மும்பை, February 12, 2016 /PRNewswire/ --
UBM நடத்தும் தென் இந்தியாவின் மிகப்பெரிய தொழிற்துறை கண்காட்சி
இந்திய மருந்து தொழிற்துறையானது நாட்டின் மிகப்பெரிய மருந்து நிகழ்ச்சியான CPhI மற்றும் P-MEC 2016க்காக முழு தயார்நிலையில் உள்ளது, இவை ஒரே சமயத்தில் பாம்பே கண்காட்சி மையம் (BEC) மற்றும் பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் (BKC) மும்பையில் நடைபெறும். இவ்வாண்டு, இக்கண்காட்சி மூன்று நாள் கண்காட்சியில் இருந்து ஒரு வார காட்சியாக வளர்ந்துள்ளது, Pharma Week, (நவம்பர் 17 முதல் 23, 2016). CPhI இந்தியா என்பது CPhl worldwideஇன் கிளை பிராண்ட் ஆகும்.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160211/10140020 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
CPhl இந்தியாவின் பத்து ஆண்டுகளை கொண்ட்டாடும் வேளையில், மும்பை நகரம் முழுவதிலும் நடைபெறும் 12க்கும் மேற்பட்ட நிகழ்வுகளை Pharma week நடத்தும், அவை வர்த்தகம், கல்வி, தலைமைத்துவம், புதுமை மற்றும் மருந்து துறையில் அங்கீகரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும். இவ்வாண்டு பாம்பே எக்சிபிஷன் செண்டர் மற்றும் பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மும்பை ஆகிய இரண்டு இடங்களில் நடைபெறும், CPhl மற்றும் P-MEC 2016 ஆகியவை கண்காட்சியாளர் காட்சி, புதுமை கேலரி, விரைவு கூட்டங்கள் மற்றும் நேரலை பொழுதுபோக்கை உள்ளடக்கியிருக்கும்.
CPhI India என்பது CROக்கள், CMOக்கள் மற்றும் API, ஜெனெரிக்ஸ், எக்சிபியெண்ட்கள், மற்றும் மருந்து உருவாக்கங்கள், நுண்ணிய இரசாயனங்கள் , பயோசிமிலர்கள், நிறைவடைந்த உருவாக்கங்கள், ஆய்வக இரசாயனங்கள் மற்றும் உயிரிதொழில்நுட்ப உற்பத்தியாளர்களுக்கான ஒரு தொழிற்துறை தளம் ஆகும். P-MECஇல் மருந்து இயந்திரங்கள் மற்றும் கருவிகள், ஆய்வு கருவி தானியக்கம் & ரோபோடிக்கள், பேக்கேஜிங் கருவிகள் & சப்ளைகள், தொழிலக/ கட்டிட கருவிகள், தானியக்கம் & கட்டுப்பாடுகள், செயல்முறை கருவிகள், RFID, டேப்லெட்டிங்/கேப்ஸ்யூல் நிரப்பிகள், சுத்தமான அறை கருவி, நிரப்பும் கருவி மற்றும் ஆய்வக தயாரிப்புகள் உள்ளடங்கும்.
UBM India பற்றி
UBM India என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அது கண்காட்சிகளின் தொகுப்பு, உள்ளடக்கங்களினால் வழிநடத்தப்படும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், மூலமாக உலகெங்கும் இருந்து வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒன்று சேர்க்கும் தளங்களை அளிக்கிறது. UBM India ஆண்டுதோறும் நாடு முழுவதும் 25 பெரிய அளவு கண்காட்சிகளையும், 40 மாநாடுகளையும் அளிக்கிறது; இதன் மூலம் பல நிறுவன பிரிவுகளில் வணிகத்தை செயல்படுத்துகின்றது. ஒரு UBM Asia நிறுவனமான, UBM இந்தியாவுக்கு மும்பை, புதுதில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM ஆசியா லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM Plcக்கு சொந்தமானது. UBM Asiaவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகவும் சீனாவின் பெருநிலப்பகுதியிலும், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளில் வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறது மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து வருகைதாருங்கள் ubmindia.in.
ஊடக தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
UBM India
Share this article