மும்பை, March 15, 2016 /PRNewswire/ --
UBM India நடத்தும் இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச குழந்தைகளுக்கான தயாரிப்புகளின் வர்த்தக கண்காட்சி
மூன்று வெற்றிகரமான நிகழ்வுகளுக்குப் பிறகு, சைல்டு, பேபி அண்டு மெட்டர்னிட்டி எக்ஸ்போ இந்தியாவின் (CBME India) 4ஆம் நிகழ்வை UBM India தனித்துவமான நடையில் அறிவித்துள்ளது. CBME India 2016, மும்பையிலுள்ள பாம்பே மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் 20 முதல் 22 வரை ஏப்ரல் 2016இல் திறப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது, இது இந்தியாவின் மிகப்பெரிய குழந்தைகள் மற்றும் மகப்பேறு தயாரிப்பு வர்த்தக கண்காட்சியாகும், இது வர்த்தக சகோதரத்துவம் கைகோர்த்துக்கொள்ளவும், புதிய சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ளவும், புதிய தயாரிப்புகளை ஒரே கூரையின் கீழ் வெளியிடவும் பிணைய தளத்தை வழங்கும்.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160314/10142066 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
CBME India 2015 உடைய வெற்றியானது அதன் நான்காம் நிகழ்வுக்கான தொழிற்துறையின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது , அதில் 80 கண்காட்சியாளர்கள், 150 உலகளாவிய மற்றும் இந்திய பிராண்டுகள் மற்றும் 4000 பார்வையாளர்கள் பங்கேற்றனர். CBME India உடைய தற்போதைய நிகழ்வு சில்லரை மற்றும் வணிக தொழிற்துறைக்கு 300 பிராண்டுகளை காட்சிப்படுத்தும் 100 கண்காட்சியாளர்களுக்கு மேல் பெரிய அளவில் நிகழ்த்தப்பட வாக்குறுதி அளிக்கிறது. 3 நாட்களாக நடத்தப்படும் கண்காட்சியானது, விரிவுரைகள், பயிலரங்குகள் மற்றும்இ-காமர்ஸ் மற்றும் விநியோக சங்கிலி மேலாண்மைப் போன்ற தலைப்புகளில் மன்ற விவாதங்கள் போன்ற உரையாடல்மிக்க மன்றங்களை ஒழுங்குபடித்து திட்டம்சார்ந்த வர்த்தக கூட்டுறவுகளை ஏற்படுத்த உதவும். சாவி உலகின் புகழ்பெற்ற பிராண்டுகளான J L Morrison, Mother Care, Me and Moms Pvt Ltd., Little's (India), Bonny Products, TOONZ Retail, Chicco, Lovi and Smitten Baby உள்ளிட்ட பல நிறுவனங்கள் தரமான சர்வதேச தயாரிப்புகளையும் தொழில்நுட்பத்தையும் அளிக்கும். சீனா, ஹாங்காங், பெல்ஜியம், இத்தாலி, மலேசியா, தாய்வான், தாய்லாந்து, யுஎஸ்ஏ உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இந்த வர்த்தக கண்காட்சியில் பங்கேற்புகள் இடம்பெறும்.
இந்தியாவின் மொத்த மக்கள்த்தொகையில் 39% பேர் குழந்தைகள், இது CBME போன்ற தளத்திற்கான விருப்பமான சந்தையாக இந்தியாவை மாற்றுகிறது, இது சில்லரை வர்த்தகங்கள், இ-காமர்ஸ் போர்டல்கள், விவரப்பட்டியல் சில்லரை வர்த்தகர்கள் மற்றும் பலரிடம் இருந்து சில்லரை வியாபாரிகள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள், மொத்தவியாபாரிகள், செல்வாக்கைப் பயன்படுத்துபவர்கள், தீர்மானம் எடுப்பவர்கள் மற்றும் வர்த்தக தலைவர்கள் உள்ளிட்ட தொழிற்துறை பங்குதாரர்களுக்கு வாய்ப்புகளைக் கொடுக்கும்.
இந்த ஆண்டின் நிகழ்விலே Cool Kids Fashion India வெளியீடு இடம்பெறும், இது தனித்துவமான ஒரு நிகழ்வு, இதில் நன்கு அறியப்பட்ட மற்றும் வளரும் வடிவமைப்பாளர்கள், பிராண்டுகள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் இருந்து ப்ரீமியம் குழந்தைகள் ஆடைகளை தனிச்சிறப்புப்படுத்திக்காட்டும். குழந்தைகள் நாகரீக தொழிற்துறையின் வரைபடத்தில் இந்தியாவின் கையொப்பத்தை இடுவதற்கான ஒரு நடவடிக்கை ஆகும். Cool Kids Fashion Indiaவில் குழந்தைகள் ஆடை மற்றும் ஆபரணங்களுக்கான (வயது 0-14) முழுமையான ஒரு கண்ணோட்டம் உள்ளடங்கும் மற்றும் ப்ரீமியம் கண்காட்சி, குழந்தைகளுக்கான ஒரு நாகரீக வடிவமைப்பு போட்டி, டிரெண்ட் மன்ற தொடக்க திண்டு, குழந்தைகள் நாகரீக கேலரி மற்றும் விற்பனை மற்றும் ஸ்டைலிங்கிற்கான பயிலரங்கு போன்ற அம்சங்களைக் காட்சிப்படுத்தும். இந்த கண்காட்சியானது அனைத்து இந்திய தொழிற்துறைகள் சங்கத்தினால் ஆதரிக்கப்படுகின்றது.
தொடக்கவிழாவைக் குறித்து பேசும்போது, Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India இவ்வாறு கூறினார், "உள்நாட்டு குழந்தை மற்றும் குழந்தைப்பராமரிப்பு சந்தையானது பெரிய வளர்ச்சிக்கு ஆயத்தமாக இருக்கிறது மற்றும் உலகளாவிய நிறுவனங்கள் இலாபகரமான இந்திய சந்தைக்கு ஒரு நேரான பாதையை ஏற்படுத்தி வருகின்றன. CBME India 2016, மூலமாக நாங்கள் குழந்தை மற்றும் குழந்தைப் பராமரிப்பின் விழிப்புணர்வுக்கு எரிசக்தியூட்டவும் அதேவேளையில் ஒட்டுமொத்த வாங்குநர் மற்றும் விற்பனையாளர் சமூகத்தை ஒரே தளத்தில் வெற்றிகரமாக கொண்டு வரவும் நோக்கமாக இருக்கிறோம்"
UBM India பற்றி
UBM India என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அது கண்காட்சிகளின் தொகுப்பு, உள்ளடக்கங்களினால் வழிநடத்தப்படும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், மூலமாக உலகெங்கும் இருந்து வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒன்று சேர்க்கும் தளங்களை அளிக்கிறது. UBM India ஆண்டுதோறும் நாடு முழுவதும் 25 பெரிய அளவு கண்காட்சிகளையும், 40 மாநாடுகளையும் அளிக்கிறது; இதன் மூலம் பல நிறுவன பிரிவுகளில் வணிகத்தை செயல்படுத்துகின்றது. ஒரு UBM Asia நிறுவனமான, UBM இந்தியாவுக்கு மும்பை, புதுதில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM ஆசியா லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM Plcக்கு சொந்தமானது. UBM Asiaவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகவும் சீனாவின் பெருநிலப்பகுதியிலும், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளில் வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறது மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து வருகைதாருங்கள் http://www.ubmindia.in/.
ஊடக தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
UBM India
Share this article