ஜெய்ப்பூர், இந்தியா, April 25, 2016 /PRNewswire/ --
ஒருUBMIndiaநிகழ்வு
UBM India, வருடாந்திர Renewable Energy India exposition (REI) உடைய 10வது ஆண்டுவிழாவை சென்ற ஆண்டு நடத்தியவர்கள், ஹோட்டல் மரியோட், ஜெய்ப்பூரில் சூரிய சக்தி முதலீடு மற்றும் தொழில்நுட்ப மன்றத்தின் 11வது நிகழ்வை நடத்தினார்கள். இந்த மன்றம் முதல் முறையாக ராஜஸ்தானின் தலை நகரத்தில் நடத்தப்பட்டு, சூரிய சக்தி தொழிலின் ஆற்றலை வெளிக்காட்டி அதற்கான வாய்ப்புகளை வழங்கியது. இந்தியாவின் சூரியசக்தி வரைபடத்தில் ராஜஸ்தான் ஒளிர்ந்துகொண்டு இருக்கும்போது, உலகின் சிறந்த சூரியசக்தி பெறுகின்ற இடமாக, இந்த கண்காட்சி மாநிலத்தின் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடைய அதிக வளர்ச்சி உடைய பகுதியில் இணைந்து, முதலீடுகள், வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அந்த பகுதிக்கு கொண்டு வருகின்றன.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160419/10144283 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
இந்த நிகழ்வானது முக்கிய பிரமுகர்களான, Shri. B.K. Dosi, மேலாண்மை இயக்குநர், Rajasthan Renewable Energy Corporation Limited; Shri. A. K. Jain, மேலாண்மை இயக்குநர், Rajasthan Electronics & Instruments Limited; Mr. Rahul Prithiani, இயக்குநர், CRISIL Research மற்றும் Mr. Rajneesh Khattar, குழு இயக்குநர், UBM India Pvt. Ltd ஆகியோரால் தொடங்கிவைக்கப்பட்டது.
தொடக்கவிழாவில் பேசிய, Shri. B. K. Dosi இவ்வாறு கூறினார், "நாடு முழுவதும் 20% தொடங்கப்பட்ட செயல்திட்டங்களுடன் அதிகப்படியான நிறுவப்பட்ட கொள்திறனை ராஜஸ்தான் பெற்றுள்ளது. மாநில அரசாங்கத்தின் புதிய கட்டண கொள்கையுடனும் அனைத்து மாநிலங்களை காட்டிலும் அதிகப்படியான ஆற்றலுடனும், ராஜஸ்தான் சூரிய சக்தி தொழிலுக்கு மாபெரும் வாய்ப்பை வழங்குகிறது. அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை ஏற்படுத்தியுள்ளது; அவற்றில் முக்கியமானது நிலத்தில் குத்தகை, விவசாய நிலத்தையும் சேர்த்து. மற்றும் ஒரு ஆர்வமூட்டும் அம்சம் 1 MW வரையுள்ள தொடக்கநிலை நிறுவனங்களுக்கான மேற்கூரை பிரிவை திறந்துவைத்தல்."
தொடக்க்கவிழ அமர்விலே அறிக்கையை வெளியிடுவதும் உள்ளடங்கியது: சூரிய எழுச்சி:ராஜஸ்தான் எதற்காக சூரிய புரட்சியை வழிநடத்தும் -வழங்குபவர் CRISIL, இந்த மன்றத்தின் கல்வி பங்காளர், இதை தொடர்ந்து Mr. Rahul Prithiani, இயக்குநர், CRISIL Research வழங்கும் ஒரு விரிவான முன்வைப்பு. அறிக்கையானது ராஜஸ்தானின் உதவி செயல்பாட்டையும் கொள்கை முயற்சிகளையும் சிறப்பித்து காட்டியது, இது ராஜஸ்தானை இந்தியாவின் சூரியசக்திக்கான மிகவும் விரும்பத்தக்க இடங்களில் ஒன்றாக மாற்றியது.
அறிக்கையை வெளியிட்டபோது, Shri. A.K. Jain மீண்டும் வலியுறுத்தியதாவது, "MNRE உடைய புதிய கொள்கை முயற்சிகள் மற்றும் பதினைந்து அம்ச செயல்பட்டியல் மூலமாக தேசிய சூரியசக்தி மிஷன் அமைத்த இலக்கை நாம் அடைவது நிச்சயம்."
இந்த மன்றத்தில் வரிசையாக மூன்று பேனல் விவாதங்களும் சூரியசக்தி செயல்திட்ட கட்டமைப்பு & இபிசி நிறுவனங்கள், சூரியசக்தி செயல்திட்ட உருவாக்குநர்கள், பயன்பாட்டு பிரதிநிதிகள், கருவி உற்பத்தியாளர்கள் மற்றும் பொறியியல் நிறுவனங்கள், முதலீட்டு வங்கிகள் மற்றும் செயல்திட்ட முதலீட்டாளர்கள், பொதுத்துறை மற்றும் தனியார்த்துறை வங்கிகள், நிதி சேவை வழங்குநர்கள் மற்றும் ஆலோசகர்களில் இருந்து புகழ்பெற்ற பேச்சாளர்கள் மற்றும் பிரதிநிதிகளின் முன்மொழிதல்களும் இடம்பெற்றது.
' MWவுக்கு அப்பால் ராஜஸ்தானின் சூரியசக்தி ஆற்றலை பயன்படுத்துதல்' என்கிற தலைப்பிலே வாய்ப்புகள், சவால்கள், சூரிய சக்தியை நமது கலாச்சாரத்தில் ஒன்றிணைத்தல் ஆகியவை விவாதிக்கப்பட்டது, மாநில அரசாங்கம் மேற்கூரை மற்றும் கொள்கை முயற்சிகளை மேற்கொண்டது. பேனல் விவாதத்தை வழங்கியவர் Mr. Ketan Mehta, செயல்பாடுகள் இயக்குநர், Rays Power Infra; Mr. Rahul Prithiani, இயக்குநர், CRISIL Research; Mr. Thomas Mathew, மூத்த துணைத் தலைவர்-தொழில் வளர்ச்சி மற்றும் Mr. P. Vinay Kumar, சிஓஓ, Greenko Energies Private Limited.
' REசெயல்திட்ட அமர்வின் சிறந்த நடைமுறைகள்'அமர்வானது பெரிய SPV செயல்திட்டங்களுக்கு நிதியளித்தல், நெட் மீட்டரிங், CAPEX முதல் OPEX வரை, நிதி வாய்ப்புகள் மற்றும் அதிலுள்ள இடர்கள், ஆபத்து தணிப்பு மற்றும் வெளிப்படையான அணுகல் போன்ற தலைப்புகளில் கவனம் செலுத்தியது. இந்த அமர்வானது Mr.Rajinder Kumar, சிஎம்டி, Bergen Group of Companies; Mr. Daanish Varma, இயக்குநர், Sustainable Investment Banking, Yes Bank; Mr. R S Rathore, தலைவர் - R&D, Genus Power Infrastructures Ltd.; Mr. Naveen Khandelwal, முதலீடு மற்றும் திட்ட தலைவர், Hero Future Energies Limited மற்றும் Mr. Paritosh Tripathi, GM Sales, Waaree Energies போன்ற தொழிற்துறை நிபுநர்களால் நிர்வகிக்கப்பட்டது.
'Discoms வலிமையூட்டல்:உள்ளடங்கிய சவால்கள் மற்றும் வெளிவந்த தீர்வுகள்' அமர்வை வழங்கியவர்கள் Mr.BihagMehta,இயக்குநர் -இந்தியா, OST Energy; Mr.VaibhavNuwal, துணை நிருவனர், RE Connect; Mr.RajinderKumar,சிஎம்டி, Bergen Group of Companies மற்றும்Mr.KetanMehta,செயல்பாடுகள் இயக்குநர், Rays Power Infra, இவர்கள் கிரிட் இணைப்பு, பரிமாற்றம் & விநியோகம், நெட் மீட்டரிங், நிதி வாய்ப்புகள் மற்றும் அதிலுள்ள இடர்கள், , ஆபத்து தணிப்பு மற்றும் வெளிப்படையான அணுகல் ஆகியவை குறித்து பேசினார்கள்.
இந்த மன்றத்தில் 'ராஜஸ்தான்:சுதேச உற்பத்தி மையம்' குறித்து பேசிய ஒரு அமர்வும் இருந்தது, இதில் வாய்ப்புகள் மற்றும் சவால்கள், மாநில கொள்கை முயற்சிகள், தொழில் செய்வதன் சுலபத்தன்மை, O & M மற்றும் தொகுதி நம்பகத்தன்மை ஆகியவை விவாதிக்கப்பட்டன. இந்த அமர்வானது Mr.A.K.Jain, மேலாண்மை இயக்குநர், Rajasthan Electronics & Instruments Ltd.; Mr.SanjayChandra,மேலாண்மை இயக்குநர்,, CITEL; Mr.SishirGoel, துணை தலைவர் - Technology & Marketing, Brij Encapsulants India மற்றும் Mr.Saurabh Bhandari,CEO, Solarmaxxஆகியோரால் நிர்வகிக்கப்பட்டது.
இந்த நிகழ்விலே Rays Power Infra, Brij Encapsulants, Waaree Energies Limited, Premier Solar, Bergen Group of Companies, Hero Future Energies, M+ Solar, SolarMaxx மற்றும் Mahindra Susten போன்ற புகழ்பெற்றநிறுவனங்கள் அவற்றின் பிரதிநிதிகளோடு கலந்துகொண்டனர்.
UBM India பற்றி
UBM India என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அது கண்காட்சிகளின் தொகுப்பு, உள்ளடக்கங்களினால் வழிநடத்தப்படும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், மூலமாக உலகெங்கும் இருந்து வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒன்று சேர்க்கும் தளங்களை அளிக்கிறது. UBM India ஆண்டுதோறும் நாடு முழுவதும் 25 பெரிய அளவு கண்காட்சிகளையும், 40 மாநாடுகளையும் அளிக்கிறது; இதன் மூலம் பல நிறுவன பிரிவுகளில் வணிகத்தை செயல்படுத்துகின்றது. ஒரு UBM Asia நிறுவனமான, UBM இந்தியாவுக்கு மும்பை, புதுதில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM ஆசியா லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM Plcக்கு சொந்தமானது. UBM Asiaவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகவும் சீனாவின் பெருநிலப்பகுதியிலும், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளில் வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து வருகைதாருங்கள் ubmindia.in.
ஊடக தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
UBM India
Share this article