டெல்லி, December 16, 2015 /PRNewswire/ --
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 9வது பதிப்பு வருகையாளர்களின் 25%-க்கும் அதிகமான அதிகரிப்பைக் கண்டுள்ளது
9வது சர்வதேச தீ மற்றும் பாதுகாப்பு கண்காட்சி மற்றும் மாநாடு (IFSEC) India Expo 2015 என்ற மூன்று நாள் (டிசம்பர் 10 முதல் 12, 2015 வரை) தீ மற்றும் பாதுகாப்பு கண்காட்சியை புது டெல்லியில் UBM India வெற்றிகரமாக நிறைவு செய்தது. இக்கண்காட்சி, உலக அளவிலான சிறந்த செயல்முறைகளைக் கலந்தாலோசிப்பதற்காகவும், பாதுகாப்பு மற்றும் தீ பாதுகாப்பு தொழில்துறையில் உள்ள மிகவும் நெருக்கடியான சவால்களில் சிலவற்றுக்கு தீர்வுகளைத் தேடுவதற்காகவும் சர்வதேசப் புகழ் பெற்ற காட்சியாளர்கள், ஆலோசனையாளர்கள், தொழில் நிபுணர்கள் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகளை ஒரே தளத்தில் ஒன்று சேர்த்தது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20141104/10110098 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
கண்காட்சியைத் தொடங்கி வைக்கும்போது, "சிறந்த பாதுகாப்பு அமைப்புகள் நமக்குத் தேவைப்படுகின்றன, இது தற்போதைய சூழலில் ஓரளவு கட்டாயமானதாகவும் உள்ளது. இவ்வகையான கண்காட்சி, ஒரே கூரையின் கீழ் ஏராளமானவற்றிலிருந்து நாம் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை நமக்கு வழங்குகிறது. வீட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு வலைக்கு நாம் தீவிரமாகப் பரிசீலிக்கக்கூடிய சுவாரசியமான சாதனங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதைப்போல் என்னால் நிச்சயமாக உணர முடிகிறது," என்றார் டெல்லி அரசின் துணை முதலமைச்சரான திரு.Manish Sisodia.
கண்காட்சி மட்டுமின்றி, 'SAFE CITIES' ('பாதுகாப்பான நகரங்கள்') என்ற கருப்பொருளின் அடிப்படையிலான குழுக் கலந்துரையாடல்களுடன் ஓர் ஒரு நாள் மாநாட்டையும் UBM India நடத்தியது.
கண்காட்சியின் வெற்றிகரமான பதிப்பில் பேசிய, UBM India-வின் நிர்வாக இயக்குனரான திரு.Yogesh Mudras, கூறியதாவது, "இன்றைய இந்தியச் சூழலில், தொழில்துறை, வர்த்தகம் மற்றும் வீட்டுவசதி அமைப்புகளில், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பிற்கு அதிவிரைவான மேம்பாடு அவசியமாகியுள்ளது. 40 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட IFSEC Global-ன் ஒரு பிரிவான, IFSEC India 2015 தொடர்பான UBM India-ன் குறிக்கோள் செலுத்தும் கவனமானது, இத்தேவையை முன்னணிக்குக் கொண்டு வருகின்ற முயற்சியாகும் மற்றும் அதன் விளைவாக, இந்த அமைப்புகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு, புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான தீர்வுகளை வழங்குவதாகும். இதன் கடந்தகால பதிப்புகளுடைய வெற்றியின் அடிப்படையுடன், இன்றைக்கு உலக பாதுகாப்பு மற்றும் தீ தொழில்துறையின் புகழ்பெற்ற அதிகார அமைப்பாக உள்ள IFSEC India-வின் 2015 பதிப்பானது, தொழில்துறை எதிர்பார்ப்புகளையெல்லாம் கடந்து நிற்கிறது."
Asian Professional Security Association (APSA), ASIS International, British Security Industry Association (BSIA) மற்றும் Electronic Security Association of India (ESAI) ஆகிய அமைப்புகள் இந்நிகழ்ச்சிக்கு ஆதரவளித்துள்ளன.
20 வேறுபட்ட நாடுகளிலிருந்து, பாதுகாப்பு மற்றும் தீ பாதுகாப்பு தொழில்துறையைச் சேர்ந்த 300-க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்றன, அவற்றில் மிகவும் முன்னணி கூட்டாளர்களில் சில Aditya, Autocop, Dahua, Enter, Hi-Focus, Hikvision, Lookman, Secureye, Securico, Tech Smart, Uniview மற்றும் Zebronics, மேலும் முக்கியக் கூட்டாளர்களில் சில, Acsys, Advik, Avtron, Com-Sur, Godrej Security Solutions, Honeywell, Infinova, Keeper, Messung, Milestone, MR Impex, Nitgen, Ozone, Panasonic, Starex Global மற்றும் Wavesight ஆகும்.
UBM India பற்றி:
UBM India, ஏராளமான கண்காட்சிகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாக இணைக்கும் தளங்களை தொழில்துறைக்கு வழங்கும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும். UBM India, ஒவ்வொரு ஆண்டும், நாடெங்கிலும் 25 மிகப்பெரிய கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; இதன் மூலம் பலவகை தொழில்களிலும் வர்த்தகத்திற்கு உதவுகிறது. UBM Asia-வின் ஒரு நிறுவனமான UBM India, மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM Plc-க்கு சொந்தமான UBM Asia, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM Asia, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரும், சீன பிரதான பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து அணுகவும் ubmindia.in.
ஊடகத் தொடர்பு:
ப்ரியா பாட்ஷா
[email protected]
+91-22-61727000
UBM India
Share this article