மும்பை, February 10, 2016 /PRNewswire/ --
பிப்ரவரி 8 முதல் பிப்ரவரி 14, 2016 வரை சலுகை செல்லுபடியாகும்
Zenfone Zoom மற்றும் Zenfone Max ஆகியவற்றுக்கு பெருவாரியான வரவேற்புடன் இந்த ஆண்டு வெளியிட்ட பிறகு, # SameGiftSyndromeஐ குணப்படுத்த Asus ஒரு காதலர் தின சலுகையை அறிவித்துள்ளது. இந்த திடட்த்தின் கீழ் ZenPad, ZenFone 2 Laser அல்லது ZenBook வாங்குவோர் உற்சாகமூட்டும் பரிசுகளை வெல்லும் வாய்ப்பை பெறுவார்கள். முதல் 200 வாடிக்கையாளர்களுக்கு ASUS ZenEars கொடுக்கப்படும், அது பயனர்களின் காதுகளுக்குள் கச்சிதமாக பொருந்தக்கூடிய பணிச்சுழலுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட இயர்ஃபோன், மற்றும் அடுத்த 100 பேர் ASUS ZenPowersஐ வெல்வார்கள், இவை சக்திவாய்ந்த, கிரெடிட் கார்ட் அளவிலான 10,050 mAh பேட்டரி பவர் பேங்குகள். இது தவிற 100 அதிஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு ஒரு ஒயர்டு மவுஸ் வழங்கப்படும் மற்றும் 50 பேருக்கு ரூ.1,000 மதிப்புள்ள Flipkart வசுச்சர்கள் கிடைக்கும்; வெற்றியாளர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இச்சலுகை பிப்ரவரி 8ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 14, 2016 வரை இருக்கும்.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160209/10139775 )
Peter Chang - ASUS இந்தியாவின் பிராந்திய தலைவர், தெற்கு ஆசியா மற்றும் தேசிய மேலாளர் இவ்வாறு கூறினார், "நம் வாழ்வின் சிறப்பான நபர்களுக்கான நமது பாராட்டுக்களை காட்டுவதற்காக நாம் காதலர் தினத்தைக் கொண்டாடுகின்றோம். இந்த உணர்வுணர்வை மனதில் வைத்து, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த தருணத்தை சிறப்பானதாக மாற்றி ASUSற்கு இந்திய சந்தை வைத்துள்ள முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும்படி எதையாகிலும் நாங்கள் செய்ய விரும்புகிறோம். எல்லா கருவிகளிலும் நாங்கள் வைத்திருக்கும் உற்சாகமூட்டும் சலுகைகளினால் எங்கள் வாடிக்கையாளர்கள் உற்சாகம் அடைவார்கள் என்பதில் நான் தன்நம்பிக்கையுடன் இருக்கிறேன்." அவர் மேலும் கூறுகையில், "உயர்தர தயாரிபுகளையும் போட்டிகரமான விலைகளையும் கொடுப்பதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆடம்பரமான கவனிப்பை கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்திருக்கிறோம் மற்றும் தொடர்ந்து அவ்வாறே செய்வோம்." என்றார்.
மேலும் தகவல்களுக்கும் சலுகை மீட்புக்கும்
இந்த சலுகைக்கு தகுதிபெற, வாடிக்கையாளர்கள் இங்கே பதிவுசெய்துகொள்ள வேண்டும் http://asus.in/valentines-offer/
தயாரிப்பின் சிறப்பம்சங்கள்:
ZenPad:
ZenPad நான்கு வகைகளில் கிடைக்கிறது - ZenPad 8.0, ZenPad 7.0, ZenPad C 7.0 (Intel குவாட்-கோர் ப்ராசசருடன்) மற்றும் ZenPad C 7.0 (MediaTek குவாட்-கோர் ப்ராசசருடன்). 20.3 சென்டிமீட்டர் திரை அளவுடன், ZenPad 8.0 Qualcomm MSM8929 64-பிட் ஆக்டா கோர் ப்ராச்சருடனும் 16ஜிபி உள்ளமைந்த நினைவகத்துடனும் வருகிறது. இக்கருவியில் 8எம்பி தானியக்க குவிய பிரதான கேமரா உள்ளது, அது பெரிய அப்ரெச்சர், பிரகாசமான புகைப்படங்களுக்கு பிக்சல் மாஸ்டர் கேமரா, பூஜ்யம் சட்டர் தாமதம் மற்றும் கைப்பயன் முறை ஆதரவு போன்ற அம்சங்களை பெற்றுள்ளது, மற்றும் 2 எம்பி முன்புற கேமரா 140 டிகிரி செல்ஃபீ பனோரமாவுடன் வருகிறது. ZenPad 7.0-வில் திரை அளவு17.7 செண்டிமீட்டர்கள் உள்ளது மற்றும் ஒரு Intel Atom x3-C3230 குவாட் கோர் ப்ராசசரை கொண்டுள்ளது. ZenPad 7.0வின் மற்ற அம்சங்களில் 16ஜிபி உள்ளார்ந்த நினைவகம், தானியக்க குவியம், கைப்பயன் முறை, IR வடிகட்டி உடைய ஒரு 8 எம்பி பிரதான கேமரா, ஒரு 2எம்பி முன்புற கேமரா ஆகியவை உள்ளடங்கும். ZenPad C 7.0 இடம் ZenPad 7.0இல் உள்ள அதே திரை அளவே இருக்கிறது மற்றும் இரண்டு மாதிரிகள் உள்ளது, ஒன்று Intel 64-பிட் x3-C3230 குவாட்-கோர் ப்ராசசருடனும் மற்றொன்று MediaTek MT8382V/W குவாட்-கோர் ப்ராசசருடனும் இருக்கிறது. இக்கருவியில் 5 எம்பி பிரதான கேமராவும் 0.3எம்பி முன்புற கேமராவும் உள்ளது. ZenPad மாறினிகள் அனைத்துமே ஆண்ட்ராய்ட் லாலிபாப்பில் செயல்படுகின்றன.
ZenFone 2 Laser:
ஆண்ட்ராய்ட் 5.9 லாலிபாப்பினா சக்தியூட்டப்பட்டு, ZenFone 2 Laser அற்புதமான ஹை-டெஃபனிஷன் (HD) 1280 x 720-பிக்செல் ரெசல்யூஷனை அளிக்கிறது. இது 5 எம்பி முன்ப்புற கேமராவையும் 2X வரை விரைவான குவியம் உடைய லேசர் தானியக்க குவியம் 13 எம்பி பின்புற கேமராவையும் அளிக்கிறது. இந்த தொலைப்பேசி 3000 mAh Li-பாலிமர் நீக்கக்கூடிய பேட்டரி, மேம்பட்ட ஒலி தெளிவையும் ஆழ்ந்த பேசையும் உறுதிசெய்யும் ASUS Sonic Master மற்றும் 3 ஜிபி RAMஐ கொண்டுள்ளது. இந்த தொலைப்பேசி சூப்பர் சிராய்ப்பு எதிர்ப்பு கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 உடன் வருகிறது, அதில் சந்தையிலுள்ள எந்த ஒரு பாதுகாப்பு படலத்தையும் விட சிறந்த ஸ்மார்ட்ஃபோனிங் சிராய்ப்பு எதிர்ப்பைக் கொண்டுள்ளது. மற்ற அம்சங்களில் இரண்டு-SIM, 4G LTE மற்றும் குவால்காம் 64-பிட் ஆக்டா கோர் ப்ராசசர் ஸ்னாப்ட்ராகன் 615 ஆகியவை உள்ளடங்கும்.
ZenBook:
வெறும் 12.3மிமீ அளவில், Asus ZenBook UX305LA தான் உலகிலேயே மெல்லிய 13.3-அங்குல QHD அல்ட்ராபோர்டபில் மடிக்கணினி, இதற்கு முழு வரம்பிலான Intel ப்ராசசர்கள் சக்தியூட்டுகின்றன, அதாவது Core™ M, Core™ i5 & Core™ i7 மற்றும் கருப்பு, வெள்ளை மற்றும் பொன்னிறம் போன்ற பல நிற தெரிவுகளில் கிடைக்கப்பெறும். QHD திரை, 8ஜிபி RAM, 512ஜிபி திட-நிலை தகடு மற்றும் 10 மணிநேரம் வரை பேட்டரி ஆயுள் உள்ளிட்டவையோடு ZenBook UX305LA தான் பவர் பயனர்களுக்கான உச்சகட்ட அல்ட்ராபோர்டபில் மடிக்கணினி. UX305LA ஒரு மகத்தான தோற்றம் மற்றும் செயல்பாட்டிற்கான சிறப்பான சமன்பாடாகும், அது விண்டோஸ் 10 சேர்க்கையுடன் சக்திவாய்ந்த செயல்திறனை வழங்குகிறது. இந்திய நுகர்வோர்கள் அல்ட்ராபோர்டபில் தயாரிப்புகளுக்கு நேராக மேல்நோக்கி பயனிப்பதில் அதிகரித்துள்ளனர் மற்றும் இறகுபோன்ற எடைகுறைந்த ZenBook UX305LA தன் மெல்லிய வடிவமைப்பினால் இந்த பிரிவிற்கு மறுவிளக்கம் அளிக்கும் ஒரு உண்மையான செயல்திறனாளி. இந்த பிரிவிலே மிகவும் மலிவான தயாரிப்புகளில் இதுவும் ஒன்று மற்றும் உங்களை நேசிப்பவர்களுக்கான காதலர் தின பரிசு தெரிவுகளிலே முதன்மையான இடத்தைப் பெற தகுதிவாய்ந்தது என்று நாங்கள் உண்மையாக நம்புகிறோம்.
ZenEar:
ZenEar என்பது அதிநவீன ஒலி வெளியீட்டை அளிப்பதற்கான ட்ரைவர் தொழில்நுட்பம் மற்றும் Sonic Master 2.0 ஆகியவற்றின் புதுமையான கலவை ஆகும். பணிச்சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட இயர்ஃபோன்கள் பயனர்களின் காதுகளில் கச்சிதமாக பொருந்தி, பிரதிபலிக்கும் ஓசையை திறன்பட உறிஞ்சுகிறது, இறைச்சலை குறைக்கிறது மற்றும் அதிக இசை விவரங்களை மீட்கிறது. இதில் ஒரு காப்பீடுசெய்யப்பட்ட தணித்தல் அமைப்பு மற்றும் தெள்ளத்தெளிவான மற்றும் விவரமான ஓசையை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட பரிமாற்ற குழாயும் உள்ளன.
ZenPower:
வெறும் 215கி எடையுள்ள, ZenPower ஒரு 10050mAh பேட்டரி உடைய உயர்ந்த கொள்திறனுடைய பவர் பேங்க், இது ஒரு கருவி மட்டுமல்ல, பல கருவிகளை சார்ஜில் வைத்துக்கொள்வதற்கும், எடுத்துச்செல்வதற்கும் போதுமான கணிசமான கொள்திறனை அளிக்கிறது. ஒரு கடன் அட்டை அளவிலான இந்த கருவி, எந்த ஒரு ஸ்மார்ட் கருவியையும் முழுவதுமாக சார்ஜ் செய்வதற்கு சிறந்தது, மற்றும் இதன் பணிச்சூழலியல் உணர்வும், இலகுவான ப்ரீமியம் ஃபினிஷும் ஒரு ஆடம்பர தோற்றத்தை இதற்கு அளிக்கிறது.
ASUS பற்றி
ASUS, ஓர் உலகளாவிய, முதல் மூன்று நுகர்வோர் நோட்புக் விற்பனையாளரும், உலகின் சிறந்து விற்பனையாகின்ற, விருது வெல்லும் மதர்போர்டுகளின் உற்பத்தியாளரும் ஆகும். புதிய டிஜிட்டல் தலைமுறையின் முன்னணி நிறுவனமான ASUS, மதர்போர்டுகள், கிராஃபிக்ஸ் கார்டுகள், ஆப்டிகல் டிரைவ்கள், டிஸ்பிளேக்கள், டெஸ்க்டாப் மற்றும் அனைத்தும் அடங்கிய பிசிக்கள், நோட்புக்குகள், நெட்புக்குகள், சர்வர்கள், மல்டிமீடியா சாதனங்கள், ஒயர்லெஸ் தீர்வுகள், வலையமைப்பு சாதனங்கள், டாப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் அணிந்துகொள்ளக்கூடியவை உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளுடன், இன்றைய டிஜிட்டல் வீடு மற்றும் அலுவலகத்தின் தேவைகளைக் கச்சிதமாகப் பூர்த்தி செய்கின்ற பொருட்களை வடிவமைத்து, உற்பத்தி செய்கிறது. தனது புதுமையினால் தூண்டப்பட்டு, தரத்திற்கு பொறுப்புறுதி ஏற்றுள்ள ASUS, 2014-ல் 4,326 விருதுகளை வென்றுள்ளதுடன், தனது Eee PC™ மூலம் பிசி தொழில்துறையை புரட்சிகரமாக ஆக்கியதற்கான மிகப்பெரிய பெருமையையும் பெற்றுள்ளது. ASUS, உலகம் முழுவதும் 16,000 -க்கும் அதிகமான பணியாளர்களுடன், 5,200 பொறியாளர்கள் இடம்பெற்றுள்ள உலகத்தரம் வாய்ந்த ஓர் R&D குழுவையும் கொண்டுள்ளது. 2014-க்கான இந்நிறுவனத்தின் வருமானம் சுமார் யூஎஸ் டாலர் 14.5 பில்லியன் ஆகும்.
வலைதளம்: http://www.asus.com/in
ஊடக தொடர்பு:
மனோஜ் குமார்
[email protected]
+91-9818520082
Asus India Pvt Ltd
Share this article