மும்பை, March 8, 2016 /PRNewswire/ --
வெற்றிகரமான ஃபார்மாசூட்டிகல் மாநாடுகள் ஏராளமானவற்றை நடத்தி வரும் UBM India-வின் ஒரு பிரிவான CPhI Conferences, 5வது வருடாந்திர ஃபார்மா IPR மாநாட்டை அறிவித்துள்ளது, இது, 2016 மார்ச் 9 முதல் 11 வரை மும்பையிலுள்ள வெஸ்டின்-ல் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160307/10141644 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
இம்மாநாடு, யூஎஸ்ஏ, ஐரோப்பா, பிரேசில், ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் பல போன்ற 15-க்கும் அதிகமான நாடுகளின் காப்புரிமை மற்றும் அறிவுசார் சொத்து (IP) குறித்த சட்டங்களையும், இந்திய மருந்து தயாரிப்பு தொழில்துறையின் மீது அவை கொண்டுள்ள தாக்கத்தையும் புரிந்து கொள்வதன் மீது கவனம் செலுத்தும். இக்கூட்டமானது, வெளிப்பாட்டை உருவாக்குவதற்கும், புதிய மற்றும் இதுவரை பிரவேசிக்காத சந்தைகளில் நுழைவதற்கும் இத்தொழில்துறைக்கு உதவும்.
மிகப் பிரமாண்டமான IP தளமாக இருக்கக்கூடிய வாய்ப்புள்ள இக்கூட்டத்தில், இத்தொழில் துறையின் புதிய பரிமாணங்கள், முக்கிய நடப்பு விவகாரங்கள் மற்றும் முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை ஒன்றுகூடி, கலந்து பேசுகின்ற அறிவுசார் நிபுணர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். இதில், ஃபார்மா மற்றம் பயோ-ஃபார்மா காப்புரிமைகள் மீதான நிகழ்வு ஆய்வுக் கலந்துரையாடல்கள் மற்றும் பிரமுகர்கள் பங்கேற்கின்ற, யூஎஸ்ஸில் சிக்கலான வர்க்கங்களுக்கான குழுக் கலந்துரையாடல்கள் மற்றும் "இந்திய மருந்துத் தொழில்துறையை புத்தமைவிற்குக் கொண்டு செல்லுதல்" ஆகியவை இடம்பெறும், அதைத் தொடர்ந்து கேள்வி-பதில் அமர்வுகள் நடைபெறும்.
இவ்வாண்டு பதிப்பில், இம்மாநாடு ஒரு தனித்தன்மை வாய்ந்த Moot Court Session-ஐ அறிமுகப்படுத்தும், இது ஒரு பகர்க்கப்பட்ட நீதிமன்ற அனுபவமாகும், இதில், காப்புரிமை வழக்கறிஞர்கள், வழக்குப் பிரச்னைகளை மட்டுமின்றி, அசல் விசாரணைகளின் நுட்பங்களையும் விரிவாகக் கலந்தாலோசிப்பார்கள். இதில் கலந்து கொள்பவர்களுக்கு, இவ்வழக்குகள் குறித்த மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளைக் கேட்பதற்கும், IPR-ல் உள்ள சட்டம் சார்ந்த சவால்களை ஆழமாகப் புரிந்து கொள்வதற்கும் ஒரு வாய்ப்பளிக்கப்படும்.
புகழ்பெற்ற தொழில்துறை பேச்சாளர்களான Taranpreet Singh Lamba, துணைத் தலைவர் - அறிவுசார் சொத்து மேலாண்மை, Glenmark Pharmaceuticals; Alpesh Pathak - உலகளாவிய IP தலைவர், Intas Pharmaceuticals Ltd.; Leena Menghaney - மண்டலத் தலைவர் - தெற்கு ஆசியா, MSF - Access Campaign; Mandar Kodgule - மூத்த துணைத் தலைவர், உலகளாவிய IP & தொழல்சார் யுக்தி, Wockhardt Ltd.; Mahalaxmi Andheria - துணைத் தலைவர் - அறிவுசார் சொத்துத் துறை, Panacea Biotec Ltd.; Dennies Varughese, Pharm.D. இயக்குனர், Sterne Kessler Goldstein & Fox; Aaron F Barkoff - பங்குதாரர், Mcandrews; Jonathan Atkinson - கூட்டாளர், HGF; Paul A Braier, Ph.D. Esq - கூட்டாளர், Greenblum & Bernstein, P.L.C., USA போன்றவர்களும் மற்றும் பலரும் இம்மூன்று நாள் மாநாட்டில் பங்கேற்பார்கள்.
http://www.pharmaipr-india.com/
UBM India பற்றி
UBM India, ஏராளமான கண்காட்சிகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாக இணைக்கும் தளங்களை தொழில்துறைக்கு வழங்கும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும். UBM India, ஒவ்வொரு ஆண்டும், நாடெங்கிலும் 25 மிகப்பெரிய கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; இதன் மூலம் பலவகை தொழில்களிலும் வர்த்தகத்திற்கு உதவுகிறது. UBM Asiaவின் ஒரு நிறுவனமான UBM India, மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM plc-க்கு சொந்தமான UBM Asia, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM Asia, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரும், சீன பிரதான பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும்.
மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து அணுகவும் ubmindia.in.
ஊடகத் தொடர்பு:
மிலி லால்வானி
[email protected]
+91-22-61727000
UBM India Pvt. Ltd.
ஆதாரம்: UBM India Pvt. Ltd.
Share this article