மும்பை, April 25, 2016 /PRNewswire/ --
கண்காட்சியில் 150 கண்காட்சியாளர்களுக்கும் மேலாக காட்சிப்படுத்த உள்ளனர்
UBM India இன்று Concrete Show Indiaவின் 4வது நிகழ்வை அறிவித்தது, கான்கிரீட் தொழிற்துறைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரே கண்காட்சி, இதில் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள், குடியிருப்பு, விமானநிலையங்கள்,துறைமுகங்கள், மின்சாரம், ரயில், அணைகள் மற்றும் பாலன்ங்கள் போன்ற முக்கிய பிரிவுகள் உள்ளடங்குகின்றன.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160422/10144607 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
Concrete Show India 2016 கான்கிரீட் மற்றும் கட்டுமானம், கட்டுமான கருவிகள் மற்றும் தகவல்தொடர்பு அமைப்புகள், கட்டுமான இரசாயனங்கள், தொழிற்சாலை விநியோகஸ்தர்களிடம் இருந்து இயந்திரம், சேவைகள் மற்றும்அமைப்புகள் உள்ளிட்ட பிரிவுகளில் சமீபத்திய வெளியீடுகளை காட்சிப்படுத்தும். கட்டிடக்கலைஞர்கள் மற்றும் பொறியாளர்கள், வணிகரீதியான மற்றும் வசிக்கும் டெவலப்பர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள், விநியோகஸ்தர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் மாநில கார்ப்பரேஷன்கள் ஆகியவை கலர்ந்துரையாடவும் தொழிற்துறை எங்குமிருந்து வரும் கண்காட்சியாளர்களுடன் பிணைப்பை ஏற்படுத்தவும் இந்த மூன்று நாள் கண்காட்சியானது வாய்ப்பு அளிக்கும்.
இந்த கண்காட்சியானது 150க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களால் அடையாளப்படுத்தப்படும் அதில் முக்கிய நிறுவனங்களான Cosben Equipments, Elematic India Private Limited, Godrej Construction, Hess Concrete Machinery India Pvt. Ltd., Hyundai Aluminum Co. Ltd., J K Cement, JSW Cement, Masa Concrete Plants India Pvt. Ltd., Perma Construction Aids Pvt. Ltd., PERI India Private Limited, ROTHO - Robert Thomas, Smooth-On, Inc., Sommer Anlagentechnik GmbH, Toyota Forms, WAM India Pvt. Ltd. மற்றும் WEHRHAHN Gmbh உள்ளிட்ட பலரும் உள்ளடங்குவர். இந்த கண்காட்சியானது சீனா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், துருக்கி, கொரிய குடியரசு, யுகே மற்றும் யுஎஸ்ஏ போன்ற நாடுகளின் பங்கேற்பையும் பெறும்.
இந்த கண்காட்சியானது இந்திய கான்கிரீட் இன்ஸ்டிடியூட் (ICI), பில்டர்ஸ் அசோசியேசன் ஆஃப் இந்தியா (BAI), அசோசியேஷன் ஆஃப் கன்சல்டிங் என்ஜினியர்ஸ் (இந்தியா) (ACCE), இந்தியன் சொசையிட்டி ஆஃப் ஸ்ட்ரக்ச்சுரல் என்ஜினியர்ஸ் (ISSE), த இன்ஸ்டிடியூட் ஆஃப் என்ஜினியர்ஸ் இந்தியா (IEI), இந்தியன் அசோசியேஷன் ஆஃப் ஸ்ட்ரக்ச்சுரல் (IAstruct),இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ப்ரிட்ஜ் என்ஜினியரிங் (IIBE) மற்றும் சிமெண்ட் மேனுஃபேக்ச்ச்சர்ஸ் அசோசியேஷன் (CMA) ஆகியோரின் ஆதரவுடன் தொழிற்துறையின் பெருவாரியான வரவேற்பைப் பெற்றது .
இக்கண்காட்சியின் 4ஆம் நிகழ்வின் அறிவிப்பு குறித்து பேசும்போது, Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India இவ்வாறு கூறினார், "உள்கட்டமைப்பு மற்றும் சாலை செயல்திட்டங்களுக்கான அரசாங்கத்தின் பெரும் அழுத்தமானது இந்த பிரிவில் உள்ள பங்குதாரர்களுக்கு மகத்தான ஆற்றலை வழங்குகின்றது. சாலைகள், ரயில்பாதைகள் முதல் விமானங்கள் மற்றும் பிற ஸ்மார்ட்-சிட்டி முயற்சிகள் வரை, கடந்த சில ஆண்டுகளில் இந்த துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது, இது நாடு முழுவதும் உலகத்தரம்வாய்ந்த கட்டிடங்கள் வருவதற்கு வழிவகுத்துள்ளது. இந்த நிலப்பரப்பிலே, UBM Indiaவில் இருக்கும் நாங்கள் இந்தியாவின் விரைவாக வளரும் கான்கிரீட் சந்தையில் இருக்கும் வாய்ப்புகளுக்கு The Concrete Show India 2016 ஒரு தூண்டு சக்தியாக இருக்கும் என்று நம்புகிறோம்."
"இவ்வாண்டு Concrete Show Indiaவுக்கு முதல் முறையாக எண்ணற்றோர் வருவதையும் குறிக்கிறது. இக்கண்காட்சியில், நான்கு நிகழ்வுகளில் முதல் முறையாக சர்வதேச கூடாரங்கள் இடம்பெறும். முக்கிய பிரிவுகளின் அறிமுகத்தின் மூலமாக இந்த கண்காட்சி இவ்வாண்டு அளவிலே ஏறத்தாழ இரட்டிப்பாக மாறியுள்ளது: கான்கிரீட் மற்றும் கட்டுமானம், கட்டுமான கருவிகள் மற்றும் தகவல்தொடர்பு மற்றும் கட்டுமான இரசாயனங்கள்," என்று அவர் கூடுதலாக தெரிவித்தார்.
இக்கண்காட்சியில் இரண்டு நாள் மாநாடு நடைபெறும், அதில் தொழிற்துறை தலைப்புகள் குறித்து விவாதிக்கவும் செயல்படவும் ஒரு தொடர்ச்சியான முன்வைப்புகளும் பேனல் விவாதங்களும்.விவாதங்களுக்கான தலைப்புகளில் இவை உள்ளடங்கும், 'மறுவலிமையூட்டப்பட்ட சிமெண்டு கான்கிரீட் Advances in Design Techniques for (RCC) கட்டமைப்புகளுக்கான வடிவமைப்பு தொழில்நுட்பங்களில் மேம்பாடுகள்'; 'அடுக்குமாடி கட்டிடங்களுக்கான நில அதிர்வு வடிவமைப்பு'; 'உயர்ந்த கட்டிடங்கள்: தற்போதைய போக்குகளும் எதிர்கால '; 'ப்ரீகேஸ்ட் கான்கிரீட் தொழில்நுட்பம்: இந்தியாவில் வளர்ந்துவரும் போக்கு'; 'மேம்பாலங்கள் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் நவீன போக்குகள்; உயர்ந்த கட்டிடங்கள், நிலத்தடி கட்டமைப்புகள் மற்றும் சுரங்கப்பாதைகள்; 'வளையக்கூடிய மற்றும் கடினமான நடைபாதைகளின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம்' உள்ளிட்ட பல.
Concrete Show India 2016வில் இடம்பெறும் மற்ற தனித்துவமான அம்சங்களில் Product launch, Innovation zone மற்றும் B2B speed meetings உள்ளடங்கும். Product launch கண்காட்சியாளர்கள் குறிப்பிட்ட இலக்கு நேயர்களுக்கு தங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்த வாய்ப்பை வழங்கும். Innovation zone கண்காட்சியாளர்கள் தங்கள் தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்தி அதன் புதிய அம்சங்களை தொழிற்துறைக்கு சிறப்பித்துக் காட்ட அனுமதிக்கும். B2B speed meetings தொழிற்துறையின் தீர்மான எடுப்பவர்களுட்ன் இணைந்துகொள்ள கண்காட்சியாளர்களுக்கு ஒரு தளத்தை வழங்கும்.
UBM India பற்றி
UBM India என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அது கண்காட்சிகளின் தொகுப்பு, உள்ளடக்கங்களினால் வழிநடத்தப்படும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், மூலமாக உலகெங்கும் இருந்து வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒன்று சேர்க்கும் தளங்களை அளிக்கிறது. UBM India ஆண்டுதோறும் நாடு முழுவதும் 25 பெரிய அளவு கண்காட்சிகளையும், 40 மாநாடுகளையும் அளிக்கிறது; இதன் மூலம் பல நிறுவன பிரிவுகளில் வணிகத்தை செயல்படுத்துகின்றது. ஒரு UBM Asia நிறுவனமான, UBM இந்தியாவுக்கு மும்பை, புதுதில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM ஆசியா லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM Plcக்கு சொந்தமானது. UBM Asiaவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகவும் சீனாவின் பெருநிலப்பகுதியிலும், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளில் வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து வருகைதாருங்கள் ubmindia.in.
ஊடக தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
UBM India
Share this article