JAIPUR, இந்தியா, April 20, 2016 /PRNewswire/ --
Renewable Energy India Expo (REI)-ன் ஒருங்கிணைப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
வருடாந்திர Renewable Energy India exposition (REI)-ன் ஏற்பாட்டளர்களான UBM India, தனது 10வது ஆண்டு நிறைவு பதிப்பு ஆண்டில், சூரியஒளி ஆற்றல் முதலீடு மற்றும் தொழில்நுட்ப கூட்டத்தின் (Solar Energy Investment and Technology Forum) 11வது பதிப்பை அறிவித்தது, இது முதல் முறையாக ராஜஸ்தானின் தலைநகரில் நடத்தப்படும் மற்றும் சூரியஒளி ஆற்றல் தொழில்துறைக்கான வளங்களையும், வாய்ப்புகளையும் எடுத்துக்காட்டும். இந்த ஒரு நாள் அறிவாற்றல் கூட்டமானது, 22 ஏப்ரல் 2016 அன்று ஜெய்ப்பூரிலுள்ள Hotel Marriotல் நடைபெறும்.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160419/10144283 )
சூரியஒளி ஆற்றல் முதலீடு மற்றும் தொழில்நுட்ப கூட்டத்தின் ராஜஸ்தான் பதிப்பானது, கூட்டமைப்புகள் மற்றும் தொழில்துறை தலைவர்கள், கட்டுமான உரிமையாளர்கள், ஆலோசகர்கள், உற்பத்தியாளர்கள், ஒப்பந்ததாரர்கள், அரசுகள் மற்றும் உயர் மட்ட முடிவெடுப்போர், கல்வித்துறை நிபுணர்கள், பசுமை ஆற்றல் வழங்குனர்கள், திட்ட மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டாளர்கள், மிகப் பெரிய தொழில்துறை SME'க்கள் மற்றும் வங்கிகள், அமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள், சூரியஒளி பிரிவில் உள்ள தொழில் வாய்ப்புகளைப் பற்றி விவாதிக்கவும், கலந்தாலோசனை மேற்கொள்ளவும் ஒரு தொழில்சார் தளத்தை வழங்குகின்ற நோக்கத்தைக் கொண்டுள்ளது. இக்கருத்தரங்கம், இந்தியா முழுவதிலிருந்தும், தொழில்துறையிலுள்ள முடிவெடுப்போரை ஒன்றுசேர்ப்பதுடன், ராஜஸ்தான் வழங்கும் சூரியஒளி ஆற்றல் தொழில் வாய்ப்புகளை ஆராய்ந்து, மதிப்பீடு செய்யும். இந்நிகழ்ச்சியில் சூரியஒளி ஆற்றல் மீதான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு, அது இக்கூட்டத்தின் அறிவாற்றல் கூட்டாளரான CRISIL-ஆல் பதிப்பிக்கப்படும்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, UBM Indiaவின் நிர்வாக இயக்குனரான திரு. Yogesh Mudras கூறியதாவது, "இந்திய சூரியஒளி வரைபடத்தில் ராஜஸ்தான் ஒளிர்வதுடன், சூரியஒளித் துறையில் 32000 மெவா திறனை தொடர்முறையில் உற்பத்தி செய்யும் அமைப்பை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்திட்டுள்ளது. இப்பின்னணி மற்றும் எங்கள் இணையற்ற Renewable Energy India கண்காட்சியுடன், இக்கூட்டத்தின் வாயிலாக, தனது தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டு, இருபத்திநான்கு மணி நேரமும் தடையின்றி மின் விநியோகம் செய்ய வேண்டுமென்ற அரசின் குறிக்கோளுக்கும் ஆதரவளிக்கும் வகையில், மாநில அரசுக்கு UBM India வாய்ப்புகளை உருவாக்கித் தரும். இக்கூட்டத்தின் எங்கள் அறிவாற்றல் கூட்டாளரான CRISIL வெளியிட உள்ள தனித்துவமான அறிக்கையானது, இந்தியாவில் சூரியஒளி ஆற்றலுக்கான மிகவும் விரும்பப்படும் இடமாக உள்ள ராஜஸ்தானின் ஆதரவு அமைப்புமுறை மற்றும் கொள்கை முயற்சிகளை எடுத்துக்காட்டும்."
இக்கூட்டத்தில் 'MW-ஐயும் கடந்து ராஜஸ்தானின் சூரியஒளி ஆற்றல் திறனின் பயனைத் துய்த்தல்', 'RE திட்ட மேம்பாட்டில் சிறந்த செயல்முறைகள்' மற்றும் 'Discoms-க்கு ஆற்றலளித்தல்: இதிலுள்ள சவால்கள் மற்றும் உருவாக்கப்படும் தீர்வுகள்' போன்ற தலைப்புகளில் மூன்று குழுக் கலந்தாலோசனைகளும், 'ராஜஸ்தான்: உள் உற்பத்தி மையம்' என்ற தலைப்பில் தொழில்துறை பிரமுகர்களின் உரையும் இடம்பெறும். புகழ்பெற்ற தொழில்துறை பேச்சாளர்களான திரு.
B.K. Dosi, IAS, நிர்வாக இயக்குனர், Rajasthan Renewable Energy Corporation; திரு. A.K. Jain, நிர்வாக இயக்குனர், Rajasthan Electronics & Instruments Ltd., Jaipur; திரு. Rajendra Prasad Barwar, இயக்குனர், (ஆபரேஷன்ஸ்), Rajasthan Rajya Vidyut Prasaran Nigam Ltd.; திரு. Rahul Prithiani, இயக்குனர், CRISIL Research; திரு. P. Vinay Kumar, COO, Greenko Energies Private Limited; திரு. Ketan Mehta, இயக்குனர், ஆபரேஷன்ஸ், Rays Power Infra; திரு. Sachin Singh, தொழில் மேம்பாட்டுத் துறை தலைவர் (சோலார் விநியோகம்), Mahindra Susten Private Limited மற்றும் திரு. Rajinder Kumar, CMD, Bergen Group of Companies ஆகியோர் உள்ளிட்டவர்கள் கலந்துரையாடல்களில் பங்குபெறுவர்.
UBM India பற்றி:
UBM India, ஏராளமான கண்காட்சிகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாக இணைக்கும் தளங்களை தொழில்துறைக்கு வழங்கும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும். UBM India, ஒவ்வொரு ஆண்டும், நாடெங்கிலும் 25 மிகப்பெரிய கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; இதன் மூலம் பலவகை தொழில்களிலும் வர்த்தகத்திற்கு உதவுகிறது. UBM Asia-வின் ஒரு நிறுவனமான UBM India, மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM plc-க்கு சொந்தமான UBM Asia, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM Asia, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரும், சீன பிரதான பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து அணுகவும் ubmindia.in.
ஊடகத் தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
UBM India
Share this article