ஹைதராபாத், இந்தியா, December 18, 2015 /PRNewswire/ --
தென்னிந்தியாவில், புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி துறைக்கான தொழில்துறைத் தளம்
இரண்டு நாள் (17 - 18 டிசம்பர் 2015) நடைபெறுகின்ற புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி வர்த்தகக் கண்காட்சியான RenewX 2015-ஐ ஹைதராபாதிலுள்ள ஹைடெக்கில் UBM India இன்று தொடங்கி வைத்தது. தனது பிரபலமான பாரம்பரிய கண்காட்சியான Renewable Energy India Expo (REI India)-ஆல் தூண்டப்பெற்ற UBM India, RenewX 2015 மூலம், லாபகரமான தென்னிந்திய புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி சந்தைக்குள் பிரவேசித்து பயனடைவதற்கான தொழில்துறை தளம் ஒன்றை நிறுவனங்களுக்கு வழங்கும். தொழில்துறையின் போக்குகள், சவால்கள் மற்றும் இந்திய ஒழுங்கமைப்பு கட்டமைப்பு உள்ளிட்ட சந்தை குறித்த கணிப்புகளை கலந்தாலோசிப்பதற்காக ஒன்றுகூடிய இந்தியாவின் பசுமை பொருளாதார சமுதாயத்தின் கூட்டம் ஒன்றையும் இக்கண்காட்சி கண்டது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20151217/10137002-a )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20151217/10137002-b )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
RenewX 2015-ன் தாடக்க விழாவானது, தெலிங்கானா அரசின் எரிசக்தி செயலர் திரு. Arvind Kumar; Solar, Bloomberg New Energy Finance - இந்தியாவின் மூத்த பகுப்பாய்வாளர் திரு. Bharat Bhushan Agrawal; Energy & Utilities, PriceWaterhouseCoopers-ன் பார்ட்னர் திரு. Kameswara Rao மற்றும் UBM India Pvt. Ltd-ன் குழு இயக்குனர் திரு. Rajneesh Khattar ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
தெலிங்கானா அரசின் எரிசக்தித் துறை மற்றும் Telangana New Renewable Energy Development Corporation Ltd (TNREDCL), Solar Power Producers Association, Indian Biomass Association (IBA), Indo German Energy Forum Support Office (IGEFSO), New & Renewable Energy Development Corporation (NREDCAP), Electronic Industries Association A.P. (ELIAP), Federation of Telangana and Andhra Pradesh Chambers of Conference and Industry (FTAPCCI) ஆகியவை உள்ளிட்ட கூட்டமைப்புகள், RenewX 2015-க்கு ஆதரவளித்தன.
உற்பத்தியாளர்கள், EPC-க்கள் மற்றும் சேவை வழங்குனர்களை ஒன்று சேர்த்துள்ள RenewX 2015, தெலிங்கானா அரசின் மாநில அரங்கு, Mytrah Energy (India) Limited, Sova Power Limited, Waaree Energies Ltd, Surana Solar Limited, Chemtrols Solar Private Limited, Nuevosol Energy Pvt. Ltd, Premier Solar Systems Pvt Ltd, Goldi Green Technologies Pvt Ltd, Cirus Solar Private Limited, Galileisolar India Pvt Ltd, Fronius India மற்றும் Topsun Energy Limited ஆகியவை உள்ளிட்ட முக்கிய பங்கேற்கும் காட்சியாளர்களைக் கொண்டுள்ளது.
இக்கண்காட்சியின் சிறப்பம்சங்களில், ஆற்றல்மிக்க, "காற்றை அடக்கிய சூரியோதய மண்டலம்" ("A Sunrise Region that tamed the Wind") என்ற இரண்டு நாள் மாநாடும் அடங்கும், இது தொழில்துறை எதிர்கொண்டுள்ள சவால்களையும், தொழில்துறை நாடும் தீர்வுகளையும் எடுத்துக்காட்டும். இந்தியாவின் கழிவை எரிசக்திக்கான வாய்ப்பாகப் பயன்படுத்துதல் - நமது கலாச்சாரத்தில் கழிவை ஒருங்கிணைத்தல், தென்னிந்தியா: மேம்பாட்டாளரின் ஆனந்தம், சூரியஒளிப் பூங்கா: மேம்பாட்டளர்கள் மற்றும் மாநிலத்தின் நோக்கு, கூரை உச்சி அனுபவம்: தென்னிந்தியாவில் ஒளிர்தல், வெளிப்படையான அணுகல்: இதிலுள்ள சவால்கள் மற்றும் உருவாக்கப்படும் தீர்வுகள் மற்றும் உற்பத்தி மற்றும் சேவைகளின் சூழியல்: அதிகரிக்கும் திறன் போன்ற தொழில்துறை விஷயங்களைச் சுற்றி இந்த அமர்வுகள் இருக்கும்.
தொடக்க விழாவில் பேசும்போது, UBM India Pvt. Ltd.-ன் குழு இயக்குனரான திரு. Rajneesh Khattar கூறியதாவது, "நிறுவப்பட்டது முதலே, தெலிங்கானா மாநிலம் சூரிய எரிசக்தியை தீவிரமாக ஆதரித்து வருகிறது மற்றும் தென்னிந்தியாவின் இதர மாநிலங்கள் புதுப்பிக்கக்கூடிய எரிசக்திக்கு ஊக்கமளித்து வருகின்ற நிலையில், இதன் லாபகரமான மற்றும் சாதகமான அரசு மற்றும் தொழில்துறை கொள்கைகள் காரணமாக, இம்மண்டலம் இத்துறைக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். இதன் விளைவாக, இம்மண்டலத்தில் இத்துறை சர்வதேச ஆர்வத்தையும் ஈர்த்துள்ளது மற்றும் அதைத் தொடர்ந்து வந்த முதலீடுகள், மிகப் பெரிய திட்டங்களின் அறிமுகத்திற்கு வழிவகுத்துள்ளன. இச்சூழலில், தென்னிந்தியாவில் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி தொழில்துறையின் வளர்ச்சியை துரிதப்படுத்துவதையும், நாட்டின் நிலையான பொருளாதார முன்னேற்றத்திற்குப் பங்களிப்பதையும் RenewX 2015 நோக்கமாகக் கொண்டுள்ளது."
UBM India பற்றி
UBM India, ஏராளமான கண்காட்சிகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாக இணைக்கும் தளங்களை தொழில்துறைக்கு வழங்கும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும். UBM India, ஒவ்வொரு ஆண்டும், நாடெங்கிலும் 25 மிகப்பெரிய கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; இதன் மூலம் பலவகை தொழில்களிலும் வர்த்தகத்திற்கு உதவுகிறது. UBM Asiaவின் ஒரு நிறுவனமான UBM India, மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM plc-க்கு சொந்தமான UBM Asia, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM Asia, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரும், சீன பிரதான பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து அணுகவும் ubmindia.in.
ஊடகத் தொடர்பு
ப்ரியா பாட்ஷா
[email protected]
022-61727000
UBM India
Share this article