மும்பை, April 21, 2016 /PRNewswire/ --
100 கண்காட்சியாளர்கள் மற்றும் 300 இந்திய மற்றும் உலகளாவிய ப்ராண்டுகளுக்கு மேலான தொழிற்துறை கூட்டமைப்பு
CBME India 2016, UBM India நடத்துகின்ற மூன்று நாள் (20th - 22 ஏப்ரல் 2016) வர்த்தக கண்காட்சி, பாம்பே கன்வென்ஷன் & எக்க்ஷிபிஷன் சென்டர், மும்பையில் தொடங்கியது. இந்த நிகழ்வானது சிறப்பு விருந்தினர், Smt. Poonam Mahajan, பாராளுமன்ற உறுப்பினர்; மரியாதைக்குரிய விருந்தினர், Smt. Snehal Ambekar, மும்பையின் மேயர்; சிறப்பு விருந்தினர், Dr. Nandita Palshetkar, தலைவர், மும்பை மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் சமூகம் மற்றும் Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India உள்ளிட்ட மாண்புமிகும் கூட்டத்தினரால் தொடங்கிவைக்கப்பட்டது. இந்த கண்காட்சியானது பச்சிளம்குழந்தை, குழந்தை மற்றும் மகப்பேறு தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் உலகளாவிய விநியாகஸ்தர்கள் மற்றும் உற்பத்தியாளர்களை ஒரு கூரையின் கீழ் கொண்டு வந்தது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160420/10144423 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160314/10142066 )
சிறப்பு விருந்தினர் Smt. Poonam Mahajan தற்போதைய தேவையான விழிப்புணர்வை CBME India போன்ற நிகழ்வுகள் ஏற்படுத்துவதை சிறப்பித்துக் காட்டினார். CBME India 2016இன் கூடுதல் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி 'Make in India' பிரச்சாரத்தோடு நிறுவனங்கள் காட்சிப்படுத்திய தயாரிப்புகள் இருப்பதால் அரசாங்கத்தோடு தொடர்ந்து இந்த முயற்சியை தொடரச் செய்வேன் என்றும் அவர் வலியுறுத்தினார்.
CBME India 2016 தனது நான்காவது ஆண்டில், இந்தியாவில் தனித்துவமான ஒரு B2B கண்காட்சி, இதில் 100 கண்காட்சியாளர்கள் மற்றும் 300 இந்திய மற்றும் உலகளாவிய ப்ராண்டுகளுக்கும் மேலானவர்கள் உள்ளனர். இந்திய மற்றும் உலகளாவிய பச்சிளம் குழந்தை, குழந்தை மற்றும் மகப்பேறு தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் உற்பத்தியாளர்கள் மற்றும் வழங்குநர்களுக்கு போட்டியில்லா தொழில் வாய்ப்பை வழங்கி, ஆயிரக்கணக்கான சில்லரைவியாபாரிகள், மொத்த வியாபாரிகள், விநியோகஸ்தர்கள், இறக்குமதியாளர்கள், ஃப்ரான்ச்சைசீ சந்தை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அணுகல் வழங்க இக்கண்காட்சி நோக்கம் கொண்டுள்ளது. இந்த நிகழ்வானது அனைத்து இந்திய தொழிற்துறைகள் கழகத்தினால் ஆதரிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டு பங்கேற்கும் நிறுவனங்கள் முக்கிய உலக பிரசித்தி பெற்ற ப்ராண்டுகளான J L Morrison, Mother Care, Piramal, Me and Moms Pvt Ltd, Little's (இந்தியா), Bonny Products, TOONZ Retail, Chicco, Lovi, Smitten Baby, Farlin, Gemini Lifestyle Private Ltd, Posh Baby and Kids India, R for Rabbit Baby Products Pvt Ltd, Momzjoy மற்றும் Royal Brushes Ltd போன்ற பல்வேறு நிறுவனங்கள், இவை பரந்த அளவிலான தரமான சர்வதேச தயாரிப்புகளையும் தொழில்நுட்பத்தையும் அளிக்கின்றன.
தொடர்க்க விழாவில் பேசிய, Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India இவ்வாறு கூறினார், "சில காலமாக பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு தயாரிப்புகள் சந்தை ஒரு லாபகரமான சந்தைகளில் ஒன்றாக எழுந்துள்ளது. ப்ராண்டுகளின் தொடர்ச்சியான புதுமை மற்றும் மேம்பாடு மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளின் அதிகரிப்பு இந்த தொழிற்துறை சமீபகாலமாக வளர்ச்சியடைய பங்களித்து, மற்ற வளரும் நாடுகள் நடுவே இந்தியா ஒரு மதிப்புடைய சந்தையாக திகழச்செய்துள்ளது. CBME India 2016 நிகழ்வுக்கு UBM Indiaவில் இருக்கும் நாங்கள் பெற்றுள்ள தொழிற்துறையின் வரவேற்பு, இந்த தொழிற்துறையின் ஆற்றலை மேலும் உறுதிப்படுத்துகிறது. இந்த ஆண்டும் 300க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் உலகளாவிய ப்ராண்டுகளை காட்சிப்படுத்தி நீங்கள் உங்கள் தொழிலை மேம்படுத்த அணுகல் வழங்கியதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்."
இந்த ஆண்டின் நிகழ்விலே Cool Kids Fashion India தொடக்கமும் உள்ளடங்கும், இந்த ஆண்டின் நிகழ்விலே Cool Kids Fashion India வெளியீடு இடம்பெறும்,
இது முதன்மையான தனித்துவமான ஒரு நிகழ்வு, இதில் நன்கு அறியப்பட்ட மற்றும் வளரும் வடிவமைப்பாளர்கள், பிராண்டுகள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் இருந்து
ப்ரீமியம் குழந்தைகள் ஆடைகளை தனிச்சிறப்புப்படுத்திக்காட்டும். குழந்தைகள் நாகரீக தொழிற்துறையின் வரைபடத்தில் இந்தியாவின் கையொப்பத்தை இடுவதற்கான ஒரு நடவடிக்கையான, Cool Kids Fashion Indiaவில் குழந்தைகள் ஆடை மற்றும் ஆபரணங்களுக்கான முழுமையான ஒரு கண்ணோட்டம் உள்ளடக்குகிறது மற்றும் ப்ரீமியம் கண்காட்சி, குழந்தைகளுக்கான ஒரு நாகரீக வடிவமைப்பு போட்டி, டிரெண்ட் மன்ற தொடக்க திண்டு, குழந்தைகள் நாகரீக கேலரி மற்றும் விற்பனை மற்றும்
ஸ்டைலிங்கிற்கான பயிலரங்கு போன்ற அம்சங்களைக் காட்சிப்படுத்தும். இந்த கண்காட்சி Innovative Product Corner (IPC)ஐயும் வழங்குகிறது, இதில் IPCயில் பங்குபெறும் கண்காட்சியாளர்களிடமிருந்து சிறந்த வடிவமைப்பையும் புதுமையையும் ஒரு Innovative Product Award மூலமாக CBME India அங்கீகரிக்கும்.
ஒவ்வொரு ஆண்டையும் போலவே,இந்த கண்காட்சியில் ஒரு தொடர்ச்சியான பேனல் விவாதங்களும், புகழ்பெற்ற ரீடெய்ல் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்களான J L Morison (இந்தியா) Ltd., Wazir Advisor,Being Human, Tommy Hilfiger, Supplified.com, Apples eyes, Deal jeans, The Children's Palace, Pepe, SafetyKart.com, Musafir.com மற்றும் YoStartups.com பல நிறுவனங்களின் பேச்சாளர்களுடைய அறிவார்ந்த அமர்வுகளும் இடம்பெறும். முதல் நாளில் 'ப்ராண்டுகளும் SMEகளும் எப்படி வெற்றிகரமாக இ-காமர்ஸ் தொழில் வாய்ப்புகளையும் செயல்பாட்டு சிறப்புத்தன்மையையும் பயன்படுத்தி விநியோக சங்கிலியில் மிகவும் முற்போக்காக ஆற்றலை உந்துகிறார்கள்' போன்ற பேனல் விவாதம் நடைபெற்றதைக் கண்டது. இரண்டாம் நாளில் கீழ்கண்ட கருத்துக்களில் விரிவுரைகளை காண முடியும் - 'இந்திய குழந்தைகள் ஆடை சந்தை: உலகளாவிய ப்ராண்டுகள் இடைவெளியை நிரப்புகின்றன, லூக்ஸ் மற்றும் டிசைனர் குழந்தைகள் ஆடை: இது பனிப்பாறையின் முனை மட்டும்தானா?'
UBM India பற்றி
UBM India என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அது கண்காட்சிகளின் தொகுப்பு, உள்ளடக்கங்களினால் வழிநடத்தப்படும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், மூலமாக உலகெங்கும் இருந்து வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒன்று சேர்க்கும் தளங்களை அளிக்கிறது. UBM India ஆண்டுதோறும் நாடு முழுவதும் 25 பெரிய அளவு கண்காட்சிகளையும், 40 மாநாடுகளையும் அளிக்கிறது; இதன் மூலம் பல நிறுவன பிரிவுகளில் வணிகத்தை செயல்படுத்துகின்றது. ஒரு UBM Asia நிறுவனமான, UBM இந்தியாவுக்கு மும்பை, புதுதில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM ஆசியா லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM Plcக்கு சொந்தமானது. UBM Asiaவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகவும் சீனாவின் பெருநிலப்பகுதியிலும், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளில் வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து வருகைதாருங்கள்: ubmindia.in.
ஊடக தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
UBM India
Share this article