ASUS அடுத்த நிலை ஸ்மார்ட்போன் படமெடுத்தலை அறிமுகப்படுத்தவுள்ளது
மும்பை, January 7, 2016 /PRNewswire/ --
- தனது மிகவும் மேம்பட்ட புகைப்படமெடுத்தலில் கவனமுள்ள ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஜென்ஃபோன் ரகத்தை விரிவுபடுத்துதல்
- 3X ஆப்டிக்கல் ஜூம் மூலம் பெருமிதம்கொள்ளும் புதிய தொலைப்பேசி, தொழிற்துறையின் முன்னணி கேமரா அம்சங்களுடன்
அம்சங்கள் நிறைந்த ஜென்ஃபோன் ரகத்தினால் டிஜிட்டல் படமெடுத்தலில் புதிய தரநிலையை அமைத்த பின்னர், ஸ்மார்ட்போன் புகைப்படமெடுத்தலை ASUS மறுகண்டுபிடிப்பு செய்யவுள்ளது. இந்த மாதத்தில் பிற்பகுதியில் இந்திய சந்தையை அடைய திட்டமிடப்பட்டுள்ள, ASUSஇன் விரிவடையும் ஸ்மார்ட்போன் ரகத்தின் புதிய சேர்க்கை, படமெடுத்தலின் தலைசிறந்த படைப்பு உண்மையில் பயனாளிகள் 'உலகை முகத்தின் அருகில்' காணச் செய்யும்.
புகைப்படமெடுப்பவர்களுக்கு இனிமையானதாக இருக்க வேண்டும் என்று வடிவமைக்கப்பட்ட புதிய கருவியானது, ஒரு ஸ்மார்ட்போன் மூலம் படமெடுக்கப்பட்ட மிகவும் தெளிவான மற்றும் கூர்மையான படங்களுக்காக இதற்கு முன் இல்லாத வன்பொருள் தொழில்நுட்பத்துடன் வருகிறது, அதே நேரம் ASUSஇன் விருதுவெல்லும் அழகியலுக்கு ஒத்ததாகவும் வருகிறது.
புதிய தொலைப்பேசியின் சில புதிய அம்சங்களில் இவை உள்ளடங்கும்:
- ஒரு 13 MP பிரதான கேமரா 3X ஆப்டிக்கல் ஜூம் உடன், லேசர் தானியக்ககுவியம் மற்றும் மேம்பட்ட பட தரத்திற்காக OIS உடைய 10 லென்ஸ்களுடன் வருகிறது.
- உயர்ந்த தரம்வாய்ந்த குவாட்-கோர் ப்ராசசருடன் 4 GB RAM மாறினி ஒரு மெல்லிய, ஸ்டைலான வடிவ காரணி
ASUS' ஜென்ஃபோன் புகைப்படமெடுத்தலில் தொடர்ச்சியாக புதிய தரநிலைகளை அமைத்துள்ளது, பிக்சல்மாஸ்டர் கேமராக்கலுடன் ஒவ்வொரு படமும் வியக்கவைக்கும் தெளிவுடனும், பட நிலைப்படுத்தலை மேம்படுத்தும் லேசர் தானியக்க குவியமும், அல்லது தொழிற்துறையில் முன்னணிவகிக்கும் குறைந்த ஒளி முறையான ஃப்லேஷ் இல்லாத குறைந்த ஒளி படங்களுக்கும் ஒளியின் உணர்வுத்தன்மையை 400% அதிகரித்தல் ஆகியவற்றின் மூலம் பிற பிரிவுகளிலும் தனித்துநிற்கிறது.
மேலும் தெரிந்துகொள்ள தொடர்ந்து கவனியுங்கள்.
ASUS பற்றி
ASUS, ஓர் உலகளாவிய, முதல் மூன்று நுகர்வோர் நோட்புக் விற்பனையாளரும், உலகின் சிறந்து விற்பனையாகின்ற, விருது வெல்லும் மதர்போர்டுகளின் உற்பத்தியாளரும் ஆகும். புதிய டிஜிட்டல் தலைமுறையின் முன்னணி நிறுவனமான ASUS, மதர்போர்டுகள், கிராஃபிக்ஸ் கார்டுகள், ஆப்டிகல் டிரைவ்கள், டிஸ்பிளேக்கள், டெஸ்க்டாப் மற்றும் அனைத்தும் அடங்கிய பிசிக்கள், நோட்புக்குகள், நெட்புக்குகள், சர்வர்கள், மல்டிமீடியா சாதனங்கள், ஒயர்லெஸ் தீர்வுகள், வலையமைப்பு சாதனங்கள், டாப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் அணிந்துகொள்ளக்கூடியவை உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளுடன், இன்றைய டிஜிட்டல் வீடு மற்றும் அலுவலகத்தின் தேவைகளைக் கச்சிதமாகப் பூர்த்தி செய்கின்ற பொருட்களை வடிவமைத்து, உற்பத்தி செய்கிறது. தனது புதுமையினால் தூண்டப்பட்டு, தரத்திற்கு பொறுப்புறுதி ஏற்றுள்ள ASUS, 2014-ல் 4,326 விருதுகளை வென்றுள்ளதுடன், தனது Eee PC™ மூலம் பிசி தொழில்துறையை புரட்சிகரமாக ஆக்கியதற்கான மிகப்பெரிய பெருமையையும் பெற்றுள்ளது. ASUS, உலகம் முழுவதும் 16,000 -க்கும் அதிகமான பணியாளர்களுடன், 5,200 பொறியாளர்கள் இடம்பெற்றுள்ள உலகத்தரம் வாய்ந்த ஓர் R&D குழுவையும் கொண்டுள்ளது. 2014-க்கான இந்நிறுவனத்தின் வருமானம் சுமார் யூஎஸ் டாலர் 14.5 பில்லியன் ஆகும்.
வலைதளம்: http://www.asus.com/in
ஊடக தொடர்பு:
மனோஜ் குமார்
[email protected]
+91-9818520082
Asus India Pvt Ltd
Share this article