இரண்டு மெகா அறிவிப்புகளுடன், ASUS புத்தாண்டைக் கோலாகலமாக வரவேற்கிறது
மும்பை, December 21, 2015 /PRNewswire/ --
ZenFestival-ல் பல புதிய பொருட்களின் அறிமுகத்துடன், குறிப்பாக ZenFone 2 Laser, ZenFone Selfie, ZenFone 2 Deluxe மற்றும் ZenPad வகை டாப்லெட்டுகளுடன், ASUS-க்கு 2015-ம் ஆண்டு மிகப் பிரமாதமாக அமைந்துவிட்ட நிலையில், ASUS தற்போது, மேலும் பிரமாண்டமான 2016-க்கு தயாராகி வருகிறது. இவ்வகை தயாரிப்புகளுக்கு 660 நகரங்களில் 30 ஆயிரம் முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ள மற்றும் ZenFone 2 Laser 3வது நாளே விற்றுத் தீர்ந்துவிட்ட நிலையில், சில மாதங்களுக்கு முன் "மேக் இன் இந்தியா"-வுக்கான தனது திட்டங்களையும் ASUS பகிர்ந்து கொண்டுள்ளது. ASUS தற்போது, தொழில்நுட்பத்தின் அளவுருக்களுக்குப் புதிய பரிமாணத்தைத் தருகின்ற இரண்டு புத்தம் புதிய, மெலிதான, நவநாகரீகமான, அதே நேரத்தில் ஆற்றல்மிக்கத் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற அனைத்து ASUS தயாரிப்புகளையும் போலவே, இப்புதிய பொருட்களும் கலைநயமிக்க தோற்ற வடிவங்களுடனும், ஏராளமான இணையற்ற அம்சங்களுடனும் தொழில்துறையில் மிகச் சிறந்த செயல்திறன் கொண்ட, எழில்மிகு தோற்றம் கொண்ட ஸ்மார்ட் சாதனங்களிடையே இடம்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
CY2016 ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியச் சந்தையில் பிரவேசிக்கத் திட்டமிட்டுள்ள இச்சாதனங்கள், அனைவராலும் இயலுகின்ற விலையில், ஆடம்பரத்தை வழங்கும் நிறுவனத்தின் நோக்கத்திற்குச் சான்றாக அமையும்.
ASUS பற்றி
ASUS, ஓர் உலகளாவிய, முதல் மூன்று நுகர்வோர் நோட்புக் விற்பனையாளரும், உலகின் விற்பனையில் சாதனை படைக்கின்ற, விருது வெல்லும் மதர்போர்டுகளின் உற்பத்தியாளரும் ஆகும். புதிய டிஜிட்டல் தலைமுறையின் முன்னணி நிறுவனமான ASUS, மதர்போர்டுகள், கிராஃபிக்ஸ் கார்டுகள், ஆப்டிகல் டிரைவ்கள், டிஸ்பிளேக்கள், டெஸ்க்டாப் மற்றும் அனைத்தும் அடங்கிய பிசிக்கள், நோட்புக்குகள், நெட்புக்குகள், சர்வர்கள், மல்டிமீடியா சாதனங்கள், ஒயர்லெஸ் தீர்வுகள், வலையமைப்பு சாதனங்கள், டாப்லெட்டுகள், ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் அணியத்தக்கவை உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளுடன், இன்றைய டிஜிட்டல் சார்ந்த வீடு மற்றும் அலுவலகத்தின் தேவைகளைக் கச்சிதமாகப் பூர்த்தி செய்கின்ற பொருட்களை வடிவமைத்து, உற்பத்தி செய்கிறது. புத்தமைவினால் தூண்டப்பட்டு, தரத்திற்கு பொறுப்புறுதி ஏற்றுள்ள ASUS, 2014-ல் 4,326 விருதுகளை வென்றுள்ளதுடன், தனது Eee PC™ மூலம் PC தொழில்துறையை புரட்சிகரமாக ஆக்கியதற்கான மிகப்பெரிய பெருமையையும் பெற்றுள்ளது. ASUS, உலகம் முழுவதும் 16,000-க்கும் அதிகமான பணியாளர்களுடன், 5,200 பொறியாளர்கள் இடம்பெற்றுள்ள உலகத்தரம் வாய்ந்த ஓர் R&D குழுவையும் கொண்டுள்ளது. 2014-க்கான இந்நிறுவனத்தின் வருமானம் சுமார் US$14.5 பில்லியன் ஆகும்.
வலைத்தளம்: http://www.asus.com/in/
ஊடகத் தொடர்பு:
மனோஜ் குமார்
[email protected]
91-9818520082
ASUS India Pvt Ltd
Share this article