K7 தன்னை இணையற்ற நிலைக்கு உயர்த்துவதற்கு, மறுகட்டமைப்பை பரிசீலிக்கிறது
சென்னை, December 15, 2015 /PRNewswire/ --
- மேலும் வளர்ச்சியைத் தூண்டுவதற்கு, புதிய சந்தைகள், புத்தம் புதிய குழு
- நிறுவனர் & CEO, Keseven, நேரடியாக விற்பனையை ஊக்குவிக்க உள்ளார்
டிஜிட்டல் மற்றும் சைபர் பாதுகாப்பு மற்றும் ஆன்லைன் பாதுகாப்புத் தீர்வுகளின் உலகில் முன்னோடியாகவும், தலைமையிடத்திலும் உள்ள K7 Computing, தொடர்ந்து பரிணாம வளர்ச்சி கண்டுவரும் IT பாதுகாப்பு சந்தையின் உச்சியில் தங்களை நிறுத்திக் கொள்ளும் முயற்சியில் அதிவிரைவாக ஈடுபட்டு வருகிறது. சைபர் பாதுகாப்புப் பிரிவின் தலைவர்களாக ஆகின்ற வேகம் அதிகரித்திருப்பதை தாங்கள் பயன்படுத்திக் கொள்வதை உறுதி செய்வதற்காக, K7 தனது குழுவை மறுகட்டமைப்பு செய்து, தற்போதுள்ள குழுவுடன் புதிய திறன்களைச் சேர்க்கிறது.
இந்தியாவில் உருவாக்கப்படும் உலகத்தரம் வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் இந்திய நிறுவனமான K7, ஒவ்வொரு வகையான டிஜிட்டல் அச்சுறுத்தல்களிலிருந்தும் 100-க்கும் அதிகமான நாடுகளிலுள்ள 15 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைப் பாதுகாத்து வருகிறது. வேறு எந்தவொரு இந்திய நிறுவனத்தையும்விட, K7-க்கு அதிகமான பயனர்கள் உள்ளனர் மற்றும் 10 மில்லியன் பயனர்கள் என்ற குறியீட்டைக் கடந்த முதல் நிறுவனமும் இதுதான். K7-ன் பயனர்களில், வீடுகள், அரசுகள் மற்றும் பல்வேறு வகையான தொழில்துறைகளிலுள்ள வேறுபட்ட அளவுகளைக் கொண்ட தொழில்களும் அடங்கும்.
உள் மறுகட்டமைப்பு மற்றும் எதிர்காலத் திட்டங்களைப் பற்றிப் பேசும்போது, K7 நிறுவனர் & CEO, திரு. ஜெயராமன் "Keseven" கேசவர்த்தனன் கூறியதாவது, "புதிய சந்தைகளை ஆராய்தல் மற்றும் சைபர் பாதுகாப்புக் களத்திற்குள் அதிநவீன தீர்வுகளைக் கொண்டு வருதல் ஆகிய இரண்டிலுமே இந்நிறுவனம் எவ்விதம் அதிவேக முன்னேற்றம் கண்டு வருகிறது என்பதைக் கருத்தில் கொண்டு, மேலும் அதிக வளர்ச்சிக்கு எங்களைத் தயார் நிலையில் வைக்கும் வகையில், எங்கள் குழுவை மறுகட்டமைப்பு செய்வதற்கு நாங்கள் முடிவு செய்துள்ளோம். விற்பனை செயல்முறையை வழிநடத்த ஒரு புதிய மற்றும் அனுபவமிக்க குழு கொண்டு வரப்பட்டுள்ளது, இது என்னிடம் நேரடியாகப் பணிபுரிந்து அறிக்கையளிக்கும். இத்தொழில்துறையில் அதிவேக வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைக் காண்பது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கின்ற அதே நேரத்தில், சவால்களும் இரட்டிப்பாகியுள்ளன."
"இன்றைக்கு, ஸ்மார்ட்ஃபோன் புரட்சி மற்றும் மின்னணு வர்த்தகம் விரைவாக வளரத் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் ஆகிய இரண்டுமே தொடர்ந்து இடரை எதிர்கொண்டுள்ளன. எங்கள் பாதுகாப்புத் தீர்வுகள் எப்போதுமே முந்திச் செல்வதை உறுதி செய்வதற்காக, R&D பிரிவில் ஏராளமாக முதலீடுகள் செய்வதன் மூலம், நாங்கள் ஒரு படி முன்னால் இருப்பதை உறுதி செய்கிறோம். எங்கள் வளர்ச்சி வேகம் குறையாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, புதிய எல்லைகளை நாங்கள் தீவிரமாகத் தேடுவதுடன், களத்தில் மேலும் திறன்களைக் கொண்டு வருவதன் மூலம் எங்கள் குழுவையும் விரிவுபடுத்துகிறோம். எங்கள் குழுவின் தரமே எங்கள் வெற்றியை விவரிக்கும் அம்சமாக உள்ளது மற்றும் எங்கள் புதிய நியமனங்கள் எங்கள் வளர்ச்சிக்கான இந்த வேகத்தை மேலும் அதிகரிப்பதை எல்லா வகையிலும் நாங்கள் உறுதி செய்வதில் நாங்கள் எதையுமே விட்டுவைக்கவில்லை," என்று அவர் கூறினார்.
இந்திய அரசு அறிவித்துள்ள டிஜிட்டல் இந்தியா கருப்பொருளை K7 பயன்படுத்திக் கொண்டு, ஆங்கிலம் மட்டுமின்றி, வட்டார மொழியிலும் வாடிக்கையாளர் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குகிறது. இந்தியாவில் K7 ஆண்டு முழுவதும் வரம்பற்ற மேம்பாடுகளையும் வழங்கி வருகிறது. K7-ன் மிகப் பெரிய பலங்களில் ஒன்றாக இருப்பது, மூன்று பிரிவுகளில் அது வழங்கும் டிஜிட்டல் பாதுகாப்பு ஆகும்.
"தனிநபர் நுகர்வோரைப் பாதுகாக்கும் அதிநவீன வகைகளை நாங்கள் வழங்குகிறோம் மற்றும் எங்கள் Enterprise Solutions, நிறுவனங்கள், தொழில்கள், அமைப்புகள் மற்றும் அரசுகளின் தேவைகளுக்குப் பொருந்துகின்ற அதே உயர்தரத்துடன் வருகிறது. இது தவிர, மிகவும் குறிப்பிட்ட தேவைகள் உள்ளவர்களுக்கு நாங்கள் விருப்பத்திற்கேற்ற பாதுகாப்புத் தீர்வுகளையும் வழங்குகிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.
இவ்வாண்டின் தொடக்கத்தில், K7 'Windows Home பயனர்களுக்கான மிகச்சிறந்த ஆன்டிவைரஸ் மென்பொருள்' என்று, ஜெர்மனியில் அமைந்துள்ள ஒரு தனி பாதுகாப்புப் பரிசோதனை மற்றுத் ஆராய்ச்சி நிறுவனமான AV-TEST Institute-ஆல் தரநிலைப்படுத்தப்பட்டது. இத்தரநிலையானது, பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் பயன்படுத்தும்தன்மை அடிப்படையில் அமைந்ததாகும்.
பல அளவுருக்களின் அடிப்படையில், டிஜிட்டல் பாமுகாப்புத் தொழில்துறையின் தயாரிப்புகளைத் தரநிலைப்படுத்தும் ஒரு தனி சர்வதேச ஆய்வகமான AV Comparatives, K7-ஐ தொடர்ச்சியாக "மிகச்சிறந்த செயல்திறன் கொண்ட ஆன்டிவைரஸ்' என்று தரநிலைப்படுத்தியுள்ளது.
K7 பற்றி:
டிஜிட்டல் பாதுகாப்புத் தொழில்துறையில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு முன்னோடி நிறுவனமாக உள்ள K7, 1991-ம் ஆண்டு, ஜெயராமன் கேசவன் ("Keseven") கேசவர்தனனால் நிறுவப்பட்டது. கணினிப் புரட்சி விரைவில் இந்தியாவை வந்தடைந்துவிடும் என்ற எதிர்பார்ப்பில், உலகத் தரம் வாய்ந்த டிஜிட்டல் தயாரிப்புகளை உருவாக்குவதற்காக அவர் நிபுணர் குழு ஒன்றை ஒன்று சேர்த்தார். மிகச்சிறந்தவற்றையே தேட வேண்டும் என்ற ஊக்கத்தினால், K7-ஆல் பல்வேறு சந்தைகளில் ஊடுருவவும், அதிவிரைவில் வளர்ச்சி கண்டு, தன்னை உலக அளவில் அமைத்துக் கொள்ளவும் முடிந்தது. இன்று, K7 ஒவ்வொரு வகையான டிஜிட்டல் அச்சுறுத்தல்களிலிருந்தும் 100-க்கும் அதிகமான நாடுகளிலுள்ள 15 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைப் பாதுகாத்து வருகிறது. K7-ன் பயனர்களில், வீடுகள், அரசுகள் மற்றும் பல்வேறு வகையான தொழில்துறைகளிலுள்ள வேறுபட்ட அளவுகளைக் கொண்ட தொழில்களும் அடங்கும். பயனர்களின் தன்மை மற்றும் தேவைகள் வேறுபட்டவையாக இருந்தாலும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் K7-ஆல் முழுமையான பாதுகாப்பை வழங்க முடிகிறது.
மேலும் தகவல்களுக்கு, அணுகவும்: http://www.k7computing.com
ஊடகத் தொடர்பு:
R.வெங்கட் ரமணன்
[email protected]
+91-9841313473
சீனியர் மேனேஜர், Tinacca Media
Share this article