியுடன், ஆற்றல், ஆடம்பரம் மற்றும் வசதியைக் கொண்டு வருகிறது மற்றும் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பின் தனித்துவமான கலவையை அளிக்கிறது. இந்த ஃபோன் அனைத்து முன்னணி இ-காமர்ஸ் போர்ட்டல்களிலும் கிடைக்கிறது, மற்றும் அனைத்து முன்னணி ரீடெய்ல் கடைகளிலும் பிரத்தியேக ASUS கடைகளிலும் கிடைக்கிறது.
ROG GT51, விளையாட்டு மற்றும் மெய்நிகர் உண்மை பிரிவிலே 2016 CES புதுமை விருது வென்றது, இது 6வது தலைமுறை Intel Core i7-6700K ப்ராசசரால் சக்தியூட்டப்பட்டு, மூன்று 4K திரைகளில் விளையாட்டுகளை இயக்க NVIDIA GeForce GTX TITAN X (2-வழி SLI) வரை ஆதரிக்கிறது. ROG டர்போ கியரானது பயனர்கள் GT51 உடைய முழு ஓவர்கிளாக்கிங் ஆற்றலையும் ஒரே சொடுக்கில் அதிகரிக்கச் செய்ய அனுமதிக்கிறது, ASUS-உடைய பிரத்தியேகமான Aegis II பயன்பாடு கணினி அளவீடுகளைக் கண்காணிக்க உதவுகிறது. கூடுதலாக, இதன் முன்பக்க பேனலில் இருக்கும் ஒரு USB 3.1 வகை-C போர்ட்டு 10Gbps வரை தரவு பரிமாற்ற வேகங்களை அளிக்கிறது மற்றும் துரிதமாக மொபைல் கருவிகளை மின்னேற்ற முடிகிறது.
G752VY - இந்த பிராண்டின் பரினாம வளர்ச்சியைக் காட்சிப்படுத்துகின்றது, இதன் புரட்சிகரமான வடிவமைப்பு ஒரு புதிய ஆர்மர் டைட்டானியம் மற்றும் செப்பு நிற திட்டத்தில் முடிவடைகிறது. விண்டோஸ் 10 உடன் ஒரு 6வது தலைமுறை Intel® Skylake Core™ i7 ப்ராசசர், 64GB DDR4 RAM வரை, மற்றும் சமீபத்திய NVIDIA® GeForce® GTX™ 980m கிராபிக்ஸ், ROG G752 வழங்குகிறது தனிச்சிறப்புவாந்த விளையாட்டு அனுபவம். இதில் ROG-சிறப்புவாய்ந்த மொபைல் 3D Vapor Chamber அதிகரிக்கப்பட்ட குளிரூட்டும் செயல்திறனுக்காக, ஒரு பேக்லிட் ஆண்டி-கோஸ்டிங் விளையாட்டு விசைப்பலகை மற்றும் துல்லியமான கட்டளை மற்றும் கட்டுப்பாடு போர்க்களத்தில் இருப்பதற்காக 30-விசை ரோலோவர் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
ROG G20CB செம்மப்படுத்தப்பட்ட அழகியலுடனான ஒரு சக்திவாய்ந்த, சிறிய, கன்சோல் அளவிலான 9.5-லிட்டர் விளையாட்டு டெஸ்க்டாப். 2.5" மற்றும் 3.5" துளைகள் SSDகள் மற்றும் HDDகளுக்கு இருப்பதோடு, G20 சமீபத்திய M.2 PCIe Gen 3x4 SSDஐ ஆதரிக்கிறது, இது 2Gbits/s, வரை தரவு அணுகல் வேகத்தைக் கொடுக்கிறது - SATA SSDகளை விட நான்கு மடங்கு வேகமானது. NVidia GTX 980, வரையில் G20 சுற்று காட்சிகளுக்கு அல்லது 2K அல்லது 4K திரைகளுக்கு பொருத்தமானது. இதில் பிரத்தியேகமான ASUS ROG Aegis II மென்பொருளும், உடனடி விளையாட்டு பதிவுசெய்தலுக்காக, திருத்துவதற்காகவும், ஸ்ட்ரீமிங்க்காகவும் GameAlive, மற்றும் நெட்வொர்க் போக்குவரத்து மேலாண்மைக்காக GameFirst III ஆகியவையும் உள்ளடங்கியுள்ளன.
ASUS ROG G501VW இல் NVIDIA GTX960M கிராபிக்ஸ் ஒரு மெல்லிய (20.6mm) மற்றும் லேசான எடையுள்ள (2.06kg) உலோக வடிவமைப்பில் இருக்கிறது. இந்த அல்ட்ராபோர்ட்டல் சாதனம் 4K/UHD காட்சிகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஹைப்பர்கூள் தொழில்நுட்பத்துடன் ROG DNAவை தன்னுள்ளே பெற்றுள்ளது. 4K IPS பேனலுடன் 178 பார்க்கும் கோணங்களில் ஒரு விளையாட்டு உலகிலே விளையாடுகிறவர்களை மூழ்கடிக்கிறது, ASUS SonicMaster மற்றும் ROG AudioWizard மூலம் மேம்படுத்தப்பட்ட ஒலி அனுபவத்திற்கு ஈடாக இருக்கிறது. இதன் ஹுட்டின் கீழ், இந்த சாதனம் சில தீவிரமான வன்பொருட்களைக் கொண்டுள்ளது NVIDIA GTX 960M கிராபிக்ஸுடன் அதிவேகமான 4GB GDDR5 கிராபிக்ஸ் நினைவகம், 16GB அல்ட்ராஃபாஸ்ட் DDR4 சிஸ்டம் நினைவகம் மற்றும் அடுத்த தலைமுறை 512GB PCIe Gen 3x4 SSD வரையிலானது உங்களுக்கு 2Gbits/s வரை வேகத்தைக் கொடுக்கிறது.
ஆற்றலையும் தரத்தையும் ஒரு பீரிமியம் வடிவமைப்பிலே கலந்துள்ள, Zenbook UX303UB இல் சமீபத்திய 6வது தலைமுறை Intel Core™ i5 ப்ராசசர் உள்ளது, விண்டோஸ் 10 உடன் சேர்ந்து இது இதை மேலும் சக்திவாய்ந்ததாக்குகிறது, மற்றும் இது மெல்லியதாகவும், லேசானதாகவும் சக்திவாய்ந்ததாகவும் இருக்கிறது. குறிப்பாக UX303UB உயர் செயல்திறன் Intel® Core™ ப்ராசசர்களை மட்டும் கொண்டது அல்லது மாறாக NVIDIA® GeForce® GT940m 2GB கிராஃபிக்சையும் ஒரு பட்டுப்போன்ற இலகுவான செயல்திறனுக்காக கொண்டுள்ளது. இது டெஸ்க்டாப் தரத்திலான செயல்திறனை பிரம்மிப்பூட்டும் பட தரத்தோடும், பட்டுப்போன்ற மிருதுவான உயர் ரெசல்யூஷன் வீடியீக்கள் அல்லது சமீபத்திய விளையாட்டுக்கான ரெண்டரிங்கை அளிக்கிறது. இதில் முழு HD காட்சியும் இருக்கிறது, அது உயிருள்ளது போன்ற காட்சிகளை பரந்த 170 டிகிரி பார்க்கும் கோணத்தில் அளிக்கிறது.
'A' series, A553, ப்ரீமியம் வடிவமைப்பு உடைய ஒரு மலிவான நோட்புக், மற்றும் இது பல்வேறு நிற தெரிவுகளில் கிடைக்கிறது, அதாவது ஊதா, இளஞ்சிவப்பு, வெள்ளை மற்றும் கறுப்பு. A553யானது Intel® Quad-Core Pentium® N3540 Processor (2M Cache, 2.16 GHz, 2.66 GHz வரை), 4GB RAM, 500GB சேமிப்பகத்தைப் பெற்றிருப்பதோடு இரண்டு ஆண்டு உத்தரவாதமும் பெற்றிருக்கும்.
மேலும் வெளியிடப்பட்டது கிளாசிக்கான 'A'சீரீஸ் பர்ஃபார்மென்ஸ் நோட்புக்ஸ் - A555LF & A555LA, இதன் நலினமான, ஸ்டைலான தோற்றம், வடிவமைப்பின் அழகு, கவர்ச்சியோடு உட்பொருளை ஒன்றிணைத்து செயல்திறனால் இது வாடிக்கையாளர்களைக் கவர்ந்து ஒரு பெரிய ஹிட் ஆகக்கூடிய உறுதியை அளிக்கிறது. இந்த சூப்பர் ஸ்மார்ட் நோட்புக்குகள் ஆறு வித்தியாசமான நவீன நிறங்களில் கிடைக்கிறது, இது மாணவர்கள், முதல் முறை பயனாளர்கள், அலுவலகங்கள் மற்றும் மதிப்பு சார்ந்து வாங்குநர்களுக்கு சிறப்பாக பொருந்தக்கூடியதாக மாற்றுகிறது.
ASUS பற்றி
ASUS, ஓர் உலகளாவிய, முதல் மூன்று நுகர்வோர் நோட்புக் விற்பனையாளரும், உலகின் விற்பனையில் சாதனை படைக்கின்ற, விருது வெல்லும் மதர்போர்டுகளின் உற்பத்தியாளரும் ஆகும். புதிய டிஜிட்டல் தலைமுறையின் முன்னணி நிறுவனமான ASUS, மதர்போர்டுகள், கிராஃபிக்ஸ் கார்டுகள், ஆப்டிகல் டிரைவ்கள், டிஸ்பிளேக்கள், டெஸ்க்டாப் மற்றும் அனைத்தும் அடங்கிய பீசிக்கள், நோட்புக்குகள், நெட்புக்குகள், சர்வர்கள், மல்டிமீடியா சாதனங்கள், ஒயர்லெஸ் தீர்வுகள், வலையமைப்பு சாதனங்கள், டாப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்ஃபோன்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளுடன், இன்றைய டிஜிட்டல் வீடு மற்றும் அலுவலகத்தின் தேவைகளைக் கச்சிதமாகப் பூர்த்தி செய்கின்ற பொருட்களை வடிவமைத்து, உற்பத்தி செய்கிறது. புத்தமைவினால் தூண்டப்பட்டு, தரத்திற்கு பொறுப்புறுதி ஏற்றுள்ள ASUS, 2013-ல் 4,256 விருதுகளை வென்றுள்ளதுடன், தனது Eee PC™ மூலம் பீசி தொழில்துறையை புரட்சிகரமாக ஆக்கியதற்கான மிகப்பெரிய பெருமையையும் பெற்றுள்ளது. ASUS, உலகம் முழுவதும் 13,600-க்கும் அதிகமான பணியாளர்களுடன், 4,500 பொறியாளர்கள் இடம்பெற்றுள்ள உலகத்தரம் வாய்ந்த ஓர் R&D குழுவையும் கொண்டுள்ளது. 2014-க்கான இந்நிறுவனத்தின் வருமானம் சுமார் US$14 பில்லியன் ஆகும்.
கூடுதல் விவரங்களுக்கு வருகை தரவும்:http://www.asus.com/IN/ அல்லது http://www.flipkart.com/asus
ஊடக தொடர்பு:
Manoj Kumar
[email protected]
+91-9818520082
ASUS India Pvt Ltd
Share this article