மும்பை, February 12, 2016 /PRNewswire/ --
மார்சல் காம்போஸை , மொபைல் பிரிவு- இந்தியாவின் மார்கெட்டிங் இயக்குனராக நியமித்துள்ளது
இந்தியாவில் தனது நிலையை வலுப்படுத்தி ஒரு உள்ளமைந்த மார்கெட்டிங் கட்டமைப்பை உருவாக்குவதில் ஒரு படி எடுத்து வைத்து, ASUS இன்று மார்சல் காம்போஸை நாட்டின் மொபைல் பிரிவுக்கான மார்கெட்டிங் இயக்குனராக நியமித்துள்ளது. மார்சல் தன்னுடைய மார்கெட்டிங் மற்றும் பிராண்டிங் துறையிலே வலுவான 15 ஆண்டு அனுபவத்தை கொண்டு வந்துள்ளார் மற்றும் ASUS' தொழில் திட்டங்களை ஆதரிக்கும் உள்ளமைந்த திட்டங்களை அறிமுகப்படுத்தவும் செயல்படுத்தவும் செய்து, உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்ஃபோன் சந்தையிலே ஒரு விருப்பமான நிறுவனமாக உதவுவார்.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160212/10140064)
மார்சல் காம்போஸ், மார்கெட்டிங் மேலாளர் - மொபைல் பிரிவு, இந்தியா இவ்வாறு கூறினார், "இந்தியா உலகளவில் அதிகம் பேசப்பட்ட சந்தைகளில் ஒன்றாக மாறிவிட்டது. வாழ்க்கைமுறையில் மாற்றங்கள், இணையத்தில் அதிகரித்த ஊடுருவல்கள் மற்றும் மொபைல் தொலைப்பேசி கட்டமைப்பில் மேம்பாடுகள் ஆகியவை நாட்டிலே ஸ்மார்ட்போன் பயனர்களின் எண்ணிக்கையில் பெருக்கம் ஏற்பட வழிவகுத்துள்ளது. இந்தியாவிலுள்ள நுகர்வோர் உலக தரத்திற்கு இணையாக தங்களை வைத்துக்கொள்ளும் பிராண்டுகளை செல்லுபடியாகும் விலையிலே எதிர்பார்க்கிறார்கள். இந்தியா போன்ற வேறுபட்ட, வேற்றுமை நிறைந்த மற்றும் ஆற்றல்மிகுந்த சந்தையிலே பங்கு வகிப்பதில் பெருமிதம் கொள்கிறேன் மற்றும் ASUS மேலும் வளர்வதற்கான புதுமையான திட்டங்களை செயல்படுத்த எதிர்நோக்குகின்றேன். "
மொபைல் பிரிவு, தென் அமெரிக்காவுக்கு மார்சல் தான் மார்கெட்டிங் இயக்குநர், முன்னதாக பிரேசிலில் இருந்தார். உள்ளமைந்த டிஜிட்டல் திட்டத்தின் மூலம் ASUS' Zenfone குடும்பம் வெளியிடுவதற்கு இவர் தலைமைவகித்தார், மற்றும் நாட்டிலே மாற்றத்தை ஏற்படுத்திய இ-மார்கெட்டிங் செயல்படுத்தப்படுவதற்கான பாராட்டுதலையும் பெறுகின்றார். பிரேசிலில் 'சேக டே மி மி மி'(போதும் மி மி மி) பிரச்சாரத்திற்கு பின்னால் இருந்த மூளையும் இவர் தான். Zenfone 5 மற்றும் Zenfone 6 போட்டியாளரின் விலையை விட குறைவாக விற்பது உள்ளடங்கிய விளம்பரமானது, ஒரு குறிப்பிட்ட நாளிலே ASUS பிரேசில் ஃபேஸ்புத்தக பக்கத்தை அணுகும்படியும் விளம்பர மைக்ரோசைட்டுக்கு நேரம் செலவிடும்படியும் அழைத்தனர்.சமூக ஊடகத்தினால் ஆதரிக்கப்பட்டு, இந்த பிரச்சாரம் 2 நிமிடங்களுக்குள் 1000 ஸ்மார்ட்ஃபோன்களை விற்று சாதனை முறியடித்துள்ளது.
மார்சல் 2008இல் ASUSஇல் இணைந்தார், அதுமுதல் இவருடைய ஆக்கப்பூர்வமான திட்டங்கள் மற்றும் பிழையில்லா செயல்பாடு தென் அமெரிக்க பகுதியிலே ASUS ஒரு மிகப்பெரிய ஸ்மார்ட்ஃபோன் நிறுவனமாக மாற வழிவகுத்துள்ளது. பிரேசில் போன்ற கடினமான சந்தையிலே, ASUS' உயர்தர ஸ்மார்ட்ஃபோன்கள், இன்று ஏறத்தாழ 50% மொத்த விற்பனைக்கு பங்களிக்கின்றன.
ஆகஸ்டு 2015இல், Zenfone 2 வருகையை Phenomenon Z 800க்கும் மேற்பட்டவர்கள் பங்குபெற்ற நிகழ்ச்சியிலே அறிவித்தது. இணைய மார்கெட்டிங்கின் பல்வேறு செயல்பாடுகளோடு இணைந்து, இந்த நிகழ்வு மாபெரும் வெற்றியை கண்டது, 100 பிரபல்யங்களுக்கு மேல் கேட்ஜெட் வருகையின்போது பதிவிட்டார்கள். இது தவிற, மார்சலின் பன்முக திட்டங்களினால் உந்தப்பட்டு, ASUS பிரேசில் முகப்புத்தக ரசிகர் பக்கம், 400,000த்தில் இருந்து 2.7 மில்லியன் ரசிகர்களை அடைந்தது, இந்நிறுவனம் செயல்படுகின்ற நாடுகளிலே இது தான் மிகப்பெரிய எண்ணிக்கை. தாய்வானிய நிறுவனத்தின் உலகளாவிய பக்கமும் இதில் உள்ளடங்கும்.
Intel, Myatech, One Digital மற்றும் Tufone போன்ற பெயரிடப்பட்ட பல நிறுவனங்களில் மார்சல் செயல்பாட்டு பதவிகளில் பிரேசிலில் பணியாற்றியுள்ளார். UNIP (பாலிஸ்டா பல்கலைக்கழகம்)-யில் பயின்ற ஒரு மார்கெட்டிங் பட்டதாரி.
ASUS பற்றி
ASUS, ஓர் உலகளாவிய, முதல் மூன்று நுகர்வோர் நோட்புக் விற்பனையாளரும், உலகின் சிறந்து விற்பனையாகின்ற, விருது வெல்லும் மதர்போர்டுகளின் உற்பத்தியாளரும் ஆகும். புதிய டிஜிட்டல் தலைமுறையின் முன்னணி நிறுவனமான ASUS, மதர்போர்டுகள், கிராஃபிக்ஸ் கார்டுகள், ஆப்டிகல் டிரைவ்கள், டிஸ்பிளேக்கள், டெஸ்க்டாப் மற்றும் அனைத்தும் அடங்கிய பீசிக்கள், நோட்புக்குகள், நெட்புக்குகள், சர்வர்கள், மல்டிமீடியா சாதனங்கள், ஒயர்லெஸ் தீர்வுகள், வலையமைப்பு சாதனங்கள், டாப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் அணிந்துகொள்ளக்கூடியவை உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளுடன், இன்றைய டிஜிட்டல் வீடு மற்றும் அலுவலகத்தின் தேவைகளைக் கச்சிதமாகப் பூர்த்தி செய்கின்ற பொருட்களை வடிவமைத்து, உற்பத்தி செய்கிறது. தனது புதுமையினால் தூண்டப்பட்டு, தரத்திற்கு பொறுப்புறுதி ஏற்றுள்ள ASUS, 2014-ல் 4,326 விருதுகளை வென்றுள்ளதுடன், தனது Eee PC™ மூலம் பீசி தொழில்துறையை புரட்சிகரமாக ஆக்கியதற்கான மிகப்பெரிய பெருமையையும் பெற்றுள்ளது. ASUS, உலகம் முழுவதும் 16,000 -க்கும் அதிகமான பணியாளர்களுடன், 5,200 பொறியாளர்கள் இடம்பெற்றுள்ள உலகத்தரம் வாய்ந்த ஓர் R&D குழுவையும் கொண்டுள்ளது. 2014-க்கான இந்நிறுவனத்தின் வருமானம் சுமார் யூஎஸ் டாலர் 14.5 பில்லியன் ஆகும்.
வலைதளம்: http://www.asus.com/in
ஊடக தொடர்பு:
மனோஜ் குமார்
[email protected]
+91-9818520082
Asus India Pvt Ltd
Share this article